பிரசன்னம் பார்க்கவந்தவர் பெரும் பதட்டத்தில் இருந்தார். கோபத்தில் பிரிந்துசென்ற மனைவி மீண்டும் தன்னிடம் வருவாளா என்பதே அவர் கேள்வி. பொறுமையும், பொறுப்புமில் லாத குடும்ப வாழ்க்கை தற்காலத்தில் பெருகிவிட்டதை நினைத்து வருந்திய கிருஷணன் நம்பூதிரி, பிரசன்னத்தைத் தொடங்கினார். பகளாமுகி தேவியை வணங்கியபின் சோழிப் பிரசன்னத்தைக் கணித்தார்.
பிரசன்ன ஜாதகத்தில் சுக்கிரன் வக்ரத்தில் இருந்ததால், பிரிந்துசென்ற மனைவி திரும்பவருவாள் என்பது உறுதியானது. ஏழாம் வீட்டின் அதிபதி, ஆறு மற்றும் பன்னிரண்டாம் வீட்டுடன் தொடர்புகொண்டதால், இழுபறிநிலை நீடிக்கிறது. சந்திரன் தேய்பிறையில் அகப்பட்டதால், சிலகாலம் கழித்துத் திரும்பவருவாள். பிரசன்னம் கேட்கவந்த சமயத்தில் ஒரு கிரகம் மட்டுமே வக்ரத்தில் இருப்பதால், பேசி சமாதானம் செய்தால் முயற்சியில் வெற்றி கிடைக்கும். வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் திருப்பதி அலர்மேல்மங்கைத் தாயாரை வழிபட்டால், குடும்பப் பிரச்சினை நல்ல முடிவுக்கு வருமென்று பரிகாரம் சொல்லப்பட்டது. பரிகாரம் செய்து ஒரு மாதத்திற்குள், குடும்பம் ஒன்றிணைந்தது. பிரசன்னம் கேட்கவந்தவரின் மனம் நிம்மதியடைந்தது. கிருஷ்ணன் நம்பூதிரியை அவர் கைகள் கும்பிட்டன. கண்கள் குளமாகின.
கேரள ஜோதிடத்தின் சிறப்பு
சோழி லக்னத்தை மட்டுமே வைத்துப் பலன்சொல்லாமல், பிரச்சை என்று சொல் லப்படும் பதினான்கு விஷயங்களைக் கருத் தில்கொள்வதே கேரள ஜோதிடத்தின் சிறப்பு .
1. கேள்விகேட்ட நேரம் (சமயம்), 2. கேள்வியாளர் நிற்கும் இடம் (திசை), 3. ஜோதிடரின் மூச்சு நிலை (ஸ்வராயு), 4. ஜோதிடரின் நிலை (அவஸ்தை), 5. ஸ்பரிசம், 6. ஆரூட ராசி, 7. ஆரூட ராசி குறிப்பிடும் திசை, 8. கேள்வியாளர் சொல்லும் வார்த்தை யின் முதல் எழுத்து (பிரசன்ன அக்ஷரம்), 9. கேள்வியாளரின் நிலை (ஸ்திதி), 10. கேள்வி யாளரின் அசைவு (சேஷ்டா), 11. கேள்வி யாளரின் மனோநிலை (மனோ பாவம்), 12. கேள்வியாளர் பார்க்கும் திசை (விலோகனம்), 13. கேள்வியாளரின் ஆடை (வஸனம்), 14. நிமித்தம்.
இவ்வாறு பதினான்கு காரணிகளையும் ஆராய்ந்த பின், பிரசன்னம் பார்ப்பதே சரியானமுறை என்பதே கேரள ஜோதிடர்களின் கருத்து.
பூர்வீக சொத்து கிடைக்குமா?
கேள்வி: என் பூர்வீக சொத்தை என் சொந்தக்காரர்கள் அபகரித்துவிட்டார்கள். அதைத் திரும்பப் பெறுவதற்காக நான் நீதிமன்றத்தை நாடியுள்ளேன். இந்த வழக்கில் எனக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்குமா? வெற்றிபெறுவதற்குப் பரிகாரம் உண்டா?
-ராதாகிருஷ்ணன், சேலம்.
(பிரசன்ன ஆரூட எண்- 93; சதயம் முதல் பாதம்)
* சோழி லக்னமும் பிரசன்ன லக்னமும் திரிகோணத்தில் அமைவது நன்மை தரும்.
* சோழி லக்னாமாகிய கும்பத்திற்கு ஒன்பதாம் வீடாகிய துலாத்தில், பாதக ஸ்தானத்தில் பிரசன்ன லக்னம் அமைவது, தீர்ப்பின் காலதாமதத்தைக் குறிக்கிறது.
* சோழி லக்னத்திற்கு ஏழாம் அதிபதியாகிய சூரியன் ஆறாம் வீட்டில் அமர்வதால், எதிரியின் தோல்வி உறுதியாகிறது.
* மூன்றாம் வீடு வெற்றி ஸ்தானம். அதன் அதிபதியாகிய செவ்வாய் ஏழில் அமர்வதால், தடையும் தாமதமும் ஏற்பட்டாலும், முடிவில் வெற்றியடைவது உறுதி.
* சோழி லக்னம் ஸ்திர ராசியிலும், பிரசன்ன லக்னம் சர ராசியிலும் அமைவதால், ஆரம்பத்தில் வழக்கில் பின்னடைவை சந்தித்தாலும், முடிவில் வெற்றி கிடைக்கும்.
* சோழி லக்னத்தில் குரு அமர்ந்து, ஒன்பதாம் பார்வையால் பிரசன்ன லக்னத் தைப் பார்ப்பது ஆதாயம் தரும்.
* குருவின் பார்வை சந்திரன்மீதும் விழுவது, சுப யோகமான குருச்சந்திர யோகத்தை சுட்டிக் காட்டுகிறது.
* சோழி லக்னத்திற்கு பதினோறாமிடத் தில் மாந்தி அமர்வது வெற்றியை உறுதிசெய் கிறது.
* சில பரிகாரங்களைச் செய்தால் வெற்றி உடனடியாகக் கிடைக்கும்.
பரிகாரம்
* மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்குச் சென்று, சுந்தரேஸ்வரரையும் அம்பாளையும் திங்கட்கிழமை வழிபடவேண்டும்.
* வெள்ளிக்கிழமை சிவகங்கை மாவட்டத் திலுள்ள- கொல்லங்குடி வெட்டுடைய காளி யம்மன் கோவிலுக்குச் சென்று காசு வெட்டும் வழிபாடு செய்தால், நீதிமன்றத்தில் வெற்றி கிடைக்கும்.