Advertisment

12 ராசி, 27 நட்சத்திரத்தினருக்கு ஜூலை மாதப் பரிகாரங்கள்! பண்டிட் எம்.ஏ.பி. பிள்ளை

/idhalgal/balajothidam/july-treatments-12-stars-27-stars

1-7-2019 அன்று ரிஷபத்தில் சந்திரன்; மிதுனத்தில் சூரியன், ராகு, சுக்கிரன், புதன்; கடகத்தில் செவ் வாய்; விருச்சிகத்தில் குரு; தனுசில் சனி, கேது சஞ்சரிக்கின்றன.

மேஷம்

Advertisment

அஸ்வினி: "இன்று' என்பதைப் பிடித்துக்கொள்ளக் கூடாது. ஏனென் றால் "நாளை' என்பது விதியின் பிடியிலுள்ளது. இம்மாதம் சிலவற் றைக் கூர்மையாக கவனிக்க வேண்டும். தனுசில் கேதுவுடன் சனி. எனவே வம்சாவளியாக கட்டட கான்டிராக்ட் எடுத்துச் செய்பவர்களெனில் 2, 3, 8, 9, 15, 16, 29, 30 ஆகிய தேதிகள் பின்னடைவைத் தரும். இதற்குப் பரிகாரமாக அரிசி, பால் ஆகியவற்றை திங்கட்கிழமை தானம் செய்யலாம். இம்மாதம் சீட்பெல்ட் அணியாமல் "டிரைவ்' செய்வதைத் தவிர்க்கவேண்டும். யானை தந்தத்திலான (ஐவரி) மோதிரம் அணியலாம்.

பரணி: எந்த வேலைகளிலும் அவசரம்கூடாது. பொருளாதார நெருக்கடிகள் முழுமையாக விடைகொடுக்கும். அலுவலகப் பணியாளர்கள் உயரதிகாரிகளைப் பகைக்கக் கூடாது. 6, 7, 15, 16, 25, 26 தேதிகளில் மனக் குறைகளை முறையிட்டு ஊதிய உயர்வு கேட்கலாம். பூமி சார்ந்த வாங்கல்- விற்றல் வேண்டாம். கண்திருஷ்டித் தடைகளை உருவாக்கும். நெடுநாட்களாகத் தடைகள் தொடர்ந்தால் பாலில் சர்க்கரை கலந்து ஆலமரவேரில் ஊற்றி, அந்த மண்ணை திலகமிடல் நன்று. தொப்புளிலும் பூசலாம். பிறரால் அவமானப்பட நேரலாம். எனவே பார்லி அரிசி,தேங் காயை திருஷ்டி சுற்றி நீரில் போடவும். கிருத்திகை முதல் பாதம்: இம்மாதம் எதையும் ஆராயாமல் வெறுத்தல், ஆதாரமின்றிப் பகைத்தல் கூடாது. 17, 19 தேதிகளில் புகழ் ஓங்கும். பெண்கள் சொந்தபந்தங் களை நம்பி எந்த புதுமுயற்சிகளும் செய்யவேண்டாம். முதுகில் குத்துவார் கள். மொட்டை மாடியில் எரிபொருள் சேமிப்பது கூடாது. இப்போது வயது 36 அல்லது 60 எனில் அதிக அதிர்ஷ்டம் வந்துசேரும். குருவால் தந்தை யின் ஆரோக்கியத் தில் மாறுதல் ஏற்படும்.வீட்டினுள் விசேட பூஜைகளைத் தவிர்ப்பது நல்லது.

ரிஷபம்

கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள்: இம்மாதம் யாராவது ஒருவர், உங்களால் பயனடையுமாறு செய்யவேண்டும். இது அடுத்துவரும் மாதங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும். இடமாற்றம், உத்தியோக மாற்றம் உண்டு. 6, 15, 17, 18, 19, 25 ஆகிய தேதிகள் இதற்கு உகந்த நாட்கள். புதுமணத் தம்பதிகள் தனியாகச் சென்று குடும்பம் நடத்தலாம். சூரியன் மிதுனத்தில் இருப்பதால், இம்மாதம் பகல்பொழுதில் ஆண் குழந்தை பிறந்தால் பின்னாளில் நெறிதவறி வளரும். பரிகாரமாக மூன்று ஞாயிறன்று உச்சிப்பொழுதில் கோதுமை அல்வா சிறுவர்களுக்கு வழங்குதல் நன்று. சொந்த ஜாதகத்தில் சுக்கிரன் மிதுனத்தில் இருந்தால், 200 கிராம் மஞ்சள் நிற உருளைக்கிழங்கைப் பசுவுக்குத் தருதல் நல்லது.

Advertisment

ரோகிணி: இரக்கமுள்ள நெஞ்சில் அன்பு பிறக்கும். இம்மாதம் மாமனார் வீட்டில் வேண்டியதைக் கேட்டுப்பெற லாம். வெளியூர், வெளிநாடு சென்று புது முயற்சிகள் வேண்டாம். நெடுஞ் சாலைப் பணியாளர்களுக்கு கனரக வாகனம் சார்ந்த விவகாரங் களில் கவனம் வேண்டும். 24, 26 தேதிகளில் வீண்வாக்கு வாதம் செய்தால் அது பெரும் பகையாக மாறும். செவ்வாயின் கெடுதல் அகல அரசமர வேரில் தண்ணீர் ஊற்றுதல் நல்லது. சனி 8-ல் இருப்பதால் இல்லற வாழ்வில் இடையூறு வந் தாலும் கேது சரிசெய் வார். 9 வயதுள்ள- வயதுக்கு வராத பெண் குழந்தைக்கு ஆடைதானம் சிறப் பானது. எட்டு எருக் கம்பூ மொட்டை தண்ணீரில் மிதக்கச் செய்து திருஷ்டி சுற்றி செடியில் ஊற்றலாம். மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்: இம்மாதம் 4, 5, 10, 11 ஆகிய நாட்களில் எந்த ரகசிய ஒப்பந்தங் களும் வேண்டாம். கணவன்- மனைவியரிடையே இருக்கும் கசப்பு அகலும். வீட்டு மாடியில் வட்டவடிவ வாட்டர் டேங்க் கூடாது. பலமுறை சுத்தம் செய்து சந்திரனின் அருளைப் பெறலாம். சூரியன் மிதுனத்திலேயே இருப்பதால், தலைவாசலில் மூன்று இஞ்ச் செம்பு ஆணியைப் பதித்தல் நன்று. அரசு சார்ந்த நன்மை பெறலாம். குரு விருச்சிகத்தில் இருப்பதால் தங்கை மகன், மகள், பேத்தி ஆகியோர் உங்களை நாடிவந்தால், அவர் களுக்கு உதவி செய்வதால் அதிக நன்மைகள் பெறலாம். குங்குமப்பூ பேஸ்ட் கொண்டு திலகமிடல் நன்று.

மிதுனம்

மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள்: சூரியன், ராகு, சுக்கிரன் ராசியிலேயே உள்ளார்கள். அரசியல்வாதிகள் உள்ளூர் மக்களின் பாராட்டைப் பெறலாம். கண் வலி வந்து மறையும். சிறு தவறுகளும் விஸ்வரூபம் எடுக்கும். 4, 5, 13, 14, 21, 22, 29, 30, 31 ஆகிய தேதிகளில் பணவரவை எதிர் பார்க்கலாம். ஆண்கள் வீட்டுப் பணிப்பெண்களிடம் தீய எண்ணத்துடன் பழகுதல் கூடாது. கருப்புநிறப் பசுவுக்கு கீரை, புல் கொடுப்பது நல்லது. இம்மாதம் ஒரு மண்குடுவையில் தேனை

1-7-2019 அன்று ரிஷபத்தில் சந்திரன்; மிதுனத்தில் சூரியன், ராகு, சுக்கிரன், புதன்; கடகத்தில் செவ் வாய்; விருச்சிகத்தில் குரு; தனுசில் சனி, கேது சஞ்சரிக்கின்றன.

மேஷம்

Advertisment

அஸ்வினி: "இன்று' என்பதைப் பிடித்துக்கொள்ளக் கூடாது. ஏனென் றால் "நாளை' என்பது விதியின் பிடியிலுள்ளது. இம்மாதம் சிலவற் றைக் கூர்மையாக கவனிக்க வேண்டும். தனுசில் கேதுவுடன் சனி. எனவே வம்சாவளியாக கட்டட கான்டிராக்ட் எடுத்துச் செய்பவர்களெனில் 2, 3, 8, 9, 15, 16, 29, 30 ஆகிய தேதிகள் பின்னடைவைத் தரும். இதற்குப் பரிகாரமாக அரிசி, பால் ஆகியவற்றை திங்கட்கிழமை தானம் செய்யலாம். இம்மாதம் சீட்பெல்ட் அணியாமல் "டிரைவ்' செய்வதைத் தவிர்க்கவேண்டும். யானை தந்தத்திலான (ஐவரி) மோதிரம் அணியலாம்.

பரணி: எந்த வேலைகளிலும் அவசரம்கூடாது. பொருளாதார நெருக்கடிகள் முழுமையாக விடைகொடுக்கும். அலுவலகப் பணியாளர்கள் உயரதிகாரிகளைப் பகைக்கக் கூடாது. 6, 7, 15, 16, 25, 26 தேதிகளில் மனக் குறைகளை முறையிட்டு ஊதிய உயர்வு கேட்கலாம். பூமி சார்ந்த வாங்கல்- விற்றல் வேண்டாம். கண்திருஷ்டித் தடைகளை உருவாக்கும். நெடுநாட்களாகத் தடைகள் தொடர்ந்தால் பாலில் சர்க்கரை கலந்து ஆலமரவேரில் ஊற்றி, அந்த மண்ணை திலகமிடல் நன்று. தொப்புளிலும் பூசலாம். பிறரால் அவமானப்பட நேரலாம். எனவே பார்லி அரிசி,தேங் காயை திருஷ்டி சுற்றி நீரில் போடவும். கிருத்திகை முதல் பாதம்: இம்மாதம் எதையும் ஆராயாமல் வெறுத்தல், ஆதாரமின்றிப் பகைத்தல் கூடாது. 17, 19 தேதிகளில் புகழ் ஓங்கும். பெண்கள் சொந்தபந்தங் களை நம்பி எந்த புதுமுயற்சிகளும் செய்யவேண்டாம். முதுகில் குத்துவார் கள். மொட்டை மாடியில் எரிபொருள் சேமிப்பது கூடாது. இப்போது வயது 36 அல்லது 60 எனில் அதிக அதிர்ஷ்டம் வந்துசேரும். குருவால் தந்தை யின் ஆரோக்கியத் தில் மாறுதல் ஏற்படும்.வீட்டினுள் விசேட பூஜைகளைத் தவிர்ப்பது நல்லது.

ரிஷபம்

கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள்: இம்மாதம் யாராவது ஒருவர், உங்களால் பயனடையுமாறு செய்யவேண்டும். இது அடுத்துவரும் மாதங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும். இடமாற்றம், உத்தியோக மாற்றம் உண்டு. 6, 15, 17, 18, 19, 25 ஆகிய தேதிகள் இதற்கு உகந்த நாட்கள். புதுமணத் தம்பதிகள் தனியாகச் சென்று குடும்பம் நடத்தலாம். சூரியன் மிதுனத்தில் இருப்பதால், இம்மாதம் பகல்பொழுதில் ஆண் குழந்தை பிறந்தால் பின்னாளில் நெறிதவறி வளரும். பரிகாரமாக மூன்று ஞாயிறன்று உச்சிப்பொழுதில் கோதுமை அல்வா சிறுவர்களுக்கு வழங்குதல் நன்று. சொந்த ஜாதகத்தில் சுக்கிரன் மிதுனத்தில் இருந்தால், 200 கிராம் மஞ்சள் நிற உருளைக்கிழங்கைப் பசுவுக்குத் தருதல் நல்லது.

Advertisment

ரோகிணி: இரக்கமுள்ள நெஞ்சில் அன்பு பிறக்கும். இம்மாதம் மாமனார் வீட்டில் வேண்டியதைக் கேட்டுப்பெற லாம். வெளியூர், வெளிநாடு சென்று புது முயற்சிகள் வேண்டாம். நெடுஞ் சாலைப் பணியாளர்களுக்கு கனரக வாகனம் சார்ந்த விவகாரங் களில் கவனம் வேண்டும். 24, 26 தேதிகளில் வீண்வாக்கு வாதம் செய்தால் அது பெரும் பகையாக மாறும். செவ்வாயின் கெடுதல் அகல அரசமர வேரில் தண்ணீர் ஊற்றுதல் நல்லது. சனி 8-ல் இருப்பதால் இல்லற வாழ்வில் இடையூறு வந் தாலும் கேது சரிசெய் வார். 9 வயதுள்ள- வயதுக்கு வராத பெண் குழந்தைக்கு ஆடைதானம் சிறப் பானது. எட்டு எருக் கம்பூ மொட்டை தண்ணீரில் மிதக்கச் செய்து திருஷ்டி சுற்றி செடியில் ஊற்றலாம். மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்: இம்மாதம் 4, 5, 10, 11 ஆகிய நாட்களில் எந்த ரகசிய ஒப்பந்தங் களும் வேண்டாம். கணவன்- மனைவியரிடையே இருக்கும் கசப்பு அகலும். வீட்டு மாடியில் வட்டவடிவ வாட்டர் டேங்க் கூடாது. பலமுறை சுத்தம் செய்து சந்திரனின் அருளைப் பெறலாம். சூரியன் மிதுனத்திலேயே இருப்பதால், தலைவாசலில் மூன்று இஞ்ச் செம்பு ஆணியைப் பதித்தல் நன்று. அரசு சார்ந்த நன்மை பெறலாம். குரு விருச்சிகத்தில் இருப்பதால் தங்கை மகன், மகள், பேத்தி ஆகியோர் உங்களை நாடிவந்தால், அவர் களுக்கு உதவி செய்வதால் அதிக நன்மைகள் பெறலாம். குங்குமப்பூ பேஸ்ட் கொண்டு திலகமிடல் நன்று.

மிதுனம்

மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள்: சூரியன், ராகு, சுக்கிரன் ராசியிலேயே உள்ளார்கள். அரசியல்வாதிகள் உள்ளூர் மக்களின் பாராட்டைப் பெறலாம். கண் வலி வந்து மறையும். சிறு தவறுகளும் விஸ்வரூபம் எடுக்கும். 4, 5, 13, 14, 21, 22, 29, 30, 31 ஆகிய தேதிகளில் பணவரவை எதிர் பார்க்கலாம். ஆண்கள் வீட்டுப் பணிப்பெண்களிடம் தீய எண்ணத்துடன் பழகுதல் கூடாது. கருப்புநிறப் பசுவுக்கு கீரை, புல் கொடுப்பது நல்லது. இம்மாதம் ஒரு மண்குடுவையில் தேனை நிரப்பி, தோட்டத்தில் வடகிழக்கு பாகத்தில் பள்ளம் தோண்டி அதனுள் வைத்து மூடினால் குடும்பத்தில் நல்லவை நடக்கும்.

திருவாதிரை: கேதுவும் சனியும் கணவன்- மனைவியரி டையே சில சந்தேகங்களை உருவாக்கு வார்கள். இம்மாதம் மேற்படிப்புக்கான முயற்சி வெற்றியைத் தரும். 2, 3, 10, 11, 20, 29, 30 தேதிகளில் புது வேலைக்கு முயற்சிக்கலாம். திங்கட்கிழமை அல்லி, மரிக்கொழுந்து ஆகியவற்றை பைரவருக்கு சமர்ப்பித்து வணங்கினால் வேலை நிச்சயமாகும். "ஓம் மஹா ச்ரேஷ்டாய வித்மஹே பசும்நாய தீமஹி தந்நோ ஆர்த்ரா பிரசோதயாத்' என்னும் மந்திரத்தைக் கூறி வணங்குதல் நல்லது. "திருவாதிரை' என்ற நட்சத்திர சொல்லுக்கு "கண்ணீர் த்துளி' என்னும் பொருளும் உண்டு.

புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்: சந்திரன் இம்மாதம் அதிக சுதந்திரத்தை அள்ளித்தரப் போகிறார். இப்போது வயது 26 எனில் மேலும் நன்மைகள் வரும். குடும்ப குதூகல நிகழ்வுகளில் கலந்துகொள்ளும்போது, சந்தனம் அல்லது மஞ்சள் நிற ஆடையுடன் செல்வது நல்லது. மருத்துவர்கள் நோயாளிகளிடம் கவனமாக செயல்படவேண்டும்; வீண்பழி வரலாம். பெற்ற தாயின் உடலில் பின்னடைவு வரும். புதன்கிழமை ஒருவேளை உபவாசம் இருப்பது நன்று. 6, 7, 13, 14, 20, 21 ஆகிய தேதிகள் நெருக்கடி தரும் நாட்கள்; புதுவேலை கூடாது. தண்ணீர் நிரப்பிய மூன்று "வாட்டர் கேன்'களை மருத்துவ மனைக்குக் கொடுப்பது நல்லது.

கடகம்

புனர்பூசம் 4-ஆம் பாதம்: ராசிக்கு 6-ல் சனியும் கேதுவும் இருக்கிறார்கள். ஆகவே மூத்த மகன் இருந்தால் ஆதரவாக செயல்படு வார். 28 வயதுக்கு முன்னர் திருமணத்தைத் தவிர்ப்பது நல்லது. நிறைவேறியிருந்தால், சனிக்காக கருப்புநிற ஷூ (பாதரட்சை) மண மகனுக்கு இனாமாகக் கொடுக்கலாம். கேதுவுக் காக குங்குமப்பூ கலந்த பால் அருந்துதல் நன்று. அவச்சொல் உங்களை நாடிவரலாம். உத்தியோகம் பார்ப்பவர்கட்கு 4, 13, 14, 22, 23, 24, 31 ஆகிய தேதிகள் நல்ல நாட்கள். ஊதிய உயர்வு, வேலைவாய்ப்புகளை எதிர்பார்க்க லாம். நடிகர்கள், கலைஞர்களுக்கு புது ஒப்பந்தம் கிடைக்கப்பெறும். வாகனம் ஓட்டும் போது சீட் பெல்ட் கட்டாயம் அணிய வேண்டும்- இம்மாதம்.

பூசம்: சுக்கிரன், ராகு 12-ல். எனவே பங்குச்சந்தையில் ஈடுபடுவோருக்கு அதிக லாபம் வராது. சிலருக்கு குடும்பத்தில் ஒருவரின் பிரிவால் ஆதாயம் வரும். நெடுநாட் களாகவே பணநெருக்கடி இருந்துவந்தால் வாஸ்துக்குறை அகல வீட்டு மாடியின் மேற்குச் சுவரின்மேல், ஒரு களிமண் உருண் டையை நெருப்பில் சூடாக்கி வைத்தால் சனியின் பார்வை நல்லதைச் செய்யும். நாய் வளர்ப்பது நல்லது. அது இறந்தாலோ காணாமல் போனாலோ அபசகுனம். ஐந்து நாள் வீட்டுவாசலில் உப்புகலந்த தண்ணீரைத் தெளிக்கவேண்டும். 2, 3, 10, 11, 20, 21, 29, 30 ஆகிய தேதிகளில் இம்மாதம் நல்லவை நடக்கும்.

ஆயில்யம்: மூன்றாவது வாரம் பொருளா தாரரீதியாக நற்பலன் நடக்கும். ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்காது. வெளிநாடு செல்வோர் தாயின் பூரண அனுமதியின்றி போதல் கூடாது. சூரிய பகவான் மிதுனத்தில் இருப்பதால், மாமன், மைத்துனர்களுடன் கூட்டு வியாபாரம் ஒத்துவராது. புதன் 12-ல் இருப்பதால், வியாபாரத்தில் பின்னடைவு வந்தால் ஒரு மண்குடுவையில் பச்சைப் பயறை நிரப்பி, வடதிசை நோக்கி நின்று திருஷ்டி சுற்றி ஓடும் நீரில் போடவும். இம்மாதத்தில் விசேடப் பலன் தரமுடியாத நாட்கள் 8, 9, 15, 16, 22, 23, 24 ஆகியவை. புதுமுயற்சி வேண்டாம். கெடுதலை உருவாக்கும்.

சிம்மம்

மகம்: ராகு பதினொன்றிலும் சனி தனு சிலும் இருப்பதால், "தோள்மீது தொட்டில் கட்டி நான் வளர்த்த சூரியன் போன்ற என்மகனே- என் ஆரோக்கியத்தில் கவனம் கொள்' என வேண்டுவது போன்ற சூழ்நிலை உருவாகத்தான் செய்யும். சூரியன், புதனுடன் 11-ல் இருப்பதால், இம்மாதம் 10, 11, 17, 18, 19, 25, 31 ஆகிய தேதிகளில் எவருக்கும் கடனோ உத்தரவாதமோ கொடுப்பது கூடாது. இம்மாதம், வெங்காயம், பூண்டு உணவில் சேர்க்க, வேண்டாம். திருமணத்தடை நீங்க மோகினி கவசம் உச்சரிப்பது நல்லது. வெண்முல்லை மொட்டுகளை திங்கட்கிழமை திருஷ்டி சுற்றி நீர்நிலையில் போடலாம்.

பூரம்: குருவின் இடமான தனுசில் கேது இருப்பதால், பள்ளி, கல்லூரி மாணவர் களுக்கு தாத்தா, பாட்டி, வயதில் மூத்தோரின் ஆசிர்வாதம் விரைவான பலன் தரும். இம்மாதம் பிறந்த நாள் கொண்டாடும் நபர்கள் சிவப்புநிறப் பொருட்களை பிறருக்கு இலவசமாகக் கொடுப்பது நன்று. அரசுப்பணியில் தவறு செய்து தண்டனை அடைந்தோருக்கு செவ்வாய் ஆறுதல் தரமாட்டார். இருப்பினும் 1, 11, 20, 21, 27, 28, 29 தேதிகளில் ஆறுதல் தரும் செய்தியை எதிர்பார்க்கலாம்.

"மா மஹாதேவ ஸம்ஸ்துத்யா மஹீஷீகண பூஜிதா ம்ருஷ்டாந்தநா ச மாஹேந்த்ரீ மஹேந்திர பததயிநீ' என்னும் மந்திரத்தை காலை 28 முறை கூறினால் பணக்கஷ்டம் தீரும். உத்திரம் 1-ஆம் பாதம்: மாணவர்களே, சனியும் குருவும் உங்களுடைய சாதனைகளை சோதனைக்கு உட்படுத்துவார்கள். பருவமடைந்த பெண்கள் நடத்தையில் கவனம் வேண்டும். குடும்பத்தில் கருவுற்ற மாதர்கள் இருந்தால் 2, 4, 5, 8 ஆகிய மாதங்களில் சில பின்னடைவுகள் வரும். பஞ்சவர்ணக்கிளி, ஆடு போன்றவற்றுக்கு உணவூட்ட வேண்டாம். வாஸ்துரீதியாக தென்மேற்கு கன்னிமூலையில் கழிவறை, குளியலறை இருந்தால் உபயோகிக்கக் கூடாது. 4, 5, 13, 14, 22, 23, 24, 31 ஆகிய தேதிகள் எல்லா கவலைகளையும் துரத்திவிடும்.

கன்னி

உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள்: "என் அதிர்ஷ்டத்திற்கு இன்னொரு பெயர் நம்பிக்கை' என செயல்பட வேண்டிய மாதம். அண்ணன்- தம்பியர், மற்றவர்கள் சொத்து விவகாரத்தில் தலையீடு வேண்டாம். மாணவர்களே, உங்களுடைய குழப்பம் 6, 7, 15, 16, 25, 26 ஆகிய தேதிகளில் தீர்ந்துவிடும். பழமை விரும்பிகளுக்கு இம்மாதம் சில புது யோசனைகள் நல்வழி காட்டும். கம்ப்யூட்டர், ஸ்மார்ட்போன் ஆகியவற்றை மாற்றநேரிடும் 11- ஞாயிற்றுக்கிழமைகள் செந்தாமரைப்பூவால் சூரிய வணக்கம் செய்தால் அரசு வேலை கிடைக்கும். விநாயகரை வணங்குதலும் போதும். தெற்கு நோக்கிய தலைவாசல் வீட்டின்முன் வேப்பமரம் நின்றால், நான்கு இஞ்ச் இரும்பு ஆணி இரண்டை அதில் பதிக்கவும். கஷ்டம் தீரும்.

ஹஸ்தம்: ஏளனம் செய்பவருக்கு முன் னால் எடுப்பாக வாழ்ந்து காட்ட வேண்டிய மாதம். நீங்கள் எப்போதுமே டிப்டாப் பேர்வழிகள்தான். ஜோதிடம், மாந்த்ரீகம், யோகா போன்றவற்றில் வருமானத் தடையேற்பட்டால் ஏகாதசி விரதம் கடைப்பிடிக்கலாம். புதனுக்காக புதன் கிழமை, தண்ணீருடன் சிறிது பச்சைப்பயறு அல்லது பச்சரிசி, கோரோசனை, சிறு தங்க ஆபரணம், ஒரு நெல்லிக்காய், ஒரு டீஸ்பூன் தேனைக் கலந்து, உடல் முழுக்க அந்த நீர் படும்படி குளித்தால் குபேரன் அருளைப் பெறலாம். 1, 4, 5, 14, 21, 27, 28, 29, 30 ஆகிய தேதிகளில் மலர்ந்த முகத்துடன் காணப்படலாம்.

சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்: அஜாக்கிரதைதான் அதிக அழிவை ஏற்படுத்துகிறது. இம்மாதம் 50 சதவிகித கிரகநாதர்கள் போதிய ஆதரவு தரவியலாமல் காணப்படுகிறார்கள். இரண்டாவது வாரத்துக்குமேல் நிலைமை சீரடையும். 13, 20, 27 ஆகிய நாட்களில் புதுமுயற்சிகள் வேண்டாம். ராசிக்கு பத்தில் நால்வர், பதினொன் றில் செவ்வாய். பால் காய்ச்சும்போது அது பொங்கி வெளியே வடிதல் கூடாது. ஒரு மண்குடுவையில் தேனை நிரப்பி அதன்மேல் செந்தூரம் தூவி பூஜையறையில் வைத்து, அடுத்த நாள் அதனைச் செடியில் அல்லது ஓடும் நீரில் ஊற்றினால் பல கஷ்டநஷ்டங்கள் படிப்படியாய் விடைகொடுக்கும்.

துலாம்

ddd

சித்திரை 3, 4-ஆம் பாதங்கள்: உங்களுடைய இலக்கு இம்மாதம் உயர்வானதாக இருக்கட்டும். உள்ளக்குமுறல்களை வெளிக்காட்ட வேண்டாம். நெருக்கடிகள் புடைசூழ வரும். 10-ல் செவ்வாய். கவனக் குறைவால் வேலையில் சிக்கல் வரும். குறிப்பாக 2, 3, 15, 16, 22, 23, 24, 29, 30 தேதிகள் சோதனை செய்யும் நாட்கள். திடீர்ப் பயணமும் உண்டு. வீட்டில் வாட்டர் ஹீட்டர், மைக்ரோவேவ் போன்ற மின் உபகரணங்களை சீர்செய்வதைத் தவிர்த்தல் நன்று. ஒன்பது கடைகளில் பெயர் சொல்லாமல் மிளகு வாங்கி, ஒன்பது நாட்கள் வீட்டில் வைத்து லட்சுமி, பைரவர் மந்திரங்களைக்கூறி அல்லது மனக்குறைகளைக் கூறி, ஜென்ம நட்சத்திரத்தன்று அரசமர வேரில் தூவி நீர் தெளிப்பது போதுமானது.

சுவாதி: இம்மாதம் சாக்குப்போக்கு சொல்லக்கூடாது. விருந்தினர் வருகை அதிகமாகும். குழந்தைகள் சார்ந்த கவலைகளை குரு எதிர்பாராமல் தரத்தான் செய்வார். 8, 9, 15, 16, 22, 23, 30 தேதிகளில் எவரிடமும் வெறுப்பைக் காட்ட வேண்டாம். இளம் காதலர்கள்- செவ்வாயின் இருப்பிடம் சரியில்லாததால் கவனமுடன் செயல்படல் நல்லது. இம்மாதம் பச்சரிசி, வெள்ளி உலோகம் எவரிடமும் இனாமாகப் பெறுதல் கூடாது. பெண்கள் பஞ்சமுக தீபமேற்றி வணங்குவதால் கஷ்டங்கள் அகலும். செவ்வாய்க்கிழமை வரும் நவமி திதி, ஞாயிறன்று வரும் சதுர்த்தசி, சனிக்கிழமை வரும் சதுர்த்தி திதி, குளிகை காலத்தில் பைரவர் வணக்கம் நன்று.

விசாகம்: 1, 2, 3-ஆம் பாதங்கள்: மாதத்தின் கடைசி வாரம் எதிரிகளின் தொல்லை மொத்தமாக விடைகொடுக்கும். அரசியலில் இருப்போர் பிறர் அறிவுரைக்கு செவி சாய்த்தல் கூடாது. எல்லா விவகாரங் களிலும் உன்னிப்பான கவனம் தேவை. பணிபுரியும் அலுவலகம் பிரச்சினை களைத் தந்து நிலைதடுமாறுவது போல் தோன்றினாலும், நீங்கள் காப்பாற்றப்படுவீர்கள். மனக்குறை தீர வடமேற்கு திசை நோக்கி வணங்கிவந் தால் மனநிறைவு ஏற்படும். 4, 10, 11, 13, 14, 20, 21, 22, 24, 31 தேதிகளில் பணவரவு வந்துவிடும். அனுமனை வணங்குவதால் மனபயம் அறவே நீங்கும்.

விருச்சிகம்

விசாகம் 4-ஆம் பாதம்: சூரியனும் ராகுவும் 8-ல் இணைவதால், உடலில் சின்ன காயங்கள் ஏற்பட்டாலும் உதாசீனம் கூடாது. கணவன்- மனைவி இருவரும் மூன்றாவது நபரிடம் குறைகளைப் பகிர்வது கூடாது. அதுவும் கட்டை விரலையடுத்த சுக்கிரமேட்டில் கரும்புள்ளி இருந்தால் உறவில் விரிசலாகிவிடும். பணத்தை எவரிடமாவது கொடுத்து ஏமாந்திருந் தால் 2, 3, 4, 5, 10, 11, 21, 30 தேதிகளில் முயற்சித்தால் நல்ல சேதி வரும். பார்வை இழந்தவர்கட்கு பரிகாரம் செய்யலாம். பொருளுதவி மேன்மையானது. தொழில் விருத்திபெற ஆரஞ்சுப்பழம் விநியோகிக்கலாம்.

அனுஷம்: இம்மாதம் தைரியசாலி போல் நடிப்பது கூடாது. இந்த குணம் உங்களுக்கு இருக்காது என்பது தெரிந்ததுதான். 8-ல் சூரியனும் சுக்கிரனும் இருப்பதால் கலைஞர்கள் அலைபாயும் மனதை அடக்கவேண்டும். நல்ல வாய்ப் புகள் வரும் தருணம் 13, 14, 22, 23, 24, 31 ஆகிய தேதிகளில் மிகையாகும். முன்பு எப்போதோ செய்த தவறு சுட்டிக்காட்டப்படும். இப்போது ஏழரைச்சனியின் பிடியில் இருப்பதால் அது புயலென மாறும். பைரவருக்கு பாகற்காய் மாலை, கருவேப்பிலை மாலை அல்லது பாகற்காய் தீபமேற்றி வழிபடுதல் நன்று. சனீஸ்வரருக்கு நெய்தீபமேற்றலாம்.

கேட்டை: கேதுவும் சனியும் ராசிக்கு 2-ல் இருப்பதால் செய்தி சேகரிக்கும் நிருபர்கள், அரசு சார்ந்த ரகசியம் அறிய முற்படுவோர், புகைப்படம் எடுப்போருக்கு திறமைகளை வெளிப்படுத்த நல்ல தருணம். காது, தொண்டை, மூக்கு சார்ந்த ஆரோக்கியக்குறைகள் வரும். அரசியலில் இருப்போருக்கு குருட்டு யோகம் உயர்வைப் பெற்றுத்தரும். இடதுகை பழக்கமுடைய மாணவர்கள் சாதனை படைப்பார்கள். கருங்குவளை மலரால் சனிபகவானை வணங்குவதால் நல்ல பலன் தொடராகும்.

தனுசு

மூலம்: இம்மாதம் உணர்வுப்பூர்வமாக உங்கள்மேல் அக்கறை செலுத்தும் நபர் உங்களுக்கு உற்ற துணையாக செயல்படுவார். 8-ல் செவ்வாய் இருப்பதால் நான்குகால் பிராணிகளிடம் கவனமாக செயல்படவும். இம்மாதம் திருமணம் சார்ந்த பேச்சுகளைத் தவிர்ப்பது நல்லது. வீட்டின் கடைசி மூலையில் இருட்டறை இருந்தால் அதிக ஒளியேற்ற வேண்டாம். உத்தியோகம் பார்ப்பவர்கட்கு 4, 5, 6, 7, 14, 21, 29, 30 ஆகிய தேதிகள் வேலையைத் தேடித்தரும். சுக்கிர ஹோரைகளில் பாலில் தயாரிக்கப்பட்ட பண்டங்களை உண்ணலாம்.

பூராடம்: குரு பகவான் 12-ல் அயன, சயன, விரய ஸ்தானத்தில் இருப்பதால், கொடுக்கல்- வாங்கலில் உன்னிப்பான கவனம் வேண்டும். அசையா சொத்தில் ஏமாற்றப் படலாம். ஓய்வூதியம், கிராஜுவிட்டி, போனஸ் போன்றவையும் சிக்கலை உருவாக்கும். சிறிது நவதானியத்தை வெள்ளைத்துணியில் முடிந்து, மேற்கு நோக்கி நின்று திருஷ்டி சுற்றி நீர்நிலையில் போடலாம். குடும்ப புரோகிதருக்கு சன்மானம், துணி தானம் செய்யலாம். பொய்சாட்சி கூடாது. ஏமாற்றுவதும் கூடாது. கருடபுராணம் படிப்பதும் தீமைகளை அகலச்செய்யும். 21, 27, 28 ஆகிய தேதிகளில் அதிக பணத்தை கவனமாகக் கையாளவும்.

உத்திராடம் 1-ஆம் பாதம்: எதிரியின் பலத்தை கவனமாகக் கண்காணிக்க வேண்டும். 17, 18, 19 தேதிகளில் வீடு, கடை, அலுவலகம், உத்தியோகம் என இடமாற் றத்தை எதிர்கொள்ள நேரும். 7-ல் இருக்கும் சூரியனும் ராகுவும் பின்னடைவுகளைத் தருவார்கள். விலைமதிப்புடைய எந்த பொருட்களையும் இம்மாதம் வாங்க வேண்டாம். இடையின் கீழுள்ள பாகத்தில் கெடுதல்வரும். தொட்டாற் சிணுங்கி இலையைத் தோரணம் கட்டி வாசலில் தொங்கச் செய்யலாம். பூவரசமரப்பட்டையை நீரில் ஊறவைத்து முகம் அலம்பலாம்.

மகரம்

உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள்: மௌனம் வைரம் போன்றது. 7-ல் செவ்வாய் இருப்பதால் வாய்மூடி மௌனமாய் சாதிக்கவேண்டிய மாதம். கல்லூரி, பள்ளி மாணவர்களுக்கு கேதுவும் சனியும் கைகோர்த்து உதவிபுரிவார்கள். உதவிப்பணியாளர்களிடம் மென்மையான உணர்வு வேண்டும். புதுவேலைவாய்ப்பு, பிறரிடம் உதவிபெற 6, 7, 15, 16, 25, 26 ஆகிய தேதிகள் ராசியானவை. 48 வயதைக் கடந்தவர்கட்கு பார்வையில் பின்னடைவுகள் வரலாம். நாய் வளர்ப்பவர்கள் அது காணாமல்போனாலோ, உயிர் பிரிந்தாலோ, வேறொரு நாய் வளர்ப்பதால் காலபைரவர் உறுதுணை கிடைக்கப்பெறும். மீன் தொட்டியில் கோல்டன் பிஷ் எட்டு கூடாது.

திருவோணம்: இரண்டு காரியங்களில் உன்னிப்பான கவனம் தேவை. முதலாவது உடல் ஆரோக்கியம்; இரண்டாவது ஓய்வு. கணவன் அல்லது மனைவிக்கு அந்தரங்க உறுப்பில் சுக்கிரன் சில கெடுதலைச் செய்வார். விருந்தினருக்கு வீட்டு உணவையே பரிமாற வேண்டும். வேலைவாய்ப்பு, பணி மாற்றம் போன்றவற்றை 1, 8, 9, 10, 11, 20, 21, 31 தேதிகளில் மனம்போல் நிறைவேற்றலாம். 21 செவ்வாய்க்கிழமைகள் அங்காரகனையும் முருகனையும் வணங்குவதால் குடும்பம் சார்ந்த எல்லா கவலைகளும் மறையும். பவள ராசிக்கல் ஐந்தை, தண்ணீரில் மாலையில் ஊறவைத்து மறுநாள் காலை அந்த நீரைக் குடித்தால் வெற்றியை உணரலாம்.

அவிட்டம்: 1, 2-ஆம் பாதங்கள்: இளங்காதலர்களுக்கு, சுக்கிரனும் குருவும் தடையின்றி சுழுக நடைபோட உதவுவார்கள். பொருளாதாரம் கச்சிதமாகப் பெருகும். இம்மாதம் நான்காவது வாரம், "நீ காற்று; நான் மரம்; என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்' என்று ராகம் பாடலாம்.

27, 28 தேதிகளில் மிகவும் "பிசி'யாகக் காணப்படுவீர்கள். சூரியனும் ராகுவும் மிதுனத்தில் இருப்பதால், வெளிநாட்டில் பணிபுரிவோர் தாய்நாடு திரும்பும் சூழல் உருவாகும். சந்திரனுக்காக ஐந்து திங்கட் கிழமைகள் ஒருபொழுது விரதம் கடைப் பிடித்தல் நல்லது. வீட்டு மாடியில் வட்டவடிவ தண்ணீர்த்தொட்டி வேண்டாம்.

கும்பம்

அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள்: மரங்கள் காய்ப்பதும் பழங்களைத் தருவதும் அதன் சொந்த நலத்துக்காக அல்ல. அதுபோலவே இம்மாதம் தியாக உணர்வுடன் செயல்படவேண்டும். குடும் பத்திற்குப் பேருதவியாக இருக்க வேண்டும். குறிப்பாக 4, 5, 10, 11, 25, 26, 31 தேதிகளில் அதிக நெருக்கடிகள் ஏற்படும். கேதுவும் சனியும் தனுசில் இருப்பதால் உங்கள் கையால் எந்த உத்தரவாதமும் எழுதிக் கையொப்பமிடக்கூடாது. போலீஸ் கெடுபிடிக்கு ஆளாக நேரிடும். பெண்கள் அதிக ஆபரணங்களுடன் பொதுநிகழ்ச்சி யில் கலந்துகொள்வதால் திருஷ்டி ஏற்படும். பொதுநிகழ்ச்சியில் கலந்துவிட்டு வந்ததும் கால்களை நன்கு சுத்தம் செய்தல் நலம்.

சதயம்: அரசியல் மற்றும் பொதுவாழ்வு நபர்களுக்கு குரு பகவான் பட்டம், பதவியென புகழடையச் செய்வார். வழக்கறிஞர்கள், நீதியரசர்கள் நல்லவற்றை தொடர்ச்சியாக எதிர்பார்க்கலாம். ராசிக்கு 5-ல் சூரியன், ராகு. கருவுற்ற மாதர்கள் 3, 5-ஆம் மாதங்களில் கவனமுடன் செயல்படவேண்டும். பெற்ற குழந்தைகளுக்கு இப்போது 17 வயதெனில், கல்விக்காக வெளியூர் சென் றால் நல்ல நண்பர்களுடன் பழக அறிவுரை கூறவேண்டும். ஞாயிறன்று சூரிய ஹோரையில் நீர் பருகுதலைத் தவிர்ப்பது நல்லது.

பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்: குடும்பத்தில் யாரோ புதிதாக இணைவார்கள். வேலைக்காக 6, 7, 10, 11, 15, 16, 25, 26 ஆகிய தேதிகளில் முயற்சித்தால் குரு பகவான் அருள் தருவார். மிகப்பெரியவை சுலபமாக முடியும். பெரிய போட்டிகள் இருக்காது. செவ்வாயின் கெடுதல் வராதிருக்க உப்பு கலந்த பலகாரங்களை தானமாகத் தருதல் நன்று. புதனின் தொல்லை தொடர்ந்தால் ஆண்கள் பெல்ட் அணிவது நல்லது. அல்லது ஒரு மண் குடுவையில் பச்சைப்பாலை ஊற்றி வெள்ளைத்துணியால் மூடி, வீட்டின் வடகிழக்கு திசையில் பள்ளம் தோண்டிப் புதைக்கவும்.

மீனம்

பூரட்டாதி 4-ஆம் பாதம்: கோபத்தை அன்பால் வெல்ல வேண்டிய மாதம். ராசிக்கு பத்தில் சனி, கேது. வாலிப வயதிலிருக்கும் பிள்ளைகள்மீது கவனம் வேண்டும். பருவக்கோளாறால் பாதை மாறலாம். நெருங்கிய நண்பர்களிடம் கொடுக்கல்- வாங்கலில் தாராள குணம் வேண்டாம். பகுதிநேர எழுத்தாளர்கள், விரிவுரையாளர்களுக்கு சில பின்னடைவு வரலாம். 1, 6, 7, 13, 14, 27, 28 ஆகிய தேதிகளில் குலதெய்வ வணக்கம் அதிக நன்மைகளைத் தரும். பெண்கள் அமாவாசைக்குப் பிறகு வரும் வளர்பிறைச் சந்திரனை- மாலை நேரம் 3, 6, 9, 12 பிறைகளை மனக்குறை கூறி வணங்கினால் பார்வதி அருள் புரிவாள்.

உத்திரட்டாதி: 4-ல் புதன், சுக்கிரன் இம்மாதம் பழைய வீட்டையும் புதுமாடலாகப் புதுப்பிக்கலாம். பெண்களின் வாழ்க்கைத்துணைவர். ரிஷபம், மிதுனம், கன்னி, மீன ராசியெனில் துணிச்சலாக ஏக்கங்களை வெளிப்படுத்தலாம். எதையும் எதிர்ப்பின்றி வாங்கித்தரும் மனப்பக்குவத்துடன் காணப்படுவார். இசைக்கலைஞர்கள், நடிகர்கள் வருமானத்தை எதிர்பார்க்கலாம். 4, 5, 13, 14, 23, 24, 31 ஆகிய தேதிகள் ராசியானவை. ஞாயிறன்று சூரிய உதயநேரத்தில் பன்னீரால் முகத்தை அலம்பி, சூரிய நமஸ்காரம் செய்வது அதிக பலன் தரும். மாட்டுத்தொழுவம் தெற்கு நோக்கி இருந்தால், நொச்சி இலைத் தோரணம் கட்டுவது தீமையை அகற்றும்.

ரேவதி: குரு பகவான் விருச்சிகத்தில் இருப்பதால், குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்ப்போருக்கு குருவருளால் வருமானம் பெருகும். நீதித்துறை சார்ந்தவர் களுக்கு பதவி உயர்வு, இட மாறுதல் விருப்பம்போல் நிகழும். வயது முதிர்ந்த வேப்பமரம் இணைந்த அரச மரத்தை 9 அல்லது 18 முறை வலம்வந்தால் பல தீமைகள் அகலும். வீட்டு வாசலில் கெட்ட நீர் தேங்குவது கூடாது. வியாழனன்று கருடபுராணம் படிப்பதால் மகாவிஷ்ணு அருள்பெறலாம். திங்கட்கிழமை வெள்ளைப் பவழ மோதிரம் அணிவது மிக ராசியானது. ஞாயிறன்று ஒருபொழுது உபவாசம் நன்று.

செல்: 93801 73464

bala050719
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe