Advertisment

காரிய சித்தி, வெற்றி தரும் எளிய பரிகாரங்கள், வழிபாட்டு முறைகள்! -பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி

/idhalgal/balajothidam/kariya-siddhi-simple-remedies-and-rituals-success-prasanna-astrologer-i

னிதர்கள் தங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துக்கம், துயரத்திலிருந்து விடுபட ஜோதிடத்தை விரும்புகிறார்கள். மனிதர் களின் வாழ்வில் ஏற்படும் இன்னல்களை நீக்கும் வலிமை பரிகாரங்கள் மற்றும் வழி பாட்டு முறைகளுக்கு உண்டு. நேரமின்மை, பயண தூரம், பொருளாதார குற்றம், ஜாதக மின்மை போன்ற பல்வேறு காரணங்களால் பலர் தொடர் மனவேதனை சந்தித்து வருகிறார்கள்.

Advertisment

இதுபோன்ற நடைமுறை சிக்கல்களை தீர்க்க சில எளிய பரிகாரங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

Advertisment

மனிதனின் அடிப்படை தேவைகளான உணவு, உடை இருப்பிடமின்றி மிகுந்த வறுமை நிலையில் இருப்பவர் கள் நொய் அரிசியில் சர்க்கரை கலந்து எறும்பு புற்றுக்கு சர்க்கரை இட்டுவர பொருளாதார குற்றம் நீங்கும்.

ff

பிறந்தது முதல் தாயை பிரிந்து வாழும் பிள்ளைகள், தாயிடம் மிகுதியாக கருத்து வேறுபாடு இருப்பவர்கள், தாய்வழி முன்னோர்களிடம் கருத்து வேறுபாடு இருப்பவர் களுக்கு மாதுர் தோஷம் மிகுதி யாக இருக்கும். இவர்கள் பௌர்ணமி மற்றும் வளர் பிறை பஞ்சமி திதியில் தாயின் வயதில் இருக்கும் பெண்களுக்கு 1 கிலோ நெல் அல்லது பச்சரிசி தானம் தந்து ஆசிபெற மாதூர் தோஷம் நிவர்த்தியாகும்.

கண் திருஷ்டி, செய் வினைக் கோளாறு, தீராத கடன், நோய், பகை இருப்பவர்கள் தினமும் மாலை 4.30 முதல் ஆறு மணி வரையிலான பிரதோஷ வேளையில்

னிதர்கள் தங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துக்கம், துயரத்திலிருந்து விடுபட ஜோதிடத்தை விரும்புகிறார்கள். மனிதர் களின் வாழ்வில் ஏற்படும் இன்னல்களை நீக்கும் வலிமை பரிகாரங்கள் மற்றும் வழி பாட்டு முறைகளுக்கு உண்டு. நேரமின்மை, பயண தூரம், பொருளாதார குற்றம், ஜாதக மின்மை போன்ற பல்வேறு காரணங்களால் பலர் தொடர் மனவேதனை சந்தித்து வருகிறார்கள்.

Advertisment

இதுபோன்ற நடைமுறை சிக்கல்களை தீர்க்க சில எளிய பரிகாரங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

Advertisment

மனிதனின் அடிப்படை தேவைகளான உணவு, உடை இருப்பிடமின்றி மிகுந்த வறுமை நிலையில் இருப்பவர் கள் நொய் அரிசியில் சர்க்கரை கலந்து எறும்பு புற்றுக்கு சர்க்கரை இட்டுவர பொருளாதார குற்றம் நீங்கும்.

ff

பிறந்தது முதல் தாயை பிரிந்து வாழும் பிள்ளைகள், தாயிடம் மிகுதியாக கருத்து வேறுபாடு இருப்பவர்கள், தாய்வழி முன்னோர்களிடம் கருத்து வேறுபாடு இருப்பவர் களுக்கு மாதுர் தோஷம் மிகுதி யாக இருக்கும். இவர்கள் பௌர்ணமி மற்றும் வளர் பிறை பஞ்சமி திதியில் தாயின் வயதில் இருக்கும் பெண்களுக்கு 1 கிலோ நெல் அல்லது பச்சரிசி தானம் தந்து ஆசிபெற மாதூர் தோஷம் நிவர்த்தியாகும்.

கண் திருஷ்டி, செய் வினைக் கோளாறு, தீராத கடன், நோய், பகை இருப்பவர்கள் தினமும் மாலை 4.30 முதல் ஆறு மணி வரையிலான பிரதோஷ வேளையில் லஷ்மி நரசிம்மரை வழிபட நல்ல மாற்றம் தெரியும்.

எத்தகைய கிரக தோஷமாக இருந்தாலும் வீட்டு பூஜையறையில் தினமும் சுந்தர காண்டத் தில் ஒரு அத்தியாயம் பாராயணம் செய்வது மிகமிக நன்மை தரும். சகல கிரக பாதிப்பு நீங்க பிரதோஷ வழிபாடு சிறப்பு, குறிப்பாக சனி பிரதோஷம் சிறப்பு.

சொத்து அமையாதவர் கள், சொத்தை பயன்படுத்த முடியாதவர்கள், வீடு கட்ட முடியாதவர்கள், கட்டிய வீட்டில் குடியிருக்க முடியாத வர்கள், வீடு கட்டி முடிக்கப் படாமல் பாதியில் நிற்பது, விவசாயம் செய்யமுடியாத தரிசு நிலமாக இருப்பது, மகசூல் குறைவாக இருப்பது போன்ற குறைபாடு கள் இருப்பவர்கள் செவ்வாய்க்கிழமைகளில் சிவன் கோவிலின் துப்புரவு பணியில் ஈடுபட்டுவர சொத்தால் ஏற்படும் மன உளைச்சல் தீரும்.

வீண் விரயத்தை குறைத்து சேமிப்பை உயர்த்த தினமும் மாலை 4.30 முதல் 6 மணி வரையிலான பிரதோஷ காலத்தில் குத்து விளக்கு ஏற்றி மகாலஷ்மியை வழிபட வேண்டும்.

பல தலைமுறையாக தொடரும் வம்பு, வழக்கு களால் அவதிப்படுபவர்கள் திருச்செந்தூர் முருகனை வழிபட தீர்ப்பு சாதகமாகும்.

திருமணத்தடை இருப்ப வர்கள், திருமண வாழ்க்கை யில் சச்சரவுகள், குழப்பங் கள் மிகுதியாக இருப்பவர் கள், ஒன்பது ஏழை பிராமணர் களுக்கு மஞ்சள் நிற ஆடைகள் மற்றும் உணவுப் பொருட்கள் தானம்தர காரியசித்தி கிடைக்கும்.

நிரந்தர வேலை இல்லாத வர்கள், பல தொழில் முயன்றும் நிலையான தொழில் இல்லாதவர்கள், தொழிலில் அடிக்கடி இழப்பை சந்திப்பவர்கள் சாலையோரத்தில் வசிப்பவர் களுக்கு சமையலுக்கு தேவை யான பாத்திரங்களை தானம் தர தொழிலில் ஏற்றம் காண முடியும்.

ஒரு ஆண்டுகளுக்குள் காணாமல் போனவர்கள், ஒரு ஆண்டுகளுக்குள் காதல் திருமணம் செய்து வீட்டிற்கு வராமல் இருக்கும் மகன், மகள் இருப்பவர்கள், காணாமல் போன சொத்து பத்திரம் கிடைக்காதவர்கள் தொடர்ந்து 48 நாட்கள் தினமும் மாலை 4.30 முதல் 6 மணி வரையிலான பிரதோஷ வேளையில் சரபேஸ்வரரை நெய்தீபம் ஏற்றி வழிபட சொத்து பத்திரம் கிடைக்கும்.

அதிர்ஷ்டமும், ஆரோக்கியமும் குறைவு படுபவர்கள் தினமும் கறுப்பு நாய்க்கு பிஸ்கட் தானம் தரவேண்டும்.

மேலும் சிவப்பு நிறக்கயிற்றில் செம்பில் ஸ்ரீ சக்ர டாலர் அணிய அதிர்ஷ்டமும் ஆரோக்கியமும் உங்களை அரவணைக்கும்.

தொழில் சிறப்பாக நடந்தும் லாபம் குறைவாக இருப்பவர்கள், மூத்த சகோதரத்தால் பிரச்சினையை சந்திப்பவர்கள், மறுமணத்தால் பிரச்சினையை சந்திப்பவர்கள் பௌர்ணமி திதியில் மஹாலஷ்மி அஷ்டோத்திரம், லலிதா சஹஸ்ஹர நாமப் பாராயணம் செய்ய சுக வாழ்வு உண்டாகும்.

பல தலைமுறையாக தொடரும் வழக்கினால் அவதிப்படுபவர்கள் வியாழக்கிழமை மதியம் 1.30 முதல் 3 மணி வரையிலான ராகு வேளையில் பிரத்யங்கரா தேவியை வழிபட, வழக்கிலிருந்து பூரண விடுதலை கிடைக்கும்.

அடிக்கடி மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுபவர்கள், நோய்க்காக கடன்படுபவர்கள் சனிக்கிழமை குளத்து மீனிற்கு பொரி போட்டுவர விரயம் குறையும். நோய் தீரும்.

சாதுக்கள், உடல் ஊனமுற்றவர்கள், மிகவும் கஷ்ட நிலையில் உள்ளவர்களுக்கு அன்னதானம் கொடுப்பது சிறப்பு, தந்தை மகன் பிரிவினை, கருத்து வேறுபாடு இருப்பவர்கள். ஆன்மிக குருமார்கள், பள்ளி, கல்லுரி ஆசிரியர்கள், வயதான கோவில் அர்ச்சகர்களுக்கு உணவு, ஆடை தானம் வழங்கி நல்லாசி பெறவேண்டும்.

வாழ்நாள் முழுவதும் மீளமுடியாத கடனால் தவிப்பவர்கள் வியாழக்கிழமை இரவு 8- 9 மணிக்குள் ஸ்ரீ ராமானுஜர் படத்திற்கு அவல், நாட்டுச் சர்க்கரை, ஏலக்காய் கலந்து படைத்து வழிபட பணப் புழக்கம் அதிகரித்து கடன் தொல்லை நீங்கும்.

முன்னோர் ஆசிர்வாதம் கிடைக்க வருடம் ஒருமுறை இராமேஸ்வரம் சென்று கடலில் நீராடி இறைவனை வழிபட்டு வரவேண்டும்.

பல வருடங்களாக திருமணத் தடையை சந்திக்கும் பெண்கள் வெள்ளிக்கிழமைகளில் சுவாசினிகளிடம் (மாதவிடாய் நின்ற சுமங்கலிகள்) நல்லாசிபெற திருமணத்தடை அகலும்.

வருடம் ஒருமுறை கோ பூஜை செய்து வந்தால் குடும்பம் சுபிட்சம் பெறும்.

பல வருடங்களாக விவாகரத்து பெறா மல் பிரிந்து வாழும் தம்பதிகள் அல்லது விவாகரத்து வழக்கு முடிவடையாமல் மன சஞ்சலத்தை அனுபவிப்பவர்கள், திருமண வாழ்வில் அதிக சிரமங்களை சந்திப்பவர்கள், வாழ்க்கை துணையால் பயனில்லாதவர்கள் ஸ்ரீ வாராஹி அம்மனை வெள்ளிக்கிழமைகளில் வழிபட்டுவர அனைத்து சுபங்களும் தேடிவரும். மங்களம் உண்டாகும்.

நிரந்தர வேலையில்லாதவர்கள், உத்தியோகத்தில் தொடர்ந்து பிரச்சினையை சந்திப்பவர்கள், உயர் அதிகாரிகளால் பிரச்சினையை சந்திப்பவர்கள், தீராத நோய், கடன், பகை உள்ளவர்கள், சனிக்கிழமை நவதானிய அடை, தோசை நல்லெண்ணெய் விட்டு சாப்பிட மாற்றமும் ஏற்றமும் தேடி வரும்.

பொருளாதார வளர்ச்சிபெற ஏகாதசி விரதம் அல்லது ஏகாதசியன்று பெருமாள் வழிபாடு செய்வது மிகவும் சிறப்பு.

பூர்வீகம் தெரியாதவர்கள், குலதெய்வம் தெரியாதவர்கள் வெள்ளிக்கிழமை மாலை 6-7 மணிக்குள் நெய்தீபம் ஏற்றி சர்க்கரைப் பொங்கல் படைத்து தீபத்தை குலதெய்வமாக பாவித்து வேண்டியவரம் கேட்க குலதெய்வ அருள் கிடைக்கும். பூர்வீகம் பற்றிய தகவல் கிடைக்கும்.

தொழில் கூட்டாளி மற்றும் நண்பர்களால் பிரச்சினையை அனுபவிப்பவர்கள் தினமும் சிவபுராணம் படிக்க சாதகமான செய்திவரும்.

துன்பம் தொடர்கிறது என்ற மன வருத்ததி லிருந்து விடுபட்டு நம்பிக்கையுடன் செய்யும் பரிகாரங்கள் நிச்சயம் முன்னேற்றம் தரும். உங்களின் சுய பிரச்சினைக்கு ஏற்ற மேலே கூறிய பரிகாரங்களை பயன்படுத்தி வெற்றி பெற வாழ்த்துகள்.

செல்: 98652 20406

bala201023
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe