Advertisment

போராட்ட வாழ்வை சுபிட்சமாக்கும் காவடி வழிபாடு!

/idhalgal/balajothidam/kavadi-worship-prosper-life

"தோளில் இருப்பவன் தோளிலேயே இருப்பதில்லை; பாயில் படுத்தவன் பாயிலேயே படுப்பதில்லை' என்றொரு பழமொழி உண்டு. அதாவது ஒரு சமயத்தில் கஷ்டங்களை அனுபவிப்பவர் வாழ்க்கையில் எப்பொழுதும் அனுபவிக்க வேண்டியதில்லை. அதேபோல் பாயில் படுத்து சுகத்தை அனுபவிப்பவர் எப்பொழுதுமே சுகத்தை அனுபவிக்க முடிவதில்லை. காலம் மாறும்பொழுது அவர்களுடைய சுக -துக்கங்கள் மாறுபடும் என்பதாகும்.

Advertisment

தோள்பட்டை, கைகள் என்று சொல்லக்கூடிய மூன்றாம் இடம் ஜோதிடத்தில் மிகவும் நுட்பமாக ஆராயவேண்டிய ஸ்தானமாகும்.

kavadi

மூன்றாம் பாவம் ஒருவருடைய ஜாதகத்தில் நேர்த்தியாகவும், வளரும் பாவத் தொடர்புகளையும் பெற்றிருப்பின், அவர்களது கீர்த்தி, புகழ் நாளுக்குநாள் வளரும் தன்மையுடையது. மூன்றாம் பாவம் ஒருவரது மன உறுதிப்பாடு, ஒரு காரியத்தை எடுத்து நடத்தி முடிக்கும் தைரியம் போன்றவற்றைக் குறிக்கும். அதேசமயத்தில் மூன்றாம்பாவம் கெட்டு, தோஷத்தைக் கொண்டிருந்தால் மனதில் ஒருவித பயம், பலவீனம், தற்கொலை எண்ணமும் ஏற்படும்.

திம்ப சக்கரத்தில் தோள் என்று குறிப்பிடப்படும் இடம் மூன்றாம் இடம். தோளில் பாரங்களைத் தூக்கிச் சுமந்து சென்றுவந்தது அந்தக் காலத்தில் இருந்தது. குழந்தைகளையும் தோளில் தூக்கியே நடைப்பயணம் மேற்கொண்டார்கள். அந்த காலத்தில் பதனீர், வெல்லம் போன்றவற்றை ஒரு மரக்கொம்பின் இருமுனைகளில் பானைகளிலோ, சாக்குப்பைகளிலோ கட்டிக்கொண்டு, தோள்பட்டையில் மரக்கொம்பின் நடுப்பகுதியை வைத்துக்கொண்டு, இருபுறமும் சம அளவு எடையுடன் வீதிகளில் நடந

"தோளில் இருப்பவன் தோளிலேயே இருப்பதில்லை; பாயில் படுத்தவன் பாயிலேயே படுப்பதில்லை' என்றொரு பழமொழி உண்டு. அதாவது ஒரு சமயத்தில் கஷ்டங்களை அனுபவிப்பவர் வாழ்க்கையில் எப்பொழுதும் அனுபவிக்க வேண்டியதில்லை. அதேபோல் பாயில் படுத்து சுகத்தை அனுபவிப்பவர் எப்பொழுதுமே சுகத்தை அனுபவிக்க முடிவதில்லை. காலம் மாறும்பொழுது அவர்களுடைய சுக -துக்கங்கள் மாறுபடும் என்பதாகும்.

Advertisment

தோள்பட்டை, கைகள் என்று சொல்லக்கூடிய மூன்றாம் இடம் ஜோதிடத்தில் மிகவும் நுட்பமாக ஆராயவேண்டிய ஸ்தானமாகும்.

kavadi

மூன்றாம் பாவம் ஒருவருடைய ஜாதகத்தில் நேர்த்தியாகவும், வளரும் பாவத் தொடர்புகளையும் பெற்றிருப்பின், அவர்களது கீர்த்தி, புகழ் நாளுக்குநாள் வளரும் தன்மையுடையது. மூன்றாம் பாவம் ஒருவரது மன உறுதிப்பாடு, ஒரு காரியத்தை எடுத்து நடத்தி முடிக்கும் தைரியம் போன்றவற்றைக் குறிக்கும். அதேசமயத்தில் மூன்றாம்பாவம் கெட்டு, தோஷத்தைக் கொண்டிருந்தால் மனதில் ஒருவித பயம், பலவீனம், தற்கொலை எண்ணமும் ஏற்படும்.

திம்ப சக்கரத்தில் தோள் என்று குறிப்பிடப்படும் இடம் மூன்றாம் இடம். தோளில் பாரங்களைத் தூக்கிச் சுமந்து சென்றுவந்தது அந்தக் காலத்தில் இருந்தது. குழந்தைகளையும் தோளில் தூக்கியே நடைப்பயணம் மேற்கொண்டார்கள். அந்த காலத்தில் பதனீர், வெல்லம் போன்றவற்றை ஒரு மரக்கொம்பின் இருமுனைகளில் பானைகளிலோ, சாக்குப்பைகளிலோ கட்டிக்கொண்டு, தோள்பட்டையில் மரக்கொம்பின் நடுப்பகுதியை வைத்துக்கொண்டு, இருபுறமும் சம அளவு எடையுடன் வீதிகளில் நடந்து கூவிக்கூவி வியாபாரம் செய்வதைப் பார்த்திருக்கலாம். அந்த பாரத்தைச் சுமக்க மனிதனுக்கு தோள்பட்டைகள் உதவியாக இருந்தன. அத்தகைய நபர்களின் ஜாதகத்தில் மூன்றாம் இடமான தோள் என்ற உறுப்பில் கிரகங்கள் அமைந்திருக்கும்.

தோளில் குரு, சுக்கிரன், புதன் போன்ற சுப கிரகங்கள் அமைந்திருந்தால் தொழில், உத்தியோகம் போன்றவை அவர்களுக்கு மனதளவிலோ அல்லது உடலளவிலோ அதிக பாரத்தையோ மன அழுத்தத்தையோ கொடுக்காமல், வாழ்க்கையை இலகுவாக அனுபவிக்கப் பிறந்தவர்களாகின்றனர். ஒருவருடைய திம்ப சக்கர ஜாதகத்தில், அசுபகிரகங்களான சனி, ராகு, கேது, செவ்வாய் போன்றவை தோள் பாகத்தில் அமைந்திருந்தால், அவர்கள் எப்பொழுதும் ஏதாவதொரு வகையில் சுமைகளையும் பாரத்தையும் மன அழுத்தம் கொடுக்கக்கூடிய செயல்களையும் சுமந்துகொண்டிருப்பார்கள்.

தோளில் அமையும் கிரகங்கள் நல்ல பாவங்களின் தொடர்புகளைப் பெற்றும், யோகாதிபதிகளாகவும் இருக்கப் பெற்றவர்கள் தெய்வத் திருப்பணிகளைச் செய்வதற்குப் பிறந்தவர்கள். கல்வியறிவைக் கொடுக்கும் பள்ளிகள், கல்லூரிகளை எடுத்து நடத்தும் தாளாளர்களாக இருப்பார்கள். மக்களுக்கு காலத்திற்கும் நன்மைகளை உண்டாக்கக்கூடிய அணைக்கட்டுகளைக் கட்டும் முதன்மைப் பொறியாளர்களாகவும், பெரியளவில் போக்குவரத்தை இலகுவாக்கும் சாலை அமைப்புகளையும், புதிய கால்வாய்களை அமைக்கும் பணிகளையும், கார்ப்பரேட் கம்பெனிகளைத் திறம்பட எடுத்து நடத்தும் திறமையுள்ளவர்களாகவும் இருப்பர். ராமபிரானை "திண்தோள் வலிலிமையுடையோன்' என்று கம்பர் புகழ்ந்து போற்றியுள்ளார். திண்தோள் வலிலிமையுடையவர் என்று ஒருவரைப் புகழும்பொழுது, அந்தத் தோளானது நற்காரியங்களைச் செய்யக் கடமைப்பட்டுள்ளது. அங்கு சுப கிரகங்கள் சுபயோகாதிபத்தியத்தோடு இருக்கவேண்டியது அவசியமாகும்.

இதே அடிப்படையில் சனி, செவ்வாய், ராகு- கேது போன்றவை அவயோகிகளாக இருந்து அசுப பாவங்களின் தொடர்புகளையும் பெற்றவர்களாக இருப்பின், அந்த நபர் நாளுக்கு நாள் வேலைப்பளுவால் மிகுந்த கஷ்டப்படும் சூழ்நிலை உருவாகிறது. எனினும் 9-ஆம் இடமான கைகள் என்ற ஸ்தானத்திலுள்ள சுபகிரகங்களின் பார்வை அமையப் பெற்றால், அவருடைய துன்பங்கள் வெகுவாகக் குறைந்துவிடும்.

பெண்களில் சிலர் எப்பொழுதும் தங்களுடைய தோளில் கைப்பையைத் தொங்கவிட்டு செல்வதைப் பார்த்திருப்பீர்கள். இவர்களின் ஜாதகத்தை திம்ப சக்கரத்தின்மூலம் ஆராய்ந்தால், அவர்கள் எப்போதும் ஒருவித அழுத்தத்தோடு, ஏதாவது ஒரு செயலை இரவு படுக்கும்வரையிலும் செய்துகொண்டே இருப்பார்கள். அவர்களுக்கு அலுவலகத்திலும் வேலை, வீட்டிலும் வேலை. குழந்தைகளைக் கண்காணிப்பதோடு, சமைப்பது போன்ற பணிகளைச் செய்துகொண்டே இருப்பதைத்தான் தோள்பட்டையில் உள்ள அசுப கிரகங்கள் குறிகாட்டுகின்றன.

சில மனிதர்களைப் பார்த்திருப்பீர்கள். அறுபது வயது முடிந்தாலும், அவர்கள் வேலையில் ஓய்வுபெற்றவுடன் மற்றொரு வேலையில் சேர்ந்து அல்லும் பகலும் அயராது உழைத்துக் கொண்டிருப்பார்கள். அவர்களின் திம்ப சக்கர ஜாதகத்தைப் பார்த்தோமானால் தோள் என்று சொல்லக்கூடிய இடத்தில் சனி, ராகு, கேது, செவ்வாய் போன்ற கிரகங்கள் தனித்து அமைந்திருக்கும். கம்பெனிகளில் வேலைபார்க்கும் வயதான கேட்கீப்பர்கள், வாட்ச்மேன் இவர்களின் ஜாதகத்தில் மேற்கண்ட கிரகங்கள் அமைந்திருக்கும். நீதியரசர்கள் என்னும் ஜட்ஜ்களின் தோளில் குரு, சுக்கிரன் போன்ற சுப கிரகங்கள் அமைந்துள்ளதைப் பார்க்கலாம். தோள்பட்டையில் அமர்ந்துள்ள கிரகங்களின் தசாபுக்திகளின் பலன்களைப் பொருத்து பதவி ஓய்வுபெற்ற பின்பும் அவர்களுக்கு தலைமை ஸ்தானப் பொறுப்புகள் அவ்வப்பொழுது கிடைக்கப்பெற்று, திறம்பட செயல்படும் நிலைமையும் உண்டாகும்.

தோளில் அமைகின்ற கிரகங்களைப் பொருத்து ஒருவருக்கு பொறுப்புகள் உண்டாகும். சுப கிரகங்கள் யோகாதிபதிகளாக அமையப்பெற்றாலும், தோளில் அமைந்த கிரகங்களை சுபகிரகங்கள் பார்வையிட்டாலும் தொழிலதிபர்களாக வலம்வந்து, நிர்வாகத்தை வெகு சாமர்த்தியமாக நிர்வகிக்கும் திறமைபெற்று, தாங்கள் ஏற்று நடத்தும் நிறுவனங்களை வழிநடத்துபவர்களாக இருப்பார்கள். மேலும் அவர்கள் அத்தகைய பொறுப்புகளை சுமையாக உணரமாட்டார்கள். அந்த சுமையும் அவர்களுக்கு சுகத்தைக் கொடுப்பதாகவே அமைந்துவிடும். இதேபோன்று அசுப கிரகங்களின் தொடர்புபெற்று, யோகாதிபதியாக இல்லாமல் அமையும்பட்சத்தில், தன்மீது திணிக்கப்பட்ட பொறுப்புகளை அவர்கள் குருவித் தலையில் வைத்த பனங்காயைப் போன்று உணர்வார்கள்.

இத்தகைய பாரத்தையும் மன உளைச்சல்களையும் நீக்க தகுந்த பரிகாரங்கள் உண்டு.

தோள்பட்டையில் பாவ கிரகங்கள் இருந்து துன்பங்களை அனுபவிக்கும் ஜாதகர்கள், விரதமிருந்து பாதயாத்திரை சென்று, காவடி எடுத்து முருகனை நினைத்து, "சரவணபவ' என்னும் ஆறெழுத்து மந்திரத்தை ஜெபித்து வழிபட, போராட வைக்கும் அசுப கிரகங்களின் தாக்கத்திலிருந்து விடுவிக்கப்பட்டு சுபிட்சமடையலாம். தோள்பட்டையில் சஞ்சரிக்கும் கிரகங்களின் காரகத்திற்கேற்ப இன்னும் சில பரிகாரங்களையும் செய்துவர பாவ விமோசனங்களும் கிடைக்கும்.

என்னுடைய நெருங்கிய உறவினரின் திம்ப சக்கர ஜாதகம் இங்கு உதாரணமாகக் கொடுக்கப்பட்டுள்ளது. அவருக்கு வயது 39. அவர் தனது விடாமுயற்சியால் (தனுசு லக்னம்) படித்து விருதுகள் பல பெற்று (காலச்சக்கரத்திற்கு 9-ஆம் இடம் லக்னத்தில் 9-ஆம் அதிபதி சூரியன் அமரப் பெற்றதால்), பாதத்தில், பாதத்திற்கு அதிபதி செவ்வாய் இருந்து, செவ்வாய் தசையில் சாதனைகள் பல செய்வதற்கு தோளில் அமர்ந்த லக்னாதிபதி குரு கிரகமே காரணம் என்றால் அது மிகையாகாது. குரு தோளில் கும்ப ராசியில் இருப்பதால், இவர் தனது அறிவுத் திறமையால் ஆசியாவில் அனைத்து நாடுகளிலுமுள்ள தனது கிளை அலுவலகங்களில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு, அவ்வப்பொழுது விமானத்தில் பயணம் செய்து (கும்பம்- காற்று ராசி) பயிற்சி கொடுக்கும் ஆசிரியராக சிறப்பைப் பெற்றிருக்கின்றார். சுபயோகாதிபதியாகிய குரு தோளில் அமர்ந்து பராக்கிரம சாதனைகளை நிகழ்த்துகிறது. விருச்சிக ராசியில் ராசியாதிபதி செவ்வாய் தன்னுடைய சொந்த வீட்டிலிலிருந்து சாதனைகளை நிகழ்த்தக்கூடிய பாதத்தில் அமர்ந்து, நான்காம் பார்வையாக தோளில் அமர்ந்த குருவைப் பார்த்ததால் இத்தகைய மிக உன்னதமான நிலையை அடைந்தார்.

செல்: 91767 71533

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe