Advertisment

ஜோதிப் பலன்கள் காலம் தவறுவதேன்?

/idhalgal/balajothidam/juristic-benefits-period

ழங்காலங்களில் முனிவர்கள், சித்தர்கள், யோகிகள், தவசீலர்கள் போன்றோர் ஒரு மனி தனைப் பார்த்த நொடியில், "உனக்கு இன்ன காலத்தில், இன்ன நொடியில் இவ்வாறு நிகழும்' என்று கூறிவிட்டு அவர்கள் வழியில் சென்றுவிடுவர். அது நல்லதோ கெட்டதோ- அவர்கள் சொன்னபடியே சொன்ன நொடியில் நடந்துவிடும். இதைப்போன்று சீரடி சாய்பாபா சரிதத்திலும், காஞ்சி மகாபெரியவர் வாழ்க்கை நிகழ்வுகளிலும் நிறைய செயல்கள் காணக் கிடைக்கின்றன.

Advertisment

தற்காலத்தில் ஜோதிடர்கள் மனிதர்களின் ஜாதகத்தை வைத்துக்கொண்டு அதனை ஆராய்ந்து தசாக்காலம், புக்திக்காலம், அந்தர காலம் என பிரித்துக் கணக்கிட்டு, பலன்களைக் கூறுகிறார்கள். பொதுவாக அந்தரம் வரைதான் கணக்கீடு செய்வது வழக்கம். இதனிலும் ஒருபடிமேலாக அந்தரத்தை சூட்சுமம், பிராணன், சித்திரம் என்றும் பிரிக்கலாம்.

ஆக, இதற்கெல்லாம் அடிப்படை மனிதரின் ஜாதகம்தான். ஜாதகம் கணிப்பதற்கு, குழந்தை பிறந்த தேதி, மாதம், வருடம், பிறந்த நேரம், பிறந்த இடம் போன்றவை மிகச்சரியாகத் தேவை.

brama

Advertisment

அக்காலத்தில் சங்கு, மணல் கடிகாரம், நீர் கடிகாரம் போன்றவற்றைப் பயன்படுத்தி நேரத்தைக் குறித்தார்கள். பிறகு கடிகாரப் பயன்பாடு புழக்கத்திற்கு வந்ததால் அதைப்பார்த்து நேரத்தைக் குறித்துக் கொண்டார்கள். இப்போத

ழங்காலங்களில் முனிவர்கள், சித்தர்கள், யோகிகள், தவசீலர்கள் போன்றோர் ஒரு மனி தனைப் பார்த்த நொடியில், "உனக்கு இன்ன காலத்தில், இன்ன நொடியில் இவ்வாறு நிகழும்' என்று கூறிவிட்டு அவர்கள் வழியில் சென்றுவிடுவர். அது நல்லதோ கெட்டதோ- அவர்கள் சொன்னபடியே சொன்ன நொடியில் நடந்துவிடும். இதைப்போன்று சீரடி சாய்பாபா சரிதத்திலும், காஞ்சி மகாபெரியவர் வாழ்க்கை நிகழ்வுகளிலும் நிறைய செயல்கள் காணக் கிடைக்கின்றன.

Advertisment

தற்காலத்தில் ஜோதிடர்கள் மனிதர்களின் ஜாதகத்தை வைத்துக்கொண்டு அதனை ஆராய்ந்து தசாக்காலம், புக்திக்காலம், அந்தர காலம் என பிரித்துக் கணக்கிட்டு, பலன்களைக் கூறுகிறார்கள். பொதுவாக அந்தரம் வரைதான் கணக்கீடு செய்வது வழக்கம். இதனிலும் ஒருபடிமேலாக அந்தரத்தை சூட்சுமம், பிராணன், சித்திரம் என்றும் பிரிக்கலாம்.

ஆக, இதற்கெல்லாம் அடிப்படை மனிதரின் ஜாதகம்தான். ஜாதகம் கணிப்பதற்கு, குழந்தை பிறந்த தேதி, மாதம், வருடம், பிறந்த நேரம், பிறந்த இடம் போன்றவை மிகச்சரியாகத் தேவை.

brama

Advertisment

அக்காலத்தில் சங்கு, மணல் கடிகாரம், நீர் கடிகாரம் போன்றவற்றைப் பயன்படுத்தி நேரத்தைக் குறித்தார்கள். பிறகு கடிகாரப் பயன்பாடு புழக்கத்திற்கு வந்ததால் அதைப்பார்த்து நேரத்தைக் குறித்துக் கொண்டார்கள். இப்போது குழந்தை பிறக்கும் நேரத்தை மருத்துவர்களும், செவிலியர்களும் மிகத் துல்லியமாகக் கூறிவிடுகிறார்கள்.

இதெல்லாம் சரிதான். ஆனால் குழந்தை பிறக்கும் நிமிடங்களில்தான் சற்றே குழப்புவார்கள். அது குழந்தையின் தலை- அதாவது சிரசு தாயின் கர்ப்பப்பை வாயிலிருந்து முதன்முதலாக வெளிவரும் நேரமா அல்லது குழந்தை முழுவதுமாக தாயினின்று வெளிவந்த நேரமா அல்லது தொப்புள் கொடியை அறுத்துவிட்டு, குழந்தை தனியாக பூமியில் இடம்பெறும் நேரமா அல்லது குழந்தையைத் தலைகீழாகத் தட்டிவிட்டு, அது முதன்முதலாக அழும் நேரமா? எந்த நிமிடத்தை குழந்தை பிறந்த நேரமாகக் குறிக்கவேண்டும்?

உடனே நமக்கு ஒரு சந்தேகம் வரும். "அட, மிஞ்சிப்போனா ஒரு நிமிடம் அல்லது இரண்டு நிமிடம் வித்தியாசம் இருக்கும். இது ஒரு பெரிய விஷயமா?' என்று சிரிக்கத் தோன்றும்.

ஆனால், இந்த நிமிட வேறுபாடுகள் தசாக்காலத்தில் நாள், மாதக் கணக்கை மிகவும் வேறுபடுத்திவிடும். பின்பு வாழ்நாள் முழுக்க, ஜோதிடர் என்னதான் தலையால் தண்ணீர் குடித்துப் பலன் சொன்னாலும், அது கால நேர வேறுபாட்டினால், சொன்ன பலன்கள், சொன்ன நேரத்திற்குப் பின்போ, முன்போ நடந்து தொலைக்கும். ஜோதிடர் சொன்ன காலத்திற்கும், சொன்ன பலன்கள் நடக்கும் காலத்திற்கும் வித்தியாசம் கண்டிப்பாக இருக்கும்.

இதை ஒரு உதாரணம் மூலம் காணலாம்.

குழந்தை பிறந்த தேதி 16-1-2019 என்று எடுத்துக் கொள்ளலாம். இனி இந்த நாளில், நேரத்தை சற்று மாற்றி எடுத்துக் கொள்ளும்போது ஏற்படும் தசாக்கால அளவு வேறுபாட்டினைக் காணலாம். குழந்தை 16-1-2019 அன்று மாலை 4.00 மணிக்கு சென்னையில் பிறந்துள்ளது எனக் கொள்வோம். அன்று கார்த்திகை நட்சத்திரம் ஓடிக்கொண்டிருக்கும். ராசி மேஷம். கார்த் திகை நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைகளுக்கு ஆரம்ப தசாக்காலம் சூரிய தசையாக வரும்.

1. 16-1-2019 மாலை 4.00 மணி

சந்திரன்- 27.39- கிருத்திகை- 1- மேஷ ராசி.

லக்னம்- 5.04- மிருகசீரிடம்- 4- மிதுன லக்னம்.

சூரிய தசை இருப்பு: 5 வருடம், 6 மாதம், 18 நாள்.

2. 16-1-2019 மாலை 4.10 மணி

சந்திரன்- 27.45- கிருத்திகை- 1- மேஷ ராசி.

லக்னம்- 7.22- திருவாதிரை- 1- மிதுன லக்னம்.

சூரிய தசை இருப்பு: 5 வருடம், 6 மாதம், 3 நாள்.

3. 16-1-2019 மாலை 4.12 மணி

சந்திரன்- 27.46- கிருத்திகை- 1- மேஷ ராசி.

லக்னம்- 7.49 -திருவாதிரை- 1- மிதுன லக்னம்.

சூரிய தசை இருப்பு: 5 வருடம், 6 மாதம், 1 நாள்.

4. 16-1-2019 மாலை 4.16 மணி

சந்திரன்- 27.49- கிருத்திகை- 1- மேஷ ராசி.

லக்னம்- 8.44- திருவாதிரை- 1- மிதுன லக்னம்.

சூரிய தசை இருப்பு: 5 வருடம், 5 மாதம், 24 நாள்.

சூரிய தசையின் முழு தசாக்கால அளவு ஆறு வருடம். இருப்பதிலேயே குறைவான தசா கொண்டது இதுதான்.

இனி அதிக தசாக்காலம் கொண்டது சுக்கிர தசை. இருபது வருடங்கள்.

15-1-2019 அன்று மாலை 5.30 மணிக்குப் பிறந்த குழந்தை பரணி நட்சத்திரம் கொண்டிருக்கும். அது சுக்கிர தசையை ஆரம்ப தசையாகக்கொண்டு அமையும்.

பிறந்த இடம் சென்னை.

1. 15-1-2019 மாலை 5.30 மணி

சந்திரன்- 15.15- பரணி- 1- மேஷ ராசி.

லக்னம்- 24.40- புனர்பூசம்- 2- மிதுன லக்னம்.

சுக்கிர தசை இருப்பு: 17 வருடம், 1 மாதம், 8 நாள்.

2. 15-1-2019 மாலை 5.35 மணி

சந்திரன்- 15.18- பரணி- 1- மேஷ ராசி.

லக்னம்- 25.47- புனர்பூசம்- 2- மிதுன லக்னம்.

சுக்கிர தசை இருப்பு: 17 வருடம், மாதம், 14 நாள்.

3. 15-1-2019 மாலை 5.40 மணி

சந்திரன்- 15.21- பரணி- 1- மேஷ ராசி.

லக்னம்- 26.55- புனர்பூசம்- 3- மிதுன லக்னம்.

சுக்கிர தசை இருப்பு: 16 வருடம், 11 மாதம், 20 நாள்.

4. 15-1-2019 மாலை 5.43 மணி

சந்திரன்- 15.22- பரணி- 1- மேஷ ராசி.

லக்னம்- 27.36- புனர்பூசம்- 3- மிதுன லக்னம்.

சுக்கிர தசை இருப்பு: 16 வருடம், 11 மாதம், 5 நாள்.

தசாக்காலத்தின் இருப்புக் கணக்கென்பது மிகச்சரியான சந்திரனின் நிலைபாட்டைக் கொண்டு கணக்கீடு செய்வது. அதனால்தான் சந்திரனின் நிலையில் இரண்டு நிமிடங்கள் வித்தியாசம் ஏற்பட்டாலும், அது தசாக்கால கணக்கிடுதலில் வேறுபாட்டைக் காட்டும். இது நாள்கணக்கில்தானே அமையுமென்று கேட்கக்கூடும். ஆனால் ஒவ்வொரு தசை யையும் கூட்டிவரும் கணக்கில் அது மாத வித்தி யாசத்தையும், சிலசமயங்களில் வருட வித்தி யாசத்தையும் கொண்டுவந்துவிடும்.

இது தசாக்காலத்தின் பெரும் நுட்பமான கணக்கு. சிலர் ஐந்து பத்து நிமிட வித்தியா சத்தில் என்ன ஆகிவிடப்போகிறதென்பர்.

உண்மையாகவே இந்த வித்தியாசம் என்பது, ஜோதிடர் சொன்ன நிகழ்வு நடக்கும் காலக்கணக்கு அளவை சற்று முன்பின்னாக நடக்க வைக்கக்கூடும். இது ஜோதிடர்கள் தவறல்ல. பிறந்த நேர நிமிடக்கணக்கு வேறு பாடே ஆகும்.

தசாக்காலத்திற்கேற்ப, மூன்று நிமிட வித்தியாசம், 15 நாட்கள் வேறுபாட்டைக்கூட தந்துவிடக்கூடும். எனவே குழந்தை பிறக்கும் நேரத்தைத் துல்லிலியமாக அறிந்தால்தான் சரியான பலனைக்கூற இயலும்.

"அதெல்லாம் கிடையாது. எங்களுக்கு மிகச்சரியாக இந்த மணி, இந்த நிமிடம், இந்த நொடியில் இன்ன விஷயம் நடக்குமென்று சொல்லும் ஜோசியர்தான் வேணும்' என அடம்பிடிப்பவர்கள் ஒன்றைச் செய்யலாம். உண்மையான சித்தர்கள், முனிவர்கள், யோகிகள், தவசீலர்களைக் கண்டறிந்து கேளுங்கள். அவர்களால் மட்டுமே ஒரு மனிதனைப் பார்த்த நொடியில் இன்ன காலத்தில் இது நிகழுமென்று கூறமுடியும்.

செல்: 94449 61845

bala080219
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe