கேரள ஜோதிட ரகசியங்கள்! (25)

/idhalgal/balajothidam/kerala-astrological-secrets-25

தட்டமும்,கவலையும் போட்டி போட்டுக்கொண்டு, பிரசன்னம் பார்க்க வந்தவரின் முக பாவத்தைக் காட்டியது. தன்னுடைய மகன், தனியார் நிறுவனத்தில் வேலையில் இருந்ததாகவும், அந்த வேலையைத் தற்போது, விட்டுவிட்டதாகவும் தெரிவித்தார். தன் மகன் எப்போதும் கவலையிலும் சோகத்திலும் இருப்பதாகவும், அவன் மனதிலுள்ள ரகசியத்தைப் புரிந்துகொள்ள முடியவில்லை என்றும் தெரிவித்தார்.

keralajothidam

செங்கனூர் பகவதியை வேண்டி, தன் பிரசன்னத்தைத் தொடங்கினார் கிருஷ்ணன் நம்பூதிரி. சோழிப் பிரசன்னம், மிருகசிரீடம் இரண்டாமிடத்தைக் காட்டியது. நட்சத்திர அதிபதியாகிய செவ்வாய், கடகத்தில் நீசமடைந்திருந்தார். காலபுருஷ லக்னத்தின் அதிபதி, மனதைக் குறிக்கும் நான்காமிடத்தில் நீசமடைவது, மனச்சோர்வையும் விரக்தியையும் குறித்தது. சோழிப் பிரசன்ன லக்னமாக அமைந்த, ரிஷப ராசிக்கு நான்காம் அதிபதியாகிய சூரியனின் இ

தட்டமும்,கவலையும் போட்டி போட்டுக்கொண்டு, பிரசன்னம் பார்க்க வந்தவரின் முக பாவத்தைக் காட்டியது. தன்னுடைய மகன், தனியார் நிறுவனத்தில் வேலையில் இருந்ததாகவும், அந்த வேலையைத் தற்போது, விட்டுவிட்டதாகவும் தெரிவித்தார். தன் மகன் எப்போதும் கவலையிலும் சோகத்திலும் இருப்பதாகவும், அவன் மனதிலுள்ள ரகசியத்தைப் புரிந்துகொள்ள முடியவில்லை என்றும் தெரிவித்தார்.

keralajothidam

செங்கனூர் பகவதியை வேண்டி, தன் பிரசன்னத்தைத் தொடங்கினார் கிருஷ்ணன் நம்பூதிரி. சோழிப் பிரசன்னம், மிருகசிரீடம் இரண்டாமிடத்தைக் காட்டியது. நட்சத்திர அதிபதியாகிய செவ்வாய், கடகத்தில் நீசமடைந்திருந்தார். காலபுருஷ லக்னத்தின் அதிபதி, மனதைக் குறிக்கும் நான்காமிடத்தில் நீசமடைவது, மனச்சோர்வையும் விரக்தியையும் குறித்தது. சோழிப் பிரசன்ன லக்னமாக அமைந்த, ரிஷப ராசிக்கு நான்காம் அதிபதியாகிய சூரியனின் இரண்டில் இருப்பதும், சுக்ரனின் அமைப்பையும், மனோ காரகனாகிய சந்திரனின் சஞ்சாரத்தையும் கணக்கில்கொண்டு பார்க்கும்போது, பிரசன் னம் பார்க்க வந்தவரின் மகன் ஒரு விதவையைக் காதலிக்கிறான் என்றும், அதைப் பெற்றோரிடம் தெரிவிக்க அஞ்சுகிறான் என்பதும் தெளிவானது.

பிரசன்ன ஜோதிடத்தில் பலன்களை உள்ளதை உள்ளபடியே சொல்ல வேண்டுமென்பதால், விளக்கமாகத் தெரிவிக்கப்பட்டது. சில நாட்கள் கழித்து மகனிடம் விசாரித்ததில், பிரசன்ன ஆரூடத்தில் சொல்லப்பட்டவையே உண்மை என்று புரிந்தது.

கேரள ஜோதிடத்தின் சிறப்பு

ஜோதிடத்தில், துவாதச லக்னங்கள் என பன்னிரண்டு வகையான லக்ன விளக்கங்கள் சொல்லப்பட்டுள்ளன. 1. ஜென்ம லக்னம், 2. ஓரா லக்னம், 3. கடிகா, 4. ஆருடம், 5. நட்சத்திரம், 6. காரகம், 7. ஆதரிசம், 8. ஆயுள், 9. திரேக்காணம், 10. அங்கிசம், 11. நவாம்சம், 12. பாவம்.

நடைமுறையில், ராசிக்கட்டத்தில் உள்ள லக்னம், நவாம்ச கட்டத்தில் உள்ள லக்னம். பாவ கட்டத்தில் உள்ள கிரக நிலைகளை வைத்துதான் பலன்களைத் தெரிந்துகொள்கிறோம். ஆனால்,கேரள ஜோதிடத்தில், கிரக காரகம்- பாவ காரகம் ஆகியவற்றைக்கொண்டு,காரக லக்னத்தைக் கணிக்கிறார்கள். அந்த காரக லக்னத்தைப் பிரதானமாகக் கொண்டு பலன்களை அறிகிறார்கள்.

dd

உதாரணமாக, ஜாதகரின் தந்தையைப் பற்றிய கேள்விக்கு, ஒன்பதாம் பாவத்தையும், சூரியனின் நிலையையும் கொண்டு ஆராய்கிறார்கள். ஜாதகரின் மகனைப்பற்றிய கேள்விக்கு, ஐந்தாமிடத்தையும், குருவின் நிலையையும் கொண்டு கணக்கிடுகிறார் கள். சந்திரனுக்கு ஏழாம் பாவத்திற்கும், சுக்ரனிருக்கும் பாவத்திற்கும் உள்ள தொடர்பே ஒரு ஆண் ஜாதகரின் குடும்ப வாழ்க்கையைத் தீர்மாணிக்கிறது என்பதே கேரள ஜோதிடர்களின் கருத்து.

சொத்தில் வில்லங்கம் உள்ளதா?

கேள்வி: சென்னைக்கு வெளியே, புறநகர்ப் பகுதியில், மூன்றாண்டு களுக்குமுன் ஒரு நிலம் வாங்கி னேன். இப்போது அது அரசாங்கத் தின் நிலமென்று தெரிய வந்துள்ளது. நான் முதலீடு செய்த பணம் திரும்பவருமா?ஏன் இதுபோன்ற ஏமாற்றம் ஏற்பட்டது?

-திருநாவுக்கரசு, சென்னை.

(பிரசன்ன ஆரூட எண்100; பூரட்டாதி 4-ஆம் பாதம்)

* சோழி லக்னத்திற்கு பாதகத்தில், பிரசன்ன லக்னமாகிய கன்னி (நில ராசி) பூமி தொடர்புடைய ராசியில் விழுவதால், பிரச்சினை நிலம் சம்பந்தப்பட்டது என்பதைக் காட்டுகிறது ப் உத்திரத்தில் உள்ள சந்திரன், அது ஊர்க் கோடியிலுள்ள நிலம் என்பதை உறுதியாக்குகிறது.

* செவ்வாய் (பூமி காரகன்) மாந்தியோடு, ஒரே ராசியிலிருப்பது, நிலம் வாங்கியதில் மோசடி செய்யப்பட்டுள்ளதைக் குறிக்கும்.

* சோழி லக்னத்தின் அறுபத்து நான்காவது நவாம்சம், செவ்வாயின் நட்சத்திரமான சித்திரையில் அமைவதும், அந்த ராசி துலாமாக அமைவதாலும், இந்த வழக்கு நீதிமன்றத்திற்குச் செல்லவேண்டிய அவசியத்தை உண்டாக்கும்.

* சோழி லக்னத்திற்கு மூன்று, எட்டுக்கான சுக்ரன் நான்காமிடத்திலிருப்பதும், அது மிதுனமாக இருப்பதும், நில சம்பத்தப்பட்ட பத்திரத்தில் மோசடி செய்யப்பட்டுள்ளது தெளிவாகிறது.

* பிரசன்ன லக்னத்திற்கு ஒன்பதில் கேது அமர்வதால், அந்த நிலம் கோவிலுக்குச் சொந்தமானது.

* பரிகாரத்தைக் காட்டும் பத்தொன்பதாவது நவாம்சம் கிருத்திகை இரண்டாம் பாதமாக அமைந்து, நவாம்ச சக்கரத்தில், மகரத்தில் அமைவதால், குற்றம் புரிந்தவருக்கு தண்டனை கிடைக்கும். சோழி லக்னத்தின் அதிபதியாகிய குரு, பன்னிரண்டாமிடமாகிய விரய ஸ்தானத்திலிருப்பதால், பணம் திரும்ப வருவது கடினம் என்பதை உணர்த்துகிறது.

* நிலம் வாங்குவதற்குமுன், சட்ட ஆலோசனை பெறுவதைப்போல், ஜோதிட ரிடம் ஆலோசனை கேட்டிருந்தால், இந்த நிலை ஏற்பட்டிருக்காது.

bala020721
இதையும் படியுங்கள்
Subscribe