கேரள ஜோதிட ரகசியங்கள்! (23) - லால்குடி கோபாலகிருஷ்ணன்

/idhalgal/balajothidam/kerala-astrological-secrets-23-lalgudi-gopalakrishnan

காதோரம் நரைமுடி தலைகாட்டியது. பிரசன்னம் பார்க்கவந்தவர் நடுத்தர வயதானவர் என்பதைக் கணிப்பது சுலபமாகவே இருந்தது. கிருஷ்ணன் நம்பூதிரியை வணங்கியவர், தன் பிரச்சினையை விளக்கி னார். திருமணமாகிப் பத்து வருடங்கள் கடந்துவிட்ட போதும், தான் கொஞ்சிமகிழ பிள்ளை இல்லை என்பதைத் தெரிவித்து வருத்தமுற்றார்.

'கல்லில்' பகவதியை வேண்டிய பிறகு பிரசன்னம் தொடங்கியது.

dd

சோழி லக்னத்தின் ஐந்தாமிடத்தில் ராகுவும், ஐந்தாம் வீட்டின் அதிபதி எட்டாமிடத்தில் மறைந்த தும்,புத்திர தோஷத்தைக் காட்டியது. ஏழாம்வீட்டு அதிபதி பாதகத்திலிருப்ப தால், பிரசன்னம் பார்க்க வந்தவரின் மனைவிக்கு கருப்பையில் கோளாறு இருப் பதும் தெளிவானது. பத்தாம் வீட்டின் அமைப்பைக் கொண்டு, முன்னோர் களுக்கு முறையாக ஈமக் கடன் செய்யாததால் வந்த வினையென்பதும் கண்டறியப்பட்டது. திருபுல்லாணி எனும் ஷேத்திரத்தில் பித்ரு தோஷத்தை நீக்கியபிறகு, கர்நாடகாவிலுள்ள தொட்ட மளூர் ஸ்ரீ நவநீதகிருஷ்ணன் திருக்கோவிலிலிருக் கும் கிருஷ்ணனுக்கு தொட்டில் கட்டி வெண்ணெய் நைவேத் தியம் செய்து வேண்டிக் கொள்வதால் புத்ர தோஷம் நீங

காதோரம் நரைமுடி தலைகாட்டியது. பிரசன்னம் பார்க்கவந்தவர் நடுத்தர வயதானவர் என்பதைக் கணிப்பது சுலபமாகவே இருந்தது. கிருஷ்ணன் நம்பூதிரியை வணங்கியவர், தன் பிரச்சினையை விளக்கி னார். திருமணமாகிப் பத்து வருடங்கள் கடந்துவிட்ட போதும், தான் கொஞ்சிமகிழ பிள்ளை இல்லை என்பதைத் தெரிவித்து வருத்தமுற்றார்.

'கல்லில்' பகவதியை வேண்டிய பிறகு பிரசன்னம் தொடங்கியது.

dd

சோழி லக்னத்தின் ஐந்தாமிடத்தில் ராகுவும், ஐந்தாம் வீட்டின் அதிபதி எட்டாமிடத்தில் மறைந்த தும்,புத்திர தோஷத்தைக் காட்டியது. ஏழாம்வீட்டு அதிபதி பாதகத்திலிருப்ப தால், பிரசன்னம் பார்க்க வந்தவரின் மனைவிக்கு கருப்பையில் கோளாறு இருப் பதும் தெளிவானது. பத்தாம் வீட்டின் அமைப்பைக் கொண்டு, முன்னோர் களுக்கு முறையாக ஈமக் கடன் செய்யாததால் வந்த வினையென்பதும் கண்டறியப்பட்டது. திருபுல்லாணி எனும் ஷேத்திரத்தில் பித்ரு தோஷத்தை நீக்கியபிறகு, கர்நாடகாவிலுள்ள தொட்ட மளூர் ஸ்ரீ நவநீதகிருஷ்ணன் திருக்கோவிலிலிருக் கும் கிருஷ்ணனுக்கு தொட்டில் கட்டி வெண்ணெய் நைவேத் தியம் செய்து வேண்டிக் கொள்வதால் புத்ர தோஷம் நீங்குமென்று அறிவுறுத்தப்பட்டது. பிரசன்ன ஆருடத்தால் தோஷப் பரிகாரங்களையும் கண்டறியமுடியும் என்பதை அறிந்து, மகிழ்ச்சியுடன் வீடுதிரும்பி னார் பிரசன்னம் பார்க்க வந்தவர்.

கேரள ஜோதிடத்தின் சிறப்பு

கேரள ஜோதிடர்கள், ஜாதருக்கு ஒரு நிகழ்வு எப்போது நடக்குமென்பதை, காலச் சக்கர தசையால் கணித்துச் சொல்கிறார்கள்.

காலச்சக்கர தசையும் விம்சோத் தரி தசையைப்போல் ஜென்ம நட்சத்திரத்தைக்கொண்டு கணிக்கபடுவதுதான் என்றா லும், இவ்விரண்டு தசைகளுக் கும் ஒரு வித்தியாசம் உண்டு. விம்சோத்தரி தசையில் வரும் தசா வருடங்கள் கிரகங்களுக்கு ஒதுக்கப்பட்டவையாகும். ஆனால் காலச்சக்கர தசையில் வரும் தசா வருடங்கள் ராசி களுக்கு ஒதுக்கப்பட்டவையாகும். காலச்சக்கர தசைக்கு ராசி தசை, நவாம்ச ராசி தசை என்னும் பெயர்கள் உண்டு. விம்சோத்தரி தசையில் கேது தசை, சுக்கிர தசை, சூரிய தசை என கிரகங்களின் பெயரில் அழைக்கப்படுவது போல், காலச்சக்கர தசைகளானது மேஷ செவ்வாய் தசை, ரிஷப சுக்கிர தசை, மிதுன புதன் தசை, கடக சந்திர தசை, சிம்ம சூரிய தசை, கன்னி புதன் தசை என அந்தந்த ராசியையும், ராசியாதிபதியையும் இணைத்து அழைக்கப்படுகின்றன.

விம்சோத்தரி தசையில் ஒவ்வொரு தசையிலும் ஒன்பது புக்திகள் வருவதுபோல், காலச்சக்கர தசை முறையிலும் ஒவ்வொரு தசையிலும் ஒன்பது புக்திகள் வரும். ஆனால் விம்சோத்தரி தசையில் வருவது கிரக புக்திகளாகும், காலச்சக்கர தசையில் வருவது ராசி புக்திகளாகும். விம்சோத்தரி தசை முறையில் ஒன்பது கிரக தசைகள் வரும். ஆனால் காலச்சக்கர தசை முறையில் வலவோட்டு தசைகள் பன்னிரண்டு, இடவோட்டு தசை கள் பன்னிரண்டு என மொத்தம் இருபத்து நான்காகும். உடல் ராசி, உயிர் ராசி, நவாம்ச ராசி, புக்திகளின் நகரும் விதத்தில் வேறுபாடுகள் போன்ற சூட்சுமமான விஷயங்கள் காலச்சக்கர தசையில் உண்டு.

விம்சோத்தரி தசையின் மொத்த தசா காலம் நூற்றிருபது வருடங்களாகும். ஆனால் காலச்சக்கர தசையில், ஜென்ம நட்சத்திர பாதம், நட்சத்திரத் தன்மை (வலவோட்டு நட்சத்திரம் அல்லது இடவோட்டு நட்சத்திரம்) ஆகியவற்றைப் பொருத்து மொத்த தசாகாலம் நூறு வருடங்களாகவோ, என்பத்தைந்து வருடங்களாகவோ, என்பத்து மூன்று வருடங்களாகவோ அல்லது என்பத்தியாறு வருடங்களாகவோ அமையும்.

இதனால் ஜாதகரின் ஆயுள் பலத்தை எளிதாகக் கணிக்க முடியும். காலச்சக்கர தசை யில் ராசியும், ராசியாதிபதி களும் மட்டும் எடுத்துக் கொள்ளப்படுவதால், ராகு- கேதுவுக்கு இடமில்லை. கேரள ஜோதிடத்தின் சிறப்பம்சமே காலச்சக்கர தசையைப் பயன்படுத்துவதுதான்.

மறு வாழ்வு மலருமா?

கேள்வி: எனக்கு உறவின்முறையில் பெண் பார்த்து மணமுடிக்க என் பெற்றோர் விரும்புகிறார்கள். தற்போது என் தாய்மாமனின் மகளைப் பெண்பார்க்கும் யோசனையில் இருக்கிறார்கள். அந்த ஏற்பாடு நல்லமுறையில் முடியுமா? அதனால் என் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியுடன் இருக்குமா என்பதை பிரசன்ன ஆரூடத்தின்மூலம் தெரிந்துகொள்ள விரும்புகிறேன்.

-பரத்குமார், பொள்ளாச்சி.

(பிரசன்ன ஆரூட எண்-43, பூரம் 3-ஆம் பாதம்)

ப் சோழி லக்னத்தில் பன்னிரண்டாம் அதிபதி அமர்ந்து ஏழாம் பாவத்தைப் பார்ப்பது, அங்கொரு இழப்பைக் காட்டுகிறது.

ப் ஏழாமதிபதி ஆட்சிவீட்டில் ஆறாமிடத்தில் விரயாமாகியிருப்பது, வாழ்க்கைத் துணையின் பிரிவைக் காட்டுகிறது.

ப் 5 மற்றும் 8-ஆமதிபதியாக இருக்கும் குரு, 7-ல் இருப்பது பெண்ணால் ஏற்படும் ஏமாற்றத் தைக் காட்டும்.

ப் 5-ஆம் பாவதிபதி 7-ல் மாந்தியுடன் இருப்பது, காத-லில் தோல்வி ஏற்பட்டிருப்பதையும் காட்டுகிறது.

ப் குரு மற்றும் மாந்தி இருவரும் ராகுவின் சதய நட்சத்திரத்தில் இருப்பதும், ராகு சந்திரனின் ரோகிணி நட்சத்திரத்தில் இருப்பதும், சந்திரனின் 12 -ஆமதிபதி பார்வை இங்கிருப்பதும் வாழ்க்கையில் ஏற்படும் காதல் இழப்பை உறுதிப்படுத்தும்.

ப் மாந்தி இங்கு அமர்ந்திருப்பது, அந்தப் பெண் பிரிந்து விட்டதையும் காட்டும்.

ப் மாந்தியின் பார்வை சந்திரன் மீதும், லக்னம்மீதும் இருப்பது, காதல் தோல்வியால் ஏற்பட்ட மன அழுத்தத்தைக் காட்டுகிறது.

ப் மேலும் ஏழாமதிபதி ஆறில் இருந்து, ஏழாம் பார்வையாக பன்னி ரண்டாம் இடத்தைப் பார்ப்பதும், மூன்றாம் பார்வையாக எட்டாம் இடத்தைப் பார்ப்பதும், பத்தாம் பார்வையாக துலாத்தைப் பார்ப்ப தும், அந்த பெண்ணின்மீது நீதிமன்றத் தில் வழக்கு இருப்பதையும் சுட்டிக் காட்டுகிறது.

ப் ஏழாமதிபதியாகிய சனி ஆறாமிடத்தில் அமர்வதாலும், இந்தப் பெண்ணைத் திருமணம் செய்யாமலி-ருப்பது நல்லது. ஏழில் மாந்தி இருப்பதால், இந்த திருமனம் நடந்தால் தரம்தாழ்ந்த மனைவியாக அமைவாள்.

(தொடரும்)

செல்: 63819 58636

bala180621
இதையும் படியுங்கள்
Subscribe