கௌலவ கரணம்!
எல்லாம் வல்ல இறைவன் துணைகொண்டு இயங்குகின்ற மனித வாழ்க்கையில் இயக்கமும், இன்பமும், கிரகங்களும், அவற்றின் நகர்வும் அவற்றைக் குறிக்கும் பஞ்சாங்க கணிதங்களும்தான் என்பது அனைவரும் அறிந்ததே.
ஒவ்வொருவர் ஏற்றுள்ள வினைக்கேற்ப வாழ்வை வாழும் சூழல் எல்லாருக்கும் அமைந்திருந்தாலும், அந்த சூழலில் இருந்து விலகி அவற்றை சில செயல்பாடுகளின் மாறுதலினால் மாற்றி அமைக்கும் தன்மையினை ஒருசிலர் மட்டுமே பெற்று விடுகின்றனர்.
அவற்றில் ஒன்றுதான் கரண வழிபாடு ஆகும்.
இன்றைய சூழலில் உற்று நோக்கினால் சாதாரணமாக திரையில் தோன்றிய சில நடிகர்கள் நல்ல முன்னேற்றம் காண்பது காண முடிகின்றது. குறிப்பாக நகைச்சுவை நடிகர்கள் இவர்கள் கையாளும் வழிபாட்டினை உற்று நோக்கினால் இவர்கள் கரணநாதனின் வழிபாட்டை மேற்கொள்வதைக் கண்கூடாக அறிய முடிகின்றது.
பல இன்னல்களை அனுபவிக்கின்ற சக மனிதர்களும் தங்களின் கரண நாதனே வழிபட்டு இன்பத்தின் வசம் பயணிக்க முடியும்.
கௌலர் என்ற சொல்லுக்கு மண்ணைப் பிசைந்து அதற்கு ஒரு வடிவம் தந்து பானையாக மாற்றும் வல்லமை உடையவர்கள் என்று பெயர்.
இந்த கௌலவ கரணத்தில் பிறந்தவர்கள் உபயோகம் இல்லாத பொருளை வைத்துக்கூட சில விஷயங்களை புதிதாக உருவாக்கும் ஆற்றல் பெற்றவர்களாக இருப்பார்கள்.
இந்த கரணத்தில் பிறந்தவர்கள் பூமியை குறிக்கும் தெய்வங்கள் ஆகிய முருகன், பூமியோடு தொடர்புடைய பூவராகப் பெருமாள், ஸ்ரீ வாராஹி அம்மன் ஆகிய தெய்வ சக்திகளோடு தொடர்பில் இருப்பார்கள்.
இவர்களின் பூர்வீக வீட்டுக்கு அருகே ஒரு ஆலயம் அமைந்திருக்கும்.
கௌரவம் என்றால் பன்றி என்று பொருள். பன்றி எப்படி பூமியின் அடியில் அமைந்துள்ள பொருட்களை தோண்டி தோண்டிய அகழ்ந்து செல்கின்றதோ அதேபோன்று மறைந்துள்ள விஷயங்களை எளிதில் கண்டுபிடிக்கும் ஆற்றல் இவர் களிடையே இருக்கும்.
இவர்கள் புலனாய்வுத்துறை மற்றும் துப்பறியும் ஆற்றல் இயர்பிலேயே பெற்றவர்களாக இருப்பார்கள். மேலும் அரசு ஒப்பந்தவகையில் நல்ல வருமானம் ஈடுபவர்களாகவும் இருப்பார்கள்.
இந்த கரணத்தில் பிறந்தவர்களின் வம்சாவளியில் வீடு, மனை அமைவதற்கு சிறிய தடங்கலுக்குப் பிறகு அமையும். வீட்டிற்கு தேவையான எலக்ட்ரானிக் பொருட்கள் வாங்குவதில் அதிக ஆர்வம் உள்ளவர்களாக இவர்கள் அமைந்திருப்பார்கள்.
எந்த செயலையும் தலைமை தாங்கும் உயர் பண்பு இவர்களிடையே இருக்கும். இவர்கள் ஜாதகத்தில் சனி நல்ல நிலையில் இருந்தால் இவர்களின் தந்தை நல்ல உயர்வான சூழ்நிலையும், பதவியும் கிட்டும்
அளவிற்கான சூழ்நிலைகள் அமையும். மேலும் இவர்கள் எந்த விஷயத்தால் ஈர்க்கப்படுகின்றார்களோ அதன்மீது உள்ள பற்றினை அவ்வளவு எளிதில் விடமாட்டார்கள்.
இந்தக் கரணத்தில் பிறந்த ஆண்கள் பெண்களை மனிதாபிமானம் இல்லாமல் அதீத வேலை வாங்கும் ஆட்களாக இருப்பார்கள். இவர்களுக்கு பெரும்பாலும் அரசாங்க பணி கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.
தாய் மற்றும் தந்தைமீது அதீத பற்று உடையவர்கள். நேர்மையின் வசனம் நடப்பவர்கள்.
அதிதேவதை- சூரியன்
மிருகம்- பன்றி
மலர்- மகிழம்பூ
நெய்வேத்தியம்- பணியாரம்
தூபம்- வில்வ பொடி
பாத்திரம்- செம்பு
தெய்வங்கள் கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள, ஸ்ரீமுஷ்ணம் ஊரிலுள்ள ஸ்ரீ பூவராகப் பெருமாள்.
இவர்களின் வாழ்வில் ஏற்பட்டிருக்கும் தடைகள் மற்றும் தாமதங்கள் போன்றவற்றை எந்தவித கடினமான சூழலிலும் இல்லாமல் தீர்த்துக் கொள்வதற்கு, செம்பு பாத்திரத்தில் உணவு சாப்பிடுவது பெரும் பலனை அளிக்கும்.
வீட்டில் வில்வ பொடி கொண்டு தூபம் போட்டுவர, பொருளாதார நெருக்கடி மற்றும் கடன் தொல்லைகள், கண் திருஷ்டி, போன்ற சூழல்கள் இவர்களுக்கு நீங்கும்.
வீட்டில் அமைந்துள்ள தெய்வங்கள் மற்றும் இஷ்ட தெய்வங்களுக்கு பணியாரம் நெய்வேத்தியமாக வைத்து வழிபட, தடைப்பட்ட சுப காரியங்கள் மற்றும் இணக்கமான உறவுகள் அமையும். இவர்களின் அலைபேசியில் பன்றியின் உருவப்படத்தை ஸ்கிரீன் சேவராக வைத்துக்கொள்வது சிறப்பை தரும்.
இவர்கள் வழிபடும் தெய்வத்திற்கு குங்குமம் இட்டு, வில்வ பொடி போட்டு தூபம் காட்டி, செம்பு பாத்திரத்தில் பணியாரம் நெய்வேத்தியம் வைத்து வணங்கிவர, வாழ்வில் எல்லா சுபிக்சங்களையும் கரணநாதன் உங்களுக்கு அளிப்பார்.
ஸ்ரீமுஷ்ணத்தில் அமைந்துள்ள பூவராகப் பெருமாள் கோவிலுக்கு சனிக்கிழமையில் சென்று ஒரு பாக்கு மட்டை தட்டில் 11 கமலா ஆரஞ்சு பழம், 11 வெற்றிலை, 11 பாக்கு ஏதாவது கொஞ்சம் தட்சனை வைத்து அர்ச்சகரியிடம் தந்துவிட்டு ஒரு அர்ச்சனை செய்துவந்தீர்கள் என்றால் உங்களின் வாழ்வில் ஏற்படும் அத்தனைக்கும் உங்கள் கரணநாதன் பொறுப்பேற்று நல்ல பதிலை அளிப்பார்.
செல்: 80563 79988