Advertisment

கேரள ஜோதிட ரகசியங்கள்! (120)

/idhalgal/balajothidam/kaerala-jaotaita-rakacaiyanakala-120

ட்சத்திரங்களைக் காண இருள் தேவைப் படுகிறது. வாழ்க்கையில் அருள் குறைந்து இருள் சூழும்போதுதான் கிரகங்களையும், நட்சத்திரங்களையும் ஆராயும் ஜோதிடம் அவசியமாகிறது. நோய்தான் மருத்துவரை அறிமுகப்படுத்துகிறது. மனக் கவலைதான், ஜோதிடரை நாடிச்செல்ல வைக்கிறது. வெற்றி, தன் முயற்சியால் வந்ததென்றும், தோல்விக்கு விதியே காரணமென்றும் எண்ணுவதே, மனித இயல்பு. பழியைச் சுமப்பதே, விதியின் விதியானது. ஆபத்து வரும் முன் காப்பாற்றிக் கொள்ளாமல், வந்தபின்,பரிகாரம் தேடுபவர் களை எண்ணி கவலைப்பட் டார்,கிருஷ்ணன் நம்பூதிரி.

Advertisment

பிரசன்னம் பார்க்க வந்தவர் ஒரு அரசியல்வாதி. ஜாதகப் பொருத்தமும், முகூர்த்த நாளும் பார்க்காமல் தன் மகளுக்குத் திருமணம் செய்து வைத்ததாகவும், திருமணத்திற்குப்பின்,தன் மகள், தீரா

ட்சத்திரங்களைக் காண இருள் தேவைப் படுகிறது. வாழ்க்கையில் அருள் குறைந்து இருள் சூழும்போதுதான் கிரகங்களையும், நட்சத்திரங்களையும் ஆராயும் ஜோதிடம் அவசியமாகிறது. நோய்தான் மருத்துவரை அறிமுகப்படுத்துகிறது. மனக் கவலைதான், ஜோதிடரை நாடிச்செல்ல வைக்கிறது. வெற்றி, தன் முயற்சியால் வந்ததென்றும், தோல்விக்கு விதியே காரணமென்றும் எண்ணுவதே, மனித இயல்பு. பழியைச் சுமப்பதே, விதியின் விதியானது. ஆபத்து வரும் முன் காப்பாற்றிக் கொள்ளாமல், வந்தபின்,பரிகாரம் தேடுபவர் களை எண்ணி கவலைப்பட் டார்,கிருஷ்ணன் நம்பூதிரி.

Advertisment

பிரசன்னம் பார்க்க வந்தவர் ஒரு அரசியல்வாதி. ஜாதகப் பொருத்தமும், முகூர்த்த நாளும் பார்க்காமல் தன் மகளுக்குத் திருமணம் செய்து வைத்ததாகவும், திருமணத்திற்குப்பின்,தன் மகள், தீரா நோயில் சிக்கித் துன்புறுவதாகவும் தெரிவித்தார். இதற்குப் பரிகாரமுண்டா என்பதையறியவே பிரசன்னம் பார்க்க வந்திருந்தார். திரிக்காவு துர்க்கையம்மனைத் தொழுது, பிரசன்னத்தைத் துவக்கினார், கிருஷ்ணன் நம்பூதிரி.

Advertisment

hh

சோழி லக்னம், பரணி மூன்றாம் பாதத்தில் அமைந்து, அதன் அதிபதியும், ஏழாம் வீட்டோனுமாகிய சுக்கிரன், அவிட்டத்தில், ஏக நாடி, (பித்த நாடி) பாதக ஸ்தானத்திலிருந்தது. பொருத்தம் பார்க்காமல் செய்யும் திருமணம், வருத்தத்தில்தான் முடியும். நாடிப் பொருத்தம் பார்த்து மணம் முடித்தால் நோய்நொடி இல்லாமல் வாழலாம் என்பதே, நம் முன்னோர்கள் கருத்து. மதுரை மீனாட்சி யம்மன் திருமண வைபவத்தில் தாலி மாற்றிக்கொண்டால் திருமண தோஷம் விலகுமென்ற பரிகாரம் சொல்லப்பட்டது. பரிகாரத்தால், புதுவாழ்வு மலர்ந்தது.

கேரள ஜோதிடத்தின் சிறப்பு

இவ்வுலகில், எதையும், எப்போதும்,எவராலும் ஆக்கவோ, அழிக்கவோ முடியாதென்பதே பொது விதி. அழிவு என்பதை உருமாறுதல் என்றே பொருள் கொள்ளவேண்டும். நாச திரிகோணம் எனப்படும் நான்கு, எட்டு, பன்னிரண்டாம் வீடுகள் தீமை தருமிடங்களாகக் கருதப்படுவது வழக்கம். ஆனால் கேரள ஜோதிடத்தில் இவையே புதிய மாற்றம் தருமிடங்களாகப் போற்றப் படுகின்றன. இதுவே, கேரள ஜோதிடத்தின் சிறப்புமரம், நாற்காலியாக உருமாறும்போது, மரம் அழிவதாகவும், நாற்காலி உருவாக்கப்படுவதாகவும் தோன்றும். பஞ்சபூதங்கள் இணைந்தால் ஜனனம்; பிரிந்தால் மரணம்.

நான்காம் பாவம் உற்பத்தியையும், எட்டாம் பாவம் உற்பத்தியான பொருளை சேமிப்பதையும், பன்னிரண்டாம் பாவம் உற்பத்தியான பொருளை உபயோகிப்பதையும் (நுகர்தல்) குறிக்கும். உபயமே உபயோகமாவதால் பன்னிரண்டாம் வீடு, மீனம் எனும் உபய ராசியில் அமைந்தது. கடகம் (சரம்- நதி- கருப்பை- உற்பத்தி- படைத்தல்), விருச்சிகம் (ஸ்திரம்- அணைக்கட்டு- வாழ்க்கை- பாதுகாப்பு- காத்தல்), மீனம் (உபயம்- நுகர்தல்- மரணம்- தடாகம்- உருமாறுதல்). நான்கு, எட்டு, பன்னிரண்டாம் வீடுகள், காலசுழற்சியின் முக்கியமான ஸ்தானங்கள் என்பதே கேரள ஜோதிடர்களின் கருத்து.

மறுமணம் நடக்குமா?

கேள்வி: எனக்குத் திருமணமாகி மூன்றாண்டுகளில், விவாகரத்தாகிவிட்டது. மறுமணம் நடக்குமா? பரிகாரம் உண்டா?

dd

-இராஜேஸ்வரி, குன்றத்தூர்.

(எண்- 27, புனர்பூசம்- 3, நட்சத்திராதிபதி- குரு, ராசியாதிபதி- புதன்.)

* சோழி லக்னத்திற்கு அதிபதியாகிய புதன், பதினொன்றாம் இடத்திலிருப்பது, மனம் போல் மாங்கல்யம் அமையும் என்பதைக் காட்டுகிறது.

* ஏழாம் அதிபதியும், பாதகாதிபதி யுமாகிய, குரு ஆட்சிபெற்று பத்திலிருப்பது, ஏற்கெனவே, திருமண வாழ்வில் ஏற்பட்ட பிரச்சினையைக் குறிக்கிரது.

* ஒன்பதில் சனி இருப்பதால் மறுமணத்திற்கான வாய்ப்புண்டு.

* மூன்று, ஏழாம் வீட்டு அதிபதிகள் கூடியிருப்பதால் உங்கள் ஆசை விரைவில் நிறைவேறும்.

* குரு பகவான் மேஷத்தில் பிரவேசித்தபின் வாழ்க்கையில் புதிய மாற்றங்கள் உண்டாகும்.

* இரண்டாம் வீட்டதிபதியாகிய சந்திரன் நான்கிலிருப்பதால், வசதியான வரன் அமையும்.

பரிகாரம்

வெள்ளிக்கிழமை, ஒன்பது சுமங்கலிப் பெண்களுக்கு பூஜை செய்து, அவர்களுக் குத் தேங்காய், மஞ்சள், குங்குமம், வெற்றிலை, பாக்கு, ஆடை, தாலிச் சரடு ஆகியவற்றைத் தந்து ஆசிர்வாதம் பெற்றால், சுபகாரியம் விரைவில் நடந்தேறும்.

(தொடரும்)

செல்: 63819 58636

bala050523
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe