கந்தர்வ நாடி! 79

/idhalgal/balajothidam/kandharva-nadi-79

இதுவரை ஜோதிட உலகிற்கு அறிமுகமாகாத புதிய தொடர்!

79

லால்குடி கோபாலகிருஷ்ணன்

ரு ஜாதருக்கு கர்மவினையால் வரும் நோயைக் கண்டறிய, அவருடைய ஜாதகத்தில் லக்னத்திற்கு ஆறாம் பாவத்தை ஆராயவேண்டும். ஆறாம் பாவமே நோய், கடன், எதிரியைக் குறிக்கும் பாவம். முன்ஜென்மத்து கடனே நோய். இந்தப் பிறவியின் எதிரியும் நோய்தான். லக்னம், ஆறாம் பாவம், எட்டாம் பாவத்தின் தொடர்பில் சனி இருந்தால், நாட்பட்ட நீடித்த நோய் உண்டாகும். ஆறாம் பாவத்தைக் குறிகாட்டும் கிரகம் சர ராசியிலிருந்தால், நோய் உடலின் எதிர்ப்பு சக்தியாலேயே குணமாகும். ஸ்திர ராசியிலிலிருந்தால் தீராத நோயாக மாறும். உபய ராசியிலிலிருந்தால் மருத்துவத்தால் சீராகும். ஆறாம் பாவத்தைக் குறிகாட்டும் கிரகம் நெருப்பு ராசிகளிலிருந்தால் உஷ்ண நோய்களும், நிலம் சார்ந்த ராசிகளிலிலிருந்தால் எலும்பு சம்பந்தமான நோய்களும், வாயு சார்ந்த ராசிகளிலிலிருந்தால் நரம்பு சம்பந்தமான வாதநோய்களும், நீர் சார்ந்த ராசிகளிலிலிருந்தால் ரத்த சம்பந்தமான சீதளநோய்களும் உண்டாகும் என்பதே "கந்தர்வ நாடி'யின் கூற்று.

""வேதகிரியாரே! நிலையில்லாத வாழ்வையும் செல்வத்தையும் பெரிதென எண்ணி, கண்ணை விற்று சித்திரம் வாங்கும் மூடராய் வாழும் மானுடர் உய்வு பெறுவதற்குத் தாங்கள் உபதேசி

இதுவரை ஜோதிட உலகிற்கு அறிமுகமாகாத புதிய தொடர்!

79

லால்குடி கோபாலகிருஷ்ணன்

ரு ஜாதருக்கு கர்மவினையால் வரும் நோயைக் கண்டறிய, அவருடைய ஜாதகத்தில் லக்னத்திற்கு ஆறாம் பாவத்தை ஆராயவேண்டும். ஆறாம் பாவமே நோய், கடன், எதிரியைக் குறிக்கும் பாவம். முன்ஜென்மத்து கடனே நோய். இந்தப் பிறவியின் எதிரியும் நோய்தான். லக்னம், ஆறாம் பாவம், எட்டாம் பாவத்தின் தொடர்பில் சனி இருந்தால், நாட்பட்ட நீடித்த நோய் உண்டாகும். ஆறாம் பாவத்தைக் குறிகாட்டும் கிரகம் சர ராசியிலிருந்தால், நோய் உடலின் எதிர்ப்பு சக்தியாலேயே குணமாகும். ஸ்திர ராசியிலிலிருந்தால் தீராத நோயாக மாறும். உபய ராசியிலிலிருந்தால் மருத்துவத்தால் சீராகும். ஆறாம் பாவத்தைக் குறிகாட்டும் கிரகம் நெருப்பு ராசிகளிலிருந்தால் உஷ்ண நோய்களும், நிலம் சார்ந்த ராசிகளிலிலிருந்தால் எலும்பு சம்பந்தமான நோய்களும், வாயு சார்ந்த ராசிகளிலிலிருந்தால் நரம்பு சம்பந்தமான வாதநோய்களும், நீர் சார்ந்த ராசிகளிலிலிருந்தால் ரத்த சம்பந்தமான சீதளநோய்களும் உண்டாகும் என்பதே "கந்தர்வ நாடி'யின் கூற்று.

""வேதகிரியாரே! நிலையில்லாத வாழ்வையும் செல்வத்தையும் பெரிதென எண்ணி, கண்ணை விற்று சித்திரம் வாங்கும் மூடராய் வாழும் மானுடர் உய்வு பெறுவதற்குத் தாங்கள் உபதேசித்தருள வேண்டுகிறேன்'' என அன்னை வேணுபுஜாம்பிகை பந்தநல்லூர் எனும் திருத்தலத்தில் உறையும் அருள்மிகு பசுபதிநாதரைப் பணிந்துகேட்டாள்.

திகம்பரர் உரைத்தது- ""சிங்கம் துரத்தியதால், பாம்புகள் வாழும் பாழும் கிணற்றில் குதித்து மரத்தின் வேரில் தொங்கியவன், ஆபத்தான நிலையிலும் மரத்தில் ஆடிய தேன்கூட்டின்மேல் ஆசைகொண்டான். அதுபோல் மரணம் துரத்தினாலும் மனிதன் உலகியல் இன்பங்களில் மாளாத காதல்கொண்டு அலைகிறான். விழித் தெழும் ஒவ்வொரு நாளும் அது இயற்கை தந்த நன் கொடை என்றெண்ணி, நன்மை செய்தால் மட்டுமே மனிதன் புனிதன் ஆவான்.''

ddd

""திரியம்பகேஸ்வரரே! "அதிக்ராந்தம்' எனும் தாண்டவத்தின் லயமாகிய விசாக நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தில் லக்னமும், மூலம் இரண் டாம் பாதத்தில் குருவும், அஸ்வினி இரண்டாம் பாதத்தில் சனியும், ரோ கிணி முதல் பாதத்தில் செவ்வாயும் சூரியனும் சேர்ந்திருக்க, மிருகசிரீடம் நான்காம் பாதத்தில் புதனும் சுக்கிரனும் சேர்ந் திருக்க, சித்திரை முதல் பாதத்தில் சந்திரனும் அமரும் அமைப்பைப் பெற்ற இந்த ஜாதகரின் கர்மப் பலனைத் தாங்கள் விளக்கவேண்டும்'' என்று திருக்கடம்பந்துறை எனும் திருத்தலத்தில் அருள்புரி யும் ஸ்ரீகடம்பவன நாதேஸ் வரரை அன்னை முற்றிலா முலையம்மை வேண்டிப் பணிந்தாள்.

சப்தரிஷீசுவரர் உரைத்தது- ""இமயவதியே! இந்த ஜாதகன் முற்பிறவியில் சகாதேவன் எனும் பெயருடன் பரிதியூர் என்ற ஊரில் வாழ்ந்துவந்தான். அவன் நல்லொழுக்கம் உடையவனாக, தன்னை நாடிவந்தவர்களுக்கு உதவி செய்பவனாகப் புகழ்பெற்று விளங் கினான். உரிய வயதில் மணமாலை ஏற்றான். பூவில் புகுந்த பூ நாகம்போல் இல்லம் புகுந்தவள் தீய எண்ணம் கொண்டவளாய் இருந்தாள். கண்பார்வையிழந்த கணவனின் பெற்றோரைப் புறக்கணித்தாள். சகாதேவன் அவள் செயலைக் கடிந்தான். காலத்தின் வேகத்தில் கல்லையும் கரைக்கும் காட்டாறு போன்ற மனைவியின் சொல்லால் மனம் மாறினான். மன்மதனின் கணையால் மனைவியின் சொல்லே மந்திர மானது. பார்வையிழந்த பெற் றோரைக் காக்க மறுத்து, அறிவுக் குருடனானான். முதுமையில், அந்திமக் காலத்து இருளில் ஐக்கியமானான். முப்பாழுக்கு அப்பால் எமலோகம் கண்டான்.

அவன் செய்த படுபாதகத்தால், புண்ணியப் பலன்கள் நீரிலிட்ட உப்பாய்க் கரைந்துபோயின. பாவமே விஞ்சி நின்றது. காலசூத்திரம் எனும் நரகத்தில் கடுமையான தண்டனைகளை அனுபவித்தபின், கர்மபூமியாகிய பூவுலகம் சென்றான்.

லக்ஷ்மணபுரி எனும் ஊரில் ஒரு நெசவாளர் குடும்பத்தில் பிறந்தான். இளம்வயதில் ஏற்பட்ட ஒரு விபத்தில் அவன் கண்பார்வை பழுதுபட்டது. வாழ்க்கை இருண்டது. முற்பிறவியில் பார்வை யிழந்த பெற்றோருக்குப் பணிவிடை செய்ய மறுத்ததால், இந்தப் பிறவியில் கண்களில் ஒளி இழந்தான். * தருமவியாதன் உபதேசித்ததுபோல் தாய்- தந்தையரைப் பேணாமலிருத்தல் கொலையை விட கொடிய பாவம் என்ற தரும சிந்தனை யில்லாததால் நேர்ந்த கதியிது. இப்பிறவியில் தினமும் பெற்றோருக்குப் பாதபூஜை செய்தால், இழந்த பார்வையை மீண்டும் பெறுவான்.

*த ருமவியாதன்- உலகில் தவத்தினும் மேலான தருமம் தாய்- தந்தையரைப் பேணுதல் என்ற கருத்தை கௌசிக முனிவருக்கு உபதேசம்செய்த உயிர்க்கொலை செய்வோன். (கசாப்புக் கடைக் காரன்). -மகாபாரதம்.

(வளரும்)

செல்: 63819 58636

_________________

நாடி ரகசியம்

1. விசாக நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தில் சனியும், கேட்டை நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்தில் சூரியனும் புதனும் சேர்ந்திருக்க, ஜாதகர் நிதி ஆலோசகராக இருப்பார்.

2. விசாக நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தில் குருவும், பூராட நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தில் புதனும் சுக்கிரனும் சேர்ந்திருக்க, ஜாதகர் சகலகலா வல்லவர்.

3. விசாக நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தில் சூரியனும், ஹஸ்த நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தில் சுக்கிரனும் அமையும் ஜாதகிக்கு திருமணத்தில் தடை உண்டாகும்.

கேள்வி: சிலர் கல்வி கற்றுத்தேர்ந்தபின் அறிவாளிகளாகவும், வேறுசிலர் பிறப்பிலேயே மேதைகளாகவும் விளங்கும் காரணத்தை "கந்தர்வ நாடி' யின்மூலம் விளக்கமுடியுமா?

பதில்: ஜாதகம் பதினாறு வர்க்கங்களாகப் பிரிக்கப்படும்போது, ஒரு ராசியை இரண்டாகப் பிரிக்கும் ஹோரா வர்க்கம் மிகவும் முக்கியமானது. ஒற்றைப்படை ராசிகளில் முதல் பாகம் (0 முதல் 15 பாகைவரை) சூரிய ஹோரையாகவும், இரண்டாவது பாகம் (15 முதல் 30 பாகைவரை) சந்திர ஹோரையாகவும் கணக்கிடப்படும். இரட்டைப்படை ராசிகளில் இது தலைகீழாக அமையும். ஒரு ஜாதகரின் லக்னம் சூரிய ஹோரையில் அமைந்தால் வலதுபக்க மூளையின் செயல்பாடு அதிகரித்து, மாறுபட்ட சிந்தனையும் உள்ளுணர்வும் உண்டாகும். சந்திர ஹோரையில் அமைந்தால் இடது பக்க மூளையின் செயல்பாடு அதிகரித்து, வெளியிலிருந்து கிடைக்கும் அறிவை மனதிலிலிருத்தும் ஞாபக சக்தி உண்டாகும். புதாதித்திய யோகம் வலிலிமை பெற்று, லக்னம் சூரிய ஹோரையில் அமைந்தால் விஞ்ஞானியாகவும், சந்திர ஹோரையில் அமைந்தால் விஞ்ஞான ஆசிரியராகவும் வாழ்க்கை அமையும். லக்னம் என்பது ஒரு ஜாதகத்தில் தலைமைச் செயலகமாக விளங்கும் மூளையைக் குறிப்பது. லக்னம் அமையும் ஹோரை, நட்சத்திரப் பாதம், ராசி, ராசிநாதன் அமருமிடம் போன்றவற்றைக்கொண்டே ஒரு ஜாதகரின் அறிவாற்றலை அறியமுடியும் என்பதே "கந்தர்வ நாடி'யின் கருத்து.

bala181019
இதையும் படியுங்கள்
Subscribe