லால்குடி கோபாலகிருஷ்ணன்
இதுவரை ஜோதிட உலகிற்கு அறிமுகமாகாத புதிய தொடர்!
41
ஒரு நட்சத்திர பாதம் தான் நிற்கும் ராசிக்கு பாதக ஸ்தானத்தில் நவாம்சம் பெறும்போது, அந்த நட்சத்திர பாதம் பாதகத்தை மட்டுமே செய்யும் தகுதியைப் பெறுகிறது. அந்த நட்சத்திர பாதத்தில் அமையும் கிரகமும் பாதகத்தையே செய்யும். உதாரணத்திற்கு, ரிஷப ராசியில்அமையும் கிருத்திகை நட்சத்திரத்தின் இரண்டாம் பாதம், ரிஷப ராசிக்கு (ஸ்திரம்) பாதக ஸ்தான மாகிய மகரத்தில் நவாம்சத்தைப் பெறுகிறது. திருவாதிரை, மகம் முதல் பாதமும், உத்திரத்தின் நான்காம் பாதமும், மூலம், அவிட்டம் மூன்றாம் பாதமும், உத்திரட்டாதியின் இரண்டாம் பாதமும் இதே அமைப்பில் உள்ளவையே. நட்சத்திர பாதங்களின் பாதக ஸ்தானங்களைக் கணக்கிடும் முறையை "கந்தர்வ நாடி' விளக்குகிறது. ""சடையப்பரே! உலகில் பிறக்கும் எல்லா உயிர்களுக்கும் ஆயுள்காலம் ஒன்றாக இல்லாமல், சில உயிர்கள் நீண்டகாலமும், சில உயிர்கள் குறுகிய காலமும் வாழ்வதன் காரணத்தையும், அதிலுள்ள சிருஷ்டியின் சூட்சுமத்தையும் விளக்கியருள வேண்டுகிறேன்'' என அன்னை கனக குசாம்பிகை, இலம்பையம் கோட்டூர் எனும் திருத்தலத்தில் உறையும் அருள்மிகு சந்திரசேகரரை வணங்கிக்கேட்டாள்.
தில்லையார் உரைத்தது- "இவ்வுலகில் பிறக்கும் எல்லா உயிர்களுக்கும், அந்தந்த உயிர்களைப் பொருத்தவரை ஆயுள்காலம் ஒன்றுதான். ஓர் உயிரின் ஆயுளோடு பிற உயிரின் ஆயுளை ஒப்பிடும்போது, மாயையால் வேறுபட்டுத் தோன்றுகிறது. ஒன்றை மற்றதுடன் ஒப்பிடும்போது மட்டுமே மாயையெனும் அறியாமை பிறக்கிறது. கண்ணிமைக்கும் நேரத்தில் நீர்க்குமிழிபோல் பிறந்து, வாழ்ந்து, மறையும் நுண்ணுயிரோடு ஒப்பிட்டால், மனித வாழ்வு மகத்தானது. பிரபஞ்ச ஆயுளில் ஒரு இமைப்பொழுதுக்கும் குறை வானதே மனிதனின் ஆயுள். பாம்பின் ஆயுள் கூடவேண்டுமென்றால் தவளையின் ஆயுள் குறைய வேண்டும். ஒரு உயிரைச் சார்ந்தே பிற உயிர்களும் வாழ்வதால் சார்பு நிலையே சிருஷ்டியின் ஆயுள் கணிதமானது.''
"முத்தமிழ்த் தலைவனே! "பாதாபவித்தகம்' எனும் தாண்டவத்தின் லயமாகிய பூச நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தில் லக்னமும், மூலம் நான்காம் பாதத்தில் செவ்வாயும், சதயம் முதல் பாவத்தில் புதனும் குருவும் சேர்ந்திருக்க, ரேவதி முன்றாம்பாதத்தில் சூரியனும், அஸ்வினி நான்காம் பாதத்தில் சுக்கிரனும், ரோகிணி நான்காம் பாதத்தில் சந்திரனும், திருவாதிரை முதல் பாதத்தில் சனியும் அமையப் பெற்ற இந்த ஜாதகரின் கர்மப்பலனை தாங்கள் அருள் கூர்ந்து விளக்க வேண்டும்'' என்று திருக் கழுகுன்றம் திருத்தலத்தில் அருள்புரியும் வேதகிரீஸ்வரரை அன்னை சொக்கநாயகி வினவினாள்.
மதிவாணன் உரைத்தது- "தேவி! இந்த ஜாதகன் முற்பிறவியில் சாந்திப்பூரில்பிறந்து, ருத்ராபதி என்று பெயரிடப்பட்டு, இளம்வயதில் பிறந்த ஊரில் புகழ்பெற்று, அந்த கிராமத்தின் தலைமை அதிகாரி யாகப் பணி யாற்றி வந்தான். ஒருமுறை பக்கத்து ஊரில் வாய்க்கால் வ ட் டு வ து சம்பந்தமான தகராறு முற்றி,பெரும் கலவர மாய் வெடித் தது. ஆயுதங்கள் பலரது உயிரைக் குடித்தன. பக்கத்து ஊரின் தலைவர் உயிருக்கு பயந்து ருத்ராபதியிடம் தஞ்சம் புகுந்தார். அவரைக்கொலை செய்வதற்காகத் துரத்தி வந்தவர் களிடம், சுய ஆதாயத்திற்காக ருத்ராபதிகாட்டிக்கொடுத்துவிட்டான். பக்கத்துஊர்த் தலைவரின் மரணம் நிச்சயிக்கப் பட்டது.
இளமையும் ஓடி, நோயில் வாடி, மரண வாயிலில் புகுந்து நரகத்தில் இறங்கினான்.செய்த பாவத்தில் ஒரு பாதிக்கு நரகத்தில் தண்டனை பெற்று, மறுபாதியுடன் பூவுலகம் புகுந்தான். இப்பிறவியில் ஒரு வைசிய குடும்பத்தில் பிறந்து, தன் தந்தை செய்துவந்த வியாபாரத்திற்கு உதவியாக இருந்தான். குலம் தழைக்கவேண்டி, திருமணத்தால் மழலை இன்பம் பெற்றான். காலச்சக்கரம் சுழன்றது. காட்சிகள் மாறின. உறங்கிக்கொண்டிருந்த முன்ஜென்ம வினைப்பயன் விழித்தது. தொடக்கத்தில் சிறு மனக்கசப்பாக வேர்விட்ட குடும்பச் சண்டை, விரோதத்தையும் விரிசலையும் உண்டாக்கியது. பெற்றோர், மனைவி, மக்களைப் பிரிந்து தனிமரமானான். விரும்பி சுமந்த வாழ்க்கை இப்போது வ-யையும் வேதனையையும் பரிசாய்த் தந்தது. சரணாகதி அடைந்தவனைக் காப் பாற்றாமல் காட்டிக்கொடுத்த தவறினால் இன்னுலுறுகிறான். இதற்குப் பரிகாரமாக, மீன்களுக்கும் பறவை களுக்கும் உணவிட்டு, தன்னை அண்டிவரும் ஏழைகளுக்கு அன்ன தானம் செய்தால் பாவம் நீங்கிப் பலன் பெறுவான்.''
====================
நாடி ரகசியம்
1. அஸ்வினி இரண்டாம் பாதத்தில் செவ்வாய் நின்றால்
ஆரோக்கியக் குறைவும், விபத்துகளும் தொடர் நிகழ்வாகும்.
2. பரணி நான்காம் பாதத்தில் செவ்வாய் நின்றால் உயர்ந்த பதவியும் புகழும் உண்டாகும்.
3. ஆயில்யம் மூன்றாம் பாதத்தில் செவ்வாய் நின்றால்
மணவாழ்க்கை கெடும்.
கேள்வி:
நல்ல பாம்பு தரும் நாகரத்தினம் போன்ற நவரத்தினங்களை அணிவதால் கிரக தோஷங்கள் தீருமா?
பதில்:
நாகம் என்ற சொல்லுக்கு நல்ல பாம்பு, மேலுலகம், அடர்நீல வண்ணம் என்ற பல பொருட்கள் உண்டு. நீலவண்ணத்துடன் தொடர்புடைய துத்தநாகம், நாகப்பழம் போன்றவற்றுக்கும், பாம்புக்கும் எந்தத் தொடர்பும் இல்லாததுபோல, நீலமாணிக்கமும், நாகரத்தினமும் நல்ல பாம்புடன் தொடர்பில்லாதவையே. நம் முன்னோர்கள், "மணி, மந்திர, ஒளஷதம்' எனும் மூன்றைப் பரிகாரங்களாகக் கூறியுள்ளார்கள். இதில் மணி என்பது நவரத்தினம், ஸ்படிகம், ஸ்பரிச வேதிக்கல், ரசமணி போன்ற பலவற்றைக் குறிக்கும். பூஜைக்குரிய யந்திரங்களும் சிலைகளும் பிராணப் பிரதிஷ்டை செய்யப்படுவதுபோல, நவரத்தினங்களும் உயிரூட்டப்பட்டால் மட்டுமே தோஷப் பரிகாரமாகஅமையும்.
மற்றவையெல்லாம் நகை செய்வதற்கு மட்டுமே பயன்படும். காப்புக்கட்டி எடுக்காத கற்ப மூலிகையும் பயன்தராது. "குருமருந்து சேராத அருமருந்தும் பாழ்' என்பதேஉண்மை. பல நிறங்களில் கிடைக்கும் கண்ணாடிக் கற்களையும், தோஷமுள்ள நவரத்தினங்களையும் அணிவ தால் தீயபலன்களையே தரும். நாமே விலை கொடுத்து, துன்பத்தை வாங்குவதற்குச் சமம். உதாரணத்திற்கு, கடக ராசிக்காரர்களுக்கு முத்து அணிவது நன்மை தரும் என்றுசொல்லப்படுகிறது. முத்துக்கு அதிபதியாகிய சந்திரன், கடகத்திற்கு ஐந்தாமிடமும், புத்திர ஸ்தானமுமாகிய விருச்சிகத்தில் நீசமடைகிறார். கடக ராசிக்காரர்கள் முத்துஅணிவதால், குழந்தை பாக்கியம் தடை அல்லது தாமதப்படும் என்ற உண்மையே புலனாகிறது. அதுதவிர, கடக ராசி, ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்த ஜாதகருக்கு சந்திரனின் நட்சத்திரங்கள் பிரதியாத தாரகையாக அமைவதால், முத்து அவர்களுக்கு இடையூறை யே ஏற்படுத்தும். நம் முன்னோர்கள், நவரத்தின ங்களைப் பரிசோதிக்கும் முறையைத் தெளிவாக விளக்கியுள்ளார்கள். ஜாதக தோஷங்களுக்கேற்ற ரத்தினங்களையும், அவற்றை அணியும் முறையையும், பிராணப் பிரதிஷ்டை பூஜையையும் "கந்தர்வ நாடி' விளக்குகிறது.