இதுவரை ஜோதிட உலகிற்கு அறிமுகமாகாத புதிய தொடர்!
75
லால்குடி கோபாலகிருஷ்ணன்
ஒரு நிறுவனத்தின் உரிமையாளர் முதலாளியாகத் தோற்றமளித்தாலும், அந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர்களே உண்மையான முதலாளிகள். அதுபோல், ஒரு கிரகத்தின் ஆதிக்க நிலையினை, அது நவாம்ச சக்கரத்தில் அமையும் இடத்தைக்கொண்டே உறுதி செய்யமுடியும். உதாரணத்திற்கு, ராசி சக்கரத்தில் குரு பகவான் இரண்டாம் வீடு அல்லது பத்தாம் வீட்டிலிலிருந்து, நவாம்சத்தில் சிம்மத்தில் அமைந்தால், ஜாதகர் ராஜ வாழ்க்கையைப் பெறுவார். ராசியில் லக்னத்தின் அமைப்பையும், நவாம்சத்தில் கிரகங்கள் அமரும் வீட்டையும் ஒப்பிட்டும், ஒன்றின்மேல் ஒன்றாக அடுக்கிப் பார்த்துமே (Super Impose) பலன்களை அறியமுடியும் என்பதே "கந்தர்வ நாடி'யின் கூற்று.
""சோமநாதீசுவரரே! ஊனுடல் கொண்ட மனிதராய்ப் பிறந்தும், சித்த புருஷர்கள் தேவருக்கு நிகராய் அட்டமா சித்திகளைப் பெறுதல் எங்ஙனம் என்பதைத் தாங்கள் விளக்கியருள வேண்டுகிறேன்'' என அன்னை அனுபாம்பிகை செங்கம் எனும் திருத்தலத்தில் உறையும் அருள்மிகு ரிஷபேஸ்வரரைப் பணிந்து கேட்டாள்.
வாலீசுவரர் உரைத்தது- ""வாதத்தில், வாதத்தின்

வாலீசுவரர் உரைத்தது- ""வாதத்தில், வாதத்தின் பெரும் கூறும், பித்த, சிலேஷ் மத்தின் சிறு கூறுகளும் அடங்குதல் போல, பிருத்வியில் நெருப்பு, நீர், வாயு, ஆகாயமும் ஒடுங்கும். தீயுடன் புணரும் நீரதனில் வாயுவின் கூறுகள் மிகுவது போல, பஞ்சபூதக் கூறினையறிந்தோர் கூற்றினை வெல்வர். அணுவினுக்கணுவாய் நுண்ணுரு கொள்ளும் அணிமா முதலாய் அட்டமா சித்தும் பெற்று, காற்றில் பறந்து கடலிலில் மிதப்பர்.''
""நடவரசரே! "விநிவ்ருத்தம்' எனும் தாண்டவத்தின் லயமாகிய ஸ்வாதி நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தில் லக்னமும், கேட்டை நான்காம் பாதத்தில் சந்திரனும், மூலம் மூன்றாம் பாதத்தில் குருவும், ரோகிணி நான்காம் பாதத்தில் செவ்வாயும் சனியும் சேர்ந்திருக்க, பூரம் மூன்றாம் பாதத்தில் புதனும், சித்திரை நட்சத்திரத்தின் முதல் பாதத்தில் சூரியனும் சுக்கிரனும் சேர்ந்து அமர்ந்திருக்கும் அமைப்பைப் பெற்ற இந்த ஜாதகரின் கர்மப் பலனைத் தாங்கள் விளக்க வேண்டும்'' என்று உவரி எனும் திருத்தலத்தில் அருள்புரியும் ஸ்ரீ சுயம்புநாதரை அன்னை பிரும்மசக்தி வேண்டிப் பணிந்தாள்.
பெருவுடையார் உரைத்தது- ""அறச்செல் வியே! இந்த ஜாதகன் முற்பிறவியில் விஸ்வநாதன் எனும் பெயருடன், காயலூர் என்ற ஊரில் வாழ்ந்துவந்தான். அவன் பால பருவத்திலேயே பெற்றோரையிழந்து அநாதையானான். அவ்வூரின் பெரும் தனவந்தர், அவனைத் தத்தெடுத்து மகனைப் போல் வளர்த்தார். அவனோ, அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச் சொல் ஆகிய நால்வரோடு ஐவரானான்.
அவனைப் பேணிப்பாதுகாத்த புரவலரின் சொத்தினை அபகரித்து, அவர் மரணத் திற்கும் காரணமானான். தாய் மரத்தை வெட்டும் கோடரிக் காம்பு போல, செய்ந்நன்றி மறந்து, தீட்டிய மரத்தில் கூர்பார்த்தான். காலம் பொறுமை காத்தது. காலத்தோடு வேகமாய் ஓடி காலனை அடைந்தான். "கால சூத்திரம்' எனும் நரகத்தில் பசிப்பிணியை அனுபவித்தபின் முன்வினைப் பயனால் அந்த ஜீவன், ஊனுடலைப் பெற்று கர்மபூமிக்கு வந்தது. வன்னியூர் எனும் ஊரில், அனல் காணாத அடுப்பினையுடைய வறிய குடும்பத்தில் பிறந்தான். பெற்றோரின் வறுமையால், அடிமையாய்க் கைமாறினான். எதிர்காலம் இருண்டது. கனவுகள் கருகிப்போயின. * கர்ணன்போல செய்ந்நன்றி மறவாத
வனாய் இருந்திருந்தால் இந்த கதி நேர்ந் திருக்காது. செய்ந்நன்றி கொன்றாருக்கு உய்வில்லை. இந்த பாவத்திற்கு பரிகாரமு மில்லை.
* கர்ணன் அநாதையாய் இருந்த தன்னை, அங்க நாட்டின் அரசனாக்கிய துரியோதனனுக்காக தன் உயிரையும் நீத்து, நன்றிக் கடன் செலுத்தினான்.
(வளரும்)
செல்: 63819 58636
________________
நாடி ரகசியம்
1. ஸ்வாதி நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தில் புதனும், சித்திரை மூன்றாம் பாதத்தில் சுக்கிரனும் அமையப் பெற்ற ஜாதகர் இனிய இல்வாழ்வும், புகழ்மிக்க புறவாழ்வும் பெறுவார்.
2. ஸ்வாதி நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தில் குருவும், உத்திராடம் இரண்டாம் பாதத்தில் சனியும் அமைந் தால், ஜாதகருக்கு அரசு ஆலோசகர் பதவியும், புகழும் உண்டாகும்.
3. ஸ்வாதி நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தில் சூரியனும், சதய நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தில் லக்னமும் அமையும் ஜாதகருக்கு, வலது கண்ணில் தீரா நோய் உண்டாகும்.
கேள்வி: வாஸ்து சாஸ்திரத்தில் திசைகளுக்குத் தரப்படும் முக்கியத்துவம், ஒருவரின் ஜனன ஜாதக ஆய்விலும் தரப்படுகிறதா என்பதை "கந்தர்வ நாடி'யின் மூலம் விளக்கமுடியுமா?
பதில்: ராசிகளும், கிரகங்களும் ஆட்சிபுரியும் திசைகளுக்கான முக்கியத்துவம் ஜனன ஜாதக ஆய்விலு முண்டு. பஞ்சபூதப் பிரிவின்படி நெருப்பு ராசிகள் (மேஷம், சிம்மம், தனுசு) கிழக்கு திசையையும், நில ராசிகள் (ரிஷபம், கன்னி, மகரம்) தெற்கு திசையையும், காற்று ராசிகள் (மிதுனம், துலாம், கும்பம்) மேற்கு திசையையும், நீர் ராசிகள் (கடகம், விருச்சிகம், மீனம்) வடக்கு திசையையும் ஆட்சிபுரியும். ஷட்பலம் எனப்படும் ஆறுவிதமான கிரக பலங்களில் திக்பலம் (திசை பலம்) முக்கியமானது. ஒரு ஜாதகத்தில் கேந்திரங்கள் (1, 4, 7, 10) கிழக்கு, தெற்கு, மேற்கு, வடக்கு திசைகளைக் குறிக்கும். இதன் அடிப்படையிலேயே திக்பலம் அமையும். தென்திசை கல்வியிலும் (நான்காம் பாவம்), வடதிசை அதிகாரத்திலும் (பத்தாம் பாவம்) மேலோங்கி இருப்பதைக் காணலாம். ஏழாம் வீடு, அந்த ஸ்தானாதிபதி மற்றும் அதிலுள்ள கிரகங்கள், ஏழாம் ஸ்தானாதிபதி இருக்கும் ராசி, இதன் அடிப்படையில் அமையும் ராசி மற்றும் கிரகத்தின் பலத்தைப் பொருத்தே, அதன் திசையில் வாழ்க்கைத் துணை அமையும். இதுபோலவே நான்காம் பாவத்தைக் கொண்டு வீடு அமையும் திசையையும், பத்தாம் பாவத்தைக்கொண்டு தொழில் அமையும் திசையையும் அறியலாம்.
ஒரு ஜாதகரின் பதினோறாம் பாவம் அமையும் ராசியின் திசையைக் கண்டறிந்தே ஜாதகரின் வெற்றி எந்த திசையில் அமையும் என்று நிர்ணயிக்கமுடியும் என்பதே "கந்தர்வ நாடி'யின் கருத்து.