● கே. ராஜு, தாதகாபட்டி.

என் பேரன் மணிகண்டனுக்கு 29-8-2014-ல் திருமணமாகி, 9-1-2018-ல் விவாகரத்தாகிவிட்டது. மறுமணத்துக்குப் பெண் பார்க்கிறோம்; அமையவில்லை. அவர் பி.ஈ., எம்.பி.ஏ., முடித்து சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். அரசு வேலை கிடைக்குமா? இளைய பேரன் முரளிதரன் பி.டெக், (ஐ.டி.) முதல் வகுப்பில் 2013-ல் தேர்ச்சி பெற்றான். காவல்துறையில் பணிபுரிய விரும்புகிறான். கிடைக்குமா?

Advertisment

மணிகண்டனுக்கு நடந்த திருமணம் கூட்டு எண் 8 என்பதால் விவாகரத்தாகிவிட்டது. அவர் ஜாதகப்படி உத்திரட்டாதி நட்சத்திரம், மீன ராசி, கன்னியா லக்னம். 7-ல் சுக்கிரன், சந்திரன் சேர்க்கை. 7-க்குடைய குரு 5-ல் நீசம். அதனால் மறுமணத்துக்கு புனர்விவாக கந்தர்வராஜ ஹோமம் செய்யவேண்டும். முதல் தாரம் அமையாது. இரண்டாவது திருமணமாகத்தான் (அந்தப் பெண்ணுக்கு) அமையும். நாக தோஷம், களஸ்திர தோஷம், புத்திர தோஷம் மூன்றும் உள்ளன. மேற்படி ஹோமம் காரைக்குடி அருகில் செய்யலாம். சுந்தரம் குருக்களை, செல்: 99942 74067-ல் தொடர்புகொள்ளவும். இளைய பேரன் முரளிதரன் மக நட்சத்திரம், சிம்ம ராசி, மேஷ லக்னம். 10-ல் ராகு; சூரியன் 8-ல் மறைவு. அரசு வேலையோ- போலீஸ் வேலையோ அமையாது. தனியார் நிறுவனத்தில் பணிபுரியலாம். மணிகண்டனுக்கு ஹோமம் செய்யும்போது முரளிக்கும் நல்ல வேலை கிட்டவும், நல்ல இடத்தில் திருமணமாகவும் ஹோமம் செய்து, இருவருக்கும் கலச அபிஷேகம் செய்யலாம். ஒரே செலவில் முடியும்.

● ஆர். பாபு, ஆரணி.

கடன் தொல்லை அதிகம். என் வயது 62. வயதிற்கேற்ற தொழில் அல்லது வேலை செய்யலாம் என்று நினைக்கிறேன். விசாக நட்சத்திரம், துலா ராசி, கடக லக்னம். ஏழரைச்சனி முடிந்தும் விமோசனம் பிறக்கவில்லை. என் மகனுக்கு பெயர் ராசிப்பொருத்தம் பார்த்துதான் திருமணம் செய்தோம். திருமணமானதில் இருந்தே சிரமம்தான். மருமகள் வந்த நேரம் சரியில்லையோ?

மகன் திருமணத்துக்கும் மருமகள் வந்த நேரத்துக்கும் எந்தக் குறையும் இல்லை. சம்பந்தமும் இல்லை. அவர்கள்மீது பழிபோட வேண்டாம். உங்கள் நேரம்தான் சரியில்லை. ஏழரைச்சனி ஒரு காரணம். கடக லக்னத்துக்கு சுக்கிர தசை பாதகாதிபதி தசை. வயதிற்கேற்ற வேலை என்றால் "செக்யூரிட்டியாக' போகலாம். சொந்தத் தொழில் என்றால் டீக்கடை, மிக்சர் கடை (உணவு சம்பந்தம்), பெட்டிக்கடை வைக்கலாம்.

● எம். முருகையன், அன்னதானப்பட்டி.

Advertisment

என் வயதுள்ள நண்பர்கள் திருமணமாகி குழந்தைகளுடன் சந்தோஷமாக வாழ்கிறார்கள். நான் மட்டும் வறுமையில் கடனாளியாக அவதிப்படுகிறேன். வீடு கட்ட வங்கிக்கடன் வாங்கி கட்ட முடியவில்லை. எனக்குத் திருமணம் நடக்குமா? வீட்டுக்கடனை அடைக்க முடியுமா?

மூல நட்சத்திரம், தனுசு ராசி, கும்ப லக்னம். லக்னத்தில் சனி. ராசியில் கேது- அதற்கு ஏழில் சுக்கிரன், ராகு. களஸ்திர தோஷமும் நாக தோஷமும் உள்ளது. நடப்பு 54 வயது. ராகு தசை புதன் புக்தி. காரைக்குடி அருகில் வேலங்குடி வயல் நாச்சியம்மன் கோவில் சென்று திருமணத்தடை விலகவும், கடன் நிவர்த்தி ஏற்படவும், தொழில் மேன்மையடையவும், மகிழ்ச்சியான மணவாழ்க்கை அமையவும், கட்டிய வீட்டைக் காப்பாற்றவும் 18 விதமான ஹோமம் செய்ய வேண்டும். புதுவேஷ்டி, துண்டு அணிந்து கலச அபிஷேகம் செய்துகொள்ளவேண்டும். சுந்தரம் குருக்கள், செல்: 99942 74067-ல் தொடர்புகொள்ளவும். பெற்றோர் இல்லாத உங்களுக்கு சொந்த வீடுதான் ஆதாரம். அது இருந்தால்தான் பெண் கொடுக்க முன்வருவார்கள். முதல் தாரமானாலும் சரி; இரண்டாம் தாரமானாலும் சரி- யோசிக்க வேண்டாம்.

pillaiyar● டி. சந்திரசேகரன், சென்னை-61.

Advertisment

கடந்த 25 வருடகாலமாக "சாதக அலங்காரம்' ஜோதிட நூலை வாசித்து வருகிறேன். தற்சமயம் 2020 வரை சுக்கிர தசை; அதன்பிறகு சூரிய தசை. இது உடல்நிலையை மோசமாக்குமா? அதற்கடுத்து சந்திர தசை- ஏழாவது தசை மாரகம் செய்யுமா? அந்திமக்காலத்தில் சிவ- விஷ்ணு சஹஸ்ர நாமாக்கள் பாடினால் அடியேன் கவலையற்று காலம்தள்ள முடியுமா?

அந்திமக்காலம் என்றில்லை. எப்போதுமே எல்லாக் காலத்திலும் இறைவன் நாமாக்களை சிந்திப்பதும் ஜெபம் செய்வதும் மனஅமைதியையும் ஆரோக்கியத்தையும் ஆனந்தத்தையும் தருவது உறுதி! துலா லக்னம், துலா ராசி. ஏழரைச்சனி முடிந்துவிட்டது. அதனால் சந்திர தசையைப் பற்றிய பயம் வேண்டாம்; கவலை வேண்டாம். நடப்பு வயது 66. இன்னும் இரண்டு வருடம் கழித்து சூரிய தசை வரும். 74 வயதுக்குமேல்தான் சந்திர தசை 10 வருடம்- 84 வயது வரை. அக்காலம் அட்டமச்சனி சந்திப்பே அந்திமக்காலமாகும். சந்திர தசை வந்தவுடன் தவறாமல் திங்கட்கிழமைதோறும் சிவலிங்கத்துக்கு காலையில் அபிஷேகத்துக்குப் பால் வாங்கித் தரலாம். அத்துடன் ஒரு திங்கட்கிழமை ருத்ரஹோமம் செய்து சிவலிங்கத்துக்கும் அம்மனுக்கும் ருத்ராபிஷேக பூஜை செய்தால் அந்திமக்காலம் நோய் நொடி இல்லாமல் அமைதியான பொழுதாக கழியும்.

● திருமாலவன், சிவகாசி.

திருமணப்பொருத்தம் பார்க்கும்போது பத்துப் பொருத்தங்களில் எது மிகமிக முக்கியமானது?

தினம், ராசி, யோனி, ரஜ்ஜு, வேதை ஆகிய ஐந்தும் மிக முக்கியம். மற்றவை இருந்தாலும் இல்லாவிட்டாலும் கவலையில்லை. அதேசமயம் ஆணுக்கும் பெண்ணுக்கும் சமராகு தசையோ கேது தசையோ நடந்தால் பத்துப் பொருத்தம் இருந்தாலும் சேர்க்கக்கூடாது. சமதசை சனி தசையும் அல்லது ஏழரைச்சனியும் அட்டமச்சனியும் நடந்தால் பரிகாரம் செய்துவிட்டுத் திருமணம் செய்யலாம்.

● கருப்பையா, மீனாட்சிபுரம்.

வீட்டில் வௌவால் வந்து அடைகிறது. குற்றமா?

குற்றம்தான். வீட்டில் உள்ளவர்களுக்கு நோய், ஆபரேஷன் போன்ற பிரச்சினைகள் உண்டாகும். இதற்குப் பரிகாரம் வீட்டில் கணபதி ஹோமம், சுதர்சன ஹோமம், நவகிரக ஹோமம், தன்வந்திரி ஹோமம், மிருத்யுஞ்ஜய ஆயுஷ் ஹோமம் செய்யவேண்டும். வெள்ளியில் வௌவால் உருவம் வாங்கி சிவன் கோவில் உண்டியலில் செலுத்தலாம்.

● அருணாராணி, திருச்செந்தூர்.

பத்து வருடங்களாக தங்கள் பத்திரிக்கையின் வாசகர் நாங்கள். எங்களுக்கு சொந்த வீடு அமைப்பு உண்டா என்று முன்பு கேட்டோம். 2012-ல் அமையும் என்று எழுதி இருந்தீர்கள். அதன்படி அமைந்தது. ஆனால் இஞ்சினீயர் ஏமாற்றிவிட்டார். முழுமையாக முடியவில்லை. எங்களுக்கு மூன்று பெண்கள். இரண்டு பெண்களுக்கு பார்வதி சுயம்வரகலா ஹோமம் செய்து திருமணம் நடந்து முடிந்தது. நாங்கள் தற்போது அதிக கடன் சுமையில் சிக்கித் தவிக்கிறோம். வீட்டை விற்கலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டோம். ஊருக்கு வெளியே வீடு இருப்பதால் குறைந்த விலைக்குக் கேட்கிறார்கள்.

உங்கள் அனைவருடைய ஜாதகங்களையும் பரிசீலனை செய்தோம். ஆனால் எதிலும் பிறந்த தேதி இல்லை. விலாசம் இல்லாத கவரை தபாலில் சேர்த்தால் அது எங்கே பட்டுவாடா ஆகும்? "டெட்லெட்டர்' அலுவலகத்துக்குத்தான் போகும்.

எல்லா பிரச்சினைகளுக்கும் ஒரே பரிகாரம் அக்னி காரியம்தான். ஹோமம் செய்து அனைவரும் கலச அபிஷேகம் செய்துகொள்ளவேண்டும். வீடு விற்க, கடன் நிவர்த்திக்கு, பெண் திருமணம், தேக ஆரோக்கியம், கவலை தீர என எல்லாவற்றுக்கும் 16 விதமான ஹோமம் செய்ய வேண்டும். காரைக்குடி அருகில் வேலங்குடி வயல்நாச்சியம்மன் கோவிலில் மூன்று மணி நேரம் ஐந்து அய்யர்கள் செய்வார்கள். செலவு விவரங்களுக்கு சுந்தரம் குருக்கள், செல்: 9994274067-ல் தொடர்புகொண்டு விசாரிக்கவும்.