இதுவரை ஜோதிட உலகிற்கு அறிமுகமாகாத புதிய தொடர்!
75
லால்குடி கோபாலகிருஷ்ணன்
விம்சோதாரி தசையில் பலன் களைக்காண தசாநாதனும், புக்தி நாதனும் எந்த பாவத்தின் காரகத் தைத் தருவார்கள் என்பதை அறிவதே பிரதானம். லக்ன கேந்திராதிபதிகள் சுபர்களானால் அசுபப் பலன்களும், அசுபர்களா னால் சுபப்பலன்களும் நடந்தேறும். லக்ன திரிகோணாதிபதிகள் எந்த நிலையிலிருந்தாலும் கெடுதல் செய்ய மாட்டார்கள். அதேபோல அஷ்ட மாதிபதிகள் தங்கள் சுயதசை மற்றும் புக்திகளில் எதிர்பாராத நன்மையோ, தீமையோ தருவார்கள். மேஷ லக்னக்காரர்களுக்கு செவ்வாயும், துலா லக்னக்காரர்களுக்கு சுக்கிரனும், லக்னம் மற்றும் எட்டாமிடத்துஅதிபதிகளாக இருந்தாலும் தங்கள் தசாபுக்திகளில் கெடுதல் செய்வதில்லை. எந்த லக்னக் காரர்களாக இருந்தாலும், சுக்கிர தசையில் ஜனித்த ஜாதகர்களுக்கு ஆறாம் தசையான குருதசை மாரகத்திற்கு ஒப்பான கண்டத் தைத் தரும் என்பதே "கந்தர்வ நாடி'யின் கூற்று.
""வாகீஸ்வரரே! அளவில்லா கடல், அழகிய நீரூற்று, பச்சைத் தோரணமாய் செடிகொடிகள், பசி தீர பழவகைகள் என எல்லாமுடைய உலகில் மனிதராய்ப் பிறந்தும், ஜனனம்முதல் மரணம்வரை எப்போதும் துன்பத்தில் உழல்வதன் காரணத்தைத் தாங்கள் விளக்கியருள வேண்டுகிறேன்'' என அன்னை கருணை நாயகி திருமால்பூர் திருத் தலத்தில் உறையும் அருள்மிகு மணிகண்டேஸ்வரரைப் பணிந்து கேட்டாள்.
கயிலைநாதர் உரைத்தது- ""செல்வமுள்ளவன் மகிழ்ச்சியாயிருக்க காலத்தைத் தேடுகிறான். மகிழ்ச் சியாயிருக்கக் காலமுள்ளவன் செல்வத்தைத் தேடுகிறான். அதற்குள், காலன் அவனைத் தேடிய டைகிறான். உடலும் உயிருமே கிடைத்தற்கரிய செல்வம் என்பதையறியாது, இல்லறத்தார் பொன்மானெனும் பொய்மானைத் தேடுகி றார்கள். தானே பிரும்மம் என்று உணராத துறவியோ பிரும்மத்தைத் தேடுகிறான். தன்னிடம் இல்லையென்று எண்ணித் தேடுகிறான். தன்னிடம் இல்லாதது எங்குமே இல்லை என்பதை உணரமாட்டான். எல்லாமும் தான், தனதென்றுணர்வதே ஞானம். தோண்டி (நீர்க்கலம்) சுமந்து சுகம்தேடி அலைவது ஏன்? ஆழ்மனதைத் தோண்டி எடுத்தாலே சுகம் சுரக்கும். தேடுதல் என்பதே துன்பத்தைத் தேடுதல் என்றுணரவேண்டும். எதையோ தேடி தன்னை இழத்தல் அறிவுடைமையாகாது. நதிகள் உயிர் களைத் தேடிச்செல்வதில்லை. உயிர்களே தாகம்தீர நதிகளைத் தேடிச்செல்லும். தேடுபவரைவிட, தேடப்படுபவரே வலிலிமையுடையவர். இருக்குமிடமே சொர்க்கம். அடைந்ததை அனுபவிப்பதே சுகம் என்று உணர்வாரே வாழ்வாங்கு வாழ்வார்.''
""சபாபதியே! "பார்ஸ்வக்ராந்தம்' எனும் தாண்டவத்தின் லயமாகிய ஸ்வாதி நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்தில் லக்னமும், அபபரணி நான்காம் பாதத்தில் சந்திரனும், கார்த்திகை இரண்டாம் பாதத்தில் குருவும், புனர்பூசம் நான்காம் பாதத்தில் செவ்வாயும், பூரம் மூன்றாம் பாதத்தில் புதனும் சூரியனும் சேர்ந்திருக்க, உத்திர நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தில் சுக்கிரனும், சித்திரை மூன்றாம் பாதத்தில் சனியும் அமர்ந்திருக்கும் அமைப்பைப்பெற்ற இந்த ஜாதகரின் கர்மப் பலனைத் தாங்கள் விளக்கவேண்டும்'' என்று திருவாலங்காடு திருத்தலத்தில் அருள்புரியும் ஸ்ரீவடாரண்யேஸ்வரரை அன்னை வண்டார்க்குழலிலி வேண்டிப்பணிந்தாள்.
பதங்கீசுவரர் உரைத்தது- ""பிங்கலையே! இந்த ஜாதகன் முற்பிறவியில் தர்ஷன் எனும் பெயருடன் வேட்டவலம் என்ற ஊரில் வாழ்ந்துவந்தான். அவன் இளமைப்பருவத்தில் பிற உயிர்களைத் துன்புறுத்துவதில் மகிழ்ச்சி கண்டான். அவன் வீட்டுத் தோட்டத்தில் ஊர்க்குருவியொன்று கூடுகட்டி வாழ்ந்துவந்தது. ஒருநாள், அந்தக் கூட்டின் தாய்க்குருவி இறைதேடச் சென்றபோது, குருவிக்குஞ்சுகளைக் களவாடி கூட்டையும் கலைத்தான். அந்த குருவிக்குஞ்சுகள் அவன்பசிக்கு இரையாயின. தன் கூட்டையும், தான் ஈன்ற குஞ்சுகளையும் காணாத தாய்ப்பறவை கலக்கமுற்றது. தன்னிடம் அடைக்கலம் தேடிவந்த அதிதியைக் கொல்லுதல், களவு, வேறோர் உயிரின் புண் எனும் புலாலை உண்ணுதல் போன்ற பல பாத கங்களையும் செய்தவனானான். சித்திரகுப்தன் சபையிலிலிருந்த சிரவணர்களிடம் தர்மதேவதை முறையிட்டாள். முதுமையில் அவன் உயிர் உடற் கூட்டை விட்டுப் பிரிந்தது. பொல்லாப்புலாலை உண்டதால் இயமன் தூதர், தீவாய் நரகத்தில் மல்லாக்கத்தள்ளி முறித்து வைத்தனர். பலகாலம் நரகத்தின் துன்பங்களை அனுபவித் தபின், புண் எனும் புதிய தேகம் பெற்று பூவுலகம் சென்றான். வாலிலிபத்தின் வாயிலில் தொழு நோயில் சிக்குண்டான். முன்வினைப் பயனால் அறம் அவனைப் புறந்தள்ளியதால், உற்றாரும் அவனைப் புறந்தள்ளினர். மறம் அவனை ஆட் கொண்டதால், ஊர்க்கோடி மரமே அவனது புலிகலிடமானது. ஒரு பறவையின் உயிர்காக்க தன்னையே அர்ப்பணிக்கத் துணிந்த *உசீநரரின் சரிதம் அறியான்போலும். பறவைகளுக்கு தானி யங்களை உணவாய்த் தந்தால், அவனைத் துன்புறுத்தும் நோயின் தாக்கம் குறையும்.
*உசீநரர்- வேட்டையாட வந்த பருந் திடமிருந்து தப்பிவந்து தன்னிடம் தஞ்சம் புகுந்த புறாவைக் காப்பாற்ற, பருந்துக்குத் தன்னையே உணவாக அர்ப்பணித்தவர். (மகாபாரதம்).
(வளரும்)
செல்: 63819 58636
______________
நாடி ரகசியம்
1. ஸ்வாதி நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்தில் சந்திரனும், சித்திரை இரண்டாம் பாதத்தில் புதனும் அமையப்பெற்ற ஜாதகர் வணிகத்தில் கொடிகட்டிப் பறப்பார்.
2. ஸ்வாதி நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்தில் புதனும் சுக்கிரனும் சேர்ந்திருந்தால் மருத்துவத்துறையில் ஜீவனம் அமையும்.
3. ஸ்வாதி நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்தில் சூரியனும், அபபரணி நட்சத்திரத்தின் முதல் பாதத்தில் சனியும் அமையும் ஜாதகருக்கு நேத்திர ரோகம் (கண்நோய்) உண்டாகும்.
கேள்வி: பிரசன்ன ஆருடத்தில் புத்திரபாக்கியத்தை அறியும் முறையையும், புத்திரதோஷப் பரிகாரத்தையும் "கந்தர்வ நாடி'யின்மூலம் விளக்கமுடியுமா?
பதில்: பிரசன்ன ஆருடத்தில் புத்திரபாக்கியத்தையறிய சந்தான திதியைக் கண்டறியவேண்டும். பிரசன்ன காலத்து சந்திர, சூரிய பாகைகளைத் தனித்தனியாக ஐந்தால் பெருக்கி, அதன் கூட்டுத்தொகையிலிலிருந்து சந்திரனின் பாகையைக் கழிக்க வரும் பாகை எந்த திதியைக் குறிக்கிறதோ அதுவே சந்தான திதியாகும். சுக்கில பட்சமாயிருந் தால் சாதகம். கிருஷ்ண பட்சமாயிருந்தால் பாதகம். சஷ்டி, சதுர்த்தி, நவமி, சதுர்த்தசி, துவாதசி, அமாவாசை, பௌர்ணமித் திதிகளாக வந்தால் தடையுண்டு. புத்திர தோஷத்தின் காரணத்தையறிய ஷேத்திர பலம் மற்றும் பீஜபலத்தைக் கண்டறியவேண்டும். இதுவே கருவுரு திறனாய்வு. (எங்ழ்ற்ண்ப்ண்ற்ஹ் பங்ள்ற்). ஷேத்திர பலம் என்பது பெண்ணின் குழந்தை பாக்கியத்தையும், பீஜ பலமென்பது ஆணின் குழந்தை பாக்கியத்தையும் குறிக்கும். பெண்ணின் ஜாதகத்தில் குரு, சந்திரன், செவ்வாய் பாகைகளைக் கூட்டினால் வருவது ஷேத்திர ஸ்புடம். இது ராசி மற்றும் நவாம்சங்களில் பெண் ராசிகளில் அமைய புத்திரபாக்கியமுண்டு. ராசி மற்றும் நவாம்சங்களில் ஏதாவது ஒன்றில் மட்டும் பெண் ராசியில் அமைந்தால் பரிகாரங்களால் பயனுண்டு. ஆணின் ஜாதகத்தில் குரு, சூரியன், சுக்கிரன் பாகைகளைக் கூட்டினால் வருவது பீஜ ஸ்புடம். இது ராசி மற்றும் நவாம்சங்களில் ஆண் ராசிகளில் அமைய புத்திர பாக்கியமுண்டு. ராசி மற்றும் நவாம்சங்களில் ஏதாவது ஒன்றில் மட்டும் ஆண் ராசியில் அமைந்தால் பரிகாரங்களால் பயனுண்டு. ஷேத்திர ஸ்புடம் மற்றும் பீஜ ஸ்புடம் அமையும் ராசி, நட்சத்திர அதிபதிகளை அனுசரித்து பரிகாரங்களைச் செய்தால் பலனுண்டு என்பதே "கந்தர்வ நாடி'யின் கருத்து.