பிரசன்னம் பார்க்கவந்த பெண்ணின் முகத்தில் கவலை யும், பயமும் வெளிப்பட்டன. தன் கணவர் சில மாதங்களாக வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே மனக்குழப்பத்தில் இருக்கிறார்.
செய்வினைக் கோளாறாக இருக்குமோ என்ற அச்சமிருக்கிறது. இதற்கு ஏதாவது பரிகாரம் உண்டா? என்று கேள்விகளை அடுக்கி விட்டு மௌனமானார். வல்லியங்காவு துர்க்கா தேவியை வழிபட்டு பிரசன்னத்தைத் தொடங்கி னார் கிருஷ்ணன் நம்பூதிரி.
அஷ்டமாதிபதி பன்னிரண்டில் அமர்ந்து செவ்வாயின் பார்வை பெறுவதும், கேது பத்தில் அமைவதும், மாந்தி மகரத்திலிருப்பதும் ஆபிசார தோஷமாகும். பிரசன்ன காலத்தில், கேது தசையில் ராகு புக்தி, ராகு அந்தரம் நடப்பதால், ஜாதகர் ஏவல், பில்லி, சூன்யத்தால் பாதிக்கப்பட்டுள்ளது தெளிவாகிறது. சோட்டாணிக்கரை கீழ்க்காவு பகவதி கோவிலில் குருதிபூஜை நடத்தினால் மட்டுமே இந்த பிரச்சினை முடிவுக்கு வருமென்று சொல்லி முடித்தார் கிருஷ்ணன் நம்பூதிரி. பரிகாரங்களைச் செய்துமுடித்தவுடன் பலன் ஏற்பட்டது. குடும்பத்தில் மகிழ்ச்சி திரும்பியது. பிரசன் னம் கேட்க வந்தவரின் மனம் நிம்மதி யடைந்தது.
கேரள ஜோதிடத்தின் சிறப்பு
ஜனன ஜாதகத்தில் யோக ஸ்புடம் கணித்தபின்னரே கிரக, பாவ நிலைகளை ஆராய்ந்து பலன் சொல்வதே கேரள ஜோதிடத்தின் சிறப்பு. ஜோதிடத்தில் பலன்கள் தவறாகப் போவதற்கு யோகி- அவயோகி பார்க்காமல் பலன் சொல்வதே முக்கிய காரணம்.
யோக ஸ்புடம்- ஜெனன ஜாதகத்தில் உள்ள சூரியன் பாகை + சந்திரன் பாகை + 93 பாகை, 20 கலை= யோகி. இந்த மூன்றையும் கூட்டி வரும் ஸ்புடம் மேஷம் முதல் கணக்கிட எந்த நட்சத்திரத்தில் வருகிறதோ அந்த நட்சத்திரத்தின் அதிபதியே யோகி. அந்த ராசியின் அதிபதி அனுயோகி. யோக ஸ்புடம் எந்த நட்சத்திரத்தில் வந்ததோ அதிலிருந்து ஆறாவது நட்சத் திர அதிபதி அவயோகி. ஜெனன ஜாதகத்தில் யோகி நல்ல நிலையில் இருந்தால் மட்டுமே யோகப் பலனைத் தருவார்.
யோகி நல்ல நிலையில் உள்ள ஜாதகங் களே யோக ஜாதகங்கள். சூரியனோ, புதனோ ஜனன ஜாதகத்தில் யோகியாக இருந்தால் அவர்களுக்கு வாழ்க்கையில் எதிர்பாராத முன்னேற்றம் ஏற்படும். அதேபோல சூரியன் ஜனன ஜாதகத்தில் யோகியாக இருக்கும்போது, தன்னுடன் சேர்ந்து அஸ்தமனமாகும் கிரங்களின் பலன்களைத் தானே நல்லவிதமாக செயல்படுத்துவார். யோகி, அனுயோகி, அவயோகிகள் தசாபுக்தி களுக்கு அப்பாற்பட்ட வர்கள். ஆயுள் முழுக்க யோகி, அனுயோகி, அவயோகிகளின் பலன்கள் தொடர்ந்து வரும். யோகியின் காரகத்துவப் பலன்கள் சுபமாகவும், அவயோகி யின் காரகத்துவப் பலன்கள் அசுபமாகவும் அமையும். புதன் யோகியானால் புதனின் காரகத்துவப் பலன் களான ஜோதிடம், கணக்கு போன்றவற்றில் திறமை அதிகமாகும். செவ்வாய் அவயோகி எனில் இளைய சகோதரம்மூலம் தொந்தரவு, ரத்தம் சம்பந்தப்பட்ட நோய் போன்ற தீய பலன்கள் நடைபெறும் என்பதே கேரள ஜோதிடர்களின் கருத்து.
பணியில் இடமாற்றம் கிடைக்குமா?
கேள்வி: சென்ற ஆண்டு பணியில் இடமாற்றம் கேட்டு விண்ணப்பம் கொடுத் தேன். இதுவரை எந்த முடிவும் தெரிய வில்லை. எனக்கு இந்த ஆண்டாவது இட மாற்றம் கிடைக்குமா? அதை விரைவில் பெறுவதற்குப் பரிகாரம் உண்டா?
-கிருஷ்ணமூர்த்தி, மைசூர்.
(பிரசன்ன ஆரூட எண்- 27; புனர்பூசம் 3-ஆம் பாதம்)
* சோழி லக்னாதிபதியும், நான்காம் வீட்டு அதிபதியுமாகிய புதன் மூன்றாமிடத்தில் அமர்வது இருப்பிட மாற்றத்தைக் காட்டுகிறது.
* அதிவேகமாக சஞ்சாரம் செய்யும் சந்திரனும் மூன்றாம் வீட்டில் அமர்வதால் வெகுவிரைவில் எண்ணம் நிறைவேறும் என்பதைக் காட்டுகிறது.
* கிரக அமைப்பு வெற்றி தரும். ஆனாலும் சோழி லக்னம் அமைந்த மிதுனத்திற்கு குரு பாதகாதிபதியாகிறார்.
* மேலதிகாரியின் தலையீட்டால் இட மாற்றம் தாமதமாகிறது.
* சோழி லக்னத்திற்கு மூன்றாம் வீடு வெற்றி ஸ்தானம். அதில் புதன் அமர்வதால் தடையும் தாமதமும் ஏற்பட்டாலும், முடிவில் வெற்றியடைவது உறுதி.
* சோழி லக்னத்திற்கு பன்னிரண்டில் ராகு இருப்பதால் மனநிம்மதி குறையும்.
* பிரசன்ன லக்னம், சோழி லக்னத்திற்கு ஐந்தில் அமைவதால் அனுகூலமான பலன்கள் கிடைக்குமென்று எதிர்பார்க்கலாம்.
வியாழக்கிழமை அனுமனை வழிபட்டால் வெற்றி நிச்சயம்.
(தொடரும்)
செல்: 63819 58636