Advertisment

கேரள ஜோதிட ரகசியங்கள்! (96)

/idhalgal/balajothidam/kaerala-jaotaita-rakacaiyanakala-96

"தீதும் நன்றும் பிறர் தர வாரா' என்பதுதான் மனித வாழ்க்கையின் அடிப் படை உண்மை. ஒருவரை ஆராயாது தேர்ந்தெடுப்பதும், தேர்வு செய்து பின் சந்தேகப்படுதலும், நீங்காத துன்பத்தைக் கொடுக்கும் என்ற உலகப் பொதுமறையின் கருத்தை ஜோதிடத் தில் பொருத்திப் பார்த்தார் கிருஷ்ணன் நம்பூதிரி. ஒரு ஜாதகத்தில் திரிகோணத் தின் தொடர்புகள் விதியின் பிடியிலிருந் தாலும், கேந்திரங்கள் மதியின் (மனம்) ஆளுகைக்கு உட்பட்டவை. ஒருவர் தன் தந்தையையும், தன் மகனையும் தேர்ந் தெடுக்க முடியாது. ஆனால், கல்வி, மனைவி, தொழில் போன்றவற் றைத் தேர்தெடுக்க முடியும். அவ்வாறு தேர்வுசெய்வதில் நிகழும் தவறே வாழ்க்கையில் துன்பத்தைத் தருகிறது.

Advertisment

குழப்பம் குடிகொண்டிருந்த முகத்துடன் ஒரு இளஞர் பிரசன்னம் பார்க்க வந்திருந்தார். தனக்கு காதல் திருமணமாகி மூன்று மாதங்களேயானதாகவும்,

"தீதும் நன்றும் பிறர் தர வாரா' என்பதுதான் மனித வாழ்க்கையின் அடிப் படை உண்மை. ஒருவரை ஆராயாது தேர்ந்தெடுப்பதும், தேர்வு செய்து பின் சந்தேகப்படுதலும், நீங்காத துன்பத்தைக் கொடுக்கும் என்ற உலகப் பொதுமறையின் கருத்தை ஜோதிடத் தில் பொருத்திப் பார்த்தார் கிருஷ்ணன் நம்பூதிரி. ஒரு ஜாதகத்தில் திரிகோணத் தின் தொடர்புகள் விதியின் பிடியிலிருந் தாலும், கேந்திரங்கள் மதியின் (மனம்) ஆளுகைக்கு உட்பட்டவை. ஒருவர் தன் தந்தையையும், தன் மகனையும் தேர்ந் தெடுக்க முடியாது. ஆனால், கல்வி, மனைவி, தொழில் போன்றவற் றைத் தேர்தெடுக்க முடியும். அவ்வாறு தேர்வுசெய்வதில் நிகழும் தவறே வாழ்க்கையில் துன்பத்தைத் தருகிறது.

Advertisment

குழப்பம் குடிகொண்டிருந்த முகத்துடன் ஒரு இளஞர் பிரசன்னம் பார்க்க வந்திருந்தார். தனக்கு காதல் திருமணமாகி மூன்று மாதங்களேயானதாகவும், அதற்குள் மணவாழ்வில் பிரிவு வந்து விட்டதாகவும் தெரிவித்தார். ஜாதகப் பொருத்தம் பார்க்காமல் திருமண வாழ்வில் நுழைந்ததால் இந்த பிரச்சினை வந்ததோ என்ற அச்சத்தில் இருப் பதாகத் தெரிவித்தார். பரிகாரத்தால் இந்த பிரச்சினை சரியாகுமா என்பதைத் தெரிந்து கொள்ளவே பிரசன்னம் பார்க்க வந்திருந்தார். ஜாதகப் பொருத்தத்தைப் பார்க்காது செய்த திருமணம் வருத்தத்தைத் தருமென்பது உண்மை யானது. சூரக்கோடு பகவதியை வணங்கி பிரசன்னத் தைத் துவக்கினார் கிருஷ்ணன் நம்பூதிரி.

kj

சோழி லக்னம், ஐந்தாமிடம், ஏழாம் பாவகங் களைத் தொடர்புகொண்டிருந்ததால் காதல் திருமணத்தால் வந்த பிரச்சினை என்பது தெளிவானது. ஏழாம் வீட்டில் சூரியன், சந்திரன், செவ்வாய் மூவரும் இருந்ததால் திருமண வாழ்வில் புயல் வீசுவதைக் காணமுடிந்தது. ஆனாலும் சுக்கிரன் நல்ல விதத்தில் சுபத்தன்மை பெற்று, ஏழாம் வீடும் குரு பார்வை பெற்றதால், பிரச்சினை சுமூகமாக முடியுமென்ற ஆறுதல் கிடைத்தது. சங்கரன்கோவில் கோமதியம்மனை வழிபட்டால் பிரிவு நீங்குமென்ற பரிகாரம் சொல்லப்பட்டது. பரிகாரத்தால் இரு மனமும் இணைந்ததால், திருமண வாழ்க்கை இனித்தது.

கேரள ஜோதிடத்தின் சிறப்பு

ஒரு ஜாதகத்தில் தசாநாதன் சாதகமாக இருந்தாலும், அந்த தசை முழுவதும் நல்ல பலன்களே நடக்குமென்று சொல்லமுடியாது. நடப்பு தசாநாதனுக்கு போதகன், பாசகன், காரகன் மற்றும் வேதகனைக் கண்டறிந்து, அதற்கேற்ப பலனுரைப்பதே கேரள ஜோதிடத்தின் சிறப்பு.

பாசகன்: கிரகம் தரவேண்டிய பலன்களை இருமடங்கு கூடுதலாகக் கிடைக்க வைப்பவர். போதகன்: தன்னுடைய பலன்களையும் சேர்த்துக் கொடுப்பவர். காரகன்: முன் ஜென்ம கர்மப் பலன்களை அளிக்க காரணமாக இருப்பவர். வேதகன்: கிரகம் தரவேண்டிய பலன்களில் தடைகளைக் கொடுப்பவர். சூரிய தசையில், பாசகன்- சனி; போதகன்- செவ்வாய்; காரகன்- குரு; வேதகன்- சுக்கிரன். இந்த நால்வரில் வேதகன் மட்டும் பலம்பெறக்கூடாதென்பதே கேரள ஜோதிடர்களின் கருத்து.

அரசியலில் செல்வாக்கு கிடைக்குமா?

கேள்வி: நான் பல ஆண்டுகளாக, ஒரு அரசியல் கட்சியில் உறுப்பினராக உள்ளேன். தற்போது எனக்குப் புதிய பொறுப்பும், பதவியும் கிடைத்துள்ளது. எதிர் காலத்தில் எனக்கு அரசியலில் செல்வாக்கு கிடைக்குமா?

(எண்-28; புனர்பூசம்-4; நட்சத்திராதிபதி- குரு; ராசியாதிபதி- சந்திரன்.)

Advertisment

ff

* சோழி லக்னமும் பிரசன்ன காலத்து லக்னமும் குருவின் ஐந்தாம் பார்வையைப் பெறுவது சிறப்பு.

* கடகம் லக்னமாகி, சந்திரன் பத்தாமதிபதியாகிய செவ்வாயோடு பத்தாமிடத்தில் இணைவது ராஜயோகத்தைக் காட்டுகிறது.

* லக்னத்தில் சூரியன் இருப்பதால், ஜாதகர் வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைவார் என்பது உறுதி.

* ஒன்பதாமதிபதி ஆட்சிபலம் பெற்று லக்னத் தைப் பார்ப்பது சுபமங்கள யோகமாகும்.

* பத்தில் ராகு இருப்ப தால் எதிர்காலக் கனவுகள் நிச்சயமாக நிறைவேறிவிடும். குறுகிய காலத்தில் நிறைய வெற்றியைப் பெறலாம்.

* ஆறாமதிபதி ஒன்பதாமிடத்தில் இருப்பதால் கடுமையான மாற்றங்களையும் எதிரிகளின் சூழ்ச்சியையும் சமாளிக்க வேண்டிவரும். ஆனாலும் முடிவில் வெற்றி கிடைக்கும்.

* மகரத்தில் அமரும் சனிபகவானின் ஏழாம் பார்வை லக்னத்தில் பதிவதால் கடுமையான போட்டிகளை சமாளிக்கவேன்டிய சூழ்நிலை உருவாகும்.

பரிகாரம்

திருச்செந்தூரில், சத்ரு சம்ஹார ஹோமம் செய்தால் அரசியலில் வெற்றிபெறலாம். பழனி தண்டாயுதபாணியின் ராஜ அலங்காரத்தை தரிசித்தால் வெற்றியும் புகழும் உண்டாகும். சனிக்கிழமையில் வரும் பிரதோஷ தினத்தில் சிவனுக்கு வில்வ இலைகளால் அர்ச்சனைசெய்து வழிபடலாம்.

(தொடரும்)

செல்: 63819 58636

bala181122
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe