கேரள ஜோதிட ரகசியங்கள்! (17) - லால்குடி கோபாலகிருஷ்ணன்

/idhalgal/balajothidam/kerala-astrological-secrets-17-lalgudi-gopalakrishnan

ல நாட்கள் உறங்காதவர்போல், இடுங்கிய கண்கள், நடுங்கும் கைகளுடன் பிரசன்னம் பார்க்கவந்தவர், ஏதோ பயத்தினால் நிலைகுலைந்து போயிருக்கிறார் என்பதைப் புரிந்துக்கொண்ட கிருஷ்ணன் நம்பூதிரி அவரை சமாதானப் படுத்தி விவரங்களைக் கேட்டறிந்தார். சென்ற ஆண்டு, தன் தந்தை விபத்தில் மரணமடைந்துவிட்டதாகவும், அதற்குப்பிறகு பலமுறை தன் கனவில் வந்து அழுவதாகவும், அதன்காரணத்தை அறியவே பிரசன்னம் பார்க்கவந்ததாகத் தெரிவித்தார். சக்குளத்துக்காவு பகவதியை தியானம் செய்த கிருஷ்ணன் நம்பூதிரி மந்திரங்களைச் சொல்லி சோழிகளின் எண்ணிக்கையைக் கணக்கிட்டார். சோழி லக்னத்திற்கு எட்டு மற்றும் பன்னிரண்டாம் பாவங்களில் ராகு, சந்திரன், மாந்தி ஆகியோரின் தொடர்பைக்கொண்டு, இறந்தவரின் உயிர் சாந்தியடையவில்லை என்பதை உறுதிசெய்தார். பொதுவாகவே, துர்மரணம் அடைந்தவர்கள் கனவில் வந்தால் சில இடர்ப்பாடுகள் ஏற்படு

ல நாட்கள் உறங்காதவர்போல், இடுங்கிய கண்கள், நடுங்கும் கைகளுடன் பிரசன்னம் பார்க்கவந்தவர், ஏதோ பயத்தினால் நிலைகுலைந்து போயிருக்கிறார் என்பதைப் புரிந்துக்கொண்ட கிருஷ்ணன் நம்பூதிரி அவரை சமாதானப் படுத்தி விவரங்களைக் கேட்டறிந்தார். சென்ற ஆண்டு, தன் தந்தை விபத்தில் மரணமடைந்துவிட்டதாகவும், அதற்குப்பிறகு பலமுறை தன் கனவில் வந்து அழுவதாகவும், அதன்காரணத்தை அறியவே பிரசன்னம் பார்க்கவந்ததாகத் தெரிவித்தார். சக்குளத்துக்காவு பகவதியை தியானம் செய்த கிருஷ்ணன் நம்பூதிரி மந்திரங்களைச் சொல்லி சோழிகளின் எண்ணிக்கையைக் கணக்கிட்டார். சோழி லக்னத்திற்கு எட்டு மற்றும் பன்னிரண்டாம் பாவங்களில் ராகு, சந்திரன், மாந்தி ஆகியோரின் தொடர்பைக்கொண்டு, இறந்தவரின் உயிர் சாந்தியடையவில்லை என்பதை உறுதிசெய்தார். பொதுவாகவே, துர்மரணம் அடைந்தவர்கள் கனவில் வந்தால் சில இடர்ப்பாடுகள் ஏற்படும். உடல்நலக் குறைவும், குடும்பத்தில் வாக்குவாதமும் ஏற்படும். அதிலும் இறந்தவர்கள் அழுவதுபோல ஒருவர்

d

கனவுகண்டால் நல்லதல்ல. இறந்தவருக்கு ஈமச்சடங்குகளை சரிவர நிறைவேற்றாததால் வந்த தோஷம் என்பது தெரிவிக்கப்பட்டது. வந்தவர் தன் தந்தைக்கு, மின்சார மயானத்தில் ஈமச்சடங்குகளை செய்ததாகவும், அதனால், இந்த கதி ஏற்பட்டிருக்க லாமென்பதை ஒப்புக்கொண்டார். பிரசன்னம் பார்க்கவந்தவருக்கு பரிகாரங்கள் சொல்லப்பட்டன. பிரசன்ன ஆரூடத்தில், ஜனன ஜாதகம்போல் மரண ஜாதகத்தையும் கணிக்கமுடியும் என்பது தெளிவானது.

கேரள ஜோதிடத்தின் சிறப்பு

ஆபிசாரம் எனும் செய்வினையை பிரசன்ன ஆரூடத்தில் காணும்முறை கேரள ஜோதிடத்தில் சிறப் பானது. ப் செவ்வாய் லக்னத்தில் அல்லது கேந்திரத்திலிருந்து, ஆறாமதிபதி உதய லக்னத் திலிருப்பது செய்வினையின் தன்மையைக் காட்டும்.

ப் ஆறாமதிபதி லக்னம், ஏழாமிடம், தசம கேந்திரம் ஆகிய ஏதாவது ஒரு இடத்திலி-ருந்து செவ்வாயின் பார்வை பெற்றாலும் ஆபிசார தோஷமுண்டு.

ப் கேது லக்ன கேந்திரங்களில் அமர்ந்து செவ்வாயின் பார்வை பெற்றாலும் செய்வினையின் பாதிப்பு உறுதி.

ப் மாந்தி லக்ன கேந்திரங்களில் அமர்ந்து செவ்வாயின் பார்வை பெற்றா லும் செய்வினையின் தாக்கம் உண்டு.

மாந்தி எட்டில் இருக்க, தோல்வியால் உடல் ஆரோக்கியம் கெட்டு மறைமுகநோய் உண்டாகும்.

தொழிலில் முன்னேற்றம் உண்டாகுமா?

கேள்வி: பல வருடங்களாக நான் சிலை செய்யும் தொழிலி-ல் ஈடுபட்டுள்ளேன். என்னிடம் வரும் வாடிக்கையாளர்கள் திருப்தியடையும் வகையில் பணியாற்றிவருகிறேன். ஆனாலும் என் தொழி-லில் முன்னேற்றம் பெறமுடியவில்லை. இதன்காரணத்தை பிரசன்ன ஆரூடத்தின்மூலம் அறிய விரும்புகிறேன்.

-ஆறுமுகம், மயிலாடுதுறை.

(கொடுக்கப்பட்ட பிரசன்ன எண்- 21; திருவாதிரை- 1-ஆம் பாதம்)

*சோழி லக்னம் திருவாதிரை முதல் பாதத்தில் விழுவதும், அங்கு செவ்வாய் இருப்பதும் சர்ப்ப தோஷத்தைக் காட்டுகிறது.

* பாதகாதிபதி குரு ஒன்பதாம் பாவம் ஏறி, சோழி லக்னத்தின்மீது பார்வை விழுவது, பித்ரு தோஷமும் தொடர்வதைத் தெளிவாக்கும்.

* சனியின் பார்வை இரண்டாம் வீட்டிலும், இரண்டாம் வீட்டு அதிபதியாகிய சந்திரனில் விழுவது சரமாக இருப்பதும் நிலையில்லா வருமானத்தைக் காட்டுகிறது.

* மேலும் சந்திரன் சித்திரை நட்சத்திரத்தில் நிற்பது, செவ்வாயின் சர்ப்ப தோஷத்தினாலேயே இந்த பிரச்சினை உள்ளதென்பது தெரிகிறது.

* நவாம்சத்தில் செவ்வாய், சோழி லக்னம் மற்றும் கேது தனுசில் பாதகத்தில் இருப்பது தோஷத்தை வலுவாக்குகிறது.

* ஆறாம் பாவத்தில் மாந்தியோடு கேது நிற்பது, தற்கொலை செய்து இறந்த ஒருவருடைய சிலையைச் செய்துகொடுத்தது முதல் இந்த பிரச்சினை ஆரம்பித்தது தெரிகிறது.

* மேலும் குரு கும்பத்தில் இருப்பது தந்தைவழி சொத்திலி-ருந்து வந்த வருமானமும் இரண்டு வருடங்களுக்கும் மேலாகத் தடைப்பட்டிருப்பதும் புலனாகிறது.

* பதினொன்றில் சூரியன் உச்சம் பெற்றிருப்பதும், அதுவே மூன்றாம் பாவத்திற்கு பாதகமாக அமைவதும், சகோதரவழியிலும் உறவுமுறை சரியில்லை என்றும் பிரசன்னம் கூறுகிறது.

* இரண்டாம் பாவாதிபதி ஐந்தில் இருப்பதால் குழந்தைகளால் லாபம் உண்டாகும். அதனால் குழந்தையின் கையில் கொடுத்து பணத்தை சேமித்தால் பணம் தங்கும்.

* புற்றுமண்ணை பணம் வைக்குமிடத்தில் வைக்க, பணம் கரையாமல் இருக்கும்.

* மேலும் பாதகாதிபதி ஒன்பதில் இருப்பதால் பிதுர் காரியங்கள் சரியாக செய்யாமல் இருப்பது தெரிகிறது. பிதுர் காரியங்களை அமாவாசை திதியில் சரியாக செய்துவருவதும் பரிகாரமாகும்.

* மாந்தியின் தீமை நீங்க, மண்ணினால் செய்த சக்கரம் தாங்கிய கிருஷ்ண விக்கரத்தை தொழில் செய்யுமிடத்தில் வைக்கவேண்டும்.

(தொடரும்)

செல்: 63819 58636

bala140521
இதையும் படியுங்கள்
Subscribe