பார்ப்பதற்கு வளமானவராகத் தெரிந்தாலும் பிரசன்னம் பார்க்க வந்தவரின் முகத்தில் சோகம் குடிகொண்டிருந்தது. கிருஷ்ணன் நம்பூதிரிக்கு இதுபோன்ற காட்சிகள் வழக்கமாகிவிட்டன. மருத்துவரையும் ஜோதிடரையும் பார்க்க வருபவர்கள் மகிழ்ச்சியுடன் இருப்பார்கள் என்று நினைப்பதில் நியாயமில்லை. தன் குடும்பம் வசதியான பின்புலத்தைக் கொண்டதுதான் என்றாலும், உறவினர்கள் ஒருவருக்கொருவர் ஒற்றுமையில்லாமல் சிதறி கிடக்கிறது. நேர்மையாக வாழும் தங்களுக்கு இந்த துன்பம் நேர்ந்ததன் காரணத்தையும், அதை தீர்க்கும் பரிகாரத்தையும் அறியவே பிரசன்னம் பார்க்க வந்ததாகத் தெரிவித்தார்.
செங்கன்னூர் பகவதியைத் தொழுது பிரசன்னம் தொடங்கியது. விருச்சிகம் சோழி லக்னமாக வந்து, எட்டாமிடம் காற்று ராசியாகிய மிதுனமாகவும், மீனத்தில் புதன் பரம நீசத்தில் இருந்து பட்சி திரேகாணத்திலிருந்ததால் பட்சிகளால் வந்த சாபம் என்பது உறுதியானது. மீனம் காலபுருஷ லக்னத்தின் பன்னிரண்டாமிட மாகையால் அழித்தல், கலைத்தல் போன்ற காரகங்கள் வலுப்பெறுகின்றன. பறவைக் கூட்டை அழித்ததால் வந்த தொல்லை யால்தான் குடும்பம் சிதறு தேங்காய்போல் சிதறிவிட்டது. பிரசன்னம் கேட்க வந்தவரின் கண்கள் கலங்கின. தன் வீட்டை சுத்தம் செய்யும்போது ஒரு குருவிக்கூட்டைக் கலைத்துவிட்டதாக ஒப்புக்கொண்டார். ஒரு ஜோடி பறவையை கூண்டோடு வாங்கி அதை சுதந்திரமாகப் பறக்க விடுவதே பரிகாரமாகச் சொல்லப்பட்டது. பிரசன்னம் கேட்பவர் செய்த சிறிய தவறுகளையும் துல்லியமாகக் காணக்கூடிய பிரசன்ன ஆரூடத்தின் பெருமையை உணர்ந்து பிரசன்னம் கேட்க வந்தவர் வீடு திரும்பினார்.
கேரள ஜோதிடத்தின் சிறப்பு
ஒருவர் செய்ய வேண்டிய தொழிலைப்பற்றி காணும் "ஜீவன பிரகரணம்' எனும் ஜோதிட கணிதத்தில் கேரள ஜோதிடத்தின் அணுகுமுறையே சிறப்பா னது. எல்லோரும் எல்லா தொழில்களிலும் வெற்றியடைந்து விடமுடியாது. ஒருவரின் ஜாதக அமைப்பில் அவர்களுக்கு ஏற்ற தொழிலைக் கண்டறிந்தால் மட்டுமே அவர் வாழ்வில் வெற்றி பெறமுடியும். ப் லக்னம் அல்லது சூரியன் அல்லது சந்திரன் ஆகியவற்றில் எது பலமானதோ அதைக் கொண்டே ஒருவரின் ஜீவன பாவத்தை அறிய வேண்டும்.
* ஜீவன பாவத்திற்கு பத்தாமிடத்தில் அமையும் கிரகமும் பத்தாம் பாவாதிபதியும் நவாம்சத்தில் அமையும் ராசியின் காரகத்தைக்கொண்டே செய்தொழிலை நிர்ணயிக்கவேண்டும்.
* அடிமைத்தொழிலுக்கு ஆறாம் பாவத்தின் தன்மையையும், கூட்டுத் தொழிலுக்கு ஏழாம் பாவத்தையும், சுயதொழிலுக்கு பத்தாம் பாவத்தின் அமைப்பையும் ஆராயவேண்டும்.
* பத்தாமதிபதி அமரும் நவாம்ச அதிபதி வலுப்பெற்றால் தொழிலி-ல் சாதனை புரியலாம்.
* நான்காமதிபதியும் பத்தாமதிபதியும் ஒருவருக்கொருவர் பகை, பாதகமடைந்தால் கல்விக்கு ஏற்ற தொழில் அமையாது.
* பத்தாமதிபதி ஆறாம் பாவத்துடன் தொடர்பு கொண்டால், அதிகாரமான பதவி கிடைக்கும்.
* பத்தாமதிபதி, ஐந்தாம் பாவத்துடன் தொடர்புகொண்டால் யூக வர்த்தகம், ரியல் எஸ்டேட் போன்ற தொழிகளில் வெற்றிபெறலாம்.
காணாமல் போனவர் வீடு திரும்புவாரா?
கேள்வி: ஐந்து வருடங்களுக்குமுன் என் கணவர் காணாமல் போய்விட்டார். பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. அவர் உயிருடன் இருக்கிறாரா? வீடு திரும்புவாரா? அவர் வீடு திரும்புவதற்கான பரிகாரத்தை பிரசன்ன ஆரூடத்தின்மூலம் அறிய விரும்பு கிறேன்.
-பெயர் வெளியிட விரும்பாத வாசகி.
(கொடுக்கப்பட்ட பிரசன்ன எண்-95; சதயம்- 3-ஆம் பாதம்)
* பிரசன்ன லக்னத்திற்கு எட்டில் சோழி லக்னம் அமைவதால் காணாமல் போனவர் பற்றிய பிரசன்னம் என்பது உறுதியாகிறது.
* சோழி லக்னத்தின் அதிபதி யாகிய சனி பகவான் பன்னிரண்டி-ருப்பது குடும்பத்தில் உள்ளவரின் பிரிவைக்காட்டும்.
* சோழி லக்னத்திற்கு பத்தாமிடத்தில் கேது இருப்பது, பிரிந்து சென்றவர் ஒரு துறவியைப் போல் சுற்றித்திரிகிறார் என்பது புலனாகிறது.
* மாந்தி சோழி லக்னத்திற்கு ஆறா மிடத்தில் நிற்க, காணாமல்போனவர் கோபத்தால் சுற்றம், நட்பு பகை யைத் தேடிக்கொண்டார் என்பதும், அவர் வம்பு வழக்குகளில் சிக்கிக் கொண்டார் என்பதும் தெளிவாகிறது.
* நான்காம் வீட்டு அதிபதியாகிய சுக்கிரன் மூன்றாமிடத்தில் இருப்ப தால் அவர் சுகமாக இல்லை என்பதை அறியமுடிகிறது.
* ராகு நான்காமிடத்தில் இருப்ப தாலும், அது ரிஷப ராசியாக இருப்ப தாலும் சொந்த ஊரிலி-ருந்து வெகு தொலைவில் ஒரு மறைவிடத்தில் இருக்கிறார்.
* சோழி லக்னத்திற்கு ஏழாம் வீட்டு அதிபதியாகிய சூரியன் மூன்றில் இருப்பது களத்திரத்தைப் பிரிவதைக் காட்டுகிறது.
* ஆனாலும் குருவின் பார்வை ஏழாமிடமாகிய சிம்ம ராசியில் விழுவதால், காணாமல் போனவர் திரும்பி வருவார் என்ற ஆறுதலான விஷயம் தென்படுகிறது.
* சோழி லக்னத்திற்கு சாதகமான நட்சத்திரத்தில் சந்திரன் சஞ்சரிப்பதால், காணாமல் போனவர் ஆயுளுக்கு எந்த பாதகமும் இல்லா மல், குரு பகவான் மீன ராசியில் சஞ்சரிக் கும் காலத்தில் வீடு திரும்புவார்.
* சனிக்கிழமை சனி ஹோரை யில் சிவனை வழிபட்டு வந்தால் கூடிய விரைவில் நல்லசெய்தி கிடைக்கும்.
(தொடரும்)
செல்: 63819 58636