இதுவரை ஜோதிட உலகிற்கு அறிமுகமாகாத புதிய தொடர்!

னன ஜாதகத்தின் ஒன்பதாம் பாவமே முற்பிறவியின் லக்ன பாவம். ஐந்தாம் பாவமே வரும் பிறவியின் லக்ன பாவமாய் அமையும். ஜென்ம வாசனை (குணம்) மாறாது என்பதால், சந்திரன் ஜென்ம நட்சத்திரத்திற்கு அனுஜென்ம, திரிஜென்ம தாரைகளிலேயே அமையும். ஆத்ம காரகனாகிய சூரியனுக்கும் ஒன்பதாம் பாவா திபதிக்குமுள்ள தொடர்பைக்கொண்டு சந்திரன் தவிர மற்ற கிரகங்கள், முற்பிறவியில் அமர்ந்த இடத்தைக் கணக்கிடலாம் என்பதே "கந்தர்வ நாடி'யின் கூற்று.

Advertisment

""அம்பலத்தரசரே! அர்த்தம் (செல்வம்), காமம் (ஆசை), மோட்சம் (தர்மம்) ஆகிய மூன்றும் ஒன்றுக்கொன்று பகையானது. அவ்வாறிருக்க, பூவுலகில் இந்த மூன்றையும் ஒருசேரப்பெறும் பாக்கியமுடையவர் எவரேனும் உளரோ?'' என அன்னை மரகதாம்பாள் ஓசூர் திருத்தலத்து மலைக்கோவிலில் உறையும் ஸ்ரீசந்திரசூடேஸ் வரரைப் பணிந்துகேட்டாள்.

ss

ஏகநாதர் உரைத்தது- ""காமத்தால் செல்வமும் தர்மமும் அழியும். செல்வத்தை உலோபிபோல அடைகாத்தால் கவலையால் காமம் அற்றுப் போகும். தர்மம் தவறிப்போகும். தர்மத்தின் பாதையில் காமத்தை அனுபவிக்கமுடியாது. செல்வமும் வற்றிப்போகும். ஆனால், உத்தமியை மணந்த மணாளனும், உத்தமனைக் கைப்பிடித்த மங்கையும் இனிய இல்லறத்தையும், குறை விலா செல்வத்தையும், தர்மதேவதையின் அருளையும் ஒருசேரப்பெறுவர்.மணவாள னின் மனம் கோணாமல், அவன் செய்யும் தர்ம கார்யங்களில் துணைபுரிபவளே தர்மபத்தினி மணவாழ்வில் கற்புநெறியில் நின்று, நில்லாது பொழியும் அந்திமழையாய் சொரிந்த அன்போடும், பக்தியோடும் வாழ்வார் வானுறையும் தெய்வத்திற்கு ஈடானவர். கலியுகத்தில் கற்பென்பது வெறும் ஒழுக்கமல்ல. ஊசியின் முனையில் நின்றி யற்றும் தவம். காதல் இருவர் கருத்தொருமித்து ஆதரவுபட்டு வாழ்வதே இல்லறம். அதுவே நல்லறம்.''

Advertisment

""ஆனந்தக்கூத்தரே! "நிதம்பம்' எனும் தாண்டவத்தின் லயமாகிய உத்திராட நட்சத்திரத்தின் நான்காம் பாதத்தில் லக்னமும், பூரட்டாதி முதல் பாதத்தில் சுக்கிரனும் புதனும் சேர்ந்திருக்க, உத்திரட்டாதி மூன்றாம் பாதத்தில் சூரியனும், கார்த்திகை முதல் பாதத்தில் குருவும், ரோகிணி நான்காம் பாதத்தில் செவ்வாயும், மிருகசிரீடம் நான்காம் பாதத்தில் சந்திரனும், புனர்பூசம் முதல் பாதத்தில் சனியும் அமை யப்பெற்ற இந்த ஜாத கரின் கர்மப் பலனைத் தாங்கள் விளக்க வேண்டும்'' என்று வாழப் பள்ளி எனும் திருத்தலத்தில் அருள்புரியும் ஸ்ரீமகா தேவரை அன்னை பார்வதி வேண்டிப் பணிந்தாள்.

திங்கட்சடையோன் உரைத்தது- ""சடாட் சரியே! இந்த ஜாதகன் முற்பிறவியில் மாத்தூர் எனும் ஊரில் பிறந்து வசந்தன் என்ற பெயர் பெற்றான். இளம்வயதில் அவனிடம் கல்லாப் பிழையும், தருமநெறி நில்லாப் பிழையுமாய், எல்லாப் பிழையும் பொல்லாப் பழியாய் நிலைத்துநின்றன. தன்னில் மூத்த பெண்டிரை தாய்போல கருதி சேய்போல வாழாமல், ஆசைக் கயிற்றிலாடும் பம்பரமாய் அவர்களோடு காமக்களிப்பில் மூழ்கினான்.

ஒன்பது வாய்த் தோல்பைக்கு ஆசை வைத்து, போகமாதரைப் புணர்ந்தான். வாழ்வின் நெறிமாறியதால் நோய்க்கு வாழ்க்கைப் பட்டான். உடைந்த குடம் ஓடாவதைப்போல மரணத்தால் அவனுடல் உயிரோடு ஓடாமல் நின்றது. ஊரும் உறவும் கூடி, கொட்டி முழக்கி அழுதனர் மயானம்வரை. பெயரும் பருவுடலும் எரிந்துத் தீய்ந்தன எலும்பாய், சாம்பலாய். அவனுயிரை எமகிங்கரர்கள் கவர்ந்து சென்றனர். கூடத்தகாதவரைக் கூடி காமுற்றதால் வஜ்ர கண்டகம் எனும் பாழ்நரகத்தில் அடைபட்டான். பழுக்கக் காய்ச்சிய சுடுகோலின் வெப்பத்தை உணர்ந் தான். பலகாலம் துன்புற்றபின், பாவச்சரக்கைச் சுமந்து பூவுலகம் சென்றான். படூர் என்ற ஊரில் பிறந்து சசிதரன் என்ற பெயர்பெற்றான்.

Advertisment

பிள்ளைப்பருவம் இனிதே கழிந்தது. வாலிபத் தின் வாயிலில் நுழைந்தான். ஒருநாள் அவன் கை, கால்கள் உணர்ச்சியற்றுப்போயின. முற்பிறவி யில், * சாம்பன்போல புலனடக்கமின்றி, கண்டதே காட்சி, கொண்டதே கோலமென முறையற்ற காமத்தில் மூழ்கித் திளைத்ததால் இப்பிறவியில் துன்புறுகிறான். பாண லிங்கம், சிலாக்கல், சாளக்கிராமம், ஸ்படிகம், சோனபத்ரக் கல் ஆகிய ஐந்திலும், அதற்குரிய மூர்த்தி களை ஆவாஹனம் செய்து, பஞ்சாயன பூஜை செய்தால் தோஷம் நீங்கும்.

* சாம்பன்- பகவான் கிருஷ்ணரின் மகன். தன் தாய்க்கு ஒப்பான பெண்டிருடன் ஜலக் கிரீடையில் காமம் காட்டியதால் சாபம் பெற்று, பின் சூரியனை வேண்டி சாபவிமோசனம் அடைந்தான். -சூரிய புராணம்.

(வளரும்)

செல்: 63819 58636

___________

நாடி ரகசியம்

1. உத்திராட நட்சத்திரத்தின் நான்காம் பாதத்தில் சூரியனும், சித்திரை மூன்றாம் பாதத்தில் செவ்வாயும் அமரும் அமைப்பைப்பெற்ற ஜாதகர் தன்னிகரில்லா தலைவனாய்த் திகழ்வார்.

2. உத்திராட நட்சத்திரத்தின் நான்காம் பாதத்தில் சுக்கிரனும், மிருகசீரிடம் மூன்றாம் பாதத்தில் சந்திரனும் அமைந்த ஜாதகருக்கு திருமணத்தில் தடையும் தாமதமும் உண்டாகும்.

3. உத்திராட நட்சத்திரத்தின் நான்காம் பாதத்தில் சனியும், பூராட நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்தில் சூரியனும் அமைந்து, லக்னம் குருவின் பார்வையைப் பெறாவிடில், ஜாதகர், வாழ்க்கையில் இறுதிவரை துன்பப்படுவார்.

கேள்வி: நாடி ஜோதிடத்தின் சிறப்பினை "கந்தர்வ நாடி'யின்மூலம் விளக்கமுடியுமா?

பதில்: ஜனன ஜாதகத்தில் குறிக்கப்படும் நேரம் சரியாக இருக்குமென்று உறுதிபடக் கூறமுடியாது. பொதுவாக, குறைந்தபட்சம் ஒரு நிமிட வேறுபாடு ஏற்பட வாய்ப்புண்டு. நொடிப்பொழுது வேறுபாட்டில் பிறக்கும் இரண்டு ஜாதகர்களின் வாழ்க்கை பெரிதும் வேறுபடுவதை, எதார்த்தத்தில் காணமுடிகிறது. மனிதன் ஒரு நாளுக்கு 21,600 முறை மூச்சுவிட்டு இழுக்கிறான். (சூரிய கலை, சந்திர கலை). லக்னம் ஒரு நாளைக்கு 360 பாகைகள் நகர்கிறது. ஒரு பாகை என்பது 60 கலைகள். (360 ஷ் 60=21600). ராசியைப் பிரிக்கும் சஷ்டியம்சம்போல் ஜனன லக்னப் பாகையைக் கலைகளாகப் பகுத்தால் மட்டுமே துல்லியமான பலன்கள் கிடைக்கும். நம் முன்னோர்கள் உருவாக்கித்தந்த நாடி ஜோதிடத் தால் மட்டுமே சூட்சுமப் பலன்களை அறியமுடியும். லக்னப் பாகையின் கலையே விதை. விதையே வாழ்க்கையெனும் விருட்சத்தை விளக்கும் என்பதே "கந்தர்வ நாடி'யின் கருத்து.