தற்போது சனிப்பெயர்ச்சி, ராகு- கேது பெயர்ச்சி, குருப்பெயர்ச்சி என பெரிய கிரக பெயர்ச்சிகள் நடந்துள்ளது.
திருக்கணிதப்படி சனி மீனத்திற்கு சென்றுவிட்டார். வாக்கியப்படி சனி இன்னும் கும்ப ராசியிலேயே உள்ளார். ஏப்ரல் 26 அன்று ராகு கும்ப ராசிக்கும், கேது சிம்ம ராசிக்கும் நகர்ந்துவிட்டனர்.
2025 மே 11 அன்று குரு மிதுன ராசிக்கு சென்று அமர்ந்து கொள்வார். செவ்வாய், தற்போது கடக ராசியில் நீசமாக உள்ளார். இவர் ஜூன் 8-ஆம் தேதி சிம்ம ராசிக்கு சென்று, கேதுவுடன் இணைந்துகொள்வார்.
ஆக, அனைத்து கிரகங்களும் ராகு-

ஆக, அனைத்து கிரகங்களும் ராகு- கேதுவுக்குள் உள்ளனர். இதிலும், பெரும் பாவ மற்றும் அசுபக் கிரகங்களான சனி, செவ்வாய், ராகு- கேதுகள் ஒருவருக்கொருவர் சம்பந்தமும் கொள்கிறார்கள். செவ்வாய் தனது 7, 8-ஆம் பார்வைமூலம் சனி- ராகுவுடன் இணைகிறார்.
கால சர்ப்ப தோஷம் என்பது தனி மனிதர்களையே ரொம்ப பாடாய்படுத்தும். வெகு கஷ்டம் தரும். இப்போது உலகம் முழுவதும் இந்த கால சர்ப்ப தோஷம் எனும் இரு பாம்புகளுக்குள் மாட்டிக்கொண்டு உள்ளதை என்னவென்று கூறுவது. இதனால் உலகம் என்ன மாதிரியான விளைவுகளை சந்திக்கும்.
கேது பகவான் இருப்பது சூரியனின் சிம்மத்தில். எனவே அரசியலில் வெகு குழப்பம், நிலையற்ற தன்மை உண்டாகும். ராணுவம், காவல் துறை வெகு சிரமத்தை எதிர்கொள்ளும். விபத்துகள் அதிகரிக் கும்.
செவ்வாய், சனி பார்வை இணைவு ஏற்படுவதால், கொலை, கொள்ளை, தீவிரவாத போக்கு மற்றும் உள்நாட்டு போர் அதிகரிக்கும்.
சனி, ராகு சம்பந்தம், பஞ்சம் பட்டினி ஏற்பட்டு, நிறைய நாடுகளில் இருந்து மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறுவர். இது இயற்கைச் சீற்றங்களால் உண்டாகும்.
சனி- கேது சம்பந்தம், தொழிற்சாலை, தொழிலாளர் கள், உழைக்கும் வர்க்கத்தினரை பிரித்து, துன்பம் கொடுக்கும்.
இப்போதைய கிரகம், 11-ஆமிட ராகு அரசியலையும், 5-ஆமிட கேது அரசாங்கத்தையும் குறிப்பதால் பெரும்பாலும் அரசியல், அரசாங்கம் வெகு குழப்பமடைந்து தள்ளாடும். நிறைய மாற்றங் களை எதிர்கொள்ளும். வெளிநாடுகளில் வசிப்போர், கூடியமட்டும் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது. இது 11-ல் உள்ள ராகுவால் கூறப்பட்டுள்ளது.
உள்நாட்டில் மந்திரி பதவி, அரசாங்கத்தில் உயர் பதவி வகிப்போர் ரொம்ப கவனமாக இருக்கவேண்டும்.
இந்த கால சர்ப்ப தோஷ காலகட்டத்தில், சந்திரன் கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம் என இந்த ராசிகளில் செல்லும்போது கால சர்ப்ப தோஷம் நீங்கிவிடும்.
இப்போது பிறக்கும் குழந்தைகள் அறுவை சிகிச்சைமூலம் பிறந்தால், மருத்துவர்களே ஒரு நல்லநாள் பார்த்துக் கூறும்படி சொல்கிறார்கள். எனவே, இந்த காலகட்டத்தில் லக்னம், ராகு- கேதுக்களுக்கு வெளியே விழுமாறு பார்த்துக்கொள்ளவும். அப்போது கால சர்ப்ப தோஷம் இருக்காது.
2025 ஏப்ரல் 26 முதல் ஜூலை 29 வரை இந்த கால சர்ப்ப தோஷ காலகட்டம் உள்ளது.
இந்த கிரக நிலைக்கு சிவனை வழிபடவும். பைரவரை விளக்கேற்றி வணங்கவும். அனைவரும் கோளறு பதிகம் பாராயணம் செய்யவும். குலதெய்வ வழிபாடு வெகு நன்மை தரும்.