Advertisment

கேரள ஜோதிட ரகசியங்கள்! லால்குடி கோபாலகிருஷ்ணன் 141

/idhalgal/balajothidam/kaerala-jaotaita-rakacaiyanakala-laalakautai-kaopaalakairausanana-141

ன்மை, தீமையை குணங்களாக மட்டும் நோக்காமல் ஆற்றல்களாக அறிந்து மாற்றம் செய்வதே சாதனை. விஷம் எங்கிருந்து வந்ததோ அங்கிருந்தே உயிர் காக்கும் அமிர்தமும் வந்தது. எது நோயை தந்ததோ அதிலிருந்தே நோய் தீர்க்கும் மருந்து உருவாகிறது. எந்த கிரகத்தினால் சோதனை உண்டாகிறதோ, அந்த கிரகத்தின் வலிமையை நமக்கு சாதகமாக்கி பயன்பெறலாம் என்பதே கிருஷ்ணன் நம்பூதிரியின் கருத்து. முகத்தில் வரண்ட புன்னகையை சுமந்து பிரசன்னம் பார்க்கவந்தவர். ஒரு இளைஞர். தான் எவ்வளவு முயன்றாலும் கணித பாடத்தில் தேர்ச்சி பெற முடியவில்லையென்றும், அதனால் எதிர் காலமே கேள்விக் குறியாகிவிட்டது என்றும் வருந்தினார். பிரசன்னத்தின்மூலம் பரிகாரத் தைக் கண்டறிந்து வா

ன்மை, தீமையை குணங்களாக மட்டும் நோக்காமல் ஆற்றல்களாக அறிந்து மாற்றம் செய்வதே சாதனை. விஷம் எங்கிருந்து வந்ததோ அங்கிருந்தே உயிர் காக்கும் அமிர்தமும் வந்தது. எது நோயை தந்ததோ அதிலிருந்தே நோய் தீர்க்கும் மருந்து உருவாகிறது. எந்த கிரகத்தினால் சோதனை உண்டாகிறதோ, அந்த கிரகத்தின் வலிமையை நமக்கு சாதகமாக்கி பயன்பெறலாம் என்பதே கிருஷ்ணன் நம்பூதிரியின் கருத்து. முகத்தில் வரண்ட புன்னகையை சுமந்து பிரசன்னம் பார்க்கவந்தவர். ஒரு இளைஞர். தான் எவ்வளவு முயன்றாலும் கணித பாடத்தில் தேர்ச்சி பெற முடியவில்லையென்றும், அதனால் எதிர் காலமே கேள்விக் குறியாகிவிட்டது என்றும் வருந்தினார். பிரசன்னத்தின்மூலம் பரிகாரத் தைக் கண்டறிந்து வாழ்க்கைக்கு வழிகாட்ட வேண்டுமென்று கேட்டுக்கொண்டார். கொட்டம் குளக்கரா ஸ்ரீதேவியை வணங்கி பிரசன்னத்தைத் துவக்கினார் கிருஷ்ணன் நம்பூதிரி. சோழி லக்னம், தனுசில் அமைந்து, மீனத்தில் புதன், சனிபகவானின் சாரத்திலிருந்தது.மகரத்திலிருந்த சனிபகவானின் மூன் றாம் பார்வையும் பாதிப்பைக் காட்டியது.கணித பாடத்திற்கு அதிபதியான புதனும் நான்காமிடமும் பாதிக்கப் பட்டதால் மறதியும் படிப்பில் தடையும் உண்டானதை அறியமுடிந்தது. புத பகவானின் பரிகார ஸ்தலமாக விளங்கும், திருவெண்காடு சென்று பரிகாரம் செய்தால் தோஷம் நீங்கும் என்ற உபாயம் சொல்லப்பட்டது. பரிகாரத் தால் பலன் கிடைத்தது.

Advertisment

d

கேரள ஜோதிடத்தின் சிறப்பு

ஜனன ஜாதகம் இல்லாதவர்களுக்கு பிரசன்ன லக்னத்தின் உதவியால் ஜனன ஜாதகத்தை கணிக்கும் முறையே நஷ்ட ஜாதக கணிதம். பிரசன்னம் பார்க்க வருபவரின் ஜாத கத்தைப் பார்க்காமலே அவர் ஜாதகத்தை வரையக்கூடிய திறமையே கேரள ஜோதிடத் தின் சிறப்பு. பிரசன்ன காலத்து ஹோரையைக் கொண்டு ஜாதகரின் லக்னத்தையும் ஹோரா லக்னத்தைக்கொண்டு உத்ராயணத்தில் பிறந் தாரா? தட்சணாயனத்தில் பிறந்தவரா என் பதை அறியமுடியும். உத்தராயணம் அல்லது தட்சிணாயனம் என்ற முடிவுக்கு வந்த பின்னர் அந்த ஆறு மாதங்களில் எந்த ருதுவில் பிறந்தார் என்பதை பிரசன்ன லக்ன திரேக் காணத்தின்மூலம் அறியலாம். திரேக்காணத் தின் முதல் ஐந்து பாகைகளுக்குள் லக்னம் உதயமானால் ஒரு ருதுவின் முதல் மாதத்திலும், இரண்டாவது ஐந்து பாகைகளுக்குள் லக்னம் உதயமானால் அந்த ருதுவின் இரண்டாவது மாதத்திலும் பிறந்ததாக அறியலாம். லக்ன திரேக்காணத்தின் பாகை கலை விகலையைக் கணக்கிட்டு, ஜாதகரின் பிறந்த தேதியை அறியமுடியுமென்பதே கேரள ஜோதிடர்களின் கருத்து.

களவுபோன பொருள் கிடைக்குமா?

கேள்வி: என் வீட்டில் வைத்திருந்த விலையுர்ந்த நகைகள் களவாடப் பட்டது. நகைகள் மீட்க்கப்படுமா? பரிகாரம் உண்டா?

(எண்- 45; உத்திரம்- 1; ராசியாதிபதி- சிம்மம்; நட்சத்திராதிபதி- சூரியன்).

* சோழி லக்னத்திற்கு பன்னிரண்டா மிடத்தில் லக்னாதிபதியாகிய சூரியனிருப்பது கைப்பொருள் இழப்பைக் காட்டுகிறது.

* "சிம்மம்' பிரசன்ன லக்னமாவதால், உறவுகளே திருடி இருப்பது உறுதியாகிறது.

* சோழி லக்னம், லக்ன பாதகாதிபதியாகிய செவ்வாய், லக்னத்திலேயே இருப்பதால் திருடியவர் வீட்டிற்கு அருகில் உள்ளார்.

* கேது பாதக ஸ்தானத்தை பார்வையிடு வதால், திருடியவருக்கு தண்டனை கிடைப் பது உறுதி.

* சனிபகவானின் பார்வை சோழி லக்னத் தில் பதிவதால், பொருள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும்.

* சூரியன் தனுசு ராசியில் பிரவேசிக்கும் காலத்தில், களவுபோன பொருள் கிடைக்கும்.

குருவின் பார்வை லக்னத்தில் பதிவதால், பரிகாரத்தாலும் கடவுளின் கருணையாலும் பலன் கிடைக்கும். களவுபோன பொருள் மீட்கப்படும்.

பரிகாரம்

மதுரை அழகர் கோவிலில் காவல் தெய்வ மாக அருள்புரியும், பதினெட்டாம்படி கருப்பு சாமியை வழிபட்டால் களவுபோன நகைகள் திரும்பக் கிடைக்கும்.

Advertisment
bala290923
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe