பிரசன்னம் பார்க்க வந்தவரின் ஆடையும் ஆபரணங்களும் ஆடம்பரமான வாழ்க்கையைக் காட்டினாலும், முகத்தில் மரணபயம் பிரதிபலித்தது. தான் பல ஆண்டுகள் ஆட்சி அதிகாரத்தில் இருந்ததாகவும், தற்போது பாதுகாப்பில்லாமல் தனிமரமாக மாறிவிட்ட சோகத்தையும் சொல்லிப் புலம்பினார். தன் பாதுகாப்பு, எதிரிகளின் அச்சுறுத்தலால் கேள்விக்குறியாகிவிட்டது என்பதையும் தெரிவித்தார். மணப்புள்ளி பகவதியை வணங்கி, தன் பிரசன்னத்தை அமைத்தார் கிருஷ்ணன் நம்பூதிரி.

Advertisment

சோழி லக்னத்திற்கு எட்டாம் பாவம், ஏழு மற்றும் பன்னிரண்டாம் பாவத்துடன் தொடர்பு கொண்டதாலும், இரண்டா மிடத்தில் ராகுவும், ஆயுள் ஸ்தானமாகிய எட்டாமிடத்தில் கேது வும் அமர்ந்ததால், பிரசன்னம் கேட்க வந்தவரின் உயிருக்கு ஆபத்து நெருங்கிவரு வதைக் காணமுடிந்தது. தேய்பிறை அஷ்டமியில் பைரவரை வணங்கினால், ஆயுளுக்கு வந்த ஆபத்து நீங்குமென்ற பரிகாரம் சொல்லப்பட்டது காடாம்புழா பகவதி கோவிலில், "முட்டறுக்கல்' எனும் சிறப்பு வழிபாடு செய்வதும் அவசியம் என்று எடுத்துரைக்கப்பட்டது. பிரசன்னம் கேட்க வந்தவரின் மனம் நிம்மதியடைந்தது.

dd

கேரள ஜோதிடத்தின் சிறப்பு

கிரக ஷட் பலத்தையறிந்து பலன் கூறுவதே கேரள ஜோதிடத்தின் சிறப்பு. கிரக ஷட் பலமென்பது, வலிமையை ஆறு விதங்களில் கணக்கிட்டு, அவற்றில் அதிக வலிமையான கிரகம் எது, மிகவும் வலிமை குன்றிய கிரகம் எது என்பதைக் கண்டறிவதாகும். ஷட்பல கணக்கீடு ராகு- கேதுவுக்குக் கிடையாது. மற்ற ஏழு கிரகங்களுக்கு மட்டுமே உண்டு.

Advertisment

1. ஸ்தான பலம்- கிரகங்கள் தன் உச்ச வீடு, மூலத்திரிகோண வீடு, ஆட்சி வீடு, நட்பு வீடு போன்ற இடங்களில் அமரும்போது ஸ்தான பலம் பெறுகின்றன.

2. திருக் பலம்- கிரகப் பார்வைகளினால் ஏற்படும் நன்மை- தீமைகள் திருக் பலம் எனப் படும்.

3. திக்பலம்- ஜனன ஜாதகத்தில் கிழக்கு திசையாகிய லக்னத்தில் புதனும் குருவும் வலிமையானவர்கள். ஏழாமிடமாகிய மேற்கு திசையில் சனியும், பத்தாமிடமாகிய தெற்கு திசையில் சூரியனும் செவ்வாயும், நான்காமிடமாகிய வடக்கு திசையில் சந்திரனும் சுக்கிரனும் திக்பலம் பெறுகின்றன.

Advertisment

4. நைசர்கிக பலம்- புதனைவிட செவ்வாயும், செவ்வாயைவிட சனியும், சனியைவிட குருவும், குருவைவிட சுக்கிரனும், சுக்கிரனைவிட சந்திரனும், சந்திரனைவிட சூரியனும் வலிமைபெற்றவர்கள்.

5. சேஷ்டா பலம்- சூரியனும் சந்திரனும் மகரம்முதல் மிதுனம்வரை உள்ள ராசிகளில் வலிமைபெறுவார்கள். புதன் வீடான மிதுனத்திலும் கன்னி யிலும், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகியவர்கள் சஞ்சார பலம் பெறுவார்கள். புதன், குரு, சுக்கிரன் வக்ரகதியில் கூடுதலாக பலம்பெறுவார்கள்.

6. காலபலம்- சூரியன், குரு, சுக்கிரன், பாவிகளுடன் சேராத புதன் ஆகியவர்கள் பகலில் பிறந்த ஜாதகத்திலும், சந்திரன், செவ்வாய், சனி, பாவிகளுடன் சேராத புதன் இரவில் பிறந்த ஜாதகத்திலும், சூரியன், குரு, சுக்கிரன், பாவிகளுடன் சேராத புதன் வளர்பிறையில் பிறந்த ஜாதகத்திலும் காலபலம் பெறுவார்கள். சூரியன், செவ்வாய், சனி, தேய்பிறைச் சந்திரன், பாவிகளுடன் சேராத புதன் ஆகியவர்கள் தேய்பிறையில் பிறந்த ஜாதகத்திலும் காலபலம் பெறுவார்கள்.

தொடர் விபத்துகளைத் தவிர்க்கமுடியுமா?

கேள்வி: நான் கடந்த இரண்டு ஆண்டு களில் ஆறுமுறை வாகன விபத் தில் சிக்கினேன். கடந்த ஆண்டு தலையில் கடுமையான அடிபட்டு "கோமா' நிலைக்குச் சென்று மீண்டுவந்தேன். என் ஆயுளுக்கு ஆபத்து உள்ளதா?

-கணபதி, மும்பை.

(பிரசன்ன ஆரூட எண் 08; பரணி 4-ஆம் பாதம்)

* சோழி லக்னத்திற்கு எட்டில் பிரசன்ன லக்னம் அமைவது ஆயுளுக்கு ஏற்பட்ட ஆபத்தைக் குறிக்கிறது.

* லக்னாதிபதியும் எட்டாமதிபதியுமான செவ்வாய் நீசகதியாக கடகத்தில் அமர்ந்திருப்பது, தொடர் விபத்துக்களைக் குறிக்கிறது.

* சோழி லக்னத்திற்கு இரண்டில் ராகுவும், எட்டில் கேதுவும் அமர்வது, மரணத்திற்கு ஒப்பான கண்டத்தைக் குறிக்கிறது.

* ஐந்தாமிடமாகிய சிம்மத்தில் குரு பகவான் பார்வை விழுவதால், பூர்வ ஜென்ம புண்ணியத்தால் ஆபத்திலிருந்து தப்பிக்கமுடிந்தது.

* ஆறாமதிபதியாகிய புதன் இரண்டாமிடத்தில் அமர்வது, தலையில் ஏற்பட்ட காயத்தைக் குறிக்கும்.

* நான்காமதிபதி, சனி சேர்க்கைபெறுவது, சுகஸ்தானத்தில் பாதிப்பு ஏற்படுவதை சுட்டிக்காட்டு கிறது.

* சோழி லக்னத்திற்கு பன்னிரண்டில் மாந்தி அமர்ந்திருப்பதால், வருங்காலத்திலும் சில விபத்துகள் ஏற்படலாம் என்று எச்சரிக்கிறது.

* பரிகாரங்களைச் செய்தால் மட்டுமே எதிர்காலத்தில் விபத்துகளைத் தவிர்க்கமுடியும்.

பரிகாரம்

பெருமாளின் கஜேந்திர மோட்சப் படத்தை வைத்து, பிரதி மாதம் திருவோண நட்சத்திரத்தில் பூஜைசெய்தால் ஆபத்துகள் விலகும்.

மதுரை அருகேயுள்ள திருமோகூர் சென்று சக்கரத்தாழ்வாரை வழிபட்டால் வாகன விபத்துகளைத் தவிர்கலாம்.

(தொடரும்)

செல்: 63819 58636