கருங்காலிக் கட்டையின் மகத்துவம் மக்களுக்குத் தற்போது ஓரளவுக்குப் புரிதலுடன் தெரிய வந்துள்ளது. அதனால் ஆண்- பெண் இருபாலரும் கைகளிலும் கழுத்திலும் கருங்காலி வளையல் மற்றும் மாலைகள் காணப்படுகின்றன. இந்தக் கருங்காலி மரத்தின் மகத்துவத்தை கொஞ்சம் விவரமாகப் பார்க்கலாமே.
ஆன்மிக பூஜைப் பொருட்களில் மிகவும் முக்கியமான- அரிதான ஒன்று கருங்காலி வளையல். மதுரைக்கு அருகிலிருக்கும் பழமையான வீடுகளில் தூணாக, உலக்கையாக, கதவாக இருப்பதைப் பார்க்கலாம். ஆற்றல்மிக்க கருங்காலி மரத்திலிருந்து சுத்திசெய்து மந்திர உரு ஏற்றிய கருங்காலி மாலை, கருங்காலி பிரேஸ்லெட், கருங்காலி ருத்ராட்சம் போன்றவை ஆன்மிகம் சார்ந்த பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் கிடைக்கின்றன.
கருங்காலி பழமையான மர வகையைச் சார்ந்தது. பல ஆண்டுகள் வாழ்ந்த மரத்தின் நடுப்பகுதி மிகவும் சக்திவாய்ந்ததாக- கருமையாக இருக்கும். அந்த கருமையான நடுப்பகுதியை வெட்டி நம் தேவைக்கேற்ப சுவாமி சிலைகள், வீட்டு உபயோகப் பொருட்கள் செய்யப்படுகின்றன.
குறிப்பாக பழைய காலத்தில் உலக்கையை கருங்காலி மரத்தில்தான் செய்து பயன்படுத்தி வந்துள்ளனர். இப்போது விலை உயர்வினால் வேறுசில மரங்களால் செய்யப்படுகிறது.
அந்தக் காலத்தில் செய்யப்பட்ட மரப்பாச்சி பொம்மைகள் கருங்காலி மரத்தில் செய்யப்பட்டவையே. குழந்தைகள் கடித்து விளையாடினால்கூட உடலுக்குத் தீங்கு விளைவிக்காது.
ஆன்மிக பூஜைப் பொருட்களில் மிகவும் முக்கியமான- அரிதான ஒன்று கருங்காலி மாலை. அதுபோல கருங்காலி வளையல் அணிந்து கொள்ளும்பொழுது நம் உடம்பிலுள்ள கெட்ட சக்திகள் கட்டுப்படுத்தப்படும்.
நவகிரக நாயகர்களில் இது செவ்வாய் பகவானுக்குரியது. இவர் கொடுக்கும் அனைத்து நற்பலன்களும் இந்த கருங்காலி மாலை அணிவதன்மூலம் நமக்குக் கிடைக்கும். கருங்காலி மரம் மின் கதிர்வீச்சுகளைத் தன்னுள் சேமிக்கும் தன்மைகொண்டது. இதனால் இதன் நிழலில் அமர்ந்தால்கூட நோய் நீக்கும் வல்லமை கொண்டது. தேகம் வலுவடைந்து, ஆன்மா பலமடைந்து ஆண்டவனைச் சரணடைய கருங்காலியைத் தொழுவோம்.
கருங்காலி வளையலைப் பெண்கள் அணிந்து பயன்பெறலாம். ரத்தத்தை சுத்தப்படுத்தும். ஜீரணக் கோளாறு நீங்கும். பெண்களின் மாதவிடாய்க் கோளாறு சரியாகும். ஆண்- பெண் மலட்டுத்தன்மை நீங்கி குழந்தைப் பேறுக்கு வழிவகுக்கும். உடலில் சோம்பல் நீங்கி சுறுசுறுப்புண்டாகும். மேலும் மாங்கல்ய பலத்தை பலப்படுத்தும். ஆண்களுக்கு ஆண்மை அதிகரிக்கும். உடல் உறுதியடையச் செய்யும். கோபம் சிறிது சிறிதாகக் குறையும். மன பயத்தை நீக்கி தைரியத்தை வழங்கும். பேச்சுதிறமை அதிகரிக்கும். வியாபாரம், தொழில் போட்டிகளில் வெற்றி கிட்டும். நிலபுலன்கள் வாங்க வழிவகுக்கும். நிலம் சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்கள் இதை அணிந்துகொள்ள அத்துறையில் வெற்றிவாகை சூடலாம். விஷப் பூச்சிகள் நம்மை அண்டாமல் பாதுகாக்கும். வாகன விபத்துகளைத் தடுத்து பயணங்களைப் பாதுகாக்கும். நெருப்பின் பயம் போக்கும், அதன் அபாயத்திலிருந்து பாதுகாக்கும்.
செவ்வாய் தோஷமுள்ளவர்கள் இந்த மாலை யணிந்தால் தோஷம் நீங்கி திருமணத் தடைகளை நீக்கும். சகோதர பிரச்சினைகள் சரியாகும். கணவன்- மனைவி பிரச்சினை இருப்பின் அது நீங்கி உறவு மேம்படும்.
இது உடலுக்கு வலிவைத் தரும் ரசாயனமாகும். குளிர்ச்சித்தன்மை கொண்டது, பற்களுக்கு வலிவூட்டும். கசப்பு, துவர்ப்பு கலந்த சுவை கொண்டது.
கருங்காலிக் கட்டை அதிகப்படியான மருத்துவத் தன்மை கொண்டது, இதன் வேர், பட்டை, மலர், கோந்து அல்லது பிசின் மருந்துப் பொருட்களாகப் பயன் படுத்தப்படுகின்றன. வைரம் பாய்ந்த கட்டை- அதாவது மிகவும் பழமையான வயதான மரத்திலிருந்து கிடைக்கும் பொருட்கள் மிகவும் சக்திவாய்ந்தவை. கருங்காலிக் கட்டையைத் தண்ணீரில் ஊறவைத்தால் அந்த நீரின் நிறம் மாறும். அந்த நீரைக்கொண்டு குளித்துவந்தால், உடலில் உண்டாகும் அனைத்து வலிகளும் நீங்கும்.
கருங்காலி மரம் மேஷ ராசி, விருச்சிக ராசி மற்றும் அஸ்வினி, பரணி, விசாகம், அனுஷம், கேட்டை நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கும்; செவ்வாய்க்கிழமை பிறந்தவர்களுக்கும்; மார்ச் 21 முதல் ஏப்ரல் 20 வரை பிறந்தவர்களுக்கும் நல்ல மருந்தாகும்.
நோய்கள் நீங்க கருங்காலிக் கட்டையைக் கையில் தாயத்தாக அணிந்துகொண்டாலும் நல்ல பலனிருக்கும். எல்லா கோவில்களிலும் கும்பாபிஷேகத்தின்போது கருங்காலிக் கட்டைகளை கலசத்தினுள்ளே போடுவார் கள். அதனால் இடி மின்னலால் எந்த பாதிப்பும் அந்த கோவிலைச் சுற்றி வசிக்கும் நபர்களுக்கு வருவதில்லை.
கருங்காலி அரிதான மரம். ஒருசில ஆலயங்களில் மட்டுமே இப்போதிருக்கிறது. மூலிகை மருத்துவர் களின் ஆலோசனைப்படியும் கருங்காலி மரத்தைப் பயன்படுத்தலாம். வீட்டில் கருங்காலிக் கட்டை வைத்திருந் தால் மிகுந்த நற்பலன்களை அளிக்கும்.
சகல ஐஸ்வர்யங்களும் பெற்று வளமுடனும் நலமுடனும் வாழ நாமும் கருங்காலி மாலை மற்றும் வளையல் அணிவோம்.
செல்: 98425 50844