கேரள ஜோதிட ரகசியங்கள்! (134)

/idhalgal/balajothidam/kaerala-jaotaita-rakacaiyanakala-134

பூவில் தேன் நிறைந்துள்ளது என்றாலும், தேனிக்கள் மூலமாகவே தேனை பெறவேண்டியுள்ளது. கடலில் கரிப்பு சுவையுள்ள நீர் பொங்கி வழிந்தாலும் அதை உண்ணும் நீராக மாற்ற மேகங் கள் தேவைப்படுகின்றன. அதுபோல், ஒரு ஜாதகத்தில் பல ராஜயோக அமைப்பு களிருந்தாலும், அந்த யோகங்களை, ஜாதகர் அனுபவிக்க செய்வது, பாக்கியாதி பதியாகிய, ஒன்பதாம் வீட்டின் அதிபதி யென்பதே கிருஷ்ணன் நம்பூதிரியின் கருத்து. பிரசன்னம் பார்க்கவந்தவர் வாழ்ந்து கெட்டவர் என்பதை நடையின் மிடுக்கும் முகத்தின் சோகமும், பிரதிபலித் தன. தான், செல்வசெழிப்பான குடும்பத் தில் பிறந்ததாகவும், தன் மூதாதையர் சொத்து உறவினரால் அபகரிக்கப் பட்டதாகத் தெரிவித்தார். அது தொடர் பான வழக்கு தனக்கு சாதகமாகுமா? என்பதையறியவே, பிரசன்னம் பார்க்க வந்திருந்தா

பூவில் தேன் நிறைந்துள்ளது என்றாலும், தேனிக்கள் மூலமாகவே தேனை பெறவேண்டியுள்ளது. கடலில் கரிப்பு சுவையுள்ள நீர் பொங்கி வழிந்தாலும் அதை உண்ணும் நீராக மாற்ற மேகங் கள் தேவைப்படுகின்றன. அதுபோல், ஒரு ஜாதகத்தில் பல ராஜயோக அமைப்பு களிருந்தாலும், அந்த யோகங்களை, ஜாதகர் அனுபவிக்க செய்வது, பாக்கியாதி பதியாகிய, ஒன்பதாம் வீட்டின் அதிபதி யென்பதே கிருஷ்ணன் நம்பூதிரியின் கருத்து. பிரசன்னம் பார்க்கவந்தவர் வாழ்ந்து கெட்டவர் என்பதை நடையின் மிடுக்கும் முகத்தின் சோகமும், பிரதிபலித் தன. தான், செல்வசெழிப்பான குடும்பத் தில் பிறந்ததாகவும், தன் மூதாதையர் சொத்து உறவினரால் அபகரிக்கப் பட்டதாகத் தெரிவித்தார். அது தொடர் பான வழக்கு தனக்கு சாதகமாகுமா? என்பதையறியவே, பிரசன்னம் பார்க்க வந்திருந்தார். திரிச்சாம்பரம் பகவதியைத் தொழுது, பிரசன்னத்தைத் துவக்கினார் கிருஷ்ணன் நம்பூதிரி. பிரசன்ன லக்னத் திற்கு ஒன்பதாமிடத்தில் மாந்தி, சனி, சந்திரன் அமைந்து, மோசமான பலனைக் காட்டியது. செவ்வாய்க்கு ராகு தொடர்பு, சொத்தில் ஏற்பட்டுள்ள வில்லங்கத்தைத் தெளிவாக்கியது. மூன்றாமதிபதி யும், புதனும் பலவீனமானதால், போலி பத்திரத்தால் உறவினர் நிலத்தை அபகரித்தது தெரிந்தது. பாக்கிய ஸ்தானமும், பாக்கியாதிபதியும் கெட்டுவிட்டால், அனுபோக பாத்தியதை இல்லாமல்போகும் என்ற உண்மை தெரிவிக்கப்பட்டது. கும்பகோணம் அருகேயுள்ள திருநரையூர் எனும் ஸ்தலத் தில் சனிபகவானையும், மாந்தியையும், பரிகார பூஜை செய்து வழிபட்டால் மாந்தி தோஷம் விலகும். அதனால், சொத்து திரும்பக் கிடைக்குமென்ற பரிகாரம் சொல்லப்பட்டது. பரிகாரம் பலித்தது. பிரசன்னம் பார்க்க வந்தவருக்கு, சொத்தும், வஞ்சித்த உறவினருக்கு தண்டனையும் கிடைத்தது.

KJ

கேரள ஜோதிடத்தின் சிறப்பு

திருஷ்டம் என்றால் கண்களுக்கு தெரிவது. அதிருஷ்டம் என்பது கண்களுக்கு தெரியாதது. எதிர்பாராத நிகழ்வுகள் எல்லாம் அதிருஷ்டம் அல்லது துர் அதிருஷ்டம்தான். ஒரு ஜாதகத்தில் எட்டாம் பாவம் மட்டுமே எதிர்பாராத சம்பவங்களைச் சுட்டிக்காட்டும். எட்டாம் பாவத்தை ஆராய்ந்து எதிர் பாராத சம்பவங்களையறிவதே கேரள ஜோதிடத்தின் சிறப்பு.

எட்டு, பன்னிரண்டாம் பாவங் களுடன் செவ்வாய், சனி சர்ப கிரகங் களின் தொடர்புகோர விபத்தைக் குறிக்கும்.

எட்டு, இரண்டு, பதினோராம் பாவங்களுடன் யோகாதிபதிகளின் இணைவு எதிர்பாராத வருவாயைக் காட்டும். திடீர்பயணம், மரபு மீறுதல், புதையல் கிடைப்பது. பூத பிரேதத்தால் ஏற்படும் தொல்லைகள், செய்வினை போன்றவற்றை எட்டாம் பாவத்தை, மூல பாவமாகக்கொண்டே அறியமுடியும். பிரசன்ன ஆரூடத்தில், காணாமல்போன மனிதர் அல்லது பொருட்களைப் பற்றிய விவரங்களையறிய எட்டாம் பாவமே ஆராயப்படுகிறது. ஒரு ஜாதகத்தில், லக்ன பாவத்திற்கு சமமான முக்கியத்துவம் வாய்ந்தது எட்டாம் பாவம் என்பதே கேரள ஜோதிடர்களின் கருத்து.

வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்குமா?

கேள்வி: வெளிநாடு சென்று உயர் கல்விபெற விரும்புகிறேன். அதற்கு வாய்ப்பு உண்டா?

(எண்- 58; ஸ்வாதி- 2; ராசியாதிபதி- சுக்கிரன்; நட்சத்திராதிபதி- ராகு.)

ப்சோழி லக்னம், ராகுவின் நட்சத்திரத்திலமைவது வெளிநாட்டு பயணத்தைக் குறிக்கிறது.

* பன்னிரண்டாம் பாவாதிபதியாகிய புதன் ஆட்சி மற்றும் உச்சம் பெறுவது வெளிநாட்டு பயணத்தை உறுதி செய்கிறது.

* கல்விக்கு காரகனாகிய புதன், ஒன்பது, பன்னிரண்டாம் வீடுகளில் ஆட்சிபெறுவது, உயர் கல்விக்காக, வெளிநாடு செல்லும் வாய்ப்பை பிரகாசமாக்குகிறது.

* நீர் கிரகமான சந்திரன், நீர் ராசியில் இருப்பதால் வெளிநாடு செல்லும் யோகம் உண்டு.

* ஒன்பது, பன்னிரண்டாம் வீட்டதிபதியாகிய புதனின் நட்சத்திரத்தில் சந்திரன் சஞ்சரிப்பது, கூடுதல் சிறப்பு.

* சோழி லக்னத்தின் பாதகாதிபதியாகிய சூரியன் லக்னத்திலிருப்பது அரசாங்கத்தால் வரும் தடையைக் காட்டுகிறது. கடவுசீட்டு பெறுவதில் தாமதம் ஏற்படலாம்.

* பரிகாரத்தால் தடை நீங்கும்.

பரிகாரம்

மதுரையில் அருள்பாலிக்கும், இம்மையிலும் நன்மை தருவார் கோவிலுக்கு சென்று வழிபட்டால், வெளிநாடு செல்லும் எண்ணம் நிறைவேறும்.

(தொடரும்)

செல்: 63819 58636

bala110823
இதையும் படியுங்கள்
Subscribe