கீம்ஸ்துக்னம்
இக்கரணத்தில் பிறந்தவர்களுக்கு இருந்த இடத்திலேயே உலகியல் தகவல்கள் அனைத்தும் கிடைக்கும் மருத்துவம் மூலிகை சார்ந்த விஷயங்களில் அதிக அறிவும் நல்ல ஞானமும் இருக்கும்.
அதிதேவதை- லட்சுமிதேவி
மிருகம்- புழு
ஆகாரம்- சர்க்கரை
பூசுவது- ஜவ்வாது
ஆபரணம்- முத்து
தூபம்- குங்கிலியம்
வஸ்திரம்- மேல் வஸ்திரம்- துண்டு
பாத்திரம்- மூங்கிலாலான குடுவை
தேவதை- தன்வந்திரி
கோவில்கள்- ஸ்ரீரங்கம் தன்வந்தி பகவான்
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/karnam_0.jpg)
ஜாதகர் வளர்பிறை
யும் இக்கரணமும்கூடிய நன்னாளில் பிறந்திருந்தால் மருத்துவராக இருப்பார். மருத்துவத்துறையில் ஏதேனும் ஒரு பணியில் இருக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. இயல்பாகவே இந்த கரணத்தில் பிறந்தவர்களுக்கு மூன்றாம் இடம் பாதிக்கிறது. கிம்ஸ் துக்ன கரணத்தில் ஒரு சம்பவம் செய்தால் அல்லது திட்டமிட்டு நடத்தினால் அச்சம்பவத்தின் தாக்கம் மூன்று நாள் நிற்கும். உதாரணமாக ஒருவர் ஒருவருக்கு ஆத்மார்த்தமாக வாழ்த்தினாலோ அல்லது அன்பாக பேசினாலும் அதன் உணர்வு மூன்று நாட்கள் நினைவில் நீடித்து நிற்கும். ஒருவரை நாம் இக்கரணத்தில் திட்டி விட்டாலும் சண்டை போட்டு விட்டாலும் அதன் வலியும் வேதனையும் மூன்று நாட்களுக்கு இருக்கும். அதனால் இந்த கரணத்தில் மகிழ்ச்சிகரமான விஷயங்களை மட்டும் செய்தல் நல்லது.
இவர்களுக்கு அதிக குழந்தைகள் பெற்றுக் கொள்ளவேண்டுமென்ற ஆசை இருக்கும். இவர்களுக்கு எளிதில் யோக சித்தி உண்டு. இக்கரணத்தில் பிறந்தவர் கள் பிறருக்கு எளிதில் தீங்கு செய்யக்கூடியவர் களாக இருப்பார்கள். சிறந்த அறிவாற்றலை யும் கொண்டிருப்பார்கள். இவர்களுக்கு சரியான ஆன்மிக வழிகாட்டி அமைந்தால் இவர்கள் சித்தி நிலையை அடையக் கூடிய யோகம் உண்டு. இவர்கள் புண்ணி யத்தை பெற மனநலம் பாதிக்கப்பட்டவர் களை பராமரிக்கலாம்.
இவர்கள் தாய்- தந்தையின்மீது பற்றுள்ளவர்கள். சகோதரர்களுடனும் பிரியமானவர்கள். அவர்களுடன் உடனிருந்து பலவற்றை பாதுகாப்பார்கள். வேத சாஸ்திரம் அறிந்தவர்கள். வெளி உலகத்தை நன்கு உணர்ந்தவர்கள். கோவில்களில் தானம் செய்யும்பொழுது எடைக்கு எடை சர்க்கரை தானம் செய்ய சொல்லலாம். இது கோவில்களின் துலாபாரம் என்று சொல்லப்படுகிறது.
குலதெய்வத்திற்கு முத்துமாலை வாங்கிக் கொடுக்கலாம். வீட்டில் வைத்து வணங்கிவரும் தெய்வத்துக்கு முத்துமாலை அணிவித்து மந்திரம் ஜெபம் செய்தால் பலம் அதிகரிக்கும். கோவில் பூஜைகளுக்கு தேவையான அளவு குங்கிலியம் வாங்கிக் கொடுக்கலாம். வீட்டில் பூஜை செய்யும்போது குங்குலியத்தில் தூபமிட்டு பூஜை செய்துவரலாம். வீட்டில் சாம்பிராணியுடன் குங்கிலியம் கலந்து தூபமிடுவதால் வீட்டில் இருக்கும் பலவிதமான தோஷங்கள் நீங்கும். வஸ்திர தானமாக துண்டு, சட்டை, ஜாக்கெட் பிட் போன்றவற்றை கொடுக்கலாம். நம் வீட்டில் பூஜைக்கு வருபவர்களுக்கு இதுபோன்ற தானங்கள் செய்வது சிறப்பு.
இக்கரணத்தில் பிறந்தவர்கள் வழி படும் தெய்வத்திற்கு ஜவ்வாது பூசி அலங்கரித்து, முத்து அணி வித்து. சர்க்கரைப் பொங்கல் வைத்து குங்குலி தூபம் காட்டி மேல்வஸ்திரம் துண்டு அணிவித்து மூங்கில் குடுவையில் நீர் தெளித்து வழிபட்டு வர கரணதெய்வம் மனம் குளிர்ந்து கர்ணநாதன் குணமடைகிறார்.
பிறந்தகால ஜாதகத்தில் கேந்திர கோணங்களில் இருக்கும் கர்ணநாதனின் நட்சத்திரத்தில் லக்னம் இருந்தால் மிகச் சிறப்பு, அக்கிரகம் 1, 5, 9-ல் அமர்ந்து தசா நடத்தினால் மிகவும் யோகமாகும். யோகாதிபதியும் கரணாதிபதியும் ஒருவராக இருந்தால் சிறப்பு. அவரே தசா நடத்தினால் பெரும் யோகத்தை செய்கிறது. கரணநாதரே அவயோகியாக வந்தால் அவயோகத்தை குறைவாக செய்கின்றார்.
அவயோகி நட்சத்திரத்தில் கர்ணநாதன் இருந்தால் காரிய தாமதத் தைத் தருகிறார். காரியத்தை தடுப்பதில்லை. யோகி கரணநாதனின் நட்சத்திரத்தில் இருக்கும்போது அதிக யோகத்தை அள்ளித் தருகிறது அவயோகி கரண நாதனின் நட்சத்திரத்தில் இருக்கும்போது காரியத் தடையை அதிகமாகச் செய்கிறது. அதே நேரத்தில் அவயோகி பூரணமாக யோகத்தை தடுப்பதில்லை. சிறிதளவில் மட்டுமே பாதிப்பை தருகின்றது. இந்தக் கரணத்தில் பிறந்தவர்கள் தன்வந்திரி பகவான் வழிபாடு செய்துவர வேண்டும்.
(முற்றும்)
பேச: 90802 73877
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2025-06/karnam-t.jpg)