Advertisment

குருவின் அதிசார-வக்ரப் பலன்கள்! -சென்ற இதழ் தொடர்ச்சி

/idhalgal/balajothidam/kaurauvaina-ataicaara-vakarapa-palanakala-caenara-itala-taotaracacai-0

சென்ற இதழ் தொடர்ச்சி...

குருவின் அதிசாரலிவக்ரப் பலன்கள்!

14-2-2018 முதல் 4-7-2018

ஜோதிட வித்தகர் பரணிதரன்

தனுசு

மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்குருவின் பலம் இருந்தால் செல்லும் இடம் எல்லாம் சிறப்பாகும், சொல்லும் வார்த்தை எல்லாம் வரமாகும்.குருவின் ஆட்சி வீடான தனுசு ராசியில் பிறந்த நீங்கள் குருவின் அருள் பெற்றவர்கள் என்றே சொல்லவேண்டும்.ஆழ்ந்த சிந்தனையும், ஆன்மிகத்தில் நாட்டமும் கொண்ட உங்களின் ஆலோசனைகள் பலருடைய வாழ்வை முன்னேற்றம் அடைய வைக்கும். எதிரிகளைப் பேசவைத்து எடைபோடுவதில் வல்லவரான உங்களிடம் எப்போதும் உற்சாகம் நிறைந்திருக்கும். சாமர்த்தியமாகப் பேசி சமாளிப்பது உங்களுக்குக் கை வந்த கலையாகும். என்றாலும் உங்களால்தான் மற்றவர்களுக்கு முன்னேற்றமே ஒழிய உங்களுக்கு இல்லை என்றே சொல்லவேண்டும்.ஓய்வு நேரத்தைக்கூட வீணடிக்காமல் உழைப்பதிலும், உழைத்து உயர்வதிலும் ஆர்வம் உடையவராக நீங்கள் இருப்பீர்கள். நீங்கள் செய்யும் தொழில் எதுவாக இருந்தாலும் அதைச் சிறப்பாகச் செய்து வெற்றி காண்பீர்கள். கூட்டுத் தொழில் உங்களுக்கு எப்போதுமே ஒத்து வராது. அதனால் லாபமும் கிட்டாது. உங்களுக்கு தற்பெருமை அதிகம். ஒருசிலர் உங்களை வெறுத்து ஒதுக்குவார்கள்.சாதனைகள் படைக்கும் ஆற்றலும் வல்லமையும் கொண்ட உங்களுக்கு எதிர்காலத்தில் நடப்பதைக்கூட முன்கூட்டியே அறிந்துகொள்ளும் சக்தி இருக்கும்.மற்றவர்களுக்கு உதவி செய்வதில் முதலிலிடம் வகிப்பவர் நீங்களாகத்தான் இருப்பீர்கள். உதவி செய்வதால் பிரச்சினைகளில் மாட்டிக்கொள்பவர்களும் நீங்களாகத்தான் இருப்பீர்கள்.

Advertisment

14-2-2018 முதல் விரய குரு

உங்கள் ராசிக்கு பன்னிரண்டாம் வீடான விருச்சிக ராசிக்கு வரும் குரு பகவான் என்ன செய்யப் போகிறார் என்று நீங்கள் கேட்பது புரிகிறது.12-ஆம் வீட்டினை பொதுவாக விரய ஸ்தானம் என்று சொன்னாலும், அயனம், சயனம், போகம், மோட்சம், வீடு, தூக்கம், வெளிநாடு பயணம், படுக்கை சுகம் போன்றவற்றையும் இந்த இடத்தை வைத்தே தெரிந்துகொள்ள முடியும்.12-ஆம் வீட்டில் பாவ கிரகங்கள் அமரும்போது இவற்றில் இயல்பான நிலையைக் காணமுடியும். ஆனால், சுப கிரகமான குரு பகவான் இந்த வீட்டிற்குரிய ஸ்தான பலனை வழங்கிடும் காலத்தில் எதிர்மறையான பலன்களையே வழங்கி நன்மைக்கு பதில் இவற்றில் சங்கடங்களையே அதிகரிப்பார்.விரயம் பல வழிகளிலும் உண்டாகக்கூடிய காலம் இது என்பதால், உங்கள் கையில் இருப்பு இருந்தால் அது எப்படி யாவது கரைந்துவிடும்.உதாரணத்திற்கு நம்மிடம் லட்ச ரூபாய் பணம் இருக்கிறது. அது நம்மிடமே இருந்தால் திடீரென்று நம் உடல்நிலை பாதிக்கலாம். நம் குடும்பத்தினரின் உடல்நிலை பாதிக்கலாம். இல்லை யாருக்கேனும் ஏதேனும் சம்பவிக்கலாம். அந்த நேரத்தில் நம்மிடம் இருக்கும் பணத்தை செலவு செய்து அதில் இருந்து மீண்டுவரலாம். நமக்குரியவரை மீட்டுவரலாம். காரணம் நம்மிடம் இருக்கும் பணம் எப்படியாவது விரயமாக வேண்டும் என்ற நிலைதான்.பணம் விரயமாகும் என்பது விதியாக இருக்கும்போது, நம்மிடம் இருக்கும் பணத்தை வைத்து நிலம் வாங்கினால், வீடு கட்டினால், சுப நிகழ்ச்சிகள் நடத்தினால் பணம் செலவாகும். ஆனால், அந்தச் செலவும் நமக்கு ஆதாயமானதாக இருக்கும். இதையே சுப விரயம் என்போம். விதியை மதியால் வெல்லும்வழிகளில் இதுவும் ஒன்று.விரயத்தை சுப விரயமாக மாற்றிக் கொள்ளலாம் என்றாலும், குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை, கணவன்- மனைவிக்குள் சண்டை சச்சரவு, நினைத்த காரியத்தை நடத்திக் கொள்ள முடியாத சூழல், வரவு ஒன்று என்றால் செலவு மூன்று மடங்கு என்று அதிகரித்து அவதிக்குள்ளாக்கும். வெளிநாடு பயணம் மேற்கொள்ள நினைத்தவர்களுக்கு விசா கிடைப்பதில் சிக்கல், தாமதம் என்று இழுபறியாகும். குடும்பத்தில் வயதானவர்கள் இருந்தால் அவர்களின் உடல்நிலை பாதிக்கப்பட்டு அதற்காக வருத்தம், வீடு வகையில் செலவு, வீடு மாற்றம் என்று பணம் பல வழிகளிலும் கரைய ஆரம்பிக்கும். கடன் வாங்கி செலவுசெய்யும் நிலையும் சிலருக்கு உண்டாகும்.

Advertisment

12-ஆம் இடத்தில் அமர்ந்து அந்த இடத்திற்குரிய பலனை துர்பலனாக வழங்கும் குரு பகவான், அங்கிருந்து ஐந்து, ஏழு, ஒன்பதாம் பார்வையாக உங்கள் ராசியின் நான்காம் வீட்டையும், ஆறாம் வீட்டையும், எட்டாம் வீட்டையும் பார்வையிட இருக்கிறார் என்பதால் அந்த இடமெல்லாம் சிறப்படையப் போகிறது.ஆம், குரு பார்க்க கோடி புண்ணியம் என்ற வார்த்தையை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்களே, அவர் இருக்கும் இடத்தைவிட பார்க்கும் இடம் சிறப்பாகும்.

krishnan

7-3-2018 முதல் வக்ரம்

14-2-2018 அன்று உங்கள் ராசிக்கு பன்னிரண்டாம் வீட்டிற்குள் அதிசாரமாக சஞ்சரித்த குரு பகவான் உங்களுக்கு விரயங்களையும், சங்கடங்களையும் வழங்கி வந்த குரு பகவான் 7-3-2018 அன்று பன்னிரண்டாம் வீட்டிலேயே வக்ர கதியை அடைகிறார். பொதுவாக வக்ரமடையும் கிரகங்கள் அதே ராசிக்குள் குணம் கெட்டு சஞ்சரிப்பார்கள். அந்த ஸ்தானத்திற்குரிய பலன்களை எதிர்மறையாக வழங்குவார்கள் என்பது விதி. இதில் குரு பகவான் மட்டும் ஒரு ராசியில் வக்ரகதியை அடையும்போது அந்த ராசிக்கு முன் ராசியின் பலன்களை வழங்கிடுவார் என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது. தடுமாற்றம், தயக்கம், குழப்பம், சஞ்சலம், அலுப்பு, சலிலிப்பு என்று உங்களுக்கு வாட்டம் உண்டாகும். உடல்நிலையிலும் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றிக் கொண்டே இருக்கும். மயக்கம், தலைச்சுற்றல், டென்ஷன் என்று அவதிப்படவும் நேரும்.

உடல்நிலையும், மனநிலையும் பாதித்திடக்கூடிய வாய்ப்புள்ளதால், உங்கள் செயல்களிலும் மந்தமான சூழ்நிலையே உண்டாகும். உங்களுடைய திறமையை வெளிப்படுத்தமுடியாத அளவிற்கு ஏதாவது இடையூறுகள் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும்.

இக்காலத்தில் நீங்கள் எந்தவொரு காரியத்திலும் கவனமுடன் செயல்பட்டால் மட்டுமே நிலைமைகளைச் சமாளித்திடமுடியும்.எனவே, 7-3-2018 முதல் 10-4-2018 வரை உங்களுக்கு சங்கடமான காலம் என்றே சொல்ல வேண்டும். இக்காலத்தில் அமைதியாக செயல்படுவது நன்மையாகும்.

10-4-2018 முதல் துலாத்தில் வக்ரம்

7-3-2018 அன்று விருச்சிக ராசியில் வக்ரமாகி அதற்கு முந்தைய ராசியின் பலன்களை வழங்கி, உங்களுக்கு விரயத்தையும், சங்கடங்களையு

7-3-2018 அன்று விருச்சிக ராசியில் வக்ரமாகி அதற்கு முந்தைய ராசியின் பலன்களை வழங்கி, உங்களுக்கு விரயத்தையும், சங்கடங்களையும் உண்டாக்கி வந்த குரு பகவான், 10-4-2018 முதல் உங்கள் ராசிக்கு பதினொன்றாம் வீடான துலா ராசிக்கு வக்ரகதியிலேயே பின்னோக்கி வந்து 4-7-2018 வரை அங்கு வக்ரகதியில் இருந்து பலன்களை வழங்கிட உள்ளார்.

இக்காலத்தில், வரவைவிட செலவுகள் அதிகரிக்கும், பல வழிகளிலும் விரயங்கள் கூடும். நேரத்திற்குத் தூங்கமுடியாமல் போகும். பாலும் புளிக்கும், படுக்கையும் கசக்கும் என்பது போன்ற நிலைக்கு ஆளாவீர்கள்.

குடும்பத்தினருக்காக புதிதுபுதிதாக செலவுகள் உருவாகும். இருக்கும் வீட்டை மாற்றி அமைக்க விரும்புவீர்கள். அதற்காக செலவுகள் செய்வீர்கள். பிள்ளைகளுக்காக செலவு செய்வீர்கள். ஆலயங்களுக்கு குடும்பத்துடன் சென்று வருவீர்கள். குடும்பத்தில் மஞ்சள் நீர், திருமணம், கல்வி என்றும், ஆடம்பரத்திற்கு என்றும் பல வழிகளிலும் செலவுகள் அதிகரித்து உங்களை ஒருவழி செய்துவிடும்.

இக்காலத்தில், அவசரம், ஆசை என்று உங்கள் செயல்பாடு மாறினால் அதனால் உங்களுக்கு செலவுகள் அதிகரிக்கும் என்பதால் இக்காலம் உங்களுக்கு விரய காலம் என்றே சொல்ல வேண்டும்.

4-7-2018ல் வக்ரநிவர்த்தி

குரு பகவானின் வக்ர காலத்தில் பல்வேறு சங்கடங்களையும், செலவினங்களையும், மன உளைச்சலையும் ஏற்படுத்தி உங்களைப் பாடாய்ப்படுத்தி வந்த நிலை, 4-7-2018 முதல் மாறப்போகிறது, மீண்டும் உங்கள் வாழ்வில் நன்மைகள் நடைபெறப் போகிறது. நினைத்த காரியம் நினைத்தபடியே நடந்தேறி நீங்கள் மகிழ்வீர்கள். பல வழிகளிலும், வருமானம் வரும். உங்கள் திறமை பளிச்சிடும். புகழ் கூடும். 4-10-2018 வரை உங்களுக்கு வசந்தகாலம் என்றே சொல்ல வேண்டும்.

14-2-2018 முதல் 4-7-2018 வரை குரு பகவானின் மூன்றுவிதமான பலன்களும் தனுசு ராசியினரான உங்களுக்கு சங்கடம் தருவதாக இருப்பதால் கவனத்துடன் செயல்பட்டு நன்மைகளைக் காணுங்கள்.

மகரம்

உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள் ஆடுற மாட்டை ஆடித்தான் கறக்க வேண்டும், பாடுற மாட்டை பாடித்தான் கறக்க வேண்டும் என்பதை நன்கு தெரிந்திருப்பீர்கள்.

ஊருக்கு உபதேசம் செய்வதில் நீங்கள் முதல் நபராக இருந்தாலும், உங்களுக்கென்று வரும்போது எல்லாமும் தலைகீழாகிவிடும்.

"வாழ்வதற்குத்தான் வாழ்க்கை, அனுபவித்திடத்தான் அனைத்தும்' என்று உங்கள் மனம் எண்ணும். அதன்படியே உங்கள் வாழ்க்கை செல்லும்.

நீங்கள், பார்வைக்கு மென்மையானவராய்ப் பழகுவதற்கு இனிமையானவராய், கள்ளம் கபடம் அற்றவராய், காட்சி அளித்தாலும் உங்கள் குறிக்கோளில் தெளிவாக இருப்பீர்கள். எப்பாடு பட்டாகிலும் நாணல்போல வளைந்து கொடுத்தாவது சாதிக்க வேண்டியதை சாதித்துக் கொள்வீர்கள்.

அன்பிற்கு அடிமையானவரான நீங்கள் உங்கள் ஆற்றலையும் அனுபவ அறிவையும் கொண்டு மற்றவர்கள் மனதில் இடம்பிடிப்பீர்கள். உழைக்கத் தயங்காதவரான நீங்கள் எந்த நேரத்திலும் சோர்ந்துவிடமாட்டீர்கள். தேடிப் போய் உதவி புரிவதிலும் நீங்கள்தான் முதல் நபராக இருப்பீர்கள்.

சனி பகவான் உங்கள் ராசியாதிபதியும் குடும்ப தனாதிபதியாகவும் இருப்பதால் நீங்கள் மிகவும் அழுத்தமானவர் என்றே கூறவேண்டும்.

எதற்காக எதைச் செய்கிறீர்கள் என்பது உங்களுக்கு மட்டுமே தெரிந்திருக்கும். நீங்கள் ஈடுபட்ட காரியத்தில் தோல்வி என்றாலும் அதற்காகத் தளர்ந்துவிட மாட்டீர்கள்.

14-2-2018 முதல் லாப குரு

உங்கள் ராசிக்கு பதினொன்றாம் வீடான விருச்சிக ராசிக்கு வரும் குரு பகவான் உங்களுக்கு எத்தகைய பலன்களை வழங்கிடப் போகிறார் என்று தானே நீங்கள் கேட்கிறீர்கள்.

பதினொன்றாம் இடம் என்பது லாபஸ்தானம். பணம், பொன், பொருளால் லாபம் காணும் இடம். மூத்த சகோதரிகளால் பலன் கிடைத்திடக்கூடிய இடம், இளைய தாரத்தால் மகிழ்வு காணக்கூடிய இடம், மேலை நாடு பயணத்தையும் வாகன யோகத்தையும் வழங்கிடக்கூடிய இடம்.

கோட்சாரத்திற்கு பதினொன்றில் அதிசாரமாக வரும் குரு பகவானால், உடல்நிலையில் முன்னேற்றம் தோன்றும், மனநிலையில் மகிழ்ச்சி உருவாகும். நினைத்த காரியங்கள் எல்லாம் நினைத்தபடியே நடந்து அதனால் முன்னேற்றம் காண்பீர்கள். வேலையின்றி இருந்தவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகளும், பதவி உயர்வும், சம்பள உயர்வும் கிடைக்கும்.

நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும். உங்கள் சொல்வாக்கிற்கும் இக்காலத்தில் மதிப்பு கூடும். புதிய சொத்துகள் வாங்கும் யோகமும் சிலருக்கு உண்டாகும். மண வாழ்க்கையில் பிரிவு கண்டவர்களுக்கு புதிய துணை ஏற்படும். நீண்ட நாள் எண்ணங்கள் பூர்த்தியாகி, ஆலய தரிசனம் மேற்கொண்டுவரும் வாய்ப்பும் உண்டாகும், இதற்கெல்லாம் காரணம் பதினொன்றில் அதிசாரமாக வரும் குரு பகவான்தான்.

பதினொன்றாம் வீட்டில் அமர்ந்து அந்த வீட்டை வளமாக்கும் குரு பகவான் அங்கிருந்து, ஐந்து,ஏழு, ஒன்பதாம் பார்வையாக உங்கள் ராசியின் மூன்று, ஐந்து,ஏழாம் இடங்களைப் பார்வையிட இருக்கிறார் என்பதால் அந்த இடங்களும் சிறப்படையப் போகிறது.

7-3-2018 முதல் வக்ரம்

14-2-2018 அன்று உங்கள் ராசிக்கு பதினொன்றாம் வீட்டிற்குள் அதிசாரமாக சஞ்சரித்த குரு பகவான் உங்களுக்கு அதிர்ஷ்டகரமான நிலையையும், அன்பானவர்களின் நட்பையும் வழங்கியதோடு, நினைத்ததை நினைத்தபடி சாதித்துக் கொள்ளும் சக்தியையும் உங்களுக்கு வழங்கி வந்த குரு பகவான் 7-3-2018 அன்று பதினொன்றாம் வீட்டிலேயே வக்ரகதியை அடைகிறார்.

எந்தச் செலவாக இருந்தாலும் ஒன்றுக்கு இரண்டாகலாம். கையில் உள்ள பணம் உடனுக்குடன் கரைந்து போகலாம். எதிர்பாராத செலவுகளும், அனாவசியமான செலவுகளும் திடீர்திடீரென வந்து உங்களை சிரமத்தில் ஆழ்த்தலாம். ஆனாலும், அவையெல்லாம் பிற்காலத்தின் ஆதாரமாகவும் ஆக்கப்பூர்வமான செலவாகவும் இருக்கும்.

விரய குருவால் விரயம்தான் ஆகும் என்றில்லை. செலவுகள் அதிகமாகும், கையிருப்புக் கரையும். அதற்கேற்ற வகையில் வரவும் இருக்கத்தான் செய்யும். அந்த வகையில் நிம்மதி அடையுங்கள்.

வீண் செலவுகள் உருவாகக்கூடும் என்ற நிலை உள்ளதால், அதை எப்படிச் செய்வது என்ற முடிவுக்கு வாருங்கள். வீட்டுக்கு உபயோகமானவற்றையும், ஆடம்பரப் பொருள்களையும் வாங்கலாம். இடம், கட்டடம், வாங்கலாம். வீட்டில் சுப நிகழ்ச்சிகளை நடத்தலாம்.

இக்காலத்தில் விரயம் பல வழிகளிலும் உண்டாகும் என்பதால் ஒவ்வொரு செயலிலிலும் இக்காலத்தில் நிதானத்துடன் செயல்படுங்கள்.

7-3-2018 முதல் 10-4-2018 வரை உங்களுக்கு இப்பலன் நீடிக்கும். உங்கள் பணம் பல வழிகளிலும் கரையும்.

10-4-2018 முதல் துலாத்தில் வக்ரம்

7-3-2018 அன்று விருச்சிக ராசியில் வக்ரமாகி அதற்கு முந்தைய ராசியின் பலன்களை உங்களுக்கு வழங்கி விரயத்தையும், சங்கடங்களையும் உண்டாக்கி வந்த குரு பகவான் 10-4-2018 முதல் உங்கள் ராசிக்கு பத்தாம் வீடான துலா ராசிக்கு வக்ர கதியிலேயே பின்னோக்கி வந்து 4-7-2018 வரை அங்கு வக்ரகதியில் இருந்து பலன்களை வழங்கிட உள்ளார்.

பணம் பல வழிகளிலும் வரும். தொழிலிலில் லாபம் அதிகரிக்கும். நண்பர்கள் வட்டம் விரிவடையும். அவர்களால் ஆதாயம் அதிகரிக்கும். பெண்களால் ஆண்களுக்கும், ஆண்களால் பெண்களுக்கும் ஆதாயம் உண்டாகும். தனியே வாடியவர்களுக்கு புதிய நட்பு உருவாகி ஆறுதலை உண்டாக்கும்.

போட்டி, பந்தயம் என்று எல்லாவற்றிலும் வெற்றி உண்டாகும். புதிய முயற்சிகள் பலிதமாகும். மனதிற்கினிய சம்பவங்கள் உங்கள் வாழ்வில் நடந்தேறும்.

4-7-2018 வரை உங்கள் வாழ்வில் குரு பகவானால் நன்மைகள் கிடைத்து மகிழப் போகிறீர்கள்.

4-7-2018-ல் வக்ரநிவர்த்தி

குரு பகவானின் வக்ர காலத்தில் பல்வேறு நன்மைகளையும் மனதிற்கினிய நிலையையும் அடைந்து மகிழ்ச்சியில் திளைத்து வந்த உங்களுக்கு, இந்நிலை 4-7-2018 முதல் மீண்டும் மாறப் போகிறது.

பத்தாம் இடத்திற்குரிய பலனை மீண்டும் முழுமையாக 4-10-2018 வரை காணப்போகிறீர்கள் என்பதால், மீண்டும் சங்கடங்களும், நிம்மதியற்ற மனநிலையையும் காணப்போகிறீர்கள். தொழில் மந்தமாகும். வேலையில் பிரச்சினைகள் உருவாகும். உடல்நிலையும் ஒரு நேரம் இருந்ததுபோல் மறுநேரம் இல்லாமல் போகும்.

14-12-2018 முதல் 4-7-2018 வரை குரு பகவானின் மூன்றுவிதமான பலன்களை அடைந்து சந்தோஷம், சங்கடம், மகிழ்ச்சி என்ற நிலைக்கு மகர ராசியினரான நீங்கள் ஆளாக இருக்கிறீர்கள்.

குருபகவானின் அதிசாரமும், வக்ரமும் உங்கள் ராசிக்கு நன்மை என்றே சொல்லவேண்டும்.

கும்பம்

அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்கடலிலின் ஆழத்தைக்கூட கண்டுபிடித்துவிட முடியும் கும்ப ராசியினரான உங்களை யாராலும் கண்டுபிடித்துவிட முடியாது.

நீங்கள் எப்போதும் அமைதியாக இருப்பதால் உங்களை பரம சாது என்று எண்ணிவிடமுடியாது. வெளியில் நீங்கள் நடந்து கொள்வதற்கும் உங்கள் உள்மனதிற்கும் சம்பந்தமே இருக்காது.

உங்களைக் காப்பாற்றிக் கொள்வதில் உஷார் பேர்வழியான நீங்கள், உங்கள் மனதிற்குள் ஓடிக்கொண்டிருக்கும் எண்ணங்களைச் செயலாக்க என்ன வழி என்று எப்போதும் யோசித்துக் கொண்டிருப்பீர்கள்.

சாஸ்திர சம்பிரதாயங்களைக் கடைப்பிடித்து நேர்மையாக நீங்கள்வாழ்வது போல் காட்டிக்கொண்டாலும் அதற்கும் ஒரு காரணம் இருக்கும்.

உங்கள் வாழ்க்கை உங்களுக்கு எவ்வளவு இக்கட்டாக இருந்தாலும் நீங்கள் எதற்காகவும் உங்களை மாற்றிக்கொள்ள மாட்டீர்கள்.

பந்த பாசங்களில் பற்றுள்ள நீங்கள் எந்த நேரத்திலும் எத்தகைய பிடிப்பான பற்றையும், உறவையும் உதறக்கூடியவராகவே இருப்பீர்கள்.

14-2-2018 முதல் பத்தில் குரு

உங்கள் ராசிக்கு பத்தாம் வீடான விருச்சிக ராசிக்கு வரும் குரு பகவான் உங்களுக்கு எத்தகைய பலன்களை வழங்கப் போகிறார் என்றுதானே நீங்கள் கேட்கிறீர்கள்.

“ஈசானாரொரு பத்திலே தலையோட்டிலே யிரந்துண்டதும்... என்ற பழம்பாடலே இதற்கு விளக்கமாகும்.

பத்தில் குரு பதவியைப் பறிப்பான் என்றும் சொல்வார்கள்.

பத்தில் குரு வருவது சங்கடத்தின் அறிகுறி என்றே சொல்லவேண்டும். இக்காலத்தில் ஒருசிலருக்கு பதவி பறிபோகும். இதற்குமுன்னதாகவும் ஒருசிலர் பதவியை இழந்திருப்பார்கள்.

ஜாதகத்தில் பத்தாம் இடம் என்பது ஜீவனஸ்தானம், ராஜ்ய ஸ்தானம், கர்மஸ்தானம் என்பதாகும். இந்த இடத்தை வைத்துதான் தொழிலில், வியாபாரம், அரசியல் ஈடுபாடு, பட்டம், பதவி பெறுதல், வசதி வாய்ப்புகள், புகழ் பெறுதல், நிர்மாணப் பணிகளில் ஈடுபடுதலைத் தெரிந்து கொள்ளலாம்.

குரு பகவான் அவர் அமரும் இடத்திற்கு துர்பலன்களை வழங்குவார் என்பதால், பத்தாம் இடத்தில் சஞ்சரிக்கும் குரு பகவான் செய்கின்ற தொழிலிலில் தேக்க நிலையை உண்டாக்குவார். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலையில் பிரச்சினைகளை ஏற்படுத்துவார். ஒருசிலருக்கு விருப்பமில்லாத இடத்திற்கு இடமாற்றமும், அதனால் பாதிப்புகளையும் உண்டாக்குவார். முதலாளியோ மேலதிகாரியோ இக்காலத்தில் அவர்களால் நெருக்கடிகள் அதிகரிக்கும். பணியில் இறக்கத்தை ஏற்படுத்துவார். அதனால் பார்க்கும் வேலையை வேண்டாம் என்று வெளியேறும் நிலை சிலருக்கு உண்டாகும். ஒருசிலர் புதிய வேலைக்கு முயற்சிக்கலாம். வேறு தொழில் தொடங்க நினைத்து முயற்சி மேற்கொள்ளலாம். ஆனால், அவற்றில் வெற்றியை அடையமுடியாமல் போகும். தேவையற்ற முயற்சிகளால் அலைச்சல் அதிகரிக்கும், அதேநேரத்தில் வருமானம் குறைவதால் டென்ஷன் அதிகமாகும். வீட்டில் இருக்கும் பொன், பொருட்களை விற்கவேண்டி வரும். குடும்பத்தில் கணவன்- மனைவிக்குள் நெருக்கடி உண்டாகும். கருத்து வேறுபாடு அதிகரிக்கும், பெற்றோருடனும், சகோதர சகோதரிகளுடனும் மன வருத்தம் உண்டாகும். சொந்தஊரை விட்டு வெளியூர் சென்று வசிக்கவேண்டிய சூழலும் ஒருசிலருக்கு உண்டாகும். அக்கம் பக்கத்தினரால் தொல்லைகள் உண்டாவதுடன், நெருங்கிய உறவினர்களுக்கு கண்டமும் ஏற்படும். பொதுவில் எல்லா வகையிலும் நெருக்கடியே இருக்கும் என்பதால் இக்காலத்தில் எச்சரிக்கையுடன் இருந்தால் மட்டுமே இழப்புகளைத் தவிர்க்கலாம்.

பத்தில் அமருவதால் அந்த இடத்திற்கு பாதகமான பலன்களை வழங்கினாலும், அவர் பார்க்கும் இடங்களுக்கெல்லாம் நற்பலன்களை வழங்கிட இருக்கிறார் என்பதை நினைத்து மகிழ்ச்சி அடையுங்கள்.

பத்தாம் இடத்தில் அமரும் குரு பகவான் அங்கிருந்து ஐந்து, ஏழு, ஒன்பதாம் பார்வையாக உங்கள் ராசிக்கு இரண்டு, நான்கு, ஆறாம் வீடுகளைப் பார்வையிட இருக்கிறார் என்பதால் அந்த இடமெல்லாம் சிறப்படையப் போகிறது.

ஆம், குரு பார்க்க கோடி புண்ணியம் என்ற பழமொழியை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்களே, அவர் பார்க்கும் இடங்கள் செழிப்பாகும் என்பது விதி.

7-3-2018 முதல் வக்ரம்

14-2-2018 அன்று உங்கள் ராசிக்கு பத்தாம் வீட்டிற்குள் அதிசாரமாக சஞ்சரித்த குரு பகவான் உங்களுக்கு நன்மையும், தீமையும் கலந்த பலன்களை வழங்கி உலக வாழ்க்கையை உங்களுக்கு புரியவைத்தார். வெளிவட்டத்தில் உள்ள மக்கள் பற்றி தெரிந்து கொள்ள வாய்ப்பளித்தார். இந்த நிலையில் 7-3-2018 அன்று பத்தாம் வீட்டிலேயே வக்ரகதியை அடைகிறார் குரு பகவான்.

பொதுவாக வக்ரமடையும் கிரகங்கள் அதே ராசிக்குள் குணம் கெட்டு சஞ்சரிப்பார்கள். அந்த ஸ்தானத்திற்குரிய பலன்களை எதிர்மறையாக வழங்குவார்கள் என்பது விதி. இதில் குரு பகவான் மட்டும் ஒரு ராசியில் வக்ரமடையும்போது அந்த ராசிக்கு முந்தைய ராசிக்குரிய பலன்களை வழங்கிடுவார் என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது.

வருமானம் அதிகரிக்கும் என்பது நிச்சயம். தொழிலிலில் லாபம் அதிகரிக்கும். வேலையிலும் புதிய வருவாய் கிட்டும். பொன்னும் பொருளும் வாங்கிடக் கூடிய நிலை உண்டாகும். அடமானத்தில் இருந்தவற்றை மீட்கக்கூடிய வசதி வரும். வீடு வாங்குவது, மனை வாங்குவது என்ற நிலையும் சிலருக்கு உண்டாகும்.

குரு பகவான், சுபகாரியங்களுக்கும் வழிவகுப்பார். உங்களுக்கோ, உங்கள் வாரிசுகளுக்கோ வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும்.

திருமணம் நடக்கவில்லையே என்று ஏங்கிக்கொண்டிருந்தவர்களுக்கு பொருத்தமான வரன் கிட்டும்.

குடும்ப வாழ்க்கையில் கோளாறு, கணவன்- மனைவிக்குள் பிரச்சினை என்றிருந்த நிலையில் இனி மாற்றம் வரும். புத்திர பாக்கியம் இல்லாதவர்களுக்கு அதற்குரிய யோகம் உண்டாகும்.

உங்களுடைய முக்கியத்துவம் இக்காலத்தில் அதிகரிக்கும். புத்தி ஒழுங்கான வழியில் போகும். அறிவுக்கூர்மை கூடுதலாகும். உருப்படியான விஷயங்களைப் பற்றி சிந்தித்து உபயோகமான செயலிலில் ஈடுபட்டு வெற்றியைக் காண்பீர்கள். அதே நேரத்தில் செயலிலில் சிரமங்கள் உண்டாகும் என்றாலும் வெற்றி நிச்சயம் உண்டு.

பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் இக்காலம் யோகக்காலம் என்றே சொல்லவேண்டும். போட்ட முதலீடுகள் யாவும் லாபமடையும், சேமிப்பு அதிகரிக்கும். தான தரும காரியங்களில் மனம் ஈடுபடும்.

இக்காலத்தில் எல்லாம் யோகமாகும். மூத்த சகோதரர்களின் ஆலோசனை பெற்று செயல்படுவீர்கள். அந்நியப் பெண்களின் நட்பினால் புதுப்பாதையில் செல்லும் நிலை சிலருக்கு உண்டாகும்.

7-3-20.18 முதல் 10-4-2018 வரை உங்களுக்கு இப்பலன் நீடிக்கும். மனம் மகிழ்ச்சியில் நீந்தும்.

10-4-2018 முதல் துலாத்தில் வக்ரம்

7-3-2018 அன்று விருச்சிக ராசியில் வக்ரமாகி அதற்கு முந்தைய ராசியின் பலன்களை உங்களுக்கு வழங்கி, யோகத்தையும் போகத்தையும், நன்மைகளுக்குமேல் நன்மைகளையும் உங்களுக்கு வழங்கி வந்த குரு பகவான் 10-4-2018 முதல் உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீடான துலா ராசிக்கு வக்ரகதியிலேயே பின்னோக்கி வந்து, 4-7-2018 வரை அங்கு வக்ரகதியில் இருந்து பலன்களை வழங்கிட உள்ளார்.

தொழிலில் முடை, வேலையில் பிரச்சினை, முதலீடுகளில் நஷ்டம், வேலை வாய்ப்பை எதிர்பார்த்திருந்தவர்களுக்கு சங்கடம், மாமியார் வீட்டின்வழியே பிரச்சினை, வெளியூர் வாசம், வீண் அலைச்சல், அக்கம்பக்கத்தினரால் தொல்லைகள், நெருங்கிய உறவினர்களுக்கு பாதிப்பு என்று சங்கடங்களாகவே இக்காலம் இருக்கும்.

4-7-2018 வரை உங்கள் வாழ்வில் சங்கடங்கள், பிரச்சினைகள், நெருக்கடிகள், உறவினர்களுடன் விரோதம் என்ற நிலையே இருக்கும்.

4-7-2018-ல் வக்ரநிவர்த்தி

குரு பகவானின் வக்ர காலத்தில் பல்வேறு சங்கடங்களையும், பிரச்சினைகளையும் நிம்மதியற்ற நிலையையும் அடைந்து வந்த உங்களுக்கு 4-7-2018 முதல் மீண்டும் நன்மைகள் நடக்கப் போகிறது.

ஒன்பதாம் இடத்திற்குரிய பலனை மீண்டும் முழுமையாக அனுபவித்து 4-10-2018 வரை யோகப் பலன்களைக் காணப்போகிறீர்கள். இக்காலத்தில் பணம் பல வழிகளிலும் வரும். உடல்நிலையும், மன நிலையும் சீராகும். வேலையில் இருந்த பிரச்சினைகள் அகலும் புதிய நட்புகளால் சந்தோஷம் அதிகரிக்கும்.

14-2-2018 முதல் 4-7-2018 வரை குருபகவானின் மூன்றுவிதமான பலன்களை அடைந்து, சங்கடம் - சந்தோஷம் - சங்கடம் என்ற நிலைக்கு கும்ப ராசியினரான நீங்கள் ஆளாகலாம்.

குரு பகவானின் அதிசாரமும், வக்ரமும் உங்களுக்கு சங்கடங்களை வழங்கிடும் என்றே சொல்லவேண்டும்.

மீனம்

பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதிஅடுத்த நிமிடம் இதுதான் நடக்கும் என்பதை ஒருசிலரால் மட்டுமே தீர்மானிக்கமுடியும்.

ஒருசிலர் சொல்லும் வாக்கு பலிலிதமாகும். ஒருசிலர் நினைக்கும் நினைப்பு நிஜமாகும்.

குருவின் அருள் பெற்ற உங்களுக்கு எப்போதும் சமூகத்தில் ஒரு உயரிய அந்தஸ்து இருக்கும்.

அரசனாக இருந்தாலும், குருவின் ஆலோசனையைக் கேட்டே நடப்பான். அத்தகைய சக்திமிக்க குருவின் ராசியில் தோன்றியவர்கள் நீங்கள்.

நடைமுறை வாழ்க்கையில்கூட உங்களால் எது முடியுமோ, உங்களுக்கு எது சாதகமாக அமையுமோ அதில் மட்டுமே கவனம் செலுத்துவீர்கள். சூழலுக்கேற்ப நீங்கள் வாழவேண்டிய வழிமுறைகளை உருவாக்கிக் கொண்டு அதன்வழியே செல்ல ஆரம்பித்து அதில் வெற்றியும் காண்பீர்கள்.

உங்கள் வாழ்க்கையில் எதார்த்தத்தைவிட, கற்பனைக்கதைகளில் வரும் கதாபாத்திரங்களைப்போலவே வாழ விரும்புவீர்கள். நீங்கள் படித்த கதைகளை வைத்து அதேபோல் வாழ்க்கை அமைய வேண்டும் என்ற விருப்பம் உங்களில் சிலருக்கு இருக்கும். நீங்கள் எதைச்செய்தாலும் சமூகம் அதை நியாயம் என்று ஏற்றுக்கொள்ளும். அந்த வகையில் உங்கள் செயல்பாடும், குருவின் அருளும் உங்களுக்கு இருக்கும்.

14-2-2018 முதல் ஒன்பதில் குரு

உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீடான விருச்சிக ராசிக்கு வரும் குரு பகவான் உங்களுக்கு எத்தகைய பலன்களை வழங்கிடப் போகிறார் என்று நீங்கள் கேட்பது புரிகிறது.

ஒன்பதாம் இடம் என்பது பிதுர் ஸ்தானம், பாக்கியஸ்தானம், தர்மஸ்தானம் என்பர். இந்த இடத்தை வைத்துதான், அரசாங்கத்தால், தந்தையால் அடையக்கூடிய நன்மை- தீமைகளைத் தெரிந்துகொள்ளலாம். உங்களுக்கு கிடைக்க இருக்கும் பாக்கியத்தை, நீங்கள் செய்யப்போகும் புண்ணியச் செயல்களை தெரிந்துகொள்ளலாம்.

குரு பகவான் அமரும் இடத்திற்கு பாதகமான பலன்களை வழங்குவார் என்று ஒரு பொதுவான விதி இருந்தாலும், இரண்டு, ஐந்து, ஏழு, ஒன்பது, பதினொன்றாம் இடங்களில் அமரும்போது அந்த இடத்திற்குரிய பலன்களை நற்பலன்களாகவே வழங்குவார்.

இதனால் ஒன்பதாம் இடத்திற்கு வரும் குரு பகவானால் இருண்டிருந்த உங்கள் வாழ்க்கை ஒளிபெறப் போகிறது.

ஆம், ஒன்பதாம் இடத்திற்கு வரும் குரு பகவான் முதலிலில் உங்கள் உடல் நலனை சீர்செய்வார். மருந்து, மாத்திரை, மருத்துவர் என்று அலைந்தும் உடல்நிலை சீராகவில்லையே என்று வருந்திக்கொண்டிருந்தவர்களின் உடல்நிலை சீராகும். மனதில் தைரியம் அதிகரிக்கும். தன்னம்பிக்கை கூடும். உங்கள் செயல்திறன் கண்டு உங்கள் பகைவர்களும் உங்களைச் சரணடைவார்கள். பிரச்சினை என்று நீங்கள் பயந்து கொண்டு மனதை வருத்திக் கொண்டிருந்த தெல்லாம் சூரியனைக் கண்டபனிபோல் அகன்றுவிடும். திருமணம் கூடி வரவில்லையே என்று வருந்திக் கொண்டிருந்தவர்களுக்கும் வீட்டில் வயது வந்த பிள்ளைகள் இருந்தும் திருமணம் நடக்க வில்லையே என்று நினைத்துக் கொண்டிருந்தவர்களுக்கும் அவர்களின் கவலை தீரும். வீட்டில் திருமணயோகம் உண்டாகும், குழந்தை பாக்கியம் இல்லாமல் வேதனை அடைந்து வந்தவர்களின் வேதனை தீரும், வீட்டில் குவா குவா சப்தம் கேட்கும். வாழ்க்கைத்துணையால்உங்கள் அந்தஸ்து உயரும், பொன் பொருள் சேர்க்கை உண்டாகும், இருப்பிடத்தை ஒருசிலர் மாற்றம் செய்வீர்கள். அது உங்களுக்கு வசதியாக இருக்கும். ஊர்விட்டு ஊர், மாவட்டம்விட்டு மாவட்டம் என்று ஒருசிலருக்கு வெளியூர் வாசம் அமையும். அதனால் வாழ்க்கை சிறக்கும்.

சொந்தமாக வீடு, நிலம் வாங்கும் யோகம் ஒரு சிலருக்கு உண்டாகும். வாகனம் வாங்குவீர்கள். கல்வி கற்பவர்கள் சிறப்படைவர். ஆசிரியர்களின் வாழ்க்கைத் தரம் உயரும்.

புதிய பொறுப்பு வரும். கடல் கடந்து செல்ல நினைத்தவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள் வரும். அரசுப் பணியாளர்களுக்குப் பதவி உயர்வும் இடமாற்றமும் உண்டாகும். பொதுவில் இக்காலம் தொட்டதெல்லாம் துலங்கும் காலமாகும். நினைத்ததெல்லாம் நடக்கும் காலம் ஆகும் என்பதால் இது யோக காலமே.

ஒன்பதில் அமரும் குரு பகவானால் உங்கள் வாழ்க்கையில் ஏற்றத்தைக் காணப் போகும் நீங்கள், அவர் பார்க்கும் இடங்களாலும் நற்பலன்களை அடையப் போகிறீர்கள் என்பதை நினைத்து மகிழ்ச்சி அடையுங்கள்.

ஒன்பதாம் இடத்தில் அமரும் குரு பகவான் அங்கிருந்து ஐந்து, ஏழு, ஒன்பதாம் பார்வையாக உங்கள் ராசியையும், மூன்று மற்றும் ஐந்தாம் வீடுகளையும் பார்வையிட இருக்கிறார் என்பதால் அந்த இடமெல்லாம் சிறப்படையப் போகிறது.

ஆம், குரு பார்க்கும் இடங்கள் நன்மையால் செழிக்கும் என்பது விதி.

7-3-2018 முதல் வக்ரம்

14-2-2018 அன்று உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீட்டிற்குள் அதிசாரமாக சஞ்சரித்த குரு பகவான், உங்களுக்கு பல்வேறு நன்மைகளை வழங்கி, கடந்த ஐந்து மாதங்களாக உங்களுக்கு இருந்த சங்கடங்களை நீக்கி உங்களுக்கு சந்தோஷமான மன நிலையை வழங்கி இருப்பார். இந்த நிலையில் 7-3-2018 அன்று ஒன்பதாம் வீட்டிலேயே வக்ரகதியை அடைகிறார் குரு பகவான்.

முதலிலில் நீங்கள் செய்து வரும் தொழிலில் மந்த நிலை ஏற்படும். உத்தியோகத்திலும் முழுமையாக கவனம் செலுத்தமுடியாத நிலை உண்டாகும், ஒருசிலருக்கு விருப்பம் இல்லாத பணிகள் வழங்கப்பட்டு அதனால் மனநிலை பாதிக்கும். மேலதிகாரிகளால் ஒருசிலர் கண்டிப்பிற்கு ஆளாகலாம்.

தொழில் நிறுவனங்களில் முதலாளிகளுடன் மன வேற்றுமை உண்டாகும்.

இக்காலத்தில் சுயதொழில் செய்வோருக்கு எதிர்பார்த்த லாபம் கிட்டாமல் போகும். ஒருசிலருக்கு நஷ்டமும் ஏற்படும்.

பிள்ளைகளுக்காகவும், குடும்பத்திற்காகவும் நிறைய செலவு செய்ய வேண்டி வரும்.

கணவன்- மனைவிக்குள் கருத்து வேறுபாடு அதிகரிக்கும். சொந்த ஊரைவிட்டு வெளியூர் சென்று வசிக்கவும் சிலர் முடிவு செய்வீர்கள். அக்கம் பக்கத்தினரால் தொல்லைகள், சகோதர சகோதரிகளுடன் பகை என்று இக்காலம் இருக்கும்.

7-3-2018 முதல் 10-4-2018 வரை உங்களுக்கு இப்பலன் நீடிக்கும். இக்காலம் குறைவான நாட்களையுடையது என்பதால் நிதானம் காத்து கவனமுடன் செயல்பட்டு இக்காலத்தை நீங்கள் நகர்த்திவிடலாம்.

10-4-18 முதல் துலாத்தில் வக்ரம்

7-3-2018 அன்று விருச்சிக ராசியில் வக்ரமாகி அதற்கு முந்தைய ராசியின் பலன்களை உங்களுக்கு வழங்கி சங்கடத்தையும் நெருக்கடிகளையும் உங்களுக்கு வழங்கி வந்த குரு பகவான் 10-4-2018 முதல் உங்கள் ராசிக்கு எட்டாம் வீடான துலா ராசிக்கு வக்ரகதியிலேயே பின்னோக்கி வந்து 4-7-2018 வரை அங்கு வக்ரகதியில் இருந்து பலன்களை வழங்கிட உள்ளார்.

அரசாங்க வகையில் உங்கள் செயலுக்கு பாராட்டுகள் குவியும். உங்கள் உடல்நிலையும் மனநிலையும் சீராகும், காலையில் ஒரு யோசனை, மாலையில் ஒரு யோசனை என்று தோன்றி குழம்பிக்கொண்டிருந்த நிலை மாறும். உங்கள் மனம் விரும்புவதை இக்காலத்தில் அடைந்து மகிழ்வீர்கள்.

ஒருசிலர் ஊர்விட்டு ஊர் செல்வீர்கள். குறைந்தபட்சம் நீண்ட பயணமாவது மேற்கொள்வீர்கள். அதனால் உங்கள் மனம் மகிழும். ஒருசிலர் இருப்பிடத்தை மாற்றம் செய்வீர்கள். வாழ்க்கைத்துணையால் உங்கள் நிலை உயரும். கல்வி கற்பவர்கள் சிறப்படைவார்கள். ஆசிரியர்களின் வாழ்க்கைத் தரம் உயரும். ஒரு சிலருக்கு புதிய பொறுப்பு வரும். கடல் கடந்து செல்ல நினைத்தவர்களுக்கு அதற்குரிய வாய்ப்புகள் வரும். அரசுப் பணியாளர்களுக்கு பதவி உயர்வும் இடமாற்றமும் வரும்.

4-7-2018 வரை உங்கள் வாழ்க்கையில் வசந்தம் வீசும். இன்பம் பெருகும் என்றே சொல்லவேண்டும்.

4-7-2018-ல் வக்ரநிவர்த்தி

குரு பகவானின் வக்ரகாலத்தில் பல்வேறு நன்மைகளையும், மனதிற்கினிய சம்பவங்களையும் கண்டு மகிழ்ந்து வந்த உங்களுக்கு 4-7-2018 முதல் மீண்டும் எட்டாம் இட குருவின் பலன்களால் சங்கடங்கள் உண்டாகலாம். மனநிலையும் உடல்நிலையும் ஒரு நேரம் இருப்பதுபோல் மறுநேரம் இல்லாமல் போகும். 4-10-2018 வரை இந்த நிலை நீடிக்கும். அதன்பிறகு குரு பகவான் ஒன்பதாம் இடத்திற்கு முழுமையாக செல்ல இருப்பதால் அக்காலம் உங்கள் யோக காலமாக இருக்கும்.

14-2-2018 முதல் 4-7-2018 வரை குரு பகவானின் மூன்றுவிதமான பலன்களை அடைந்து மகிழ்ச்சி- சங்கடம்- மகிழ்ச்சி என்ற நிலைக்கு மீன ராசியினரான நீங்கள் ஆளாகப் போகிறீர்கள்.

குரு பகவானின் அதிசாரமும், வக்ரமும் உங்களுக்கு நன்மைகளையே வழங்கிடும் என்றே சொல்லவேண்டும்.

(நிறைவுற்றது)

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe