Advertisment

தாய்வழி சாபங்கள் தீர்க்கும் கற்பக விநாயகர்! -சி. த. மீனாட்சி சண்முகம் (சென்ற இதழ் தொடர்ச்சி...)

/idhalgal/balajothidam/karpaka-ganesha-who-solves-maternal-curses

மாதுர்கர்மா என்று சொல்லக்கூடிய அம்மாவழி உறவுகளால் ஏற்படக்கூடிய கர்ம வினைகளைப் போக்கும் கடவுளாக விநாயகர் விளங்கு கிறார்.

Advertisment

மாதுர்கர்மாவைக் குறிக் கும் கிரகமான கேது பகவான் ஒருவருடைய ஜாதகத் தின் பகைபெற்று, நீசம்பெற்று, சுப பார்வையின்றி மற்ற கிரகங்களுடனோ அல்லது தனித்தோ சேர்ந்தால் கீழ்க் காணுமாறு பாதிப்பை ஏற்படுத்து வார்.

கேது தனித்துலி நாகதோஷமாக திருமணத் தடையை, வாழ்வின் முன்னேற்றத் தடையை ஏற்படுத்துவார். கணவன்- மனைவி இணை சரியாக அமைவதைத் தடுப்பார்.

பெருச்சாளிக் கதை அசுர குலத்தில் கஜமுகாசுரன், மகத முனிவருக்கும், விபுதைக்கும் மகனாகப் பிறந்தவன். தேவர் களை ஒழிப்பேன் என்று சபதமெடுத் தான். அவன் தந்த தொல்லைகள் தாங்காமல் தேவர்கள் சிவ பெருமானிடம் வேண்டினர்.

சிவபெருமான் தன்னிலிருந்து ஒரு உருவத்தை உருவாக்கினார்.

Advertisment

மூன்று கண்கள், ஐந்து கைகள், யானைமுகம், மனித உடல் ஆகியவற்றோடு விநாயக ரைப் படைத்தார். அவர் சிவகணங் களுக்குத் தலைவனாகிறார்.

விநாயகர், கஜமுகாசுரன் போரில் பெருச்சாளி வடிவமெடுத்துப் போரிட்டு, கஜமுகாசுரனை அழிக்காமல் அவனை வீழ்த்தி தனது வாகனமாக வைத்துக்கொண்டார். எதிரியை அழிக்காமல் அவர் களை வீழ்த்திக் காலம் முழுவதும் தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளும் அகிம்சைப் போர்க்கலையை உலகுக்கே முதலில் சொன்னவர் விநாயகப் பெருமானே.

கேது- சூரியனோடு சேர்ந்தால் தந்தைக்கு கண்டத்தையும், அரசாங்க தண்டனையும், அரசாங்கத் தொல்லையும், தீயால் கண்டத்தையும் ஏற்படுத்துவார். தந்தைவழி உறவுகெடும்.

கேது- சந்திரனோடு சேர்ந்தால் தாய்க்கு கண்டத்தையும், தாய்வழி உறவு கெடுவதையும், நீர் சம்பந்த கண்டத்தையும், மனவளர்ச்சியில் பாதிப்பையும், குடிகாரர் என்ற நிலையையும், வலிப்பு நோயையும் ஏற்படுத்துவார்.

கேது- செவ்வாயோடு சேர்ந்தால் சகோதரர்களுக்கு கண்டத்தையும், நிலம், இடம், மண், மனை பிரச்சினையையும், கடனையும், வேலையில் தடையை

மாதுர்கர்மா என்று சொல்லக்கூடிய அம்மாவழி உறவுகளால் ஏற்படக்கூடிய கர்ம வினைகளைப் போக்கும் கடவுளாக விநாயகர் விளங்கு கிறார்.

Advertisment

மாதுர்கர்மாவைக் குறிக் கும் கிரகமான கேது பகவான் ஒருவருடைய ஜாதகத் தின் பகைபெற்று, நீசம்பெற்று, சுப பார்வையின்றி மற்ற கிரகங்களுடனோ அல்லது தனித்தோ சேர்ந்தால் கீழ்க் காணுமாறு பாதிப்பை ஏற்படுத்து வார்.

கேது தனித்துலி நாகதோஷமாக திருமணத் தடையை, வாழ்வின் முன்னேற்றத் தடையை ஏற்படுத்துவார். கணவன்- மனைவி இணை சரியாக அமைவதைத் தடுப்பார்.

பெருச்சாளிக் கதை அசுர குலத்தில் கஜமுகாசுரன், மகத முனிவருக்கும், விபுதைக்கும் மகனாகப் பிறந்தவன். தேவர் களை ஒழிப்பேன் என்று சபதமெடுத் தான். அவன் தந்த தொல்லைகள் தாங்காமல் தேவர்கள் சிவ பெருமானிடம் வேண்டினர்.

சிவபெருமான் தன்னிலிருந்து ஒரு உருவத்தை உருவாக்கினார்.

Advertisment

மூன்று கண்கள், ஐந்து கைகள், யானைமுகம், மனித உடல் ஆகியவற்றோடு விநாயக ரைப் படைத்தார். அவர் சிவகணங் களுக்குத் தலைவனாகிறார்.

விநாயகர், கஜமுகாசுரன் போரில் பெருச்சாளி வடிவமெடுத்துப் போரிட்டு, கஜமுகாசுரனை அழிக்காமல் அவனை வீழ்த்தி தனது வாகனமாக வைத்துக்கொண்டார். எதிரியை அழிக்காமல் அவர் களை வீழ்த்திக் காலம் முழுவதும் தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளும் அகிம்சைப் போர்க்கலையை உலகுக்கே முதலில் சொன்னவர் விநாயகப் பெருமானே.

கேது- சூரியனோடு சேர்ந்தால் தந்தைக்கு கண்டத்தையும், அரசாங்க தண்டனையும், அரசாங்கத் தொல்லையும், தீயால் கண்டத்தையும் ஏற்படுத்துவார். தந்தைவழி உறவுகெடும்.

கேது- சந்திரனோடு சேர்ந்தால் தாய்க்கு கண்டத்தையும், தாய்வழி உறவு கெடுவதையும், நீர் சம்பந்த கண்டத்தையும், மனவளர்ச்சியில் பாதிப்பையும், குடிகாரர் என்ற நிலையையும், வலிப்பு நோயையும் ஏற்படுத்துவார்.

கேது- செவ்வாயோடு சேர்ந்தால் சகோதரர்களுக்கு கண்டத்தையும், நிலம், இடம், மண், மனை பிரச்சினையையும், கடனையும், வேலையில் தடையையும் ஏற்படுத்துவார்.

கேது- புதனோடு சேர்ந்தால் மாமன் உறவுகள் கெடுவதையும், மாமனுக்கு கண்டத்தையும், வியாபாரக் கடன், வியாபரத் தடையையும், மனபாதிப்பு, பைத்தியக்கார நிலையையும் ஏற்படுத்துவார்.

கேது- குருவோடு சேர்ந்தால் படிப்பில் தடையையும், பணத் தட்டுப்பாட்டையும், தங்கத்தால் தோஷத்தையும், புத்திகெட்ட செயலையும் ஏற்படுத்துவார்.

கேது- சுக்கிரனோடு சேர்ந்தால் திருமணத் தடையையும், திருமணமானவர்கள் பிரிவையும், கணவன்- மனைவி பிரச்சினையும், சுகவாழ்வு கெடுதலையும், வாகன விபத்தையும் ஏற்படுத்துவார்.

கேது- சனியோடு சேர்ந்தால் வறுமை யையும், சோற்றுக்கே பிச்சையெடுக்கும் நிலையையும், வேலையின்மையையும், துறவியாகக்கூடிய நிலையையும், வீட்டை விட்டுப் பிரிந்து அனாதையாகக்கூடிய நிலையையும் ஏற்படுத்துவார்.

இவ்வாறு மாதுர் கர்மா என்ற அம்மாவழி உறவுகளின் பாவங்களின் காரணமாக ஜனன ஜாதகத்தில் கேதுபகவான் கெட்டு மேற்கண்ட தோஷங்களை ஏற்படுத்துவார்.

இதிலிருந்து நம்மைத் தற்காத்துக் கொள்வதற்கு சில பரிகார வழிபாட்டைச் செய்வது அவசியமாகிறது. பரிகாரமென்பது ஒரு பிரச்சினைக்கான முழுமையான தீர்வல்ல. ஆனால் அதிலிருந்து தன்னைத் தற்காத்துக் கொள்வதற்கான ஒரு முக்கிய வழி.

உதாரணமாக மழை வருகின்றதென்றால் நம்மால் மழையை நிறுத்தமுடியாது. ஆனால் மழைக்காக குடை பிடித்துக்கொள்ள முடிகி றதே- அதுபோல! வெயில் அடிக்கிறதென்றால் அதை நம்மால் தடுக்கமுடியாது. ஆனால் அதிலிருந்து நம்மைத் தற்காத்துக்கொள்ள செருப்பு அணிந்துகொள்கிறோமல்லவா- அதுபோல.

இதில் மாதுர்கர்மாவைப் போக்கும் தெய்வமாக முதலில் அவரவர்கள் அம்மா வீட்டு குலதெய்வத்தை பௌர்ணமிநாளில் சென்று, அகண்ட அகல்விளக்கில் இலுப்பை எண்ணெயில் வெள்ளை காடா துணியில் திரியிட்டு தீபமேற்றி வழிபடவேண்டும். இதைத் தொடர்ந்து செய்துவர மாதுர்கர்மா காரகனான கேது பகவான் தங்களது ஜனன ஜாதகத்தில் மேற்கண்ட பாதிப்பை ஏற்படுத்தியிருந்தாலும் பாதிப்பைக் குறைக் கலாம்.

மேலும் கேது- காரகர் விநாயகப் பெருமான் ஆட்சிசெய்யும் பிள்ளையார்பட்டி சென்று, வியாழக்கிழமை அதிகாலை 6.00- 7.30 எமகண்டம்- நம் நடைமுறையில் ராகுகாலம் என்று மட்டுமே குறிப்பிடுவோம்- கேது காலம் எனக் குறிப்பிடமாட்டோம். அந்த கேது காலமென்பதே எமகண்டமாகும். ஏனெனில் கேது கெட்டு, எம பயத்தை எமன் தரக்கூடிய மரண மளவுக்கு தண்டனையைத் தருவதால் எமகண்டம் என்கிறோம்.

அத்தகைய எமகண்டத்தில், தங்களது அர்ச்சனையைச் செய்துவிட்டு கோவிலில் பணம்கட்டி விபூதி அபிஷேகம் செய்து, அந்த விபூதியை வீட்டிற்கு எடுத்துவந்து தினமும் பிரச்சினை உள்ளவர்கள் பூசிக்கொள்ளும்போது, அந்த பிரச்சினைகள் நாளடைவில் தீரும் என்பதே நிதர்சனம்.

bb

ஏனெனில், ஐங்கரன் என்று வர்ணிக்கப் படும் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகப் பெருமான் பிள்ளையார்பட்டியில் துதிக்கை தவிர்த்து, இரண்டு கைகளுடன் பத்மாசன நிலையில் அமர்ந்திருப்பார்.

சைவத்தில் விநாயகப் பெருமானாகவும், வைணவத்தில் தும்பிக்கையாழ்வாராகவும், பௌத்தத்தில் புத்தரால் ஆனந்தனுக்கு உபதேசிக்கப்பட்ட "கணபதி ஹிருதயம்' என்ற மந்திரமாகவும் இருப்பவர் உலகின் முழுமுதற் கடவுள் விநாயகப் பெருமான்.

நவகிரகங்களைக் கட்டுப்படுத்துபவர் என்பதால் இங்குள்ள கற்பக விநாயகரைச் சுற்றி ஒன்பது விளக்குகள் ஏற்றப்படுகின்றன. 27 நட்சத்திரங்களைக் கட்டுப்படுத்துபவர் என்பதால் அவர்முன் 27 விளக்குகள் ஏற்றப்படுகின்றன. இவரின் நெற்றியில் சூரியனும், நாடியில் சந்திரனும், வலது தொடையில் செவ்வாயும், வலது கீழ்க்கையில் புதனும், வலதுமேல் கையில் சனியும், தலையில் குருபகவானும், இடது மேல்கையில் ராகுவும், இடது தொடையில் கேதுவும், இடது கையின் கீழ் சுக்கிரனும் உள்ளனர்.

உலகில் வடக்கு நோக்கி யோகாசன நிலையில் அமர்ந்திருக்கும் வலம்புரி விநாயகர் இவர் மட்டுமே. உலகில் இரண்டு கைகளுடன் காணப்படும் விநாயகர் இரண்டுதான். ஒன்று இவர்; மற்றொன்று ஆப்கானிஸ்தானில் உள்ளது.

இத்தகைய சிறப்புவாய்ந்த பிள்ளையார் பட்டி கற்பக விநாயகர் கோவிலில் நாம் பரிகாரத்திற்காக வழிபடவேண்டிய முறைகள்:

சூரியன்- கேது தோஷமுள்ளவர்கள், நாம் மேலே குறிப்பிட்டதுபோல துன்பப்படுகிறவர்கள் திருவாதிரை நட்சத்திரத்தன்றோ அல்லது ஞாயிற்றுகிழமை எமகண்ட வேளையிலோ (கேது காலம்) கோதுமை யால் செய்த அல்வாவை வைத்துப் படைக்கும் போது அரசாங்க தண்டனையிலிருந்து விலகல், தந்தைக்கு ஏற்படும் கண்டம் தீருதல், தீயால் ஏற்படும் கண்டம், வேலையில் ஏற்படும் அபாண்ட பழிச்சொல் போன்ற பல்வேறு தோஷங்கள் விலகும்.

சந்திரன், கேது தோஷமுள்ளவர்கள் சுக்ல சதுர்த்தி- அதாவது வளர்பிறை சதுர்த்தியன்று எமகண்ட வேளையிலோ அல்லது மாலை 6.00 மணிக்கு மேலோ 18 படி அரிசியால் செய்யப்பட்ட முக்குறுணி மோதகக் கொழுக்கட்டையை தயார்செய்து எடுத்துவந்து விநாயகருக்குப் படைக்கவேண்டும். திருப்பதியில் எப்படி லட்டோ, அப்படி விநாயகருக்கு மோதகக் கொழுக்கட்டை.

இவ்வாறு கொழுக்கட்டை படைக்கும் போது தாய்வழிப் பகை, நீரால் ஏற்படும் கண்டம், பைத்தியம் நாளடைவில் தெளிவது- மனவளர்ச்சி பாதிப்பு தீர்வது, குடிகாரர் திருந்துவது, வலிப்புநோய் தீருவது போன்ற தீராத பிரச்சினைகள் தீரும்.

மோதகக் கொழுக்கட்டைப் படையலும், அபிஷேகம் செய்த விபூதியை இட்டுக்கொள்வதும் இந்த பிரச்சினைக் களுக்கான முழுத் தீர்வாகும்.

கேது- செவ்வாயோடு சேர்ந்து தோஷ முள்ளவர்கள் செவ்வாய்க்கிழமை எமகண்ட வேளையிலோ (9.00-10.30) அல்லது அதிகாலை (600-7.00) செவ்வாய் ஓரையிலோ கற்பக விநாயகருக்கு வஸ்திரம் அணிவித்து வழிபடும்போது சகோதர பிரச்சினை, சொத்துப் பிரச்சினை வேலையில் தடை போன்றவை விலகும். மேலும் வீட்டிற்குச் சென்று பவழத்தோடு ஆன விநாயரை வாங்கிவைத்து செவ்வாய்தோறும் வழிபடுவது மிகச்சிறப்பாகும்.

கடன் தீருவதற்கு ஒவ்வொரு மாதமும் ரோகிணி நட்சத்திரத்தின்போது சந்தனத் தில் இரட்டைப் பிள்ளையார் செய்து வணங்கினால் கடன்தீரும்.

கேது- புதன் சேர்க்கையால் ஏற்படும் தோஷம்போக தேங்காய் மோதகக் கொழுக்கட்டையை புதன் ஓரையில் புதன் காலை 6.00-7.00 மணிக்குள் படைக்க தோஷம் நீங்கும். (18 படி அரிசி, வெல்லம், தேங்காய் மோதகக் கொழுக்கட்டை) மோதகம் என்றால் மேலே உள்ள மாவு, அண்டம்; உள்ளே உள்ள பூரணம் பிரம்மம். நமக்குள் உள்ளே உள்ள நல்ல பண்புகளை, பூரணத்தை மாவான மாயை மறைத்துக்கொண்டுள்ளது. மாயையை அகற்றினால் நல்ல பண்புகள் வெளியே வருமென்பதை உணர்த்துவதே மோதகமாகும்.

அத்தகையை மோதகக் கொழுக் கட்டையை வைத்துப் படைக்கும்போது புதன், கேது சேர்க்கையால் ஏற்படக்கூடிய மாமனுக்கு கண்டம், மனப்பிரச்சினை, பணப்பிரச்சினை, வியாபாரத்தடை, பைத்தியக்கார நிலை போன்றவை தீரும்.

கேது, குரு சேர்ந்து தோஷம் ஏற்படுத்தும்போது, வியாழன் காலை எமகண்டத்தில் செய்யப்படும் விபூதிதான் இதற்குப் பொருந்தும். மேலும் இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் அனைத்து பாரிகாரங்களுடன் விபூதி அபிஷேகத்தை சேர்த்துக்கொள்ளவேண்டும். இதன்மூலம் படிப்பில் தடை, பணத்தட்டுப்பாடு, தங்கத்தால் ஏற்படக்கூடிய பிரச்சினை போன்ற பல்வேறு பிரச்சினைகள் தீரும்.

கேது, சுக்கிரன் தோஷமுள்ளவர்கள், ஒவ்வொரு சதுர்த்தியன்றும் விநாயகப் பெருமான் வெள்ளி மூஷிக வாகனத்தில் எழுந்தருளி, கோவில் உட்பிராகாரத்தில் சுற்றிவருவார். அவரை தரிசனம் செய்ய வேண்டும்.

திருமணப்பேறு அருளும் காத்யாயினி அம்மன் இங்குள்ளார். அவரை தரிசனம் செய்ய திருமணம் கைகூடும். திருமணப் பிரச்சினை தீரும். கணவன்- மனைவி பிரச்சினை, விவாகரத்து வழக்கு தீரும்.

மேலும் விநாயகருக்கு வெண்பட்டு வஸ்திரம் வாங்கிச் சாற்றும்போது சுக்கிரனின் அனைத்து தோஷங்களும் விலகும்.

கேது- சனி தோஷம் விலக, சனிக்கிழமை காலை சனி ஓரையில் எள்ளால் செய்யப்பட்ட மோதகக் கொழுக்கட்டை செய்துவந்து (எள், 18 படி அரிசி, வெல்லம்), கற்பக விநாயகருக்கு வஸ்திரம் அணிவித்து படைத்துவர வறுமை, பிணி, கடன், வேலையின்மை போன்ற சனிதோஷம் விலகி சுகவாழ்வு கிடைக்கும்.

செல்: 93607 82619

bala021222
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe