நடுத்தர வயதைக்கடந்த அந்தப் பெண், நடைதளர்ந்து வந்தாள். தன்னுடைய ஒரே பெண்ணுக்கு கடந்த ஆண்டு திருமணம் நடந்ததாகவும், ஒரேநாளில் கணவனைப் பிரிந்துவிட்டதாகவும் தெரிவித்தாள். கண்களில் நீர் கோலமிட்டது. ஜாதகப் பொருத்தத்தை சரியாகப் பார்க்காமல், மணமக்களின் சொத்துமதிப்பை வைத்துப் பொருத்தம் பார்ப்பது விபரீத முடிவைத்தரும் என்பதை எண்ணி வருத்தப்பட்டார் கிஷ்ணன் நம்புதிரி. ஆரியங்காவு பகவதியைத் தொழுது தன் பிரசன்னத்தைத் தொடங்கினார்.
சோழி லக்னத்தின் ஏழாம் பாவத்தை இரண்டு, ஆறு மற்றும் பத்தாம் பாவம் தொடர்புகொண்டதால், மன வேறுபாட்டால் மணமுறிவு ஏற்பட வாய்புள்ளதைக் காட்டியது. "ஐக்ய மத்திய சுக்தம்' மற்றும் ரதி- மன்மத ஹோமம் செய்தால் மணமக்களின் மனதில் ஒற்றுமை ஏற்படுமென்று பரிகாரம் சொல்லப்பட்டது. பரிகாரம் செய்தபின் பலன் கிடைத்ததால் பிரசன்னம் கேட்க வந்தவரின் மனம் நிம்மதியடைந்தது.
கேரள ஜோதிடத்தின் சிறப்பு
ரோகப் பிரசன்னம் எனப்படும் நோயைப்பற்றி அறியும் பிரசன்னத்தில் தீயகிரகம் எந்த ராசியுடன் தொடர்பிலிருக்கிறது என்பதைக்கொண்டே நோய் அறியப்படுகிறது.
* சனி, பத்தாமிடத்தி-ருந்தால் பிசாசுகளால் தொல்லை.
* ஆறாம் வீட்டில் சர்ப்ப கிரகங்களுடன் சந்திரன் அமர்ந்தால் இடுமருந்தினால் தொல்லை.
* லக்னம் அல்லது ஏழாம் வீட்டில் செவ்வாயிருக்க, செரிமானப் பிரச்சினை.
* லக்னம் சர ராசியாகவும், ஊர்த்துவ முகமாகவும், சிரசோதய ராசியாகவும் இருந்தால் கழுத்துக்குமேலுள்ள பாகத்தில் நோய்க்குறி உண்டாகும்.
* நோய் தொடங்கிய காலத்தைக் கணிக்க- ஆறாமதிபதி நின்ற ராசியை கோட்சார சந்திரன் கடந்துவந்த காலமே நோயின் துவக்கமென்று அறியலாம்.
* நோய் தீரும் காலத்தை பிரசன்ன லக்னத்திற்கு அஷ்ட ராசி நிற்கும் நட்சத்திரத்தைக்கொண்டு அறியலாம். மூலம், அஸ்வினி, கார்த்திகை நட்சத்திரங்களில் அமைந்தால் விரைவில் குணமாகும். கேட்டை, சுவாதி, ஆயில்யம், திருவாதிரை, பூரம், பூராடம், பூரட்டாதியாக அமைந்தால் நோய் குணமாகாது.
* பிரசன்ன காலத்தில் சூரியன் நின்ற நட்சத்திரத்திற்கு ஒன்பது, பதினைந்து, இருபத்தோராம் நட்சத்திரங்களில் சோழி லக்னம் நின்றால், நோய் குணமாவது கடினம்.
* குளிகன் இருக்கும் ராசி, லக்னம் அமையும் ராசி, லக்னத்தின் நவாம்ச ராசி, துவாதாம்ச ராசிகளில் சந்திரன் வரும் காலத்தில் நோயின் கடுமை குறையும்.
நோயின் தன்மை, குணமாகும் காலம் போன்றவற்றைத் துல்லியமாகக் கணிப்பதே கேரள ஜோதிடத்தின் சிறப்பு.
குழந்தையின் பிறவிநோய் தீருமா?
கேள்வி: என் குழந்தை, ஆட்டிசம் என்னும் மூளையின் நரம்பு மண்டலத்தில் ஏற்படும் வளர்ச்சிக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தக் குறை தீருமா? அதற்குப் பரிகாரம் உண்டா?
-திருமதி சுமதி, சேலம்.
(பிரசன்ன ஆரூட எண்- 28; புனர்பூசம்- 4-ஆம் பாதம்)
* சோழி லக்னம் அமையும் நட்சத்திரத்தின் அதிபதியாகிய குருபகவான் எட்டில் அமைவது மூளையில் ஏற்பட்ட பாதிப்பைக் குறிக்கிறது.
* சோழி லக்னத்தின் அதிபதியாகிய சந்திரன் மூன்றில் மறைவதும் பிறப்பில் ஏற்பட்ட குறையைத் தெளிவாக்குகிறது.
* சோழி லக்னத் திற்கு ஐந்தில் கேது இருப்பது ஆரோக்கியக் குறைபாட்டை உறுதியாக்குகிறது.
* செய்தித் தொடர்புக் கான கிரகமாகிய புதன், சோழி லக்னத் திற்கு பன்னிரண்டில் அமைவது கெடுதல்.
* இரண்டாம் வீட்டின் அதிபதியாகிய சூரியனும் பன்னிரண் டில் அமைவதும் இந்த நோயின் தீவிரத்தைக் காட்டுகிறது.
* ஐந்து மற்றும் பத்தாம் வீட்டு அதிபதியாகிய செவ்வாயை வழிபடுவதால் பிரச்சினை நீங்கும்.
* குரு பகவானுக்கும் செவ்வாய்கும் பரிகாரம் செய்தால் குணமடையலாம்.
* செவ்வாயாகவும் குருவாகவும் தகப்பன்சுவாமியாகவும் விளங்கும் சுவாமிமலை சுவாமிநாத சுவாமியை சஷ்டியில் வழிபட்டால் குறை நீங்கும்.
(தொடரும்)
செல்: 63819 58636