காவல்துறை அதிகாரி ஒருவர் நாடியில் பலன்கேட்க வந்திருந்தார். அவரை அமரவைத்து, "என்ன காரியமாகப் பலன் கேட்க வந்தீர்கள்' என்றேன்.
ஒரு திருடனைப் பற்றிய கேள்வி தான். "நான் பணிபுரியும் காவல் பகுதியில், சுமார் பத்து வருடத்திற்குமுன்பு ஒரு அரசியல்வாதி வீட்டில் திருடு போய்விட்டது என்று, அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவுசெய்து தேடுகின்றோம். எனக்கு முன்பு பணியில் இருந்த இரண்டு அதிகாரிகளும் தேடினார்கள். அவர்கள் மாற்றலாகி, சென்றபின்பு, நான் பதவி ஏற்று ஒரு வருடமாகத் தேடிவருகின்றேன். அந்தத் திருடன் அகப்படுவானா? அவனைப் பிடிக்க வழிகேட்டுதான் அகத்தியரை நாடி வந்துள்ளேன்'' என்றார்.
ஜீவநாடி ஓலையைப் பிரித்துப் படிக்கத் தொடங்கினேன்.
அகத்தியர் ஓலையில் எழுத்து வடிவாகத் தோன்றி பலன்கூறத் தொடங்கினார்.
ஒரு அரசியல் வாதி வீட்டில் பணம் திருடு போய்விட்டது.
அவனைப் பிடிக்க வழிகேட்டு வந்துள்ளான். பணத்தைக் கொடுத்தவன், பணத்தை எடுத்துக்கொண்டு போய்விட்டான். அவன் திருடன் அல்லவே என்றார் அகத்தியர்.
அகத்தியர் கூறுவது புரியவில்லையே என்றார் அவர். எனக்கும்தான் புரியவில்லை என்றேன் நான். இதற்கு அகத்தியர் கூறும் விளக்கத்தை அறிவோம் என்று கூறிவிட்டு ஓலையைத் தொடர்ந்து படித்தேன்.
இந்த அரசியல்வாதி, ஒருவனிடம், அரசு உத்தியோகம் வாங்கித் தருவதாக கூறி, ஐந்து லட்ச ரூபாய் பணம் வாங்கினான். மூன்று வருடங்களாகியும், வேலை வாங்கித் தரவில்லை. பலமுறை, பணத்தைக்கேட்டும் இவன் இன்று தருகின்றேன். நாளை தருகின்றேன் என்று ஏமாற்றிவந்தான். இவன் பிறரிடம் கடன் வாங்கித்தான் அவனுக்கு பணம் கொடுத்தான். பணம் கொடுத்தவர் கள், பணத்தைக் கேட்டு, அவனுக்கு தொல்லை தந்தார்கள். மனம் ஓடிந்த நிலையில், தனது உறவினர் ஒருவனிடம் வருத்த முடன் கூறினான்.
அந்த அரசியல் வாதி வீட்டில், நான் வேலைக்கார னாகச் சேருகின் றேன். அவன் வீட்டில் பணம் வைக்கும் இட மென அனைத் தையும் தெரிந்து கொள்கின்றேன்.
அவர்கள் குடும்பத்துடன் வெளியூர் சென்று தங்கும்போது, "நீ கொடுத்த பணத்தை எப்படியாவது எடுத்து தருகின்றேன்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/siddhar_67.jpg)
அதுவரை பொறுமையாக இரு'' என்று கூறினான்.
இவர்கள் போட்ட திட்டப்படி, உறவினன், வேலையாளாகச் சேர்ந்து வேலை செய்து வந்தான். சுமார் ஆறு மாதகாலம் சென்ற பின்பு, அந்த அரசியல்வாதி, தன் குலதெய்வக் கோவில் விழாவிற்குச் சென்று சில நாட்கள் தங்கிவிட்டான். அந்த சமயத்தில் வேலைக்காரணாக இருந்தவன், பணம் இருக்குமிடத்தை தெரிந்து வைத்திருந்ததால், வீட்டினுள்ளே சென்று, எந்த தடயமும் இல்லாத அளவிற்கு, முன் ஜாக்கிரதையுடன், செயல்பட்டு, கொடுத்தப் பணத்தையும், கடன் வாங்கியவர்களுக்கு தரவேண்டிய வட்டிப் பணத்தையும், கணக்கிட்டு, சுமார் ஏழு லட்ச ரூபாய் மட்டும் எடுத்துவந்து, வேலைக்குப் பணம் கொடுத்தவனிடம் கொடுத்தான்.
அந்தப் பணத்தைப் பெற்று கடனை அடைத்தான். ஆனால் அந்த அரசியல்வாதி, காவல்துறையில், 20 லட்ச ரூபாய் பணமும், 15 பவுன் நகைகளும் திருடு போய்விட்டது என்று புகார் செய்தான். அவன் புகாரை நம்பி, திருடியது பற்றி விசாரணை செய்தார்கள். வீட்டில் எந்த தடயமும் கிடைக்கவில்லை. திருடியவனைத் தேடி வருகின்றார்கள்.
நான் அவரிடம் எவ்வளவு பணம் திருடுபோனது என்று புகார் கொடுத்தார்கள் என்றேன். அகத்தியர் கூறியபடிதான் புகார் கொடுத்தார்கள் என்றார். இருந்தாலும் திருடியது தவறுதானே என்றார்.
இந்த கலியுகத்தில், வாழும் மனிதர்கள், பிறரை ஏமாற்றி, பொருள், சொத்துகளை அபகரித்து வாழ்வார்கள் என்பது விதி. சிலர் ஆன்மிகவாதிகள் என்று கடவுள், குரு, மடம், பீடம், தானம், தர்மம், சாஸ்திரம், சம்பிரதாயம் என்று கூறியும், அரசாள்பவர்கள் மக்கள் நலன், நாட்டு நலன், பொது தொண்டு என்றும், இன்னும் பலவழிகளில் பொய்சொல்லி, பதவி, பணம், சம்பாதித்து வாழ்வார்கள். இங்கு எல்லாரும் திருடர்கள்தான். உண்மையும், நேர்மையும் கலியுக காலத்தில் இருக்காது. இதை எந்த சக்தியாலும் மாற்றமுடியாது என்றார்.
அந்த திருடனைப் பிடிக்கமுடியுமா- முடியாதா? பிடிக்க முடியும் என்றால், அதற்குரிய விவரம், வழிகளைக் கேட்டுக் கூறுங்கள் என்றார் அந்த அதிகாரி.
அவனை இவர்களால் பிடிக்கமுடியாது. அவன் கொடுத்த பணத்தை மட்டும்தான் எடுத்தான். அவன் நேர்மையும், உண்மையும் அவனை காப்பாற்றிவருகின்றது. அவன் அரசு தேர்வெழுதி, தேர்ச்சிபெற்று நேர்மையான முறையில் அரசு உயர் பதவிபெற்று பணிபுரிந்துவருகின்றான். இப்போது இவன், அவனை நெருங்கக்கூட முடியாது. இவன் காற்றில் கை வீசிக்கொண்டு, திருடியது யார் என்று அடையாளம் தெரியாமல், ஆதார இல்லாமல் தேடிக்கொண்டு இருக்கின்றான்.
இவன் என்னை நாடி வந்துள்ளான். இவனுக்கு ஒரு யோசனை கூறுகின்றேன். அந்த வழியில் செயல்படச் சொல். அந்த அரசியல்வாதி, தான் கொடுத்த புகாரை, திரும்பப் பெற்றுக்கொள்வான். அந்த வழக்கை முடித்த பெருமை இவனுக்கு கிடைக்கும் என்றவர், செயல்படவேண்டிய சில வழிமுறைகளைக் கூறிவிட்டு ஓலையில் இருந்து மறைந்தார்.
சித்தர்களும், அவர்களின் சைவ சித்தாந்த கொள்கைகளும், நேர்மை, உண்மை, உழைப்பிற்கு, நியாயத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கும், நீதிக்கு, மனித சட்டங்களுக்கு முக்கியத்துவம் தராது என்பதை புரிந்துகொண்டேன் என்று கூறி என்னிடம் விடைபெற்றுச் சென்றார்.
கலிகாலத்தில், மனித சட்டங்கள், நீதி முறை என்பது வேறு. சித்தர்கள் செயல் படுத்தும், நியாயம் என்பது வேறு என்று நானும் தெரிந்துகொண்டேன்.
செல்: 99441 13267
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2025-05/siddhar-t.jpg)