உயிரோட்டமில்லாத பார்வை யோடு, நடைப்பிணம்போல் தள்ளாடி வந்தவரைப் பார்த்ததும், பிரசன்னம் பார்க்கவந்தவரது பிரச்சினையின் தீவிரம் உறைத்தது.
வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த தன் ஐந்து வயது மகன் காணாமல் போய்விட்டான் என்பதை வருத்ததுடன் உரைத்தார்.
அவன் திரும்பக் கிடைப்பானா என்பதை பிரசன்ன ஆரூடத்தின் மூலம் அறிந்துக்கொள்ளவே வந்தேன் என்று தன்னை அறிமுகப் படுத்திக்கொ.ண்டார்.
பெருங்கோட்டுக்காவு பகவதியை தியானம் செய்தபின் தன் பிரசன்னத்தைத் தொடங்கினார் கிருஷ்ணன் நம்பூதிரி. மூன்று, எட்டு, பன்னிரண்டாம் பாவங்களின் தொடர்பும், சந்திரனின் அனுஷ நட்சத்திர சஞ்சாரமும், குழந்தை காணாமல் போகவில்லை; கடத்தப் பட்டுவிட்டான் என்பதை உறுதிசெய்தது. பிரசன் னம் கேட்ட நேரத்தில் சந்திரன், சனியின் நட்சத் திரத்தில், ராகுவின் உப நட்சத்திரத்தில் அமைவ தால், தவறான நோக்கத் திற்காக இந்த செயல் நடந்துள்ளது. அந்த குற்றத்தைச் செய்தவர் இன்றிலிலிருந்து எட்டாவது நாள் பிடிபடுவார் என்பதும், குழந்தை மீட்கப்படுவதும் உறுதியென்றும் சொல்லப்பட்டது. பிரசன்ன ஆரூடத்தில் கூறப் பட்டதுபோல், குற்றவாளி பிடிபட்டு குழந்தை மீட்கப்பட்டது. பிரசன்ன ஆரூடத்தின் துல்லி-யமான பலனை உணர்ந்தவர் மகிழ்ச்சியில் வாயடைத்துப்போனார்.
கேரள ஜோதிடத்தின் சிறப்பு
கேரள ஜோதிடர்கள் ஜாதகரின் திருமணம் சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கு உரிய பதிலை உபபாத லக்னத்தைக்கொண்டு ஆராய்கிறார்கள். ஜனன லக்னத்திற்கு பன்னிரெண்டாம் பாவாதிபதி அமரும் இடத்தைக்கொண்டு கணக் கிடப்படுவதே உபபாத லக்னம். உதாரணத்திற்கு, ஒரு ஜாதகரின் ஜென்ம லக்னம் மேஷமாக இருந்தால், பன்னிரண்டாம் பாவம் மீனமாகவும், பன்னிரண்டாம் பாவாதிபதி குருவாகவும் அமையும்.
அந்த ஜாதகத்தில் குரு கடகத்தில் அமர்ந்தால், மீனத்திற்கு ஐந்தாமிடமாகும். கடகத்திலி-ருந்து ஐந்து வீடுகளை எண்ணினால் விருச்சிகம் உபபாத லக்னமாக அமையும். பிரசன்ன ஆரூடத்தில் இதேமுறையை ஆரூட லக்னத்தைக் கொண்டு அறியலாம்.
ப் உபபாத லக்னத்தின் இரண்டாமிடத்தை குரு பார்வையிடும்போது, ஜாதகருக்கு திருமண வாய்ப்பு கைகூடும்.
ப் உபபாத லக்னத்தின் இரண்டாமிடம், வாழ்க்கைத் துணையின் ஆயுளை நிர்ணயிக்கும்.
ப் உபபாத லக்னத்தின் ஏழாமிடம் ஜாதகரின் திருமண வாழ்வில் முறிவு ஏற்படுமா என்பதைக் காட்டும்.
ப் உபபாத லக்னத்தின் அதிபதி உச்சம் பெற்றால், வாழ்க்கைத் துணையால் மகிழ்ச்சியும் ஆதாயமும் கிடைக்கும்.
தந்தையின் மரணம் இயற்கையானதா?
கேள்வி: என் தந்தை கடந்த மாதம் இயற்கை எய்தினார். அவருக்கு எந்த நோயும் இல்லை. அவருடைய மரணத்திற்கான காரணத்தை மருத்துவர்களாலும் உறுதியாக முடிவுசெய்ய இயலவில்லை. எங்கள் குடும்பத்தாருக்கு அவர் மரணத்தில் சந்தேகம் உள்ளது. அந்த சந்தேகத்தை தெளிவுபடுத்த பிரசன்னம் பார்த்துச் சொல்லவேண்டும்.
-குணசேகர், சேலம்.
(பிரசன்ன ஆரூட எண்; 72; கேட்டை- 4-ஆம் பாதம்)
ப் சோழி லக்னமும், பிரசன்ன லக்னமும் காலபுருஷ லக்னத்திற்கு எட்டாமிடத்தில் (விருச் சிகத்தில்) அமைவது, மரணத்தில் சந்தேகம் இருப்பதைக் காட்டு கிறது.
ப் ஆறாமிடத்தில் மாந்தி நிற்பதால் உறவினர்களிடையே பிரிவினையும், இனம்புரியாத நோய்த் தாக்கமும் இருக்கும்.
ப் மாந்தியின் ஏழாம் பார்வை சோழி லக்னத் திற்கு பன்னிரண்டாம் வீட்டில் அமைவது அகால மரணத்தைத் தெளிவாக்குகிறது.
ப் சோழி லக்னாதிபதியும், பிரசன்ன லக்னாதிபதியுமான செவ்வாயும், லக்ன நட்சத்திர அதிபதியான புதனும் எட்டில் மறைவது, மரணத்தின் பின்புலத்தில் மர்மம் இருப்பது தெரிகிறது.
ப் குலதெய்வ பாதுகாப்பை உணர்த்தும் ஒன்பதாமிடத்தின் அதிபதியாகிய சந்திரன், விருச்சிகத்தில் நீசடைவது, குலதெய்வத்தின் வலி-மை குறைக்கப்பட்டுவிட்டதை உறுதி யாக்குகிறது.
ப் ஒன்பதாமிடம், சனியின் ஏழாம் பார்வையைப் பெறுவது, பாதுக்காப்பற்ற தன்மையைக் காட்டுகிறது.
ப் தீய மாந்திரீக சக்திகளே மரணத் திற்குக் காரணம் என்பதில் ஐயமில்லை.
ப் இரண்டு மற்றும் ஐந்தாமிடத்து அதிபதி நான்காமிடத்தில் அமர்வது, உறவினர்களுக்குள் ஏற்பட்ட சொத்துப் பிரச்சனையால் இந்த தீவினை நிகழ்த்தப்பட்டது என்பதே உண்மை.
ப் பன்னிரண்டாமதிபதியாகிய சுக்கிரன், ஏழில் அமர்வது, இறந்தவரின் மனைவிவழி சொந்தங்களின் விரோதத்தால் இந்த பழிவாங்குதல் நடந்துள்ளது.
ப் சந்திரன் கேதுவோடும், சூரியன் ராகுவோடும் கிரகண சம்பந்ததை ஏற்படுத்திக் கொள்வது, மரண மடைந்தவர் தீய சக்திகளால் சூழப் பட்டு ஆயுளை முடித்துக்கொண்டார் என்பதைக் காண முடிகிறது.
ப் அஷ்டகர்ம முறையில் மாரணம் எனும் வித்தையை பிரயோகம் செய்து, இந்த தீயசெயலை செய்திருக்கிறார்கள்.
ப் குரு மகர ராசியில் பிரவேசித்த காலத்தில் இந்த காரியம் செய்யப்பட்டிருக்கிறது.
ப் மாந்தி அமர்ந்த நட்சத்திரத் தைக்கொண்டு பார்க்கும் போது, இது கேரள தேசத்து விஷ்ணு மாயாவின் ஏவல் அறிகுறியாக அமைகிறது.
இந்த மரணம் தீயசக்தியால் ஏற்பட்டது என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை என்பதே உண்மை.
(தொடரும்)
செல்: 63819 58636
_________________
வாசகர்கள் தங்கள் கேள்விகளை இந்தப் பகுதிக்கு மின்னஞ்சல்மூலம் அனுப்பி னால், தேர்ந்தெடுக்கப்படும் கேள்விக்கான பதில், கேரள பிரசன்ன முறையில் ஆராய்ந்து பிரசுரிக்கப்படும். கேள்வியின் விவரம் மற்றும் ஜாதகரின் பெயர், விலாசம், ஒன்று முதல் நூற்றெட்டுக்குள் ஒரு எண்ணையும் தேர்ந் தெடுத்து அனுப்பவும்.
கேள்வியை அனுப்பவேண்டிய முகவரி: [email protected].