கரசை கரணம்!
மானுடத்தின் வளர்ச்சியில் மாபெரும் பங்கு வகிக்கும் கரணம் அவர்களின் வாழ்வியலில் வசந்தத்தை அளிக்கும் ஆற்றல் பெற்றது.
ஜோதிட பழமொழிகள் பலவற்றை நாம் கேட்டிருப்போம்.
அதில் ஒன்றுதான் கரணம் தப்பினால் மரணம் என்று நாம் குட்டிக் கரணத்தை நினைவில்கொண்டு வந்துவிடுவோம். ஆனால் அப்படி அல்ல; பஞ்சாங்கத்தில் அமைந்துள்ள ஐந்து அங்கங்களில் கரணம் காற்றைக் குறிக்கும். அதாவது மூச்சை குறிக்கும்.
மூச்சாகிய காற்று நின்றுவிட்டால் மரணத்தை தழுவும் நிலை ஏற்படும் என்பதனால்தான் இந்த பழமொழியை நம் முன்னோர்கள் முன்மொழிந்துள்ளனர்.
பஞ்சபூதத்தில் எல்லாமுமே இன்றியமையானது
என்றாலும் ஜீவிதத்தை தழுவிய காற்று மிக முக்கிய பங்குவகிக்கின்றது. அதனால்தான் பிராணன் என்கின்ற மொழியோடு இந்த காற்று கலந்து இசைந்து நம்முள் சென்று பல விந்தைகளையும், வித்தைகளையும் நிகழ்த்திக்கொண்டிருக்கின்றது.
கரசைக் கரணம்
இதன் விலங்கு பார்க்க பார்க்க ஆச்சரியத்தையும், அ
கரசை கரணம்!
மானுடத்தின் வளர்ச்சியில் மாபெரும் பங்கு வகிக்கும் கரணம் அவர்களின் வாழ்வியலில் வசந்தத்தை அளிக்கும் ஆற்றல் பெற்றது.
ஜோதிட பழமொழிகள் பலவற்றை நாம் கேட்டிருப்போம்.
அதில் ஒன்றுதான் கரணம் தப்பினால் மரணம் என்று நாம் குட்டிக் கரணத்தை நினைவில்கொண்டு வந்துவிடுவோம். ஆனால் அப்படி அல்ல; பஞ்சாங்கத்தில் அமைந்துள்ள ஐந்து அங்கங்களில் கரணம் காற்றைக் குறிக்கும். அதாவது மூச்சை குறிக்கும்.
மூச்சாகிய காற்று நின்றுவிட்டால் மரணத்தை தழுவும் நிலை ஏற்படும் என்பதனால்தான் இந்த பழமொழியை நம் முன்னோர்கள் முன்மொழிந்துள்ளனர்.
பஞ்சபூதத்தில் எல்லாமுமே இன்றியமையானது
என்றாலும் ஜீவிதத்தை தழுவிய காற்று மிக முக்கிய பங்குவகிக்கின்றது. அதனால்தான் பிராணன் என்கின்ற மொழியோடு இந்த காற்று கலந்து இசைந்து நம்முள் சென்று பல விந்தைகளையும், வித்தைகளையும் நிகழ்த்திக்கொண்டிருக்கின்றது.
கரசைக் கரணம்
இதன் விலங்கு பார்க்க பார்க்க ஆச்சரியத்தையும், அமைதியையும் அள்ளி வழங்கும் யானையின் உருவமாகும்.
யானைக்கு வாரணம் என்று ஒரு பெயர் உண்டு. நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் ஆண்டாள் அருளிய வாரணம் ஆயிரம் என்ற தொகுப்பு பெரும் சிறப்புடையதாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
இது திருமணத் தடையும் குழந்தை பேரு தடையும் நிவர்த்திசெய்யும் என்ற நம்பிக்கை வைணவத்தில் ஆழ்ந்து அனுசரிக்கப்படுகின்றது.
நாம் சில கோவில்களின் படி வாசலில் இருபுறமும் யானையின் உருவத்தை கண்டிருப்போம். அந்தக் கோவிலின் தெய்வத்திற்கும் கரசைக் கரணத்திற்கும் ஒரு மிக முக்கிய நெருங்கிய தொடர்பு இருக்கும்.
இந்த தருணத்தில் பிறந்தவர்கள் எப்பொழுதுமே எதிர்பாலின ஈர்ப்புடனே இருப்பார்கள். ஆணாக இருந்தால் பெண்களிட மும் பெண்ணாக இருந்தால் ஆண்களிடமும் சற்று கவனமாக இருப்பது சிறப்பினைத் தரும்.
இவர்களுக்கு பூமி சம்பந்த மான அனைத்து விஷயங்களும் பலிதமாகும். குறிப்பாக விவசாயம், சுரங்கம், மண் சார்ந்ததொழில்கள் அனைத்துமே இவர்களை நல்ல இடத்தில் அமரச் செய்யும்.
இவர்கள் சாத்வீக குணமும், யாருக்கும் தீங்கி ழைக்காத தன்மையும் உடையவர்கள்.
மேலும் அதீத தெய்வ பக்தி உடையவர்கள். நல்லஅறிவும் ஆழ்ந்த சிந்தனையும் இவர்களை பொதுமக்களிடையே சிறப்பானதொருவராக அறிமுகப்படுத்திக் கொள்ளும்.
அமைதியாக காணப்படும் இவர்கள் கோபம் வந்தால்கட்டுக்கடங்காத காட்டு வெல்லமாகக் காட்சியளிப்பார்கள்.
வஞ்சம் வைத்து பழிவாங்கும் தன்மையினை இயல்பிலேயே கொண்டவர்களாக இருப்பார்கள்.
தன் பலத்தை தானே அறியாத இவர்கள் பிறரின் சொல்லுக்கு தலையாட்டி சில செயல்களைச் செய்து கொடுப்பார்கள்.
திருமணமாகி குழந்தை இல்லாத தம்பதிகள் சுவாதி நட்சத்திரம், கரசை கரணமும், இணையும் காலத்தில் உடல் சார்ந்த உறவில் இருந்தால் நிச்சயமாக குழந்தை பேரு கிடைக்கும்.
பெரும்பான்மையான மகப்பேறு மருத்துவர்கள் கரசைக் கரணத்தை சார்ந்தவர்களாக இருக்கின்றனர்.
உயர் குழந்தையின்மை சிகிச்சை மேற்கொள்ளும் தம்பதிகள் மேற்கூறிய நாளில் தங்களின் சிகிச்சையை மேற்கொண்டால் வெற்றியின் சதவிகிதம் அதிகமாக இருக்கும்.
இந்த நாளை அருகிலுள்ள ஜோதிடரை அணுகி சரியாகப் பெற்றுக் கொள்ளவும்.
மேலும் ஒயஎ, ஒஈநஈ போன்ற சிகிச்சையில் இருப்பவர்கள் இந்த காலங்களில் ஊப செய்துகொண்டால் நிச்சயமாக கருத்தங்கும்.
அதி தேவதை- பூமி.
மிருகம்- யானை.
மலர்- செம்பருத்தி.
நெய்வேத்தியம்- பால்.
தூபம்- நீலக்குன்றி மணி.
பாத்திரம்- ஈயம் தெய்வம்.
பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர்.
இவர்கள் வாழ்வில் ஏற்பட்டிருக்கும் தடைகள் அகலஈய பாத்திரத்தில் சமைத்து உண்ணுவது சிறப்பினைத்தரும்.
வீட்டில் கண்ணில்படும் இடங்களில் யானையின் உருவமும் படங்களும் அமைத்துக்கொள்வது சிறப்பு வீட்டில் அமைந்துள்ள தெய்வங்களுக்கும் இவர்களின் இஷ்ட தெய்வங்களுக்கும் நீலக்குன்றின்மணியை பொடிசெய்து அதனை சாம்பிராணியுடன் இணைத்து தூபம்போட பல பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.
திங்கட்கிழமைகளில் தங்களுக்குத் தெரிந்த குழந்தைகளுக்கு பால் வாங்கி தானம் செய்வது இவர்களின் வாழ்வில் அமைந்துள்ள அத்தனை பிரச்சினைகளுக்கும் ஒரு முற்றுப்புள்ளி வைக்கும்.
செம்பருத்தி பூவை டீயாக உருமாற்றி குடித்துவர சில பிரச்சினைகள் இருந்த இடம் தெரியாமல் சென்றுவிடும்.
யானை முடி மோதிரம் இவர்களுக்கு சிறப்பினைத்தரும்யானையிடம் ஆசிர்வாதம் வாங்குவது ஒரு பெரும் பலத்தை இவர்களுக்கு அளிக்கும்.
பிள்ளையார்பட்டி ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்திற்கு திங்கட்கிழமையில் சென்று ஒரு பாக்கு மட்டை தட்டில் 11 கமலா ஆரஞ்சு, 11 வெற்றிலை, 11 பாக்குகளுடன் 101 ரூபாய் தட்சனையும் வைத்து அர்ச்சனை தட்டும் வாங்கி அர்ச்சனை செய்துகொண்டு பாக்கு மட்டையுள்ள தட்டை அர்ச்சகரியிடம் சமர்ப்பித்து விட்டு 24 நிமிடங்கள் ஆலயத்தின் உள்பிராகாரத்தில் அமர்ந்து தியானம் செய்துவிட்டு திரும்ப உங்களின் வாழ்வின் அமைந்துள்ள அத்தனை இன்னல்களையும் இன்முகம் காட்டிஅந்த இறையே பெற்றுக்கொண்டு உங்களுக்கு ஒரு நல்ல வாழ்வை அளிக்கும் என்பதில் எள்ளளவும் ஐயம் தேவையில்லை.
செல்: 80563 79988