Advertisment

ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்

/idhalgal/balajothidam/jotipapunu-lucky-c-subramaniam-answers-3

● எஸ். சங்கர், பொன்னமராவதி.

திருமணத்தடையாக உள்ளது. எப்போது திருமணம் நடக்கும்?

புனர்பூச நட்சத்திரம், மிதுன ராசி, மீன லக்னம். 2019 ஜூன்வரை சனி தசை. இது முடியவேண்டும். அடுத்துவரும் புதன் தசை தனது புக்தியில் திருமணம் கூடும். அதுவரை காத்திருக்கவும்.

● வி. வெங்கடாசலம், வடுகப்பட்டி.

Advertisment

முதல் பெண் குழந்தை பிறந்து பத்து வருடங்களுக்குப் பிறகு 19-3-2018 திங்கள் அன்று கடவுள் அருளால் ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு V. SUBHANESH என்று பெயர் வைக்க விரும்புகிறோம். நியூமராலஜிப்படி சரிதானா?

பிறந்த தேதி எண். 1, கூட்டு எண். 6. சுபனேஷ் என்ற பெயர் 41 வருகிறது. இவருக்கு 46-ல் பெயர் வைத்தால் சிறப்பாக இருக்கும்.

V E. S U B H A N E S H

6 5 3 6 2 5 1 5 5 3 5

என்று 46-ல் வைக்கலாம். (வெ. சுபனேஷ்)

● என். தியாகராஜன், தரமணி.

இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்னர் எனது பேத்தி சாயிலட்சுமி திருமணம் பற்றிக் கேட்டேன். தங்கள் வாய் முகூர்த்தத்தின்படியே 2016 ஆகஸ்டில் திருமணமாகி- இப்போது ஒரு பெண் குழந்தை உள்ளது. எனது மகள் ஜோதியின் ஜாதகத்தில் ராகு தசை நடப்பதால் கவலையோடிருக்கிறாள். (வசிஷ்டர் வாயால்) ராகு தசை எப்படி இருக்கும் என்று பதில் தர நமஸ்கரிக்கிறேன்.

Advertisment

ஜோதி கேட்டை நட்சத்திரம், விருச்சிக ராசி. 2020 வரை ஏழரைச்சனி உள்ளது. கும்ப லக்னம். 20-2-2017 முதல் ராகு தசை வந்துவிட்டது. அதில் சுயபுக்தி நடக்கிறது. 53 வயது நடக்கிறது. ராகு தசையும் ஏழரைச்சனியும் பயம் சேர்வது ஆகாது. ஆபரேஷன், விபத்து, அக்னிபயம் போன்ற பலனைச் சந்திக்கக் கூடும். 4-ல் சுகஸ்தானத்தில் ராகு. ஆகவே காரைக்குடி அருகில் சுந்தரம் குருக்களைத் தொடர்புகொண்டு (செல்: 99942 74067) சூலினிதுர்க்கா ஹோமம், திருஷ்டி துர்க்கா ஹோமம், தன்வந்திரி ஹோமம், நவகிரக ஹோமம், ஆயுஷ் ஹோமம் முதலிய 18 வகை ஹோமம் செய்து கலச அபிஷேகம் செய்துகொண்டால் எந்த ஆபத்தும் அணுகாது. ஆயுள்த

● எஸ். சங்கர், பொன்னமராவதி.

திருமணத்தடையாக உள்ளது. எப்போது திருமணம் நடக்கும்?

புனர்பூச நட்சத்திரம், மிதுன ராசி, மீன லக்னம். 2019 ஜூன்வரை சனி தசை. இது முடியவேண்டும். அடுத்துவரும் புதன் தசை தனது புக்தியில் திருமணம் கூடும். அதுவரை காத்திருக்கவும்.

● வி. வெங்கடாசலம், வடுகப்பட்டி.

Advertisment

முதல் பெண் குழந்தை பிறந்து பத்து வருடங்களுக்குப் பிறகு 19-3-2018 திங்கள் அன்று கடவுள் அருளால் ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு V. SUBHANESH என்று பெயர் வைக்க விரும்புகிறோம். நியூமராலஜிப்படி சரிதானா?

பிறந்த தேதி எண். 1, கூட்டு எண். 6. சுபனேஷ் என்ற பெயர் 41 வருகிறது. இவருக்கு 46-ல் பெயர் வைத்தால் சிறப்பாக இருக்கும்.

V E. S U B H A N E S H

6 5 3 6 2 5 1 5 5 3 5

என்று 46-ல் வைக்கலாம். (வெ. சுபனேஷ்)

● என். தியாகராஜன், தரமணி.

இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்னர் எனது பேத்தி சாயிலட்சுமி திருமணம் பற்றிக் கேட்டேன். தங்கள் வாய் முகூர்த்தத்தின்படியே 2016 ஆகஸ்டில் திருமணமாகி- இப்போது ஒரு பெண் குழந்தை உள்ளது. எனது மகள் ஜோதியின் ஜாதகத்தில் ராகு தசை நடப்பதால் கவலையோடிருக்கிறாள். (வசிஷ்டர் வாயால்) ராகு தசை எப்படி இருக்கும் என்று பதில் தர நமஸ்கரிக்கிறேன்.

Advertisment

ஜோதி கேட்டை நட்சத்திரம், விருச்சிக ராசி. 2020 வரை ஏழரைச்சனி உள்ளது. கும்ப லக்னம். 20-2-2017 முதல் ராகு தசை வந்துவிட்டது. அதில் சுயபுக்தி நடக்கிறது. 53 வயது நடக்கிறது. ராகு தசையும் ஏழரைச்சனியும் பயம் சேர்வது ஆகாது. ஆபரேஷன், விபத்து, அக்னிபயம் போன்ற பலனைச் சந்திக்கக் கூடும். 4-ல் சுகஸ்தானத்தில் ராகு. ஆகவே காரைக்குடி அருகில் சுந்தரம் குருக்களைத் தொடர்புகொண்டு (செல்: 99942 74067) சூலினிதுர்க்கா ஹோமம், திருஷ்டி துர்க்கா ஹோமம், தன்வந்திரி ஹோமம், நவகிரக ஹோமம், ஆயுஷ் ஹோமம் முதலிய 18 வகை ஹோமம் செய்து கலச அபிஷேகம் செய்துகொண்டால் எந்த ஆபத்தும் அணுகாது. ஆயுள்தீர்க்கமும் ஆரோக்கியம் விருத்தியும் உண்டாகும்.

perumal

● லக்ஷ்மி, மதுரை- பரவை.

தங்கள் பாதங்களுக்கு என் நமஸ்காரங்கள். 25 வருட காலமாக "பாலஜோதிடம்' வாசகியாக இருக்கிறேன். தங்களின் பதில்களும் உதாரணங்களும் ராசிபலனும் பிரமிக்க வைக்கின்றன. எல்லாரும் புரிந்துகொள்ளும் அளவுக்கு எளிமையாகவும் உயர்வாகவும் இருக்கிறது. தங்களின் இந்தத் தொண்டு மேன்மேலும் தொடரவும் தங்களுக்கு நீண்ட ஆயுள் கொடுக்கவும் பகவானைப் பிரார்த்திக்கிறேன். தங்களை மூன்றுமுறை நேரில் சந்தித்திருக்கிறேன். மறுபடியும் சந்திக்க வாய்ப்பு கிடைக்கவேண்டுகிறேன். என் மகன் ஹரிஷ் பி.எச்.டி. செய்கிறான். எப்பொழுது பட்டம் வாங்குவான்? திருமணம், வேலை எப்போது அமையும்? செவ்வாய், சனி பார்ப்பதால் காதல் திருமணமா? கலப்புத் திருமணமா? எங்கள் குலத்திலேயே திருமணமாகுமா?

கையில் வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைந்த கதையாக, மதுரையில் பரவையில் இருந்துகொண்டே தபாலில் சந்தேகம் கேட்கிறீர்கள். தொலைபேசி: 99440 02365-ல் தொடர்புகொண்டு நேரில் வந்தால் எல்லா விவரமும் விளக்கமும் பரிகாரமும் கூறலாம்.

● கே. ஏகாம்பரம், மாம்பலம்.

எனக்கு ஒரே மகள். அவளை மணம் முடித்துக்கொடுத்தேன். 1999 ஜூலை மாதம் இயற்கை எய்தினாள். 2017 பிப்ரவரி 24-ல் மனைவியும் காலமாகிவிட்டாள். மருமகன் மறுமணம் செய்து ஹோசூரில் இஞ்சினீயராகப் பணிபுரிகிறார். நானும் பேத்தியும் தனியாக வாழ்ந்து வருகிறோம். என்னுடைய பேத்தி ஐஸ்வர்யா பி.ஈ. முடித்து அமெரிக்காவில் எம்.எஸ். படிக்கச் சென்று, அங்கு சில பிரச்சினைகளால் படிப்பை முடிக்க முடியாமல் திரும்பி வந்து ஆறு மாதமாக என்னுடன் இருக்கிறாள். அவளுக்குத் திருமணம் செய்ய வேண்டும். எனக்கு 84 வயது. அவள் தாய்க்கு ஏற்பட்ட மரணம் காரணமாக பேத்தி திருமணமே வேண்டாம் என்கிறாள். படிப்பு தொடருமா? என் காலத்துக்குள் திருமணம் செய்துகொடுக்க முடியுமா? என்னுடைய அண்ணன் பத்து ஆண்டுகளாக "பாலஜோதிடம்' படிப்பவர். அவர்தான் தங்களைத் தொடர்புகொள்ளச் சொன்னார்.

பேத்தி ஐஸ்வர்யா கும்ப லக்னம், ஆயில்ய நட்சத்திரம், கடக ராசி. ஆவணியில் 27 வயது முடியும். சுக்கிர தசை குரு புக்தி 2019 பிப்ரவரி வரை. லக்னத்துக்கு 7-ல் சூரியன், புதன், சுக்கிரன் இருப்பது தோஷம். ஆனால் குரு இருப்பது தோஷ நிவர்த்தி. கன்னிச் செவ்வாய் சனியைப் பார்ப்பதும், மீனச் சனி கன்னிச் செவ்வாயைப் பார்ப்பதும் தோஷம். அதனால் தாமதத் திருமணம். நியாயமாக 30 வயதில்தான் திருமணம் செய்யவேண்டும். ஆனால் குரு 7-ல் இருப்பதும், சனி, ராகுவை குரு பார்ப்பதும் நல்லது. அதனால் 27 வயது முடிந்ததும் திருமணம் செய்யலாம். முன்னதாக உடனடியாக ஐஸ்வர்யா ஜென்ம நட்சத்திரம் அன்று (ஆயில்யம் அன்று) காரைக்குடி அருகில் காமோகர்ஷண ஹோமமும், பார்வதி சுயம்வரகலா ஹோமமும் செய்து அவருக்கு கலச அபிஷேகம் செய்ய வேண்டும். இத்துடன் படிப்பைத் தொடரவும் வாக்கணபதி ஹோமம், ஹயக்ரீவர் ஹோமம், நீலுசரசுவதி ஹோமம், மேதாதட்சிணாமூர்த்தி ஹோமம் மற்றும் நவகிரக ஹோமம், தன்வந்திரி ஆயுஷ் ஹோமம் செய்யப்படும். சுந்தரம் குருக்கள், செல்: 99942 74067-ல் தொடர்புகொள்ளலாம். உங்கள் காலத்திலேயே அவருக்கு நல்ல வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுக்கலாம்.

● எம். கீர்த்திகா, சேலம்.

எனக்கு எப்போது திருமணம் கூடிவரும்? படிப்பை முடித்துவிட்டேன். வீட்டில் வரன் பார்க்கிறார்கள். திருமணம் செய்துகொள்ளலாமா அல்லது தொடர்ந்து மேலே படிக்கலாமா?

கடக லக்னம், மிதுன ராசி. 21 வயது முடிந்து 22 வயது ஆரம்பம்! செவ்வாய்- சனி பார்வை இருப்பதால் 27 வயதுக்கு மேல்தான் திருமண யோகம். மேற்கொண்டு படிக்கலாம். வேலை பார்க்கலாம்.

● எஸ். இந்திரா, சென்னை-64.

என் மகன் விக்னேஷ் ஜாதகம் அனுப்பியுள்ளேன். அவனால் குடும்பத்தில் நிம்மதியில்லை. தன் அக்காளும் அவனும் எலியும் பூனையுமாக இருக்கிறார்கள். அவன் அப்பாவும் அவன் செயலால் பாதிக்கப்பட்டு வீட்டுக்கே வருவதில்லை. அவனுடன் படிக்கும் பெண்ணைக் காதலிப்பதாகவும், அவளையே மணம் முடிக்கப்போவதாகவும் புண்படுத்துகிறான். அறிவுரை கூறினால் இறந்துவிடுவதாக பயமுறுத்துகிறான். என்ன பரிகாரம்?

கடக லக்னம், கன்னி ராசி, உத்திர நட்சத்திரம். 19 வயதுதான் நடக்கிறது. 21 வயது வரை செவ்வாய் தசை. செவ்வாய் 8-ல் மறைவு. செவ்வாயும் சனியும் பரிவர்த்தனை. சனி நீசம்! லக்னத்தில் ராகு. படிப்பும் பாதிக்கும். குணக்கேடான ஜாதகம் மட்டுமல்ல; காவல்துறை நடவடிக்கைக்கும் ஆளாக நேரும். இப்படிப்பட்ட பிள்ளையை வீட்டில் வைத்துப் படிக்கவைப்பதைவிட எங்கேயாவது ஹாஸ்டலில் சேர்த்துவிட்டு பணம் கட்டலாம். முடிந்தால் ஞாயிற்றுக்கிழமைதோறும் காலை 6.00 மணிமுதல் 7.00 மணிக்குள் சிவன் கோவில் நந்தி சந்நிதியில் தொடர்ந்து 12 ஞாயிற்றுக்கிழமை நெய்விளக்கு ஏற்றலாம்.

● எஸ். வரதராஜன், தஞ்சாவூர்.

என் மகன் சங்கருக்கு 36 வயது. திருமணம் எப்போது நடக்கும்? பெரும்பாலும் விவாகரத்தான பெண் அல்லது குழந்தையுள்ள பெண் ஜாதகம்தான் வருகிறது. எப்படி முடியும்?

மகர லக்னம். 7-ல் சந்திரன் ஆட்சி. சுக்கிரன் 8-ல் மறைவு. 7-ஆம் இடத்துக்கு குரு பார்வையில்லை. பெரும்பாலும் விவாகரத்தான பெண் அல்லது விதவைப் பெண்தான் இவருக்கு முடியும். இதில் சங்கரின் விருப்பத்தையும் தெரிந்துகொண்டு செயல்படவும்.

● ஆறுமுகம், திருப்பூர்.

என் மகள் பவதாரிணி +2 போகிறாள். அவளை இஞ்சினீயரிங் அல்லது ஆசிரியர் அல்லது பேங்க் வேலைக்கு படிக்கச்சொல்லுகிறேன். அவள் விஞ்ஞானம் (ஐ.எஸ்.ஆர்.ஓ) படிக்கப்போகிறேன் என்கிறான். என் நிலையோ கஷ்டமான சூழ்நிலை. தினசரி வருமானம் வரவுக்கும் செலவுக்கும் பற்றாக்குறைதான். அவள் விரும்பிய படிக்க வைக்க முடியுமா? எனக்கு அரசியல் கட்சியில் சேர வாய்ப்பு வருகிறது. சேரலாமா? என் நண்பர் தான் வாங்கியுள்ள இடத்தில் (ஐந்து சென்ட்) எனக்கு இரண்டு சென்ட் தருவதாகவும், பணம் மெதுவாகத் தரும்படியும் கூறுகிறார். அந்த இடத்தில் புற்று உருவாகி நாகர்சிலை வைத்து பூஜைசெய்து வழிபாடு செய்கிறார்கள். மேற்படி இடம் வாங்கலாமா? யோகம் இருக்கிறதா?

ஆறுமுகத்துக்கு பூரட்டாதி நட்சத்திரம், கும்ப ராசி, விருச்சிக லக்னம். லக்னத்தில் சூரியனும் புதனும். செவ்வாயும் புதனும் பரிவர்த்தனை. நடப்பு கேது தசை! கேது சந்திரன் சாரம் (அஸ்தம்). அதனால் அரசியல் ஈடுபாடு யோகமுண்டு. துணிவாக செயல்படலாம். கட்சியில் பொறுப்பும் பதவிகளும் கிடைக்கும். உங்கள் நண்பரின் இடத்தில் கோவில்கட்டி வழிபடலாம். ஆனால் குடியிருக்க முடியாது. பவதாரிணிக்கு 24 வயதுவரை சுக்கிர தசை. அத்துடன் இன்னும் நான்கு வருடம் ஏழரைச்சனி (தனுசு) உள்ளது. விரும்பிய படிப்பில் சீட் கிடைத்தால் படிக்க வைக்கலாம். சீட் கிடைக்குமா என்பது கேள்விக்குறிதான்.

● எம். ரமேந்திரா, சென்னை.

மனைவியின் பேரில் திருப்போரூரில் (ஓ.எம்.ஆர்) வீடு வாங்க முயற்சிக்கிறேன். என் மனைவியின் சகோதரியும் அவர் கணவரும் வெளிநாட்டில் வேலை செய்கிறார்கள். 19 வருடங்களாக அவர்கள் வீட்டில் வசித்து வீட்டைப் பராமரிக்கிறோம். இப்போது தற்போது அவர்களுடன் மனவருத்தம் ஏற்பட, எங்களை வெளியேற்ற விரும்புகிறார்கள். செப்டம்பரில் காலி செய்வதாகக் கூறிவிட்டோம். அடுத்து சொந்த வீடா, வாடகை வீடா, ஒத்தி வீடா?

மகர லக்னம், மேஷ ராசி, பரணி நட்சத்திரம். மேஷ ராசிக்கு எட்டில் சனி வந்ததுமே (2014-ல்) வீடு மாறியிருக்க வேண்டும். குரு 4-ஆம் இடத்தைப் பார்த்ததால் தள்ளிப்போய்விட்டது. பரவாயில்லை. இப்போது குரு தசை சந்திர புக்தி 5-4-2019 வரை நடக்கிறது. இதில் வீடு மாறும் சூழ்நிலை வந்துவிடும். அடுத்து வாடகை வீடல்ல. ஒத்தியா சொந்தமா என்பது உங்கள் பொருளாதாரத்தைப் பொருத்தது. உங்கள் எல்லா கோரிக்கைகளும் உங்கள் விருப்பப்படி நிறைவேற ஒரு திங்கட்கிழமை திருச்சி- பொன்னமராவதி பாதையில் செவலூர் சென்று பூமிநாதர்கோவிலில் (வாஸ்து கோவிலில்) 108 சங்காபிஷேக- ருத்ரஹோமம் செய்து அபிஷேகம் செய்யவும். ராஜப்பா குருக்கள், செல்: 98426 75863-ல் தொடர்புகொள்ளவும்.

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe