Advertisment

கேரள ஜோதிட ரகசியங்கள்! (25) -

/idhalgal/balajothidam/kerala-astrological-secrets-25-0

திகாரத் தோரணையும், ஆளுமை யும் பிரசன்னம் பார்க்க வந்தவரின் தோற்றத்தில் பிரதிப-த்தது. இயற்கையோடு ஒட்டாத பணிவும், புன்னகையும் அவர் அரசு உயர்பதவியில் உள்ளவர் என்பதைத் தெரிவித்தது. தன் மனைவி, சில ஆண்டுகளாக மன நோயால் பாதிக்கப் பட்டுள்ளார் என்ற வருத்தமான சேதியைப் பகிர்ந்துகொண்டார். பல மனநோய் மருத்துவர்களிடம் சென்றும் பலனில்லை என்று தெரிவித்தபோது, அவர் குர-ல் சோகம் இழையோடியது.

Advertisment

kk

செங்கனூர் பகவதியைப் பிரார்த்தனை செய்து, பிரசன்னத்தைத் தொடங்கினார் கிருஷ்ணன் நம்பூதிரி. பிரசன்ன சோழி லக்னம் கடகமாக அமைந்து, இரண்டாமதிபதியும், நான்காம் அதிபதியும் கெட்டு, மனோகாரகனாகிய சந்திரனும் பாவிகளுடன் சேர்ந்தது,

மனோவியாதியின் தீவிரத்தைக் காட்டு கிறது. திருத்தேவன்குடி கற்கடகேஸ்வரரை திங்கள்கிழமை தர

திகாரத் தோரணையும், ஆளுமை யும் பிரசன்னம் பார்க்க வந்தவரின் தோற்றத்தில் பிரதிப-த்தது. இயற்கையோடு ஒட்டாத பணிவும், புன்னகையும் அவர் அரசு உயர்பதவியில் உள்ளவர் என்பதைத் தெரிவித்தது. தன் மனைவி, சில ஆண்டுகளாக மன நோயால் பாதிக்கப் பட்டுள்ளார் என்ற வருத்தமான சேதியைப் பகிர்ந்துகொண்டார். பல மனநோய் மருத்துவர்களிடம் சென்றும் பலனில்லை என்று தெரிவித்தபோது, அவர் குர-ல் சோகம் இழையோடியது.

Advertisment

kk

செங்கனூர் பகவதியைப் பிரார்த்தனை செய்து, பிரசன்னத்தைத் தொடங்கினார் கிருஷ்ணன் நம்பூதிரி. பிரசன்ன சோழி லக்னம் கடகமாக அமைந்து, இரண்டாமதிபதியும், நான்காம் அதிபதியும் கெட்டு, மனோகாரகனாகிய சந்திரனும் பாவிகளுடன் சேர்ந்தது,

மனோவியாதியின் தீவிரத்தைக் காட்டு கிறது. திருத்தேவன்குடி கற்கடகேஸ்வரரை திங்கள்கிழமை தரிசித்து ருத்ர ஹோமம் செய்தால் நோய் நீங்குமென்ற பரிகாரமும் சொல்லப்பட்டது. சில நாட்கள் கழித்து பிரசன்னத்தில் தெரிவிக்கப்பட்ட பரிகாரங் களால் நோய் நீங்கியது. பிரசன்னம் கேட்க வந்த அதிகாரி வியந்து போனார். முதல்முறையாக ஜோதிட சாஸ்திரத்திற்குத் தலைவணங்கினார்.

கேரள ஜோதிடத்தின் சிறப்பு

Advertisment

ஒரு ஜாதகரின் செல்வம் மற்றும் செல்வாக்கைப் பற்றி அறிய கேரள ஜோதிடர்கள் இந்து லக்னத்துடன் தொடர்புடைய கிரகத்தின் தசாபுக்தியை ஆராய்கிறார் கள். மகாகவி காளிதாசர் உத்திர காலமிருதத்தில் இந்து லக்னம் அல்லது மகாலட்சுமி லக்னத்தைப்பற்றி விரிவாக எடுத்துரைத்துள்ளார். உதாரணத்திற்கு- மேஷ ராசியும் மேஷ லக்னமும் அமைந்த ஜாதருக்கு விருச்சிகமே இந்து லக்னம். ரிஷப ராசியும் மேஷ லக்னமும் அமைந்தவருக்கு மீன ராசியே இந்து லக்னமாக அமையும்.

இந்து லக்னத்தில் இருக்கும் கிரகம், அதன் தசை மற்றும் புக்தியில், ஜாதகரை புகழ், பணம், அந்தஸ்து என உயர்வடைய வைக்கும் என்பதே கேரள ஜோதிடர்களின் கருத்து. திருமண வாழ்க்கை நீடிக்குமா?

கேள்வி: எனக்கு திருமணமாகி ஐந்து ஆன்டுகளாகி விட்டது. எதிர்பாராத குடும்ப சண்டையால் எனக்கும், என் மனைவிக்குமான உறவில் தடை ஏற்பட்டுள்ளது. திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட தடை நீங்குமா? அல்லது நீடிக்குமா?

dd

-மோகன சுந்தரம், மதுரை.

(பிரசன்ன ஆரூட எண் 19; மிருகசிரீடம் 3-ஆம் பாதம்)

* சோழி லக்கினமாகிய மிதுனத் திற்கு பாதகாதிபதியாகிய குரு ஒன்பதில் இருப்பது குலதெய்வ சாபத்தைக் காட்டுகிறது சோழி லக்னத்திற்கு இரண்டாமிடத்தில் செவ்வாய் நீசம்பெற்று அமர்வது, கணவன்- மனைவிக்குள் பேச்சு வார்த்தை இல்லாமல் போனதைக் குறிக்கிறது.

* சோழி லக்னத் திற்கு ஐந்தில் மாந்தி இருப்பது, புத்திர தோஷத்தை சுட்டிக் காட்டுகிறது. குழந்தை பாக்கியம் இல்லாததால் ஏற்பட்ட விரக்தியையும், அதனால் உண்டான, மன விரோதத்தையும் அறியமுடிகிறது.

* சோழி லக்னத்தின் அறுபத்து நான்காவது நவாம்சம், உத்திராடம் இரண்டில் அமைந்து, வர்க்கோத்தமம் பெறுவது, மன விரோதத்தின் தீவிரத்தைக் காட்டுகிறது .

* குருபகவானின் பார்வை, சோழி லக்னத்திலும், பிரசன்ன காலத்தில் உதயமான லக்னத்தின்மீதும் விழுவதால், கணவன்- மனைவிக்குள் ஏற்பட்ட மன விரோதம் விரைவில் தீரும். குழந்தை பாக்கியம் உண்டாகும் என்பதும் உறுதியாகிறது.

* குருபகவானின் பார்வை, சோழி லக்னத்திற்கு ஐந்தாம் அதிபதியாகிய சுக்கிரன்மீது அமைவதாலும் நல்ல சேதி விரைவில் கிடைக்கும்.

* இங்கு குறிப்பிட்டுள்ள பரிகாரங் களைச் செய்தால், ஆறு மாதங்களில் நல்ல பலன் கிடைக்கும்.

பரிகாரம்

* முதியோர் இல்லங்களில் உள்ள ஆதரவற்ற பெண்களுக்கு உணவு, உடை வழங்குவதால் அவர்களின் ஆசிபெற்று தோஷப் பரிகாரம் பெறலாம்.

* பசுக்களை பூஜித்து கோசாலை அமைத்து பராமரித்தல் போன்ற செயல் களைச் செய்தால் பரிகாரம் கிடைக்கும்.

* ஜாதகர் பிறந்த நட்சத்திரமும் அமாவாசையும் கூடும் நாளில் கணவர்- மனைவி இருவரும் இராமேஸ்வரம் கட-ல், நமச்சிவாயா என்று கூறி குளிக்க வேண்டும். பின்பு கோவில் பிராகாரத்தில் உள்ள இருபத்தியோரு தீர்த்தத்திலும் மூழ்கி சுவாமி தரிசனம் செய்யவேண்டும். பின்பு புத்திர பாக்கியம் வேண்டி சுவாமியை மனதில் நிறுத்தி தியானம் செய்யவேண்டும். பின்பு அடுத்து வரும் அமாவாசையில், தனது குலகோவிலுக்குச் சென்று தரிசனம் செய்யவேண்டும்.

(தொடரும்)

செல்: 63819 58636

bala190721
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe