ன்னர்களும், மகான்களும் தலைவணங்கிய ஜோதிடக்கலை இன்று புகைபடிந்த ஓவியமாய்ப் பொலி விழந்து காணப் படுகிறது. போற்றிப் புகழ்ந்து பூஜிக்க வேண்டிய ஜோதிடம் சிலருக்கு கேளிக்கையாக மாறிப்போனது வேதனையான உண்மை. சரியான குருவின் வழிகாட்டுதல் இல்லாமலும், மூல நூல்களைக் கற்காமலும், வெறும் ஆர்வக் கோளாறினால் ஜோதிடத்தில் புகுந்தவர்களால், வேதாங்க ஜோதிடம் பாழானது. வேதத்தின் ஆறு அங்கங்களில் கண்ணாகப் போற்றப்படும் ஜோதிடத்தில், கணிதம், கோளம், ஜாதகம், பிரசன்னம், முகூர்த்தம், நிமித்தம் போன்றவற்றை நன்கு கற்றறிந்த பின்னரே ஜோதிடம் சொல்லவேண்டும் என்பது அடிப்படைவிதி. இது பெரும்பாலும் பின்பற்றப்படுவதில்லை. ஒரு ஜனன ஜாதகத்தில், வாரம், திதி, கரணம், நட்சத்திரம், யோகம் போன்றவற்றின் அமைப்பை தொண்ணூற்றாறு தத்துவங்களின் அடிப்படையில் ஆராய்ந்த பின்னரே, பாவ, கிரகப் பலன்களை ஆராயவேண்டும். ஷோடச வர்க்கங்களையும் ஷட் பலங்களையும் ஆராயாமல், ராசி சக்கரத்தை மட்டுமே வைத்துப் பலன் சொல்வது இருட்டு அறையில் கருப்புப்பூனையைத் தேடும் கதையாகிவிடும். கேரள ஜோதிடத்தில் அடிப்படையான ஆறு அங்கங்களும் கணக்கிடப்படுவதாலேயே, துல்லியமான பலன்களைக் காணமுடிகிறது.

sss

கேரள ஜோதிடத்தின் சிறப்பு

= கேரள ஜோதிடர்கள் எல்லா நேரத்திலும் பிரசன்ன ஜோதிடம் பார்ப் பதில்லை. திதி சூன்ய ராசிகளில் பிரசன்ன லக்னமோ, சோழி லக்னமோ அமைந்தால் பிரசன்னம் பார்பதில்லை.

= ஜோதிடம் பார்க்கும் நாளில் ஜோதிடருக்கு சாதகமான தாராபலமுள்ளதா என்பதையறிந்த பின்னரே தங்கள் பணியைத் தொடங்கு வார்கள்.

= ஒருவருக்கு பிரசன்னம் பார்ப்ப தற்கு அனுமதியுண்டா என்பதை, தங்கள் உபாசனா தெய்வத்திடம் கேட்டறிவது ஜோதிடரின் முதல் கடமையாகக் கருதப்படுகிறது.

= சோழிப் பிரசன்ன லக்னம் ஆறு, எட்டு, பன்னிரண்டாம் வீடு களுடன் தொடர்பு கொண்டிருந்தால் பலன் சொல்லமாட்டார்கள்.

= பிரசன்ன லக்னம் மிருத்யு பாகையிலிருந்தாலும் பிரசன்ன ஜோதிடம் சொல்வதை விலக்கிவிடுவார்கள்.

= ஜோதிட சாஸ்திரத்தில், "ஸம்ஹிதா ஸ்கந்தம்' என்ற பிரிவில் கூறப்பட்டுள்ள நிமித்தம், சகுனங் களைக் கணக்கிலெடுத்துக்கொண்ட பிறகே, பிரசன்னம் பார்க்கப்படுகிறது.

கேள்வி: திருமணம் எப்போது நடக்கும்?

சோழி லக்னாதிபதி நீசத்தில் இருப்பது தோஷம். இரண்டில் செவ்வாய் இருப்பதாலும், கிழமையை ஆளும் கிரகமாகிய குரு நீசத்திலிருப்பதாலும் திருமணத்தில் தடையிருப்பதைத் தெளிவாக்குகிறது.

= ஏழாம் அதிபதி புதன் பாதகஸ்தானாதி பதியாகிய குருவுடன் இருப்பதால், கூடிவரும் திருமணத் தொடர்புகள் முழுமை பெறாமல் போவதைக் குறிக்கிறது.

= இன்றைய திதி நவமி- பிரசன்னம் பார்பவருக்கு தெய்வ அனுகூலத்தில் குறை இருப்பதைக் காட்டுகிறது. இந்த திதியில் பிரசன்னம் பார்ப்பவர் . குலதெய்வக் கோவிலில் வேண்டுதலை நிறைவேற்றாமல் இருப்பதைக் குறிக்கும். சந்திரன் செவ்வாயின் நட்சத்திரத்தில் (சித்திரை-3) நிற்பதும் இதை உறுதிப்படுத்தும்.

= களத்திர ஸ்தானமாகிய ஏழாம் வீட்டின் அதிபதியாகிய புதன் பாதகாதிபதியுடன், ராசியில் (மகரத்தில்) சேர்ந்து அம்சத்தில் கேதுவுடன் இணைவது, திருமணத்தடை தரும் தோஷத்தின் வீரியத்தை அதிகப் படுத்துகிறது.

= அஷ்டமாதிபதி மற்றும் 6-ஆம் அதிபதி சேர்ந்து பத்தாம் பாவம் அமர்வது, குடும்பத்திற்கு பித்ரு தோஷம் இருப்பதையும் உணர்த்தும்.

= சோழி லக்னத்திற்கு எட்டில் சந்திரன் அமைவது, ஜாதகரின் மனக் கவலையைக் காட்டுகிறது.

= 12-ல் இருக்கும் மாந்தி, ஜாதகருக்கு தூக்கத்தின்போது ஆவி, பிரேதத் தொல்லைகள் கனவில் உள்ளது தெரிகிறது. மேலும் இது அம்சத்தில் ரிஷப வீட்டில் அமர்வது, அது ஒரு பெண்ணின் ஆன்மா என்றும், குடும்பத்தில் இதற்குமுன் வாழ்ந்து மறைந்த ஒரு மங்களகரமான பெண்ணாகவும் தெரிகிறது. அந்தப் பெண்ணுக்கு ஈமச்சடங்குகளை சரியாகச் செயாததால், சுபகாரியங் களில் தடையுண்டாகிறது.

= சோழி லக்னத்திற்கு ஆறு மற்றும் பத்தாம் பாவம் தொடர்பில் இல்லாததால் திருமணத்தில் தாமதமும் தடையுமிருந்தாலும், பரிகாரத்தால் முடிவில் வெற்றியுண்டாகும்.

= புதன் அவரோகண கதியில் தன் நீசவீட்டை நோக்கிச் செல்வதும் , குருவின் பார்வை சோழி லக்னத் திற்கு ஏழாம் வீடாகிய கன்னியில் இருப்பதாலும், இன்னும் மூன்று மாதங்கள் கழித்து தன்னை விட அந்தஸ்து குறைவாக உள்ள இடத்தில் இந்த ஜாதகருக்குத் திருமணம் நடக்கும் என்பதைச் சுட்டிக்காட்டுகிறது.

= ஜாதகரின் கேள்வி திருமணம் எப்போது நடைபெறும் என்பதாக இருப்பதால், கோட்சாரத்தில் காணும் போது, பிரசன்ன நவாம்சத்தில் சூரியன் துலாத்திலிருந்து மேஷத்தைப் பார்ப்பதாலும், சித்திரை மாதத்தில், குரு கும்பம் ஏறி, புதனும் மீனத் தில் சஞ்சரிக்கும் நேரம் திருமணம் உறுதியாகும்.

திருமணத்தடையை நீக்கும் பரிகாரங்கள்

= கடலூர் அருகிலுள்ள திவ்யதேசமாகிய திருவந்திபுரம் தேவநாதசாமி கோவிலில் செங்க மலத்தாயாரை பூஜை செய்தால் திருமணத்தடை நீங்கும்.

= கும்பகோணத்திற்கு அருகிலுள்ள பட்டீச்சவரத்தில், செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் துர்க்கையம்மனைத் துதிப்பதால் திருமணம் கைகூடும்.

= காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள கச்சபேஸ்வரர் ஆலயத்திலுள்ள நாகமூர்த்திகளை வணங்கி, வெள்ளிக்கிழமை மற்றும் பஞ்சமி நாட்களில் அடிப்பிரதட்சிணம் செய்தால் திருமணத்தடைகள் விலகும்.

= பிரசன்ன லக்னத்தின் ஏழாம் வீட்டோன் புதனாக அமைவதால், மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் புதன்கிழமை பச்சைப் பட்டாடையை சமர்ப்பித்து வழிபடவேண்டும்.

= ஏழு கன்னிப்பெண்களுக்கு உண்ண உணவும், ஆடை தானமும் செய்து சப்தகன்னி பூஜை செய்ய வேண்டும்.

= பித்ரு சாபம் நீங்க காக்கைகளுக்கு தினமும் உணவிடவேண்டும்.குலதெய்வ வேண்டுதலை விரைவில் முடித்துவைப்பது நல்லது.

_____________________

Advertisment

வாசகர்கள் தங்கள் கேள்விகளை இந்தப் பகுதிக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பினால், தேர்ந்தெடுக்கப்படும் கேள்விக்கான பதிலை, கேரள பிரசன்ன முறையில் ஆராய்ந்து பிரசுரிக்கப்படும்.

கேள்வியின் விவரம் மற்றும் ஜாதகரின் பெயர், விலாசம், ஒன்று முதல் நூற்றியெட்டுக்குள் ஒரு எண்ணையும் தேர்ந்தெடுத்து அனுப்பவும்.

Advertisment

கேள்வியை அனுப்பவேண்டிய முகவரி: [email protected]