ஒரு குடும்பம் கல்வி, கலாசாரம், ஒழுக்கம், பொருளாதாரம் ஆகியவற்றில் சிறந்து விளங்கவேண்டுமானால், அந்த வீட்டுக் குடும்பத் தலைவி குடும்பம் நடத்தும் விதத்தில்தான் அத்தனையும் அடங்கியிருக்கின்றன. இன்று பெண்கள் வேலைக்குச் சென்றுவருவதால், குடும்பத்தை சரிவர நிர்வகிக்க முடியாத சூழல் உள்ளது. பணி செய்யுமிடத்திலும் திணறுகின்றனர். இன்றைய சமூகம் ஆணுக்கு இணையான சுதந்திரத்தைப் பெண்களுக்குத் தந்துள்ளது. பெண் சுதந்திரம் சிலருக்கு நன்மையையும், சிலரது குடும்ப வாழ்க்கைக்குத் தீமையையும் தந்துவிட்டது. அதனால்தான் அன்று "புருஷ லட்சணம் வேலை, தொழில்' என சொன்னார்கள். குடும்ப நிர்வாகமெனில் பெண்கள் என பிரித்து வைத்தனர். இரு வேலையையும் செய்வது, வேலையை மாற்றிக்கொண்டு செய்வதென்பது நடைமுறையில் இருவருக்குமே நன்மை தராது. பழைய வழக்கப்படி, பழைய பழக்க- வழக்கத்திற்கு நம் நாட்டில் ஆண்- பெண் இருவரும் பழக்கப்பட்டு விட்டனர். திடீரென கலாச்சார மாற்றம், மனமாற்றம் நாட்டிற்கே புதிதாகிவிட்டது. அதற்குப் பழக்கப்பட சமூகத்திற்கே இன்னும் கால அவகாசம் தேவைப்படுகிறது.
இன்று ஆண்களுக்கு வேலைகிடைப்பதே கஷ்டமாக இருக்கும் காலத்தில், ஆணுக்கு சிறிய வேலை கிடைத்து, குறைந்த சம்பளம் பெற்றால், கணவனை மனைவி ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. அதிக சம்பளம் வாங்கும் கணவன் வாங்கித்தரும் தங்க நகைகளைவிட, தன் தேவைகளை சுருக்கி மனைவிக்காக வெள்ளி வாங்கித் தரும் அன்பைப் பலரும் உணர்வதில்லை. தகுதிக்குமீறிய ஆசைகளே ஓங்கி ஒலிக்கின்றன. அன்பிற்கு பெரிய மரியாதை இன்று கிடைப்பதே இல்லை. சில மனைவிகள் எவ்வளவு கஷ்டப்பட்டு பணம் கொடுத்தாலும் திருப்தியடைய மாட்டார்கள். ""என்ன பெரிசா வாங்கிக்கொடுத்துட்டே'' என அலட்சியமாகக் கேட்பார்கள். அப்படி ஒரு வாழ்க்கை கிடைத்து வாழும் ஆண் நரகத்தில் வசிப்பதற்கு சமம்.
சில மனைவிகள் "பணம் சம்பாதிக்க வக்கில் லாத திருநங்கை' என கணவனை மட்டமாகப் பேசுவதால், பிள்ளைகளும் தந்தையை மதிப்பதில்லை. தவறு செய்யும் பிள்ளைகளை தந்தையால் கண்டிக்கக்கூட அறுகதையற்ற நிலையை பல இடங்களிலும் காண்கிறோம்.
தன் சொந்த குடும்பத்திற்குள் தன்னை மட்டும் மதிக்கவேண்டுமென ஒரு பெண் நினைத் தால், அந்தக் குடும்பம் ஒருநாள் பெருத்த அவமானத்தைச் சந்திக்கும். தந்தையின் கண்டிப்பு பிடிக்காமல், தன் சுயநலத்திற்காக தாயின் பேச்சைக் கேட்பதுபோல் நடிப்பார்கள். தாய்க்கு இன்று சந்தோஷமாகக்கூட தெரியும். தந்தையை மதிக்காத பிள்ளைகள், பின்னாளில் தாயையும் மதிக்கமாட்டார்கள் என்பதைப் பெண்கள் தாமதமாகவே உணர்வர். சிலர் உணர்வதே இல்லை. அதற்கு முக்கிய காரணம் கணவனைப் பிடிக்கவில்லை; அவ்வளவுதான்.
சிலர் கணவன் கண்டிக்கும்போதெல்லாம் தடுத்துவிட்டு, பிள்ளைகள் கெட்டு நிற்கும் போது, கணவரைப் பார்த்து, ""எல்லாம் உங்களால்தான். நீங்க நல்லா இருந்திருந்தா எனக்கு எல்லாம் நல்லா அமைஞ்சிருக்கும்'' என புலம்புவார்கள். கடைசியில் யாருக்கு நஷ்டம்? எல்லா பெற்றோர்களின் எதிர்பார்ப் பும் பிள்ளைகளின் வாழ்க்கை நன்றாக அமைய வேண்டும் என்பதுதான். சின்னச்சின்ன குடும்பச் சண்டைகள்தான் பிள்ளைகள் வாழ்க்கை கெட காரணமாகிறது. ஜாதகத்தில் இரண்டா மிடம் கெட்டுவிட்டால் இப்படிப்பட்ட அத்தனை அவலங்களும் நடந்தேறும்.
இரண்டாமிடம் கெட்டவர்கள் அனைவருக்கும் கெட்ட பலன்கள் முழுதாக நடந்து குடும்பம் கெடுவதில்லை. இரண்டில் பாவ கிரகம், பார்வை, சேர்க்கை பெற்று வலுத்தால், கணவன்- மனைவிக்கிடையே ஏற்படும் ஈகோ, பிள்ளைகள் வாழ்க்கையைக் கேள்விகுறியாக மாற்றிவிடும். எவ்வளவு கெட்ட பழக்கமுள்ள ஆண்மகனையும், பெண் நினைத்தால் தன் அன்பால் மிகச்சிறந்த மனிதனாக மாற்றமுடியும். ஆனால், ""ஏன், பெண்கள்தான் இறங்கிவர வேண்டுமா? ஆண் என்றால் கொம்பா முளைத்திருக்கிறது'' என பேசினால், அந்தப் பெண்ணின் குடும்ப வாழ்க்கைதான் கெடும்.
பெண்கள் தன் வாழ்க்கையை சந்தோஷமாக வைத்துக்கொள்ள வேண்டுமானால் தானேதான் முயற்சி செய்துகொள்ளவேண்டும்.
திருமணத்திற்குமுன்பு, கழுத்தில் தாலியேறும் கடைசி நிமிடம்வரை நமக்கான சரியான நபரை மணம் முடிக்க நேரமிருக்கிறது. சூழ்நிலை காரணமாக அதைத் தவறவிட்டால், நடந்தபின் அதில் சந்தோஷமாக வாழ முயற்சிக்கவேண்டுமே தவிர, விடுபட நினைத்தால் விபரீதமே நடக்கிறது. பதினோராமிடம் வலுத்து இரண்டாவது கணவனை அமைத்துக்கொண்டால், நேரம் கிடைக்கும்போதெல்லம் முதல் கணவரை ஒப்பிட்டே பேசிக் கொல்வார்கள். அதேநிலைதான் ஆணுக்கும். திரும்பத் திரும்ப திருமணம் செய்யமுடியாதென் பதால் சகித்து வாழ நேரும். "கிடைத்த வாழ்க் கையை நாமே கெடுத்துக் கொண்டோம். இவனுக்கு அவன் பரவாயில்லை' என தோன்றிவிடும். அடுத்தடுத்து எத்தனை ஆணுடன் பழகினாலும், அன்பை எதிர்பார்த்தாலும் அதே அனுபவம் தான் கிடைக்கும். இதனால் சமூக அந்தஸ்தையும் இழந்து, குடும்பத்திலும் நிம்மதியைத் தொலைக்க நேரும். ஆண்களை விட பெண்களே இதில் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.
இரண்டாமிடம்
பெண்கள், "இவரைத் திருமணம் செய்ததால்தான் கஷ்டப்படுகிறேன்' என்றும், ஆண்கள், "இவளைத் திருமணம் செய்ததால்தான் என் சந்தோஷம், என் லட்சியம் போச்சு' எனவும் நினைப்பதே பிரச்சினைக்கு மூலகாரணம். கணவனிடம் அன்பு செலுத்தத் தெரியாத பெண்ணுக்கு ""எச்சரிக்கையாக இரு'' என சொல்லும் அக்கறைகூட ஆணாதிக்கம்தான். தவறு செய்யாத ஆணும் பெண்ணும் இருக்கமுடியாது. பிறரைத் திருத்துவதற்கு முயல்வதால் ஏற்படும் மன உளைச்ச லைத் தவிர்க்கவேண்டுமானால், முதலில் தன்னைத் திருத்திக்கொள்ள வேண்டும். ஆணோ, பெண்ணோ- ஜாதகத்தில் இரண்டாமிடம் கெட்டுவிட்டால் யாரைத் திருமணம் செய்தாலும், மனதிற்குப் பிடிக்காத இம்சையான வாழ்க்கையே கிடைக்கும்.
அதை அனுபவித்தே ஆகவேண்டும் என்பதுதான் உண்மை. அதிலிருந்து விடுபட நல்ல அறிவுரையும் ஆலோசனையும் மட்டுமே தேவை. குடும்பம் தழைத்தோங்க மிக சிறந்த ஒரு உதாரணப் பரிகாரம்...
கணவன் வெளியூருக்குச் சென்றால், பயணத்தைப் பற்றியும், அதன் நோக்கம் பற்றியும் எல்லாம் தெரிந்திருந்தாலும், அடிக்கடி அலைபேசியில் தொடர்புகொண்டு, "சரியான நேரத்துக்குப் போனீங்களா? நீங்க தங்கற இடத்துல தொந்தரவு இருக்கா? உங்களுக்கு ஒத்துக்கக்கூடிய உணவு கிடைக்கி றதா? பணத்தை மிச்சபடுத்துறேன்னு பட்டினியா இருந்திடாதீங்க. போக்குவரத்துல கவனமாக இருங்க. நேரத்திற்கு சாப்பிடுங்க. போன காரியத்தில வெற்றி, தோல்வின்னு எது நடந்தாலும் பரவாயில்லை. வேலை முடிஞ்சதும் பாதுகாப்பா வந்துசேருங்க. திடீர் தேவை எதுவா இருந்தாலும் கேளுங்க. பண விஷயத்தில கவனமா இருங்க. எதுக்கும் மனச விட்டுறாதீங்க. நான், குழந்தைங்க உங்களுக்காக வீட்டில் காத்திருக்கோம்' என, கணவனை அச்சுறுத்தாமல் அன்போடு எச்சரிக்கை செய்து, அரவணைத்துச் செல்கின்ற மனைவியாக இருந்தால் கணவனால் துரோகம் செய்யமுடியாது. ஆண் என்பவன் பெண்ணிலிருந்து வந்தவன்; பாசம் காட்டினால் சகலத்தையும் ஒப்படைப்பவன் என்பதைப் பெண்கள் தெரிந்துகொள்ளவேண்டும். "சாதாரண பயணம்தானே... இதற்குப்போய் ஏதோ போருக்குப்போன கணவனிடம் அன்பு செலுத்துவதுபோல் பேசவேண்டுமா? எனக்கு அப்படியெல்லாம் பேசவராது. நான் இப்படிதான்' என தொலைக்காட்சித் தொடரில் வரும் கற்பனைக் கதாநாயகிபோல் தன்னை நேர்மையானவராக எண்ணிக் கொண்டு பேசினால், இல்லறத்தில் கணவனை இழக்கநேரும். கணவனை சந்தேகப்படவேண்டும்- சந்தேகப்படுவது தெரியாமல்.
கணவன் வெளியூருக்கு வேலை விஷயமாகக் கிளம்பும்போது, "குடும்பத்தை விட்டு ஜாலியாக கிளம்பியாச்சா?' என்பதில் தொடங்கி, விதண்டவாத வார்த்தைகளைக்கொட்டி வழியனுப்பி வைத்துவிட்டு, சென்ற இடத்தில் கணவனின் நிலையறியாமல் மேலும் மேலும் புண்படும் வார்த்தைகளால் அலைபேசியில் அர்ச்சனைசெய்து, சென்ற காரியத்தைப் பற்றிய எந்த விவரமும் அறியாமல், "நீங்க எதைத் தொட்டாலும் விளங்காதுன்னு தெரியும்; சிக்கிரம் வந்துசேருங்க' என பேசினால், நல்ல மனதுள்ள- நல்ல பழக்கவழக்கம் கொண்டவனாக இருந்தாலும் துரோகம் செய்ய நினைப்பான். கெட்ட பழக்க வழக்கத்திற்கு அடிமையாகிவிடுவான். வார்த்தையால் வாழ்க்கை இழந்தவர்கள் இரண்டாமிடம் கெட்ட பெண்கள்தான்.
பெண்கள் நினைத்தால் அனுசரித்தும் பேசலாம்; எடுத்தெறிந்தும் பேசலாம். தன் வாழ்க்கையைத் தக்கவைத்துக் கொள்ளவும், கணவனின் அன்பைப்பெறவும் பெரிய தியாகமெதுவும் செய்யத் தேவையில்லை.
அக்கறையாய் இரண்டு வார்த்தை பேசினால் போதும்; கணவன் வசியமாகிவிடுவான். எல்லாரும் எல்லா நேரமும் யோக்கியர்களாக இருக்கமுடியாது. தவறு செய்யாத மனிதன் இருக்கிறான் என்றால், வாய்ப்பு கிடைக்காதவ னாகதான் இருப்பான். தவறுசெய்ய நேரம் வழங்காமல், விட்டுக்கொடுத்தும், சகித்தும், கண்டித்தும் அன்பால் தன் கணவனைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளும் திறமையை வளர்த்துக்கொண்டால்தான் குடும்பம் சிறப்பாக இருக்கும்.
பெண்கள், ஆண்களைவிட புரிந்து கொள்ளும் தன்மை, தாய்மை உள்ளம் கொண்டவர்கள் என்பதால்தான் எப்போதும் குடும்பப் பிரச்சினைகளில் பெண்ணுக்கே அதிக அறிவுரை சொல்கிறார்கள். மற்றவர்களைவிட பெண் பிள்ளைகளுக்கு பெற்றோர்கள்தான் குடும்ப வாழ்க்கைக்குத் தேவையான சரியான அறிவுரை வழங்கவேண்டும். ஆண் கெட்டால் அவனோடு போய்விடும். பெண் கெட்டால் பரம்பரையே நாசமாகிவிடும். ஆணோ பெண்ணோ- தன் வாழ்க்கைத்துணையைத் தனக்கேற்ப மாற்றவேண்டும் அல்லது அவர்களுக்கேற்ப மாறிக்கொள்ள வேண்டும். அப்போதுதான் குடும்பம் தழைத் தோங்கும்.
செல்: 96003 53748