மாங்கனியைப் பறிப்பதற் காகக் கல்லெறிந்தால், அதன் விளைவாக கல்லும் மாங்கனியும் சேர்ந்தே விழலாம். கல் மட்டும் விழலாம்; கல் விழுந்து காயமும் ஏற்படலாம். இதுபோல ஒவ்வொரு செயலுக்கும் பல்வேறுவிளைவு களை எதிர்பார்க்கலாம். ஜாத கத்தை ஆராயும்போது, கிரக, பாவ காரகங்களைக்கொண்டு, காரண காரியங்களை (Cause & Effects) முழுமையாக அறிந்தால் மட்டுமே பலன்கள் துல்லியமாக அமையும். உதாரணத்திற்கு, ரிஷப லக்னம்- சுக்கிர தசை, செவ்வாய் புக்தியில் வாழ்க்கைத் துணையைப் பிரியும் நிலையுண்டாகும் என்பது பலன். இந்தப் பலனை ஏன்? எதற்கு? எவ்வாறு என்ற வினாக்களுக்கு உட்படுத் தினால் மட்டுமே பலன்கள் முழுமைபெறும். பிரிவென்பது உடல்ரீதியான பிரிவா? மனதின் பிரிவா? உயிர்ப் பிரிவா (மரணம்) என்பதை முதலில் உறுதிசெய்து கொள்ளவேண்டும்.
ரிஷப லக்னத்திற்கு சுக்கிரன் லக்னம் மற்றும் ஆறாமிட ஆதிபத்தியம் பெறுகிறார். செவ்வாய் ஏழு மற்றும் பன்னிரண்டாமிடத்து அதிபதி. பன்னிரண்டாமிடம் வெளிநாட்டுப் பயணத்தைக் குறிக்கும். பலன்- தொழில் நிமித்தமாய் வெளிநாடு செல்வதால், சிலகாலம் வாழ்க்கைத்துணையைப் பிரியவேண்டிய நிலை ஏற்படும். இது உடல்ரீதியான பிரிவாகவே பார்க்கப்படும். சூரியன், சந்திரனைத் தவிர மற்ற கிரகங்கள் இருவீட்டு ஆதிபத்தியங்களைப் பெற்றிருப்பதால், தங்கள் தசாபுக்திகளில் இருவீட்டுக் காரகப் பலன்களையும் தரும் என்பதே "கந்தர்வ நாடி'யின் கூற்று. ""பெருந்தேவனே! விலங்குகள், பட்சிகள் முதலான உயிர்கள், தங்கள் இரைக்காக பிற உயிர்களைக் கொன்றே வாழ்கின்றன. எல்லா உயிர்களுக்குள்ளும் உறையும் ஆன்மா ஒன்றா யிருக்கையில், மனிதர்கள் மட்டும் பாவங் களுக்கு தண்டிக்கப்படுவதன் காரணத்தை விளக்கியருள வேண்டுகிறேன்'' என அன்னை மங்களாம்பிகை திருவிஜயமங்கை எனும் திருத்தலத்தில் உறையும் அருள்மிகு விஜயநாதரைப் பணிந்துகேட்டாள்.
மாதொருபாகன் உரைத்தது-
""ரத்தினங்களைக் கோர்த்து மாலையாக்கும் சரடுபோல எல்லா உயிர்களிலும் ஊடுருவித் தொடர்ந்து விளங்கும் ஆன்மா தான் "அந்தர்யாமி' என்ற பிரும்மம். உடலின் பஞ்ச பேதங் களாகிய அன்னமய கோசம் (பூத உடல்), பிராணமய கோசம் (உயிர்), மனோமய கோசம் (மனம்), விஞ் ஞானமய கோசம் (புத்தி), ஆனந்தமய கோசம் (பேரின்ப உணர்வு) என்ற ஐந்தையும் பெற்றவனே மனிதன். புத்தியால் நன்மை- தீமைகளைப் பகுத்துணர்ந்து பாவங்களைச் செய்யாமலிருக்கவே கடமைப்பட்டவன்.''
""ஆபத்சகாயரே! "விவ்ருத்தம்' எனும் தாண்ட வத்தின் லயமாகிய ஸ்வாதி நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தில் லக்னமும், சதயம் இரண்டாம் பாதத்தில் குருவும், உத்திரட்டாதி நான்காம் பாதத்தில் செவ்வாயும், மிருகசீரிடம் முதல் பாதத்தில் சூரியனும் புதனும் சேர்ந்திருக்க, மிருகசிரீடம் நான்காம் பாதத்தில் சுக்கிரனும், மக நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தில் சனியும், சித்திரை இரண்டாம் பாதத்தில் சந்திரனும் அமர்ந்திருக்கும் அமைப்பைப் பெற்ற இந்த ஜாதகரின் கர்மப்பலனைத் தாங்கள் விளக்க வேண்டும்'' என்று திருமணஞ்சேரி திருத்தலத்தில் அருள்புரியும் ஸ்ரீ அருள்வள்ளல் நாதரை அன்னை கோகிலாம்பாள் வேண்டிப்பணிந்தாள்.
ருத்ராபதி உரைத்தது- ""இமயவதியே! இந்த ஜாதகன் முற்பிறவியில் கௌசிகன் எனும் பெயருடன், சதுர்வேதிமங்களம் என்ற ஊரில் ஒரு அந்தணக் குடும்பத்தில் வாழ்ந்துவந்தான். அவன் முன்னோர்கள் செய்துவந்த நித்ய கர்மாக்களையும், இறந்த தன் தந்தைக்குச் செய்யவேண்டிய ஈமச்சடங்குகளையும் சரிவரச் செய்ய மறுத்தான். இளம்வயதிலேயே தீரா நோய்கண்டு எமனுலகம் சென்றான். நரகத்தின் நுழைவாயிலில் இருந்த வன்னி மரத்தில், தன் தந்தை பசி, தாகத்துடன் அல்லாடு வதைக் கண்டான். தனக்கு வாழ்வளித்த தந்தைக்கு ஈமக்கடன் எனும் செய்நன்றிக் கடனைச் செலுத்த மறந்ததால், "காலசூத்திரம்' எனும் நரகத்தில் வீழ்ந்தான். அங்கு அவன் கட்டுண்டு எமகிங்கரர்களால் நையப்புடைக்கப் பட்டான். பலகாலம் துன்புற்றபின் பாவம் தீர்க்க கர்மப்பலனைச் சுமந்து மண்ணுலகம் சென்றான். சம்பாபதி என்ற ஊரில் பிறந்து குலசேகரன் எனும் பெயர் பெற்றான். காலச்சக் கரத்தின் சுழற்சியில், திருமணவாழ்வின் மணம் நுகர்ந்தான். ஆனாலும் திருமண வாழ்வின் பயனாகிய புத்திர பாக்கியம் கிடைக்காமல் துன்புறுகிறான். குலசேகரன், தன் குலம் தழைக்குமா என்ற கவலையில் வாடுகிறான்.
* பகீரதன்போல் தன் முன்னோர்கள், முக்திபெற பிதுர்பூஜை செய்திருந்தால் இந்த கதி நேர்ந் திருக்காது. பித்ரு பிண்டார்ப்பண ஸ்தலமாகிய கயாவில் ஷண்ணாவதி (96 தர்ப்பணங்கள்) செய்தால் பாவம் நீங்கிப் பலன் பெறுவான்.
* பகீரதன்- சூரியகுலத்து திலீபனின் மகன். தன் முன்னோர்கள், சாபத்திலிருந்து விடுபட்டு முக்தியடைவதற்காகக் கடும் தவமிருந்து கங்கை நதியை பூமியில் இறக்கினான்.
(வளரும்)
செல்: 63819 58636