Advertisment

காலசர்ப்ப தோஷம் தீர்க்கும் பரிகாரத் தலம்!

/idhalgal/balajothidam/kalagarpathosam

ஜோதிடத்தில் சர்ப்ப கிரகமான ராகு- கேது மிக முக்கியமானவை. ஒரு மனிதனை பிட்சாதிபதியாகவும் லட்சாதிபதியாகவும் ஆக்கும் தன்மை கொண்டவர் ராகு. "ராகுவைப்போல கொடுப்பாரில்லை; கேதுவைப்போல கெடுப்பாரில்லை' என்று ஜோதிடப் பழமொழி உண்டு. இதன் அர்த்தம் ராகு கொடுத்துக் கெடுக்கும்; கேது கெடுத்துக் கொடுக்கும்.

Advertisment

ஜாதகத்தில் கேது சரியான இடத்தில் இல்லையென்றாலும், வலுவில்லையென்றாலும் ஞானியாக்கும் அல்லது காவியுடை உடுத்தும் அளவுக்குக் கொண்டுசெல்லும். கேது சித்தர்கள், மகான்கள், ஆலய வழிபாடு போன்றவற்றுக்குத் தொடர்பை ஏற்படுத்தக்கூடியவர்.

anjenarபொதுவாக ராகு ஒருவரை குறுக்குவழியில் கோடீஸ்வரனாக்கி, பின்னர் அந்த குறுக்குவழியில் வந்த பணத்தை சமுதாயத்தில் வெளிச்சம்போட்டுக் காண்பித்து, தசைமுடியும் தறுவாயில் தான் கொடுத்த யோகத்தைப் பிடுங்கி விடும் நிலையை சில நேரங்களில் உண்டாக்குவார். ஒருசிலருக்கு ராகு கொடுத்தால், அடுத்துவரும் குரு தசை பாதிப்பு உண்டாகும் நிலையில் சில ஜாதக அமைப்பிருக்கும். உதாரணமாக, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிலிதா ஜாதகத்தில் மிதுன லக்னத்திற்கு பதினொன்றாம் இடத்தில் இருக்கும்பொழுது ராகு பல யோகங்களைக் கொடுத்தார். அடுத்து வந்தது குரு தசை. மிதுன லக்னத்திற்கு ஏழாம் இடத்தில் குரு ஆட்சி பெற்று பாதகாதிபதி,

ஜோதிடத்தில் சர்ப்ப கிரகமான ராகு- கேது மிக முக்கியமானவை. ஒரு மனிதனை பிட்சாதிபதியாகவும் லட்சாதிபதியாகவும் ஆக்கும் தன்மை கொண்டவர் ராகு. "ராகுவைப்போல கொடுப்பாரில்லை; கேதுவைப்போல கெடுப்பாரில்லை' என்று ஜோதிடப் பழமொழி உண்டு. இதன் அர்த்தம் ராகு கொடுத்துக் கெடுக்கும்; கேது கெடுத்துக் கொடுக்கும்.

Advertisment

ஜாதகத்தில் கேது சரியான இடத்தில் இல்லையென்றாலும், வலுவில்லையென்றாலும் ஞானியாக்கும் அல்லது காவியுடை உடுத்தும் அளவுக்குக் கொண்டுசெல்லும். கேது சித்தர்கள், மகான்கள், ஆலய வழிபாடு போன்றவற்றுக்குத் தொடர்பை ஏற்படுத்தக்கூடியவர்.

anjenarபொதுவாக ராகு ஒருவரை குறுக்குவழியில் கோடீஸ்வரனாக்கி, பின்னர் அந்த குறுக்குவழியில் வந்த பணத்தை சமுதாயத்தில் வெளிச்சம்போட்டுக் காண்பித்து, தசைமுடியும் தறுவாயில் தான் கொடுத்த யோகத்தைப் பிடுங்கி விடும் நிலையை சில நேரங்களில் உண்டாக்குவார். ஒருசிலருக்கு ராகு கொடுத்தால், அடுத்துவரும் குரு தசை பாதிப்பு உண்டாகும் நிலையில் சில ஜாதக அமைப்பிருக்கும். உதாரணமாக, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிலிதா ஜாதகத்தில் மிதுன லக்னத்திற்கு பதினொன்றாம் இடத்தில் இருக்கும்பொழுது ராகு பல யோகங்களைக் கொடுத்தார். அடுத்து வந்தது குரு தசை. மிதுன லக்னத்திற்கு ஏழாம் இடத்தில் குரு ஆட்சி பெற்று பாதகாதிபதி, மாரகாதிபதி, கேந்திராதிபதி என்று மூன்றுவித தோஷங்கள் அடிப்படையில், குரு தசையில் மாரகத்தை குரு ஏற்படுத்திவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேநேரத்தில் தமிழ்த் திரையுலக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜாதகத்தில் சிம்ம லக்னத்திற்கு எட்டில் உள்ள ராகு குருவின் வீடான மீனத்தில் இருந்தாலும் மிகப்பெரிய யோகம் செய்யவில்லை. அடுத்துவந்த ஏழில் உள்ள குரு, சிம்ம லக்னத்திற்கு யோகாதிபதியான குரு தசையில் மிகப்பெரிய முன்னேற்றத்தை அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒருசில ஜாதகங்களில் ராகு கொடுக்கவில்லையென்றால் அடுத்துவரும் குரு தசை கொடுக்கும் தன்மையில் இருக்கும். சில ஜாதகங்களில் கேது கெடுத்தால், அடுத்துவரும் சுக்கிர தசை கொடுக்கும் நிலையில் இருக்கும்.

Advertisment

கேது கொடுத்தால் அடுத்துவரும் சுக்கிர தசை சில ஜாதகங்களில் கெடுக்கும் நிலையில் இருக்கும். ஜோதிடத்தில் ராகு- கேதுவை மையப்படுத்தி கால சர்ப்ப தோஷம், காலசர்ப்ப யோகம் என இருவகை உள்ளன.

காலசர்ப்ப தோஷம் எனப்படுவது ராகு- கேதுவுக்குள் எல்லா கிரகங்களும் லக்னம் உட்பட அடைப்பட்டு இருத்தல். லக்னத்தைவிட்டும், ராகு- கேதுவைவிட்டும் வெளியே கிரகங்கள் இருந்தால் அது காலசர்ப்ப தோஷமல்ல.

காலசர்ப்ப யோகம் என்பது ராகு- கேதுவுக்கு வெளியே கிரகங்கள் இருத்தல்.

"அனுலோமா,' "விலோமா' என்று இருவகையான காலசர்ப்ப யோகங்கள் உள்ளன. லக்னத்திலிலிருந்து ராகுவைப் பின்பற்றி கேது இருந்தால் அது நன்மையான காலசர்ப்ப யோகம். லக்னத்திலிருந்து கேதுவைப் பின்பற்றி ராகு இருந்தால் அது தீமையான காலசர்ப்ப யோகம் என்று ஜோதிடத்தில் சொல்லப்பட்டுள்ளது.

காலசர்ப்ப தோஷமுள்ள ஜாதகத்தில் ராகுவையோ கேதுவையோ சுப ஆதிபத்தியம் பெற்ற குரு பார்த்தால் தோஷம் யோகமாக மாறிவிட வாய்ப்புகள் அதிகம். ஆனால் இதற்குரிய நல்ல யோக தசாபுக்தி நடைமுறையில் வரவேண்டும்.

சிவபெருமான் கழுத்தில் எட்டுவித நாகங்கள் உள்ளன. அவை முறையே பினாகி, அனந்தன், வாசுகி, சங்கன், பத்மன், மகாபத்மன் என்று ஆறு சுப நாகங்களும்; குளிகன், கார்க்கோடகன் என்று இரண்டு அசுப நாகங்களும் ஆகும். அவற்றால் ஏற்படும் யோகம் காலசர்ப்ப யோகம் என்று அழைக்கப்படுகிறது.

லக்னத்தில் ராகு இருக்க, மற்ற கிரகங்கள் ராகு, கேதுக்களிடையே இருக்குமானால் பினாகி யோகமும், சந்திரனுடன் ராகு இருக்குமானால் வாசுகி யோகமும், புதனுடன் ராகு இருக்குமானால் பத்மயோகமும், குருவுடன் ராகு இருக்குமானால் மகாயோகமும், செவ்வாயுடன் ராகு இருக்குமானால் குளிங்க மகாயோகமும், சனியுடன் ராகு இருக்குமானால் கார்க்கோடக சர்ப்ப யோகமும் ஏற்படும். இவையனைத்தும் ராகுவுடன் சேர்ந்த கிரக யோகப் பலன்கள் ஆகும். கேதுவுடன் சேர்ந்த கிரகங்களுக்கு மேற்கண்ட யோக பலன்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

"காலசர்ப்ப தோஷம் உள்ள ஜாதகர்களின் வாழ்க்கை மிகவும் போராட்டமாக இருக்கும். 35 வயதிற்குப் பின்னர் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும், என்று சிலர் கூறுகிறார்கள். இது தவறான கருத்தாகும். நடைமுறையில் நல்ல யோக தசாபுக்தி வந்தால்தான் 35 வயதிற்குப் பின்னர் காலசர்ப்ப தோஷம் காலசர்ப்ப யோகமாக மாறும். இல்லையென்றால் அறுபது வயதானால்கூட வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படாது. போராட்டமயமாக இருக்கும். 35 வயதிற்குமேல் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும் என்பது ஒரு பொதுவிதியாகும். நடைமுறையில் பல ஜாதகங்களில் இது ஒத்துவரவில்லை.

காலசர்ப்ப தோஷம் முன்ஜென்மாவில் பாம்புகளுக்குத் தீங்குசெய்த காரணத்தினாலும், பாம்பைக் கொன்றதாலும், முன்னோர்களுக்கு உரிய தர்ப்பணம் செய்யாமல் விட்டதாலும் ஏற்படுகிறது. இந்த ஜென்மாவில் ஒருசில ஜாதகங்களில் சூரியனுடன் ராகு- கேது சேர்க்கை அப்பா வழியில் ஏற்படும் தோஷமாகவும், சந்திரனுடன் ராகு- கேது சேர்க்கை அம்மா வழியில் ஏற்படும் தோஷமாகவும் அமைகிறது.

இதுபோன்ற எண்ணற்ற காரணங்களால் காலசர்ப்ப தோஷம் ஏற்படும்.

காலசர்ப்ப தோஷம் வேறு; நாகதோஷம் வேறு என்பதை வாசகர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

காலசர்ப்ப தோஷம் உள்ளவர்களுக்கு வாழ்க்கையில் மிகத்தாமதமாக நல்ல காரியங்கள் நடைபெறும். காலசர்ப்ப யோகம் உள்ள ஜாதகர்கள்கூட வாழ்க்கையில் போராடுகிறார்கள். அதற்குக் காரணம் உரிய யோக தசாபுக்தி நடைமுறையில் வரவில்லை என்பதுதான்.

காலசர்ப்ப தோஷம் உள்ளவர்கள் ஸ்ரீமுஷ்ணம் வராகப்பெருமாள், திருப்பாம்புரம், திருநெல்வேலி அருகே கார்க்கோடகநல்லூரிலுள்ள பிரகன் மாதவன், பிரகன் மாதவிப் பெருமாள் கோவில், புதுக்கோட்டை- பொன்னமராவதி சாலையில் உள்ள பேரையூர் நாகநாதர், மைசூர் அருகிலுள்ள நாகமங்களா, கர்நாடகவில் தர்மசாலா அருகில் குக்கே சுப்பிரமணியர், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள இராமானுஜர் திருத்தலம் போன்ற பழைமையான தலத்தில் சர்ப்ப சாந்தி செய்வது சிறந்த பரிகாரமாகும். பரிகாரம் செய்யும்பொழுது பழைமையான- பாடல் பெற்ற திருத்தலத்தில் செய்வதுதான் சிறப்பு.

அதற்குதான் சக்தி அதிகமாக இருக்கும். பரிகாரம் எடுபடும்.

காலசர்ப்ப தோஷம், நாகதோஷம், பித்ரு தோஷம் ராகு- கேதுவினால் ஏற்பட்டால், பல கோவில்கள் இருந்தாலும் விருத்தாசலம் அருகிலுள்ள ஸ்ரீமுஷ்ணம் வராகப் பெருமாள் கோவிலிலில் நாகப் பிரதிஷ்டை செய்வதுதான் சிறந்த பரிகாரமாகும். 108 திவ்ய தேசங்களில் மிக முக்கியமான ஒரு திவ்ய தேசம் ஸ்ரீமுஷ்ணம் ஆகும். இங்கு அரசமரம் உள்ளது. தமிழகத்தில் இந்த கோவிலிலில் மட்டும் கோரைக்கிழங்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.

செல்: 98403 69513

bala051018
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe