கவலையும் பயமும் பிரசன்னம் பார்க்க வந்தவரின் முகத்தில் பிரதிபலித்தது. புண்ணிய யாத்திரைக்குச் சென்ற தன் தந்தை சில ஆண்டுகளாகியும் திரும்பி வராததையும், அவரைப்பற்றிய எந்த தகவலும் கிடைக்காத கவலையையும் தெரிவித்து பிரசன்னம் கேட்கப்பட்டது.
சோட்டாணிக்கரை பகவதியை வணங்கி தன் பிரசன்னத்தை அமைத்தார் கிருஷ்ணன் நம்பூதிரி. சோழி லக்னத்திற்கு எட்டாம் பாவம் வலிமைகாட்டியதால், பிரசன்னம் கேட்க வந்தவரின் தந்தை உயிருடன் இருக்கிறார் என்பது உறுதியானது. குருபகவான் மூல நட்சத்திரத்தில் கேது சாரம் வாங்கியதாலும், அது சோழி லக்னத்திற்கு பத்தாமிடமாக அமைந்ததாலும், காணாமல் போனவர் சந்நியாசத்தை ஏற்றுக் க
கவலையும் பயமும் பிரசன்னம் பார்க்க வந்தவரின் முகத்தில் பிரதிபலித்தது. புண்ணிய யாத்திரைக்குச் சென்ற தன் தந்தை சில ஆண்டுகளாகியும் திரும்பி வராததையும், அவரைப்பற்றிய எந்த தகவலும் கிடைக்காத கவலையையும் தெரிவித்து பிரசன்னம் கேட்கப்பட்டது.
சோட்டாணிக்கரை பகவதியை வணங்கி தன் பிரசன்னத்தை அமைத்தார் கிருஷ்ணன் நம்பூதிரி. சோழி லக்னத்திற்கு எட்டாம் பாவம் வலிமைகாட்டியதால், பிரசன்னம் கேட்க வந்தவரின் தந்தை உயிருடன் இருக்கிறார் என்பது உறுதியானது. குருபகவான் மூல நட்சத்திரத்தில் கேது சாரம் வாங்கியதாலும், அது சோழி லக்னத்திற்கு பத்தாமிடமாக அமைந்ததாலும், காணாமல் போனவர் சந்நியாசத்தை ஏற்றுக் கொண்டுவிட்டார் என்பதும், இனி வீடு திரும்பமாட்டார் என்பதும் தெளிவானது. பிரசன்னத்தில் வந்த பலன் தெரிவிக்கப்பட்டது. சில காலம் கழித்து, தன் தந்தை துறவறம் ஏற்று காசியில் இருக்கும் செய்தி கிடைத்ததும், பிரசன்னம் கேட்க வந்தவரின் மனம் நிம்மதி அடைந்தது. பிரசன்ன ஆரூடத்தின் பெருமை யும் விளங்கியது.
கேரள ஜோதிடத்தின் சிறப்பு
பிரசன்ன ஆரூடத்தில், தாது, மூலம், ஜீவன்போன்ற பிரிவுகளை ஆராய்ந்து பலன் கான்பதே கேரள ஜோதிடத்தின் சிறப்பு.
களவுபோன பொருட்களைப்பற்றி பிரசன்னம் பார்க்கும்போது, திருட்டுப்போன பொருட்களின் தன்மை மற்றும் அது திருடப்பட்ட நேரத்தை, ஆரூடத்தைப் பார்த்த கிரகம் மற்றும் இருக்கும் கிரகத்திலிருந்து அறியலாம். அதே போல், ராசிகளின் தாது, மூலம், ஜீவனைக்கொண்டு திருடியவரையும் கண்டுபிடிக்கலாம்.
ஒரு ராசியை மூன்று பிரிவுகளாகப் பிரிப்பது (10 பாகை) திரேகாணம்.
முதல் திரேகாணம் கர்ம திரேகாணம்; 1 முதல் 10 பாகை.
இரண்டாம் திரேகாணம் போகத் திரேகாணம்; 11 முதல் 20 பாகை.
மூன்றாம் திரேகாணம் நாசத் திரேகாணம்; 21 முதல் 30 பாகை.
இந்த திரேகாணத்தினை மூன்றாகப் பிரித்தால் நவாம்சம். இதில் முதல் பாதம் தாது, இரண்டம் பாதம் மூலம், மூன்றாம் பாதம் ஜீவன்.
கர்ம தாது 0 முதல் 3.20 பாகை வரை.
கர்ம மூலம் 3.21 முதல் 6.40 பாகை வரை.
கர்ம ஜீவன் 6.41 முதல் 10.00 பாகை வரை.
போக தாது 10.00 முதல் 13.20 பாகை வரை.
போக மூலம் 13.21 முதல் 16.40 பாகை வரை.
போக ஜீவன் 16.41 முதல் 20.00 பாகை வரை.
நாச தாது 20.00 முதல் 23.20 பாகை வரை.
நாச மூலம் 23.21 முதல் 26.40 பாகை வரை.
நாச ஜீவன் 26.41 முதல் 30.00 பாகை வரை.
வெளிநாடு சென்று கல்வி பயில முடியுமா?
கேள்வி: எனக்கு வெளிநாடு சென்று கல்வி பயில்வதில் விருப்பம் அதிகம். என் ஆசை நிறைவேறுமா?
-சுரேஷ், சென்னை.
(பிரசன்ன ஆரூட எண் 91; அவிட்டம் 3-ஆம் பாதம்)
* சோழி லக்னத்தில் குரு பகவான் இருப்பதால் எண்ணம் நிறைவேறும்.
* உயர்கல்வி ஸ்தானமாகிய ஒன்பாதா மிடத்தில் குருவின் பார்வை விழுவதால், பிரசன்னத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கான பதில் சாதகமாக உள்ளது.
* வெளிநாட்டுப் பயணத்தைச் சுட்டிக்காட்டும் பன்னிரண்டாம் பாவத்தில் சனி பகவான் ஆட்சி பெற்றிருப்பது, வெற்றிகரமான வெளிநாட்டுப் பயணத்தை உறுதிப்படுத்துகிறது.
* சோழி லனத்திற்கு நான்கில் புதனுடன் ராகு சேர்வது, கல்விக்காக வெளிநாட்டுக்குப் பயணம் செய்யப்போவதை உணர்த்து கிறது.
* குரு பகவான் அதிசார கதியிலிருந்து விடுபட்டு மகரத்தில் சஞ்சரிக்கும்போது நல்ல வாய்ப்பு கிடைக்கும் என்பதும் உறுதியாகிறது.
* சோழி லக்னத்திற்கு எட்டாமிடமாக, கல்விக்கான கன்னி ராசி அமைவதால், செல்லும் நாடு கடல்நடுவே கன்னிசிலை இருக்கும் அமெரிக்க நாடாகவே இருக்கும் என்பதும் புலனாகிறது.
(தொடரும்)
செல்: 63819 58636