Advertisment

குருவின் அதிசார-வக்ரப் பலன்கள்! -சென்ற இதழ் தொடர்ச்சி

/idhalgal/balajothidam/kaurauvaina-ataicaara-vakarapa-palanakala-caenara-itala-taotaracacai

-ஜோதிட வித்தகர் பரணிதரன்

சிம்மம்

மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம்எதுவும் நம்மிடம் இல்லை; எல்லாமே நமது கர்மாவின் வினைதான். இதில் யாரைக் குறைசொல்லிலி என்ன வந்துவிடப்போகிறது?நேற்றிருந்தது இன்றில்லை. இன்றிருப்பது நாளை இருக்குமா என்று தெரியாது. உலகில் எல்லாமே நிலையற்றதுதான். வந்தோம்; வாழ்கிறோம். நாம் எதற்காக இங்கே வந்தோமோ அவற்றையெல்லாம் அனுபவிக்கிறோம். எதை நாம் செய்யவேண்டுமோ அதையெல்லாம் செய்துகொண்டிருக்கிறோம். இதற்கெல்லாம் காரணம், நாம் வாங்கிவந்த வரம், நாம் பிறந்த நேரம். நாம் எதற்காகப் படைக்கப்பட்டோம்? எப்படி வாழப்போகிறோம் என்பதையெல்லாம் கிரகங்களை வைத்தே தீர்மானிக்கிறோம். ஒருவர் பிறக்கும் நட்சத்திரமும், அதற்குரிய ராசியும், பிறந்த நேரத்தை வைத்து உண்டாகும் லக்னமும் ஒவ்வொரு மனிதரையும் "நீ இப்படித்தான் வாழவேண்டும்' என்று வாழவைக்கிறது.

Advertisment

14-2-2018 முதல் நான்கில் குரு

உங்கள் ராசிக்கு நான்காம் வீடான விருச்சிக ராசிக்கு அதிசாரமாக வரும் குரு பகவான் என்ன செய்வார், எத்தகைய பலன்களை வழங்குவார் என்று நீங்கள் கேட்பது புரிகிறது. இதற்கும் ஒரு பழம் பாடல் பதில் சொல்கிறது. "தர்மபுத்திரர் நாலிலிலே வனவாசம் போம்படி ஆனதும்' என்று கூறப்பட்டுள்ளது. ஜென்ம ராசிக்கு நான் காமிடத்தில் குரு சஞ்சரித்தபோதுதான், பஞ்ச பாண்டவர்களில் மூத்தவரான தர்மர் பாஞ்சாலிலியுடனும் தன் தம்பிகளுடனும் அரசாட்சியையும் நாடு நகரங்களையும் இழந்து வனவாசம் போனாராம். நான்காமிடத்தில் குரு பகவான் அமரும் நிலை குறித்த பொதுவான பலன் இது. குருவைப் பொருத்தவரை மூன்றாம் இடமும் நான்காம் இடமும் சரியில்லாத இடங்கள் என்றுதான் சொல்ல வேண்டும். அப்படி என்றால் இக்காலமும் சோதனைக் காலம்தானா? சாதனைகளுக்கு இடமே இல்லையா என்று நீங்கள் கேட்பது புரிகிறது. இந்த நேரத்தில் உங்கள் ஜெனன ஜாதகத்தில் கிரகங்கள் பலமாக அமைந்திருந்தால், தசா புக்தி நன்றாக இருந்தால் இந்தப் பலனில் நிச்சயம் மாறுதல் இருக்கும். சரி; நான்காம் வீட்டிற்கு வரும் குரு பகவான் என்னதான் செய்வார்? ஜாதகத்தில் நான்காம் இடம் சுகஸ் தானம், மாத்ரு ஸ்தானம், வாகன ஸ்தானம், வித்யாஸ்தானம் என்பதாகும். இந்த இடத்தைக் கொண்டு உங்களின் சுக துக்கங்கள், உங்கள் தாயின் நிலை, வாகன யோகம் உள்ளவரா இல்லையா என்பதைத் தெரிந்து கொள்ளலாம். கோட்சாரத்திற்கு நான்கில் வரும் குரு பகவான் தேவையில்லாத எண்ணங்களை உருவாக்குவார். நிறைவேறாத செயலில் முயற்சியை உண்டாக்கி மனதில் சஞ்சலத்தையும் அமைதியற்ற நிலையையும் உண்டாக்குவார். உடல்நலன் பாதிப்படையக்கூடும் என்பதால் சுகத்தின் மீதான நாட்டமும் போய்விடும். நெருங்கிய உறவினர்களும் நண்பர்களும்கூட பகைவர்களாகும் நிலை வரும். இல்லையெனில் அவர்களுடைய கட்டுப்பாட்டிற்குள் இருக்க வேண்டி வரலாம். அதனால் அவமானத் திற்கும் ஆளாக நேரலாம். காரணம், குரு பகவான் எந்த இடத்தில் அமருகிறாரோ அந்த இடத்திற்கு துர்பலனையும், அவர் பார்க்கும் இடங்களுக்கு நற்பலனையும் வழங்கக் கூடியவர் என்பதுதான். நான்காம் இடத்தில் அமர்ந்து அந்த இடத்திற்குரிய பலனை துர்பலனாக வழங்கும் குருபகவான், அங்கிருந்து, ஐந்து, ஏழு, ஒன்பதாம் பார்வையாக உங்கள் எட்டாம் வீட்டையும், பத்தாம் வீட்டையும், பன்னிரண்டாம் வீட்டையும் பார்வையிட இருக்கிறார் என்பதால், அந்த இடமெல்லாம் சிறப்படையப் போகிறது. ஆம், குரு பார்க்கக் கோடி புண்ணியம் என்ற பழமொழியை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். அவர் பார்க்கும் இடங்கள் செழிப்பாகும் என்பது விதி.

Advertisment

7-3-2018 முதல் வக்ரம்

14-2-2018 அன்று உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டிற்குள் அதிசாரமாக சஞ்சரித்த குரு பகவான் உங்கள் நிலையில் மேலும் சங்கடங்களை உண்டாக்கி வந்த நிலையில் 7-3-2018 அன்று விருச்சிக ராசியிலேயே வக்ர கதியை அடைகிறார். பொதுவாக வக்ரமடையும் கிரகங்கள் அதே ராசிக்குள் குணம்கெட்டு சஞ்சரிப்பார்கள். அந்த ஸ்தானத்திற்குரிய பலன்களை எதிர்மறையாக வழங்குவார்கள் என்பது விதி. இதில் குரு பகவான் மட்டும் ஒரு ராசியில் வக்ரகதியை அடையும்போது அந்த ராசிக்கு முன் ராசியின் பலன்களை வழங்குவார் என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது. உங்களிடம் ஒரு புதிய தெம்பு பிறந்தது போல் இருக்கும். உடல்நலன் சீரடையும். மனதில் உற்சாகம் பிறக்கும். என்னாகுமோ, ஏதாகுமோ என்கிற பயம்; அதெல்லாம் நம்மால் முடியாது என்ற அவ நம்பிக்கை; எப்படித்தான் சமாளிப்போமோ என்ற கவலை; எப்போத்தான் விடியுமோ என்ற ஏக்கம்; கடைசிவரைக்கும் கஷ்டம்தானா என்ற கலக்கம் உண்டாகி பெரும் போராட்டத்தை சந்தித்து வந்த உங்களின் நிலையில் இனி மாற்றம் உண்டாகும். எத்தகைய பிரச்சினையாக இருந்தாலும் சந்திப்போம் என்ற நம்பிக்கையும் சமாளிக்கும் சக்தியும் உங்களுக்கு உண்டாகும். நேற்றுவரை சிரமம், தோல்வி என்றிருந்தவற்றில் இனி வெற்றி என்ற நிலை உண்டாகும். நேற்றுவரை எல்லாவித வருமானமும் பாதகமாகி அதனால் பெரும் பிரச்சினைகளை சந்தித்து வந்தீர்கள். இக்காலத்தில் அந்த நிலையும் மாறும். வருவாய் அதிகரிக்கும். கடன்களை அடைப்பீர்கள். வீட்டில் சுப காரியங்கள் நடக்கவும் வாய்ப்பு உண்டாகப் போகிறது. காரணம், உங்கள் ராசியை குரு பகவான் பார்வையிடுவதுதான். இக்காலம் உங்களுக்கு சிறப்பான காலமே. எனவே, 7-3-2018 முதல் 10-4-2018 வரை உங்களுக்கு பொற்காலம் என்றே சொல்ல வேண்டும். இக்காலத்தை நற்காலமாக்கி நடைபோடுங்கள். வேகமாக செயல்பட்டு வெற்றிகளைக் காணுங்கள்.

sivan

10-4-2

10-4-2018 முதல் துலாத்தில் வக்ரம்

7-3-2018 அன்று விருச்சிக ராசியில் வக்ரமாகி அதற்கு முன் ராசியின் பலன்களை வழங்கி உங்களுக்கு யோகமான நிலையை உண்டாக்கி வந்த குரு பகவான் 10-4-2018 முதல் உங்கள் ராசிக்கு மூன்றாம் வீடான துலாம் ராசிக்கு வக்ரகதியிலேயே பின்னோக்கி வந்து 4-7-2018 வரை அங்கு அதே நிலையில் பலன்களை வழங்கிட உள்ளார். இக்காலத்தில் அலைச்சல் அதிகரிக்கும். அதனால் உங்கள் உடல்நிலையிலும் மனநிலையிலும் மாறுதல் ஏற்படும். வழக்கமான உற்சாகம் குன்றி செயல்பாட்டில் சிக்கல் ஏற்படும். வீடு, வாகன வகையில் செலவுகள் கூடும். கல்வியில் முன்பிருந்த அக்கறை இக்காலத்தில் இல்லாமல் போகும். தாயாரின் உடல்நிலை குறித்து கவலை உண்டாகும். விவசாயத்தில் எதிர்பார்த்த லாபம் இல்லாமல் போகும். முயற்சிகள் ஒவ்வொன்றும் தடைப்பட்டு தடைப்பட்டு உங்களை ஒருவழிப்படுத்தும் என்பதால், இக்காலத்தில் நீங்கள் ஒவ்வொரு காரியத்திலும் நிதானித்தும் யோசித்தும் செயல்பட வேண்டும்.

4-7-2018-ல் வக்ரநிவர்த்தி

குரு பகவானின் வக்ர காலத்தில் நிம்மதியின்மையையும், முயற்சிகளில் தோல்விகளையும், உடல்நலனில் சங்கடங்களையும் சந்தித்து வந்த உங்களுக்கு 4-7-2018 முதல் 4-10-2018 வரை மூன்றாம் வீட்டிற்குரிய பலன்களே உண்டாகப் போகிறது. இக்காலத்தில் உங்கள் தைரியம் குன்றும் வகையில் சூழ்நிலைகள் அமையும். சகோதர சகோதரி வகையிலும் சங்கடங்கள் தோன்றும். சந்தோஷமான எண்ணங்கள் தோன்றினாலும் அதை அடைய முடியாமல் போகும். மாமனார் குடும்பத்தினருடன் ஒற்றுமை இல்லாமல் போகும். 14-2-2018 முதல் 4-7-2018 வரை குரு பகவானின் மூன்று விதமான பலன்களைப் பெற்று இறக்கம்- ஏற்றம்- இறக்கம் என்று வாழப் போகிறீர்கள்.

கன்னி

உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்நாணல்போல வளைந்து கொடுத்து வாழ்வதுதான் வாழ்க்கை. நேரத்திற்கேற்றாற்போல் வாழ்பவரால் எதையும் அடைய முடியும். பூமியே தன்னை மாற்றிக் கொள்ள குளிர்வதும், கொதிப்பதுமாய் அடையாளம் காட்டும்போது, இன்றிருந்து நாளை போகும் மனிதர்களுக்கும் இதுதானே நீதியாக இருக்க முடியும். இளமையில் இருக்கும் வேகம் முதுமையில் இல்லாமல் போகிறது. வாலிபத்தில் உள்ள அழகும், செயல்பாடும் அதன்பின் காணாமல் போகிறது. நேரத்திற்கு ஏற்றாற்போல்- காலத்திற்கு ஏற்றாற்போல் நாமும் மாறிக் கொண்டால் தான் வாழும் காலத்தில் நல்ல வாழ்க்கையை வாழமுடியும். இதையெல்லாம் தெரிந்து தெளிவாகி வாழ்பவர்கள்தான் கன்னி ராசியினர் என்று சொல்லவேண்டும். நல்ல நேரம் வரும்போது நல்லது நடக்கும். நேரம் கெட்டுப் போகும்போது சங்கடம்தான் உண்டாகும். நேரத்திற்கு ஏற்றாற்போல் வாழ்ந்துவிட்டுப் போவோம் என்பதுதான் கன்னி ராசியினர் நிலை.

14-2-2018 முதல் மூன்றில் குரு

உங்கள் ராசிக்கு மூன்றாம் வீடான விருச்சிக ராசிக்கு அதிசாரமாக வரும் குரு பகவான் எத்தகைய பலன்களை வழங்குவார் என்று நீங்கள் கேட்பது புரிகிறது. "தீதிலானதொரு மூன்றிலே துரியோதனன் படை மாண்டதும்' என்ற பழம் பாடலே நம்முன் நிற்கிறது. ஜென்ம ராசிக்கு மூன்றாம் வீட்டில் குரு சஞ்சரித்தபோதுதான் துரியோதனன் படை அழிந்ததாம். அதுநாள்வரை சர்வ வல்லமையுடனும், சூழ்ச்சியாலும், சாதுர்யத்தாலும் கோலோச்சி வந்த துரியோதனன் பலத்தை இழந்து, படையை இழந்து, அனைத்தையும் இழந்தது குரு பகவான் மூன்றில் நின்ற காலத்தில்தான். ஜாதகத்தில் மூன்றாம் இடம் சகோதர ஸ்தானம், தைரிய ஸ்தானம், கீர்த்தி ஸ்தானம், அறிவு ஸ்தானம், வீரிய ஸ்தானம் என்பதாகும். இந்த இடத்தைக் கொண்டு இளைய சகோதரர், தொழில், சுகபோகம், உடல்வலிலிமை, வெற்றி, பயணம், ஒருவருக்கு கிடைக்கும் பெருமை, ஜாதகரின் தைரியம் போன்றவற்றைத் தெரிந்துகொள்ளலாம். கோட்சாரத்திற்கு மூன்றாம் வீட்டிற்கு வரும் குரு பகவான், முதலிலில் முன்பிருந்த நிலையில் சரிவை உண்டாக்குவார். நேற்று வரை நல்ல விதமாக நடந்துவந்த யாவும் மந்தகதியை அடையும். வேலையிலும் சங்கடம் உண்டாகும். மிகச்சிலருக்கு வேலையும் பறிபோகும். வருமானத்தில் தடையுண்டாகும். மனதில் குழப்பம் உண்டாகும். சுற்றியிருந்தவர்கள் ஒவ்வொருவராக விலக ஆரம்பிப்பார்கள். இல்லையென்றால் அவர்களை இழக்கவேண்டி வரும். அதனால் தைரியம் இழக்கும் நிலை உருவாகும். தேவையில்லாத வீண்பழிகள் உண்டாகும். எந்த ஒரு வேலையையும் முடிக்க முடியாமல் திணறவேண்டி வரும். ஒருசிலர் அவமானத்திற்கு ஆளாகி மனம் உடைந்து ஊர்சுற்றித் திரிவார்கள். காரணம், குரு பகவான் எந்த இடத்தில் அமருகிறாரோ அந்த இடத்திற்கு துர்பலனையும், அவர் பார்க்கும் இடங்களுக்கு நற்பலனையும் வழங்கிடக் கூடியவர் என்பதுதான். மூன்றாம் இடத்தில் அமர்ந்து, அந்த ஸ்தானத்திற்குரிய பலன்களை உங்களுக்கு சங்கடப் பலன்களாக வழங்கினாலும், அங்கிருந்து ஐந்து, ஏழு ஒன்பதாம் பார்வையாக உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டையும், ஒன்பதாம் வீட்டையும், பதினொன்றாம் வீட்டையும் பார்வையிட இருக்கிறார் என்பதால் அந்த இடமெல்லாம் சிறப்படைய இருக்கிறது. ஆம், குரு பகவான் தான் நின்ற ஸ்தானத்தைக் கெடுத்தாலும், தான் பார்க்கும் இடங்களை செழிப்படைய வைப்பார். அந்த ஸ்தானங்களுக்குரிய பலன்களை நற்பலன்களாக வழங்கி ஜாதகரை மகிழவைப்பார்.

7-3-2018 முதல் வக்ரம்

14-2-2018 அன்று உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டிற்குள் அதிசாரமாக சஞ்சரித்த குரு பகவான், உங்களுக்கு நன்மையும் தீமையும் கலந்த பலன்களை வழங்கி உங்களுக்கு ஒருசில படிப்பினைகளை உண்டாக்கிய நிலையில் 7-3-2018 அன்று விருச்சிக ராசியிலேயே வக்ரகதியை அடைகிறார். பொதுவாக வக்ரமடையும் கிரகங்கள் அதே ராசிக்குள் குணம்கெட்டு சஞ்சரிப்பார்கள், அந்த ஸ்தானத்திற்குரிய பலன்களை எதிர்மறையாக வழங்குவார்கள் என்பது விதி. இதில் குரு பகவான் மட்டும் ஒரு ராசியில் வக்ரகதியை அடையும்போது அந்த ராசிக்கு முன் ராசியின் பலன்களை வழங்கிடுவார் என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது. முதலில் உங்கள் ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்துவார். தேவையற்ற அலைச்சல், அநாவசியமான முயற்சி- அதனால் மன உளைச்சல், நிம்மதியின்மை, நேரத்திற்கு சாப்பிட முடியாமல்- தூங்கிட முடியாமல் உடல்நிலையில் பாதிப்பு ஏற்படும். இல்லையெனில் குடும்ப உறுப்பினர்களில் யாருக்காவது பாதிப்பு ஏற்படும். தாயின் உடல்நிலை ஒரு நேரம் இருப்பதுபோல் மறுநேரம் இருக்காது. தாய்வழி உறவுகளும் சங்கடமாகும். மனையில் வில்லங்கம், வீட்டில் செலவு, வாகனத்திற்காக செலவு என்று இருப்புகள் கரைய ஆரம்பிக்கும். மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இக்காலம் சங்கடமானதாகவே இருக்கும். நிலத்திலும் எதிர்பார்த்த லாபம் இல்லாமல் போகும். கணவன்- மனைவி உறவிலும், வழக்கமான எல்லாம் மாறிப்போகும். எதிர்பார்ப்புகள் நிறைவேறாமல் பிரச்சினைகள் தலைதூக்கும். இவை எல்லாம் நான்காம் இடத்திற்குரிய பலன்களை வழங்கிட உள்ள குரு பகவானால் நீங்கள் காணப்போகும் நிலை. எனவே, 7-3-2018 முதல் 10-4-2018 வரை உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சில சங்கடங்களை காணவேண்டி இருக்கும். அதனால் சில படிப்பினைகளையும் நீங்கள் கற்றுக் கொள்வீர்கள்.

10-4-2018 முதல் துலாத்தில் வக்ரம்

7-3-2018 அன்று விருச்சிக ராசியில் வக்ரமாகி அதற்கு முன் ராசியின் பலன்களை வழங்கி உங்களுக்கு சங்கடங்களையும், சில நன்மைகளையும் வழங்கி வந்த குரு பகவான் 10-4-2018 முதல் உங்கள் ராசிக்கு இரண்டாம் வீடான துலா ராசிக்கு வக்ரகதியிலேயே பின்னோக்கி வந்து 4-7-2018 வரை அங்கு அதே நிலையில் பலன்களை வழங்கிட உள்ளார். இக்காலத்தில், சகோதர, சகோதரிகள் வகையில் தேவையில்லாத விரோதம் உண்டாகும். உங்கள் தைரியம் குறையும்படி ஒருசில சம்பவங்கள் நடக்க ஆரம்பிக்கும். எந்தஒரு முடிவையும் சரியாக எடுக்க முடியாமல் திணறுவீர்கள். அரசியல் போட்டிக்குரியதாக இருக்கும். எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்களின் திறமை மங்கும். கணவன்- மனைவியிடையே சந்தோஷமற்ற நிலை உண்டாகி, அதனாலும் வீட்டிற்குள் பிரச்சினை ஏற்படும். இக்காலத்தில் உணர்ச்சிவசப்படாமல் ஒவ்வொரு செயலிலிலும் கவனத்துடனும் பொறுமையுடனும் ஈடுபட வேண்டும்.

4-7-2018-ல் வக்ரநிவர்த்தி

குரு பகவானின் அதிசார காலத்திலும், வக்ர காலத்திலும் சங்கடங்களுக்கு மேல் சங்கடங்களை சந்தித்து வந்த உங்களுக்கு 4-7-2018 முதல் 4-10-2018 வரை மீண்டும் இரண்டாம் வீட்டிற்குரிய பலன்களை உங்களுக்கு வழங்கி, உங்களை சாதனையாளராக்கப் போகிறார் குரு பகவான். இக்காலம் உங்கள் வாழ்க்கையில் நன்மைகளுக்குமேல் நன்மைகள் காணக்கூடிய காலமாக இருக்கப் போகிறது. 14-2-2018 முதல் 4-7-2018 வரை குரு பகவானின் அதிசாரம், வக்ரம் என்ற நிலைகளால் ஐந்து மாத காலமும் சங்கடமான காலமாகவே இருப்பதால் யோசித்து செயல்படுங்கள்; பொறுமையுடன் செயல்படுங்கள்.

துலாம்

சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள் சுவற்றில் அடித்த பந்து திரும்பவும் தன்னிடமே வந்துசேரும். ஒருவருக்கு நாம் செய்யும் நன்மையும் தீமையும் வேறு ஒருவரால் நம்மை வந்தடையும். எந்த நிலையிலும் தன்னைத் தாழ்த்திக் கொள்ளாமல் வாழவேண்டும்; உயர்வு தாழ்வில்லாமல் வாழவேண்டும் என்பதே மனித நீதியாக இருக்க முடியும். துலா ராசிக்காரர்களான உங்களுக்கு எப்போதும் நீதி நேர்மையின்மீது பற்றுதல் இருக்கும். தான் மட்டுமல்ல; மற்றவர்களும் அப்படியே இருந்திட வேண்டும் என்று நினைப்பவர்கள். எந்த இடத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும்- நியாயத்தை எப்படி நிலைநாட்ட வேண்டும் என்பதையெல்லாம் நன்கு உணர்ந்தவர்கள் நீங்கள்.பார்ப்பதற்கு அமைதியானவராக இருந் தாலும், பிரச்சினை என்று வந்து விட்டால் புலிலியாக மாறக்கூடியவர்கள் நீங்கள்.

14-2-2018 முதல் இரண்டில் குரு

உங்கள் ராசிக்கு இரண்டாம் வீடான விருச்சிக ராசிக்கு அதிசாரமாக செல்லும் குரு பகவான் உங்களுக்கு எத்தகைய பலன்களை வழங்குவார் என்று நீங்கள் கேட்பது புரிகிறது. ஜாதகத்தில் இரண்டாம் இடம் என்பது தன ஸ்தானம், குடும்ப ஸ்தானம், வாக்கு ஸ்தானம், நேத்திர ஸ்தானம் ஆகும். இந்த இடத்தைக் கொண்டே குடும்பம், வாக்கு, கண்கள், கல்வி, அதிர்ஷ்ட வாய்ப்புகள், பயணம், புதையல் போன்றவற்றைத் தெரிந்து கொள்ளலாம். சுப ஸ்தானமான இரண்டாம் வீட்டில் குரு பகவான் சஞ்சரிக்கும் காலம் பொற்காலம் என்றே சொல்ல வேண்டும். இக்காலத்தில் மண்ணைத் தொட்டாலும் பொன்னாகும். எண்ணிய எண்ணமெல்லாம் ஈடேறும் என்றே சொல்ல வேண்டும். மனதில் இருந்த குழப்பங்கள் அகலும். விலகிச் சென்ற உறவுகளும் நட்பும் மீண்டும் உங்களை நோக்கி வரும் நிலை உருவாகும். அவர்களால் பல விதத்தில் நன்மையும் உதவியும் உண்டாகும். முடங்கிக் கிடந்த தொழில் வேகம் பிடிக்கும். லாபம் கூடும். வேலை இல்லாமல் சங்கடப்பட்டு வந்தவர்களுக்கு புதியவேலை வாய்ப்புகள் வாசல் கதவு தட்டும். குடும்பத்தில் சுபநிகழ்வுகள் நடந்தேறும். திருமண வயதில் இருப்பவருக்கு திருமணம் கூடிவரும். மனதில் புத்துணர்ச்சியும் செயலிலில் புதுவேகமும் இருக்கும். எதிலும் வெற்றி என்ற நிலையும், எதிர்பாராத பண வரவும் கிடைக்கும். இப்படி நன்மைகளுக்குமேல் நன்மைகளாக இக்காலத்தில் நடந்திடப் போகிறது. அதுமட்டுமா? இரண்டாம் இடத்தில் அமர்வதால் எண்ணற்ற நன்மைகளை வழங்கிடக் கூடிய குரு பகவான் அவர் அங்கிருந்து ஐந்து, ஏழு, ஒன்பதாம் பார்வையாக உங்கள் ஆறாம் வீட்டையும், எட்டாம் வீட்டையும், பத்தாம் வீட்டையும் பார்வையிடப் போகிறார் என்பதால் அந்த இடமெல்லாம் சிறப்படையப் போகிறது.

7-3-2018 முதல் வக்ரம்

14-2-2018 அன்று உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டிற்குள் அதிசாரமாக சஞ்சரித்த குரு பகவான் உங்களுக்கு நன்மைகளை அள்ளி வழங்கியிருப்பார். கடந்த காலத்தில் அனுபவித்து வந்த சங்கடங்களில் இருந்து உங்களுக்கு விடுதலை கிடைத்திருக்கும். இந்த நிலையில் 7-3-2018 அன்று விருச்சிக ராசியிலேயே வக்ரகதியை அடைகிறார். பொதுவாக வக்ரமடையும் கிரகங்கள் அதே ராசிக்குள் குணம்கெட்டு சஞ்சரிப்பார்கள். அந்த ஸ்தானத்திற்குரிய பலன்களை எதிர்மறையாக வழங்குவார்கள் என்பது விதி. இதில் குரு பகவான் மட்டும் ஒரு ராசியில் வக்ரகதியை அடையும்போது அந்த ராசிக்கு முன் ராசியின் பலன்களை வழங்கிடுவார் என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது. நேற்றுவரை எல்லாம் நல்லாதான் போச்சு என்று நினைக்கத் தோன்றும். தொழிலிலில் முடை, வேலையில் சங்கடம், வருமானத்தில் தடை, உடல்நிலையில் கோளாறு என்று உங்கள் நிலை இக்காலத்தில் இருக்கும். உங்களைச் சுற்றி இருந்தவர்கள் ஒவ்வொருவராக விலக ஆரம்பிப்பார்கள். அதனால் உங்கள் தைரியம் குறைய ஆரம்பிக்கும். மனதில் இனம்புரியாத அச்சம் உருவாகும். ஒருசிலருக்கு தேவையில்லாத வீண்பழிகள் உண்டாகும். யாரோ செய்த தவறுக்கு நீங்கள் பொறுப்பேற்க வேண்டி வரலாம். சகோதர, சகோதரிகள் வகையிலும் ஒற்றுமை குறைந்து வேற்றுமை தலைதூக்கும். எந்த ஒரு வேலையையும் முடிக்க முடியாமல் திணறுவீர்கள். ஒருசிலர் அவமானத்திற்கு ஆளாகி மன உளைச்சல் அடையக் கூடிய வாய்ப்பும் உருவாகும். நேற்றுவரை இருந்த சுகபோக நிலை இக்காலத்தில் இல்லாமல் போகும். இவை எல்லாம் மூன்றாம் இடத்திற்குரிய பலன்களை வழங்கிட உள்ள குரு பகவானால் நீங்கள் காணப்போகும் நிலை. எனவே, 7-3-2018 முதல் 10-4-2018 வரை உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சில சங்கடங்களைக் காண வேண்டி இருக்கும். அவமானங்களை சந்திக்க வேண்டி இருக்கும். அதனால் சில படிப்பினைகளையும் கற்றுக் கொள்வீர்கள்.

10-4-18 முதல் துலாத்தில் வக்ரம்

7-3-2018 அன்று விருச்சிக ராசியில் வக்ரமாகி, அதற்கு முன் ராசியின் பலன்களை வழங்கி உங்களுக்கு சங்கடங்களையும், சோதனைகளையும் உண்டாக்கி வந்த குரு பகவான் 10-4-2018 முதல் உங்கள் ராசிக்கு வக்ரகதியிலேயே பின்னோக்கி வந்து, 4-7-2018 வரை அங்கு அதே நிலையில் இருந்து பலன்களை வழங்க உள்ளார். உங்கள் வாழ்க்கையில் குரு பகவான் இக்காலத்தில் பெரிய மாற்றத்தை உருவாக்கப் போகிறார். நேற்றுவரை பணமுடையால் அவதிப்பட்டு வந்த உங்களுக்கு பல வழிகளிலும் பணம் வரப்போகிறது. அதனால் வீட்டில் சந்தோஷம் தலைதூக்கும். செய்யவேண்டிய வேலைகளை நிதானமாகச் செய்து வெற்றி காண்பீர்கள். அனுபவசாலிலிகளை மதித்து அவர்களின் ஆலோசனையைக் கேட்டு நடந்தால் எல்லா காரியமும் வெற்றியாகும். சோம்பலும் சோர்வும் நீங்கி சுறுசுறுப்பாவீர்கள். மனைவி மக்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். திட்டமிடாமல் செய்த வேலைகளில் கூட வெற்றியுண்டாகும். உங்களிடம் ஒரு அசுரத்தனம் தோன்றும். கடந்த காலத்தில் உண்டான இழப்பை ஈடுகட்டும் முயற்சியில் எல்லா காரியங்களிலும் வேகம் காட்டுவீர்கள். அதிர்ஷ்டக் காற்று உங்கள் பக்கம் வீசுவதால் நீங்கள் தொட்டது துலங்கும். இந்த நேரத்தில் எச்சரிக்கையாக இருப் பதும் அவசியம். கொடுக்கல்- வாங்கலிலில் கவனமாக இருங்கள். கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதிக்கும் பணத்தை எவரிடமாவது கொடுத்து ஏமாந்து விடாதீர்கள்.

4-7-2018-ல் வக்ரநிவர்த்தி

குரு பகவானின் அதிசார காலத்திலும், ஜென்மத்தில் வக்ரகாலத்திலும் நன்மைகளுக்குமேல் நன்மைகளை சந்தித்து வந்த உங்களுக்கு 4-7-2018 முதல் 4-10-2018 வரை மீண்டும் ஜென்ம குருவிற்குரிய பலன்களை வழங்கி உங்களுக்கு சங்கடமான நிலையை உண்டாக்கப் போகிறார். இக்காலத்தில் உங்கள் வாழ்க்கையிலும், குடும்பத்திலும் சங்கடமான சூழல்களே இருக்கும். எந்த ஒன்றையும் ஆழ்ந்து யோசித்து செயல்படுவது நல்லது. 14-2-2018 முதல் 4-7-2018 வரை குரு பகவானின் அதிசாரம், வக்ரம் என்ற நிலைகளால் ஏற்றம்- இறக்கம்- ஏற்றம் என்று ஐந்து மாத காலமும் யோகமான பலன்களையே அடையப் போகிறீர்கள். ஜென்ம குருவின் சோதனைகள் இக்காலத்தில் மறைந்து மகிழ்ச்சியை உங்களுக்கு வழங்கும்.

விருச்சிகம்

விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டைமுயற்சிதான் வாழ்க்கையின் முதல்படி. எப்பாடு பட்டாகிலும் வாழ்க்கையை வெற்றிகொண்டுவிட வேண்டும். வார்த்தைகளில் உண்மை இருப்பவர்களால் நினைத்ததை எல்லாம் சாதித்துக் கொள்ள முடியும். சொல்வாக்கு இருந்தால் செல்வாக்கு தானே உயரும். வெற்றிமேல் வெற்றிகள் கிடைக்க ஆரம்பிக்கும். நமக்கு மட்டுமல்ல; மற்றவர்களுக்கும் நன்மைகளை உண்டாக்கிட முடியும். எல்லாவற்றுக்கும் அடிப்படை தைரியம்தான். விருச்சிக ராசியினரான உங்களுக்கு ராசியாதிபதியாகத் திகழும் செவ்வாய் பகவானே தைரியகாரகன்தான், யுத்த காரகன்தான் என்பதால் நீங்கள் வலிலிமை நிறைந்தவர்களாகவே இருப்பீர்கள். எந்த ஒரு பிரச்சினையையும் துணிச்சலுடன் எதிர்கொண்டு அதில் வெற்றிபெறும்வரை ஓயமாட்டீர்கள். உங்கள் மனம் நேர்மையை நாடும் என்றாலும், உலக வாழ்க்கையின் நிலையறிந்து காலப்போக்கில் உங்களை மாற்றிக் கொள்ளவும் செய்வீர்கள்.

14-2-2018 முதல் ஜென்ம குரு

உங்கள் ஜென்ம ராசியான விருச்சிகத்திற்கு ஜென்ம குருவாக இக்காலத்தில் சஞ்சரிக்கப்போகும் குரு பகவான் என்னதான் செய்வார் என்று நீங்கள் கேட்பது புரிகிறது. "ஜென்ம ராமர் வனத்திலே சீதையை சிறைவைத்ததும்...' என்று கூறப்பட்டுள்ளது. ஜென்ம ராசியில் குரு சஞ்சரித்த போதுதான் சீதையைக் கவர்ந்து சென்று இராவணன் சிறைவைத்திருந்தானாம். அதனால் ராமன் ஓரிடம்- சீதை வேறிடம் என்று இருக்க வேண்டிய நிலை உண்டானது. ஜென்மத்தில் குரு பகவான் அமரும் நிலை குறித்த பொதுவான பலன் இது. குருவைப் பொருத்தவரை பன்னிரண்டாம் இடமும் ஜென்மமும் சரியில்லாத இடங்கள் என்றுதான் சொல்ல வேண்டும். அப்படி என்றால் இக்காலமும் சோதனைக் காலம்தானா? நன்மைகள் நடக்க இடமே இல்லையா என்று நீங்கள் கேட்பது புரிகிறது. இந்த நேரத்தில் உங்கள் ஜெனன ஜாதகத்தில் கிரகங்கள் பலமாக அமைந்திருந்தால், தசா புக்தி பலன்களும் நன்றாக இருந்தால் இந்தப் பலனில் நிச்சயம் மாறுதல் இருக்கும். சரி, ஜென்மத்திற்கு வரும் குரு பகவான் என்னதான் செய்வார்?ஜென்மத்திற்கு வரும் குரு பகவான் வாழ்க்கை நிலையைத் தடுமாறச் செய்வார். சிந்தனையை மழுங்கடிப்பார். தொழிலிலில் மந்தநிலையை உண்டாக்குவார். வருமானம் குறையும். பொருள் பல வழிகளிலும் போய்விடும். விரோதிகளின் தொல்லை மிகும். குரு பகவான் அவர் பார்க்கும் இடங்களை மேன்மையடைய வைப்பார். ஜென்மத்தில் அமர்ந்து அங்கிருந்து ஐந்து, ஏழு, ஒன்பதாம் வீடுகளைப் பார்வையிட இருக்கிறார். இதனால் அந்த இடமெல்லாம் சிறப்படையப் போகிறது. பொதுவாக குருவின் பார்வைக்குத்தான் பலன். அவர் பார்க்கும் இடங்கள் எல்லாம் செழிப்படையும், அங்கே பகை பெற்ற கிரகங்கள் இருந்தாலும் அவை பலமிழந்து போகும்.

7-3-2018 முதல் வக்ரம்

14-2-2018 அன்று உங்கள் ஜென்ம ராசிக்குள் அதிசாரமாக சஞ்சரித்த குரு பகவான் 7-3-2018 அன்று உங்கள் ராசியிலேயே வக்ரமடைகிறார். பொதுவாக, வக்ரம் அடையும் கிரகங்கள் அதே ராசிக்குள் குணம்கெட்டு சஞ்சரிப்பார்கள்; எதிர்மறையான பலன்களை வழங்குவார்கள் என்பது விதி. இதில் குரு பகவான் மட்டும் ஒரு ராசியில் வக்கிர கதியை அடையும்போது முன் ராசியின் பலன்களை வழங்கிடுவார் என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது. குருபகவான் தனது பார்வை பலத்தால் நன்மைகளை வழங்கி, அந்த இடங்களுக்குரிய பலன்களை சுப பலன்களாக வழங்கிடக் கூடியவர் மட்டும் அல்ல. 2, 5, 7, 9, 11-ஆம் வீடுகளில் அமரும் போதுதான் அமரும் வீட்டிற்குரிய பலன்களையும் சுப பலன்களாகவே வழங்கிடக் கூடியவர். அந்த அடிப்படையில், உங்கள் குடும்பத்தில் இதுவரை இருந்து வந்த சங்கடமான நிலைகள் மாறப்போகிறது. கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியாமல் சங்கடப்பட்டு வந்த நிலையில் மாற்றம் உண்டாகப் போகிறது. தம்பதியரிடையே மகிழ்ச்சி அதிகரித்து ஒற்றுமையைக் காணக்கூடிய சந்தோஷமான காலமாக இக்காலம் மாறப் போகிறது. உடலிலில் இருந்த சோர்வு இருந்த இடம் இல்லாமல் போகும். என்னவோ ஏதோ என்று பயந்த நோய்கள் எளிய மருத்துவத்தால் சூரியனைக் கண்ட பனிபோல மறைந்துபோகும். எதிர்ப்புகள் எல்லாம் கட்டுக்குள் வந்து உங்களை உயரவைக்கும். பணத்தில் தடை- அதனால் வாழ்க்கையில் சங்கடம் என்ற நிலை மறைந்து போகும். திருமணம் ஆகாமல் தடைப்பட்டு வந்த பெண்களுக்கு இக்காலத்தில் மாங்கல்ய பலம் உண்டாகும். மனதில் புதிய சிந்தனைகள் தோன்றி அதன் வழியே நடை போடுவீர்கள். அதனால் வெற்றிகளையும் காண்பீர்கள். ஆலய தரிசனம் செய்யும் வாய்ப்பு சிலருக்கு கிடைக்கும். கணவனைவிட்டு விலகி இருந்த பெண்களுக்கும், கணவன் ஓரிடம்- மனைவி ஓரிடம் என்று வாழ்ந்த பெண்களுக்கும் இக்காலத்தில் ஒற்றுமையும், கணவனால் கிடைக்கக் கூடிய சுகமும் கிடைக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு இருந்த தடைகள் அகலும், தொழிலிலில் லாபம் பெருகும். இவை எல்லாம் 7-3-2018 முதல் 10-4-2018-க்குள் நீங்கள் காணப்போகும் சுபப் பலன்கள்.

10-4-2018 முதல் துலாத்தில் வக்ரம்

7-3-2018 அன்று உங்கள் ஜென்ம ராசியில் வக்ரமாகி, அதற்கு முன் ராசியின் பலனை வழங்கி உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றத்தையும், நன்மைகளையும் வழங்கிய குரு பகவான், 10-4-2018 முதல் உங்கள் ராசிக்கு பன்னிரண்டாம் வீடான துலாம் ராசிக்கு வக்ரகதியாகவே பின்னோக்கிச் சென்று 4-7-2018 வரை அங்கு அதே நிலையில் சஞ்சரித்து பலன்களை வழங்கிட உள்ளார். இக்காலத்தில் மீண்டும் உங்கள் வாழ்க்கை நிலையில் ஒரு தடுமாற்றம் ஏறுபடும். வேலையின் காரணமாகவோ, தேவையற்ற பிரச்சினைகளாலோ தம்பதியர்கள் பிரிந்திருக்க வேண்டிய நிலை உண்டாகும். தொழில், வேலை போன்றவற்றில் சங்கடங்களும் பிரச்சினைகளும் உண்டாகும். வருமானத்திற்குரிய வழிகளில் சங்கடம் தோன்றும். அதே நேரத்தில் செலவுகள் அதிகரிக்கும். விரோதிகளின் தொந்தரவு மனதிற்கு அச்சத்தை உருவாக்கும். எந்த காரியத்தையும் எடுத்தோம் முடித்தோம் என்றில்லாமல் எல்லாமே இழுபறியாகவே இருக்கும். மனமும் இக்காலத்தில் தெளிவாக இல்லாமல் நிம்மதியற்ற நிலையையே 4-7-2018 வரை நீங்கள் காண்பீர்கள.

4-7-2018-ல் வக்ரநிவர்த்தி

குரு பகவானின் அதிசார காலமும், வக்ர காலமும் 4-7-2018 அன்று முடிந்து மீண்டும் குரு பகவான் தன் நிலைக்கு வந்து 4-10-2018 வரை உங்களுக்கு விரய குருவாக இருந்து பலன்களை வழங்கப் போகிறார். 14-2-2018 முதல் 4-7-2018 வரை குரு பகவானின் மூன்று விதமான பலன்களைப் பெற்று இறக்கம்- ஏற்றம்- இறக்கம் என்ற நிலையைக் கண்டு வாழப் போகிறீர்கள்.

(மற்ற ராசிகள் அடுத்த இதழில்)

செல்: 94443 93717

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe