குழப்பமும் கவலையும் இரட்டைக்குழந்தைகள் கைகோர்த்து வந்ததைப்போல், இறுக்கமான முகத்துடன் பிரசன்னம் பார்க்க வந்தவர், கிருஷ்ணன் நம்பூதிரியை வணங்கினார். தனக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்ததாகவும், அதில் ஒரு குழந்தை பிறந்த ஆறே மாதங்களில் இறந்துவிட்டதாகவும் தெரிவித்தார். "ஒரே ஜாதக அமைப்பைக்கொண்ட இருவரில் ஒரு குழந்தை மட்டும் இறந்துபோனதன் காரணத்தைக் கூறமுடியுமா? எஞ்சிய ஒரு குழந்தையாவது நீண்ட ஆயுளுடன் வாழுமா என்பதை பிரசன்ன ஆரூடத்தின்மூலம் அறியவிரும்புகிறேன்'' என்று தன் வேண்டுகோளை சமர்ப்பித்தார்.
ராசிக் கட்டத்தை மட்டும் பார்த்தால் இரட்டையர்களின் ஜாதகம் ஒரேமாதிரிதான் இருக்கும். நாடி அம்சத்தைக் கொண்டு பார்த்தால் மட்டுமே வேறுபடுத்த முடியும். நெட்டூரி பகவதி அம்மனைத் தொழுதபின் பிரசன்னம் துவங்கியது. சோழி லக்னத் தின் இரண்டாம் வீட்டையும் எட்டாம் வீட்டையும் பரிசீலித்த பின், கடவுளின் அருளால் உயிர்பிழத்திருக்கும் குழந்தைக்கு தீர்க்காயுள் உண்டென்பதைத் தெளிவாக்கி னார். பிரசன்னம் கேட்க வந்தவர் ஆனந்தக் கண்ணீருடன் விடைபெற்றார். விடைதெரியாத கேள்விக்கும் பிரசன்ன ஆரூடத்தின் மூலம் விடைகாணமுடியும் என்னும் வியப்பு அவரை விட்டு விடைபெறவில்லை.
கேரள ஜோதிடத்தின் சிறப்பு பொதுவாக கேரள ஜோதிடர்கள் சோழி லக்னம் அமையும் நட்சத்திர அதிபதியையும், எட்டாம் பாவத்தின் நிலையைக்கொண்டும் பிரசன்ன ஆரூடப் பலன்களைத் தீர்மானிக்கி றார்கள்.
* எட்டாம் பாவத்தில் வலுப்பெற்ற புதன், சுக்கிரன் இருக்க அதிகாரமான பதவி கிடைக்கும்.
* எட்டாம் பாவத்துடன் இரண்டு, பதினோராம் பாவங்களும், சுக்கிரனும் தொடர்புகொள்ள எதிர்பாராத வருமானம் கிடைக்கும்.
* இரண்டு, ஆறு, பதினோராம் பாவங்களின் தொடர்பும், சனி பகவனின் தொடர்பும், எட்டாம் பாவத்திற்குக் கிடைத்தால், தொலைந்த பொருள் கிடைக்கும்.
* நான்கு, பதினோராம் பாவங்களின் தொடர்பும், செவ்வாயின் தொடர்பும் எட்டாம் பாவத்துடன் சம்பந்தப்பட்டால் பூர்வீகச் சொத்து வந்துசேரும்.
* நான்காம் பாவமும், எட்டாம் பாவமும் தொடர்பி-லிருந்து, சூரியனும் சனியும் சம்பந்தப்பட்டால், மேலதிகாரிகளின் வெறுப்புக்கு ஆளாகவேண்டிய நிலை உண்டாகும்.
* ஒன்பதாம் பாவமும், எட்டாம் பாவமும் தொடர்பிலி-ருந்து, சூரியனும் சனியும் சம்பந்தப்பட்டால் தந்தையுடன் கருத்து வேறுபாடு உண்டாகும்.
* எட்டாம் பாவத்து டன் மூன்றாம் பாவமும், சனியும், மாந்தியும் தொடர்புகொண்டால் மனதில் ரகசிய பயம் உண்டாகும்.
* எட்டாம் பாவத் துடன் ஏழாம் பாவமும், வலுவிழந்த செவ்வாயும், சுக்கிரனும் தொடர்புகொண்டால் மணவாழ்க்கை கெடும்.
வேலையில் இடமாற்றம் கிடைக்குமா?
கேள்வி: பல வருடங்களாக ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறேன். எனக்கு சென்னை கிளையில் பணியாற்ற விருப்பமுள்ளதால் விண்ணப்பித்துள்ளேன். நான் விரும்பியபடி வேலையில் இடமாற்றம் கிடைக்குமா என்பதை பிரசன்ன ஆரூடத்தின்மூலம் அறிய விரும்புகிறேன்.
-இராமகிருஷ்ணன், பெங்களூரு.
(கொடுக்கப்பட்ட பிரசன்ன எண்- 51; ஹஸ்தம்- 3-ஆம் பாதம்)
* சோழி லக்னமும் பிரசன்ன லக்னமும் ஒன்றாக வருவது கேள்வியின் தேவை மற்றும் அவசியத்தை உணர்த்துகிறது.
* காலபுருஷனின் ஆறாம் பாவத்தில் லக்னம் சேர்வதால் கேள்வி உத்தியோகத்தைப் பற்றி என்று தெரிகிறது.
* மாந்தி கடகத்தில் பதினோ ராம் வீட்டில் இருப்பதும், பதினோராம் அதிபதி ஒன்பதில் இருப்பதும் வேலையில் இடமாற் றம் வரும் என்பதைக் குறிக்கிறது.
* ஆறாமதிபதி ஐந்தில் விரய மாவதும், இருக்கும் இடத்தை விட்டு வேறிடத்தை நாடுவதைக் காட்டுகிறது. ஆனால், ஐந்து மற்றும் ஆறாமதிபதி ஒருவராகவே இருப்பதும், தன் சொந்த வீட்டிலேயே இருப்பதும், வேலை செய்யும் நிர்வாகத்தில் இடமாறுதல் வேண்டும் என்பதைத்தான் காட்டுகிறது.
* ஆறாமதிபதியின் பார்வை மாந்திமீதும், பதினோராம் பாவத் தில் விழுவதும். மாந்தி பதினோ ராம் வீட்டில் இருப்பதும் முயற்சி யில் வெற்றியைக் காட்டுகிறது.
* லக்னாதிபதி புதன் ஒன்பதில் இருப்பது நீண்ட பயணம் ஏற்படும் என்றும், அவரே கர்மாஸ்தானாதி பதியாக இருப்பதால் பணியில் இடமாற்றம் என்பதும் தெளிவாகிறது.
* குருவின் பார்வையும் கர்ம ஸ்தானத்தில் இருப்பது முயற்சிக்கு வலுசேர்கிறது.
* ஒன்பதாம் பாவத்தில் கிரகயுத்தம் இருப்பதால், பணி இடமாற்றத்தில் போட்டி நிலவு வதாகத் தெரிகிறது. அதனால், முயற்சியில் சிறிய தடைகளைக் காட்டுகிறது. பரிகாரம் செய்தால் நினைத்தது நடக்கும்.
* காளிங்க நர்த்தன ஆழ்வார் பாசுரத்தைப் பாராயணம் செய்தால் சுபமுண்டாகும்.
* சனிக்கிழமை திருப்பதி வேங்கடாசலபதிக்கு சமாராதனை பூஜை செய்வதால், தோஷங்கள் விலகி வெற்றி உண்டாகும்.
(தொடரும்)
செல்: 63819 58636