காலத்துக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பையே ஜோதிடம் என்கிறோம்.
காலத்தை மனிதன் கடக்கிறானா?
காலம் மனிதனைக் கடந்துபோகிறதா?
மனிதனுக்குப் பிறகும் காலம் நிலைத்திருக்குமா? மரணத்துக்குப்பின் மனிதன் வாழ்க்கையின் நிலையென்ன? மறு ஜென்மத்தில் கர்மாவின் விளைவு என்ன என்ற கேள்விகளுக்குக் கிடைக்கும் பதில்தான் ஜோதிடத்தின் நுழைவாயில். தவளையைப் பாம்பு உண்ணும்போது தவளையின் ஆயுள் கெடுகிறது; பாம்பின் ஆயுள் கூடுகிறது. எல்லா உயிர்களுக்கும் காலவரையுன்டு. காலம் காலத்தையே உண்டு வாழ்வதால் காலம் அழிவதில்லை. எதிர்காலத்தின் வாயில் நிகழ்காலமும், வயிற்றுள் இறந்தகாலமும் அடங்குகிறது. இறந்தகாலம் இனி திரும்புவதில்லை. நிகழ்காலமோ, பிறக் கும்போதே இறக்கும் குழந்தை. எதிர் காலமே எஞ்சியுள் ளது. அந்த எதிர் காலத்தை அறிந்து கொள்ளும் ஆவலில் தொடங்கிய பயணமே ஜோதிடம். இந்த பயணம் உலகப்பந்தின் பல இடங்களிலும் வெவ்வேறு காலகட்டங்களில் தொடங்கி இன்றளவும் தொடர்கின்றது. இதில் கிரேக்க ஜோதிடமும், சீன ஜோதிடமும், இந்திய பாரம்பரிய ஜோதிடமும் குறிப்பிடத் தக்கவை. இந்திய ஜோதிடத்தில் துல்லியமான பலன்களை அறியும்முறை கேரள ஜோதிடத்தில் மட்டுமேயுண்டு. கேரள ஜோதிடத்தின் துணைகொண்டு ஜாதகங்களை ஆய்வு செய்யும்முறையை விளக்கு வதே இந்தத் தொடரின் நோக்கம்.
கேரள ஜோதிடத்தின் சிறப்பு
= உபகிரகமாகிய மாந்தியை மையப்படுத்தி பலன் கூறும்முறை முதன்மையானது.
= மூல நூல்களாகிய பிரசன்ன மார்க்கம் பிரசன்ன, தந்திரம், தேவ கேரள, கிருஷ்ணீயம் பிரசன்ன, அனுஷ்டான பத்ததி, தசாத்தியாயம், ஹோரா சாரம், ஹோரா ரத்தி னம் பிருஹத்ஜாதகம் போன்ற நூல்களின் அடிப்படையில் அமைவதே கேரள ஜோதிடத்தின் துல்லியமான பலன்களுக்குக் காரணமாகிறது.
= ஜனன இடத்து கடிகாரம் சரியான நேரத்தைக்காட்டியதா? என்பதை உறுதியாகக் கூறமுடியாது. ஜனன நேரம் பெரும்பாலும் தவறாகவே குறிக்கப்படுவதால், பலன்கள் மாறிப்போக வாய்ப்புண்டு. வினாடி நேர வித்தியாசம் இருந்தாலும் விதி மாறும் என்பதே ஜோதிடவிதி. இரட்டைப் பிறவிகளின் வாழ்க்கை ஒரேமாதிரி அமைவதில்லை. அதனாலேயே கேரள ஜோதிடர்கள் பிரசன்ன ஆரு டத்தினைக் கையாளுகிறார்கள்.
கேள்வி: வேலை எப்போது கிடைக்கும்?
= பிரசன்ன லக்னத்திற்கும், சோழி லக்னத்திற்கும் 1, 12-ஆக வருவது ஆரூடவேதை, பொதுவாக ஆரூடவேதை இருப்பின் அங்கு தோஷம் உள்ளதைக் காட்டும்.
= பிரசன்ன லக்னத்திற்கு பன்னிரண் டாமிடம் காலபுருஷனின் 9-ஆம் பாவமாக இருப்பதும், சோழி லக்னாதிபதி நீசமாக உள்ளதும் பித்ரு தோஷத்தைக் காட்டுகிறது.
= பிரசன்னம் பார்த்த நட்சத்திரம் திருவாதிரை. இந்த நட்சத்திரம் ஜாதகரின் ஜென்ம நட்சத்திரமான மிருகசீரிடத்திற்கு சுப நட்சத்திரமாக இருப்பதால், பிரசன்ன பலன் சொல்வதற்கு அனுமதிக்கப்பட்டது.
= பிரசன்னம் பார்த்த திதி திரிதியையாக இருப்பதும் திதிக்கு தோஷம் இல்லை.
= சோழி லக்னாதிபதி மற்றும் தன காரகனனான குரு இரண்டாம் பாவத்திலேயே நீசமடைவது மற்றும் வர்க்கோத்தமம் ஆவது, பிரசன்னம் கேட்டவருக்கு வருமானம் தடைப்பட்டுப் போனதைத் தெரிவிக்கிறது.
= சோழி லக்னத்தின் ஆறாம் பாவத்தில் இருக்கும் ராகு, பிரசன்ன லக்னத்தின் ஐந்தாம் பாவத்தில் அமைவதும், சக ஊழியரின் சதியால், ஏற்கெனவே இருந்த வேலையை இழந்ததைக் காட்டுகிறது.
= இரண்டாம் அதிபதி சனியாக இருப்பதால், இவர் எப்பொழுதும் உண்மையை உடைத்துப் பேசுவதால் ஏற்கெனவே இருந்த இடத்தில் இவரின் பணி சற்று பின்னடைவை சந்தித்தது தெரிகிறது.
= சனியின் பார்வை தன் உச்ச வீடான துலாமில் விழுவதும், அதுவே சோழி லக்னத் தின் பதினோ ராம் பாவமாக இருப்பதும், பிரசன்ன லக்னத்தின் பத்தாம் பாவ மாக இருப்ப தும், இவர் வேலைதேடி வெளியூர் செல்ல வேண்டிய நிர்பந்தத்தைக் குறிக்கிறது.
= ஆறாம் அதிபதி சுக்கிரன் அவருடைய உச்சவீடான மீனத்தை நோக்கிப் போவதும், தன காரகனான குருவின் நட்சத்திரத்தில் சொந்தவீடான பதினோராம் பாவத்தில் அமைவதும், இவருக்கு வேலை கிடைக்குமென்றும் தெரிகிறது.
= சோழி லக்னத்திற்கு பத்தாம் அதிபதி புதன் பன்னிரண்டாம் பாவத்தில் அமைவ தும் இவர் சொந்த ஊரைவிட்டு, வேலைதேடி வெளியூர் செல்வதைக் காட்டுகிறது, புதன் தன் நீசவீடான மீனத்தை நோக்கி அவரோகணத்தில் செல்வது, இவர் அடுத்து எடுக்கும் வேலை ஏற்கெனவே பார்த்த வேலையின் ஊதியத்தை விடவும் சற்று குறைந்த ஊதியமே கிடைக்குமென்று காட்டுகிறது.
= தனுசில் திரிஸ்புட ராசி அமைவதும், அதுவே அம்சத்தில் பத்தாம் பாவத்தில் அமைவதும், இவருக்கு ஆரோக்கியக் குறைபாடு இனிவரும் வேலையால் வருமென்று தெரிகிறது. 2, 6, 10-ஆம் இடங்கள் முறையே சனி, சுக்கிரன், புதன் தொடர்புகொள்வதும், மீனத்தில் சனியின் பார்வை, சுக்கிரனின் உச்ச ஸ்தானம், புதனின் நீச ஸ்தானம் அமைவதும், சோழி லக்னத் தின் அதிபதி குருவின் வீடாக இருப்பதும் இவருக்கு அமையும் வேலை மேற்கு திக்கில் கடற்கரை ஓரத்திலுள்ள நகரத்தில்தான் அமையும் என்று தெரிகிறது. பத்தாம் அதிபதி புதன் மேற்கைக் குறிகாட்டுவதாலும், பிரசன்ன நேரத்தில் சந்திரன் திருவாதிரை 4-ஆம் பாதத்தில் அமர்ந்து, அம்சத்தில் மீன ராசியைக் காட்டுவதாலும், வேலை கிடைக்குமிடம் உறுதியாகிறது.
= பத்தாம் அதிபதி லக்னம் நோக்கி நகரும் இரண்டு மாதங்களுக்குள் இவருக்கு வேலை கிடைக்குமென்று கூறப்பட்டது.
பிரசன்னத்தினால் அறியப்படும் தோஷங்கள் = லக்ன வேதை பித்ரு தோஷத்தைக் காட்டுகிறது. திரிஸ்புட ராசியாக சோழி லக்னம் அமைவதும், மாந்தி பிரசன்ன லக்னம் அமர்வதும், அவர் அம்சத்தில் அமர்வதும், ஆரோக்கியக் குறைவைக் குறிக்கிறது.
= சோழி லக்னத்தின் ஆறாம் பாவத்தில் ராகு, பாதகாதிபதியே பத்தாம் அதிபதியாக வருவதும், அவர் அஷ்டமாதிபதி சூரியன் மற்றும் கேதுவோடு சேர்ந்திருப்பதும் தோஷத்தை உறுதி செய்கிறது.
= சோழி லக்னாதிபதி குரு நீசமடைவதும் தோஷமே.
பரிகாரம்
= வேலை கிடைக்க வெள்ளிக்கிழமை ராகு நேரத்தில் அலர்மேலுமங்கைத் தாயாரை தரிசிக்கவும், ஸ்ரீசூக்த பாராயணமும் பரிந்துரைக்கபட்டது.
= ஆரோக்கிய தோஷத்திற்கு காளஹஸ்தி சென்று சிவபெருமானை தரிசிக்க தோஷம் நீங்கும். பித்ரு தோஷத்திற்கு ஏற்ற பூஜைகளை, ஆதிஜெகந்நாதப் பெருமாள் கோவில் அமைந்துள்ள திருப்புல்லானியில் ஜாதகரே செய்யுமாறு அறிவுறுத்தபடுகிறது.
மேற்கண்ட பரிகாரங்களைச் செய்த பின் இந்த ஜாதகருக்கு மேற்கத்திய கடற்கரை ஓரத்திலுள்ள ஒரு நகரத்தில், எதிர்பார்த்ததைவிட சற்றே குறைவான சம்பளத்தில் நல்ல வேலை கிடைக்கும்.
செல்: 63819 58636