ஆர். மகாலட்சுமி

கிரக மாறுதல்

21-11-2019- சுக்கிரன்- தனுசு.

3-12-2019- புதன்- விருச்சிகம்.

Advertisment

சூரியன்: நெருப்பு கிரகமான சூரியன் நீர் ராசியான விருச்சிகத்தில் உள்ளார்.

11

செவ்வாய்: நெருப்பு கிரகமான செவ்வாய் கார்த் திகை மாதம் முழுவதும் காற்று ராசியான துலாத்தில் உள்ளார்.

Advertisment

புதன்: காற்று கிரக மான புதன் மாதத்தின் பாதிநாள்வரை காற்று ராசியான துலாத்திலும், பின் நீர் ராசியான விருச்சிகத் திலும் இருப்பார்.

சுக்கிரன்: நீர் கிரகமான சுக்கிரன் கார்த்திகை மாதம் ஐந்து நாட்கள் மட்டுமே நீர் ராசியான விருச்சிகத்திலும், மாதத்தின் மற்ற நாட்களில் நெருப்பு ராசியான தனுசிலும் நிலைகொள்வார்.

குரு: ஆகாய கிரகமான குரு நெருப்பு ராசியான தனுசில் உள்ளார்.

சனி: காற்று கிரகமான சனி நெருப்பு ராசியில் உள்ளார்.

கேது: நெருப்பு மற்றும் காற்று கிரகமான கேது, நெருப்பு ராசியில் நிலைக் கிறார்.

ராகு: காற்று மற்றும் நெருப்பு கிரகமான ராகு, காற்று ராசியான மிதுனத்தில் உள்ளார்.

இந்த மாதத்தில் நவம்பர் 17, 18, 19 வரை சந்திரன், நீர் ராசியான கடகத்தில் சஞ்சரிக்கும் நேரத்தில், இன்னொரு நீர் கிரகமான சுக்கிரன் மற்றொரு நீர் ராசியான விருச்சிகத்தில் சஞ்சரிக்கும்போது கண்டிப்பாக மழை பொழியும். அதிலும், நவம்பர் 18 அன்று சுக்கிரன் மீன அம்சத்தில் உச்சம் பெறுகிறார். இந்த அமைப்பு நவம்பர் 18, 19, 20 தேதிகளில் உள்ளது. எனவே இந்த தேதிகளில் கண்டிப்பாக மழைப்பொழிவு உண்டு.

இதுவரை சரிதான். சுக்கிரன் எனும் நீர் கிரகம். நவம்பர் 21 அன்று நெருப்பு ராசிக்கு (தனுசு) சென்று அமர்ந்துவிடுவார். தனுசில் ஏற்கெனவே குரு, சனி, கேது ஆகியோர் நெருக்கியடித்து உட்கார்ந்து கும்மியடித்துக்கொண்டிருக் கிறார்கள். நெருப்பு ராசியான தனுசில் அத்தனை காற்று கிரகங்களும் உள்ளனர். இதில் குரு ஆகாய தத்துவம் கொண்டவர்.

இவர்கள் அனைவரையும் ராகு, மிதுனத்திலிருந்து கவனிக்கிறார்.

அவரும் ஒரு காற்று மற்றும் நெருப்பு கிரகம்.

இந்த அடைசலான இடத்தில் நீர் கிரகமான சுக்கிரன் சேர்ந்து "என் தன்மையை நானும் செயல்படுத்துவேன்' என கொக் கரிக்க முடியுமா எனில், அது சற்று இயலாத காரியமென்றே தோன்றுகிறது. ஒருவேளை, குரு எனும் சுபகிரகத்துடன் சுக்கிரன் சேரும்போது மழைவரும் வாய்ப்பிருப்பினும், அது இறுகி, பனிக்கட்டி மழையாகத்தான் பொழியும் வாய்ப் புள்ளது.

சந்திரன் வருண மண்டல நட்சத்திரமான மூலம், பூராடம் ஆகியவற்றில் செல்லும்போது ஓரளவு மழைக்கு வாய்ப்புண்டு. இது நவம்பர் 29, 30 தேதிகளில் நடக்கும்.

dd

மற்றபடி இந்த கார்த்திகை மாதம் காற்று, நெருப்பு கிரகங்களால் ஆளப்படுகிறது. சுக்கிரன் எனும் நீர் கிரகம் நெருப்பு ராசியில் அணைந்துவிடுகிறார். எனவே அதிக மழைக்கு வாய்ப்பிருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் காற்று மட்டும் அதிகமாக வீசும். குரு ஆகாயத்தைக் குறிப்பவர். எனவே ஆகாயத்தில் அடிக்கடி காற்றின் தாக்கம் ஏற்படும். அதிலும் பெரும்போக்கு கிரகம் ராகு இவர்களைப் பார்வையிடுவதால், காற்று ஒருவிதமாக இல்லாமல் சுழன்று சுழன்று வீசும். இது அடிக்கடி நிகழும். இதனை வானிலை ஆய்வாளர்கள் சுழற்காற்று அல்லது புயல்காற்று எனக் குறிப்பிடுவர். இந்த புயல்களுக்குப் பெயர் வைத்துக் கட்டுபடியாகாது. இனிமேல் இந்த மாதிரி புயல் செய்திகள் வந்துகொண்டே இருக்கும்.

இந்த புயல் அடிக்கும் அதிரிபுதிரியில் சந்திரன் நீர் ராசிகளில் சஞ்சரிக்கும் நாட்களில் மழையும் பெய்யக்கூடும். இந்த மழையும் அச்சம் தரும் விதத்தில் அமையும்.

இக்காலகட்டத்தில் விமானப் பயணம், கப்பல் மற்றும் படகுப்பயணம், மீனவர் தொழில் போன்றவை பாதிக்கும்.

ஆக, இந்த வருட கார்த்திகை மாதம் காற்று, புயலுடனும், அவ்வப்போது நெருப்பின் தாக்கத்தோடும் செல்லும். இம்மாதம் மக்களுக்குப் பயன் தரத்தக்க வானிலையைக் கூற இயலாது.

மழை பொழியும் வாய்ப்புள்ள நாட்கள் நவம்பர் 17- புனர்பூசம்- கண்டிப்பாக மழை உண்டு.

நவம்பர் 18- பூசம் ''

நவம்பர் 19 ஆயில்யம் ''

நவம்பர் 26- விசாகம்.

நவம்பர் 27- அனுஷம்.

நவம்பர் 28- கேட்டை.

டிசம்பர் 5- பூரட்டாதி.

டிசம்பர் 6- உத்திரட்டாதி.

டிசம்பர் 7- ரேவதி.

டிசம்பர் 12- ரோகிணி.

டிசம்பர் 15- புனர்பூசம்.

டிசம்பர் 16- பூசம், ஆயில்யம்.

நவம்பர் 17, 18, 19 தவிர மற்ற நாட்களிலும் மழைப்பொழிவு இருக்கலாம். மழையும், மகப்பேறும் மகேசனின் செயல் என்பர். இந்த மாதம் கோட்சாரம் சற்றே கவலையை ஏற்படுத்துகிறது.

ஈசனே, தாங்கள் எதனை நடத்தப்போகிறீர்கள்? எங்களைக் காத்தளுரும். நீங்கள் தாயுமானவர். நாங்கள் உங்கள் குழந்தைகள். எங்களால் இயன்றது உங்களை நமஸ்கரிப்பது மட்டுமே.

செல்: 94449 61845