● ஏ.ஆர்.ஆர். சுதர்சனன், திருச்சி.
எனக்கு நிலையான வேலை, வருமானம், திருமணம், எதிர்காலம் எப்படி இருக்கும்? தங்களை மானசீக குருவாக மதிக்கிறேன்! ஜோதிடத்துறையில் எனது வளர்ச்சி எப்படி இருக்கும்?
என்னுடன் முதலில் பழகிய காலம்முதல், சென்னை வாணிமகாலில், பி.எஸ்.பி. விஜய்பாலா நிகழ்ச்சியில் உங்களுக்கு சர்ட்டிபிகேட் கொடுத்த காலத்திலிருந்து- இப்போது உங்கள் வளர்ச்சி மிக நன்றாக இருக்கிறது. எனக்குத் திருப்தியளிக்கிறது. "பாலஜோதிட'த்திலும் மற்றும் பல ஜோதிடப் பத்திரிக்கைகளிலும் நீங்கள் எழுதும் கட்டுரைகள் ஜோதிட ஞானத்தையும் அனுபவத்தையும் பிரதிபலிக்ன்றன. அத்துடன் "மாதஜோதிட'த்தில் ஒரு பொறுப்பு கிடைத்ததற்கு வாழ்த்துகள். தொடர்ந்து எழுதுங்கள். ஜோதிட ஆராய்ச்சி செய்யுங்கள். ஜோதிடப் பலன் சொல்லுங்கள். சந்திரனும் சனியும் சேர்ந்துள்ளதால் திருமணத்தடை, வாரிசு தாமதம். கேது தசையில் புதன் புக்தியில் (2018 மார்ச்சுக்குமேல்) திருமணம் கூடும். குத்தாலத்துக்கு வடகிழக்கில் மூன்று கிலோமீட்டரில் (கும்பகோணம்- மயிலாடுதுறை பாதை) திருவேள்விக்குடி சென்று பரிகாரப் பூஜை செய்தால் திருமணம் நடக்கும். நவகிரகம் இல்லாத கோவில்.
● என். மணி, திருப்பூர்.
என் மகள் சத்தியப்பிரியாவுக்கு 23 வயது. அவளுக்குத் திருமண முயற்சிகள் செய்கிறோம். அவள் காதல் திருமணம் செய்துகொள்ளப் போவதாகவும், நாங்கள் பார்க்கும் மாப்பிள்ளை வேண்டாம் என்றும் கூறுகிறாள். அவள் எதிர்காலம் எப்படி அமையும்?
சத்தியப்பிரியா, உத்திரட்டாதி நட்சத்திரம், மீன ராசி. 7-ல் சுக்கிரன், ராகு, செவ்வாய் நிற்க, குரு 8-ல் மறைவு என்பதால் பெற்றோர் பார்த்து நடத்தும் திருமணத்துக்கு இடமில்லை. காதல் திருமணம்தான் தலையெழுத்து. ஜாதி, மதம் எதுவும் பார்க்காமல் விரும்பிய மாப்பிள்ளையைத் திருமணம் செய்து வையுங்கள். அதற்கு முன்னால் காமோகர்ஷண ஹோமமும், பார்வதி சுயம்வரகலா ஹோமமும் செய்து, சத்தியப்பிரியாவுக்கு கலசஅபிஷேகம் செய்து வைத்தால் அவள் தேர்ந்தெடுக்கும் மாப்பிள்ளை நல்ல மாப்பிள்ளையாகவும், நல்ல மணவாழ்க்கையாகவும் அமையும். நீங்களும் அதைப்பார்த்து மனநிம்மதி அடையலாம்.
● சி. இந்துமதி, சென்னை-64.
எனது மகள் (ஒரே மகள்) ஜாதகத்தை அனுப்பியுள்ளேன். தற்போது நான் கணவரைப் பிரிந்து வாழ்கிறேன். என் நிலையும் நான் படும் கஷ்டங்களும் என் மகளுக்கு வரக்கூடாது. அவளுக்குத் திருமண வாழ்க்கை, எதிர்காலம் எப்படி அமையும்?
மகள் தேவி திருவோண நட்சத்திரம

மகள் தேவி திருவோண நட்சத்திரம், மகர ராசி, மீன லக்னம். 7-ல் சுக்கிரன் நீசம். 8-ல் சூரியன் நீசம். அவருடன் செவ்வாய், புதன், குருவும் மறைவு. 9-ல் ராகு. அவருக்கு 12-ல் (கும்பத்தில்) உள்ள சனி பார்வை. நடப்பு 25 வயது. ராகு தசை நடக்கிறது. மகளுக்கு பத்து வயதில் ராகு தசை ஆரம்பம். அப்போது முதலே குடும்பச்சிக்கல் வந்துவிட்டது. பிரிவும் பலமானது. 28 வயதுவரை ராகு தசை. இது மேற்படிப்பையும் பாதித்தது. பெற்றோரையும் பாதித்தது. சூலினிதுர்க்கா ஹோமம், திருஷ்டி துர்க்கா ஹோமம், காமோகர்ஷண ஹோமம், பார்வதி சுயம்வரகலா ஹோமம், இத்துடன் இன்னும் பல ஹோமம் செய்து தேவிக்கு கலச அபிஷேகம் செய்யவேண்டும். காரைக்குடி அருகில் வேலங்குடியில் மேற்படி ஹோமம் செய்யலாம். சுந்தரம் குருக்கள், செல்: 99942 74067-ல் பேசவும்.
● ரா. மோகனகிருஷ்ணன், திருச்சி-102.
வாங்கிய அசலுக்குமேல் (மூன்று லட்சம் அசல்) வட்டியும் சேர்த்து அடைத்த பிறகும் 33 லட்சம் தரவேண்டுமென்று அரசியல் ஆள் பலத்தால் என்னை துன்புறுத்துகிறார்கள். திருச்சி கீழ்கோர்ட்டில் ஜெயித்துவிட்டார்கள். மதுரை ஹைகோர்ட்டில் ஸ்டாம்ப் பீஸ் இரண்டு லட்சம் கட்டமுடியாமல் கேஸ் ஃபைல் ஆகவில்லை. கேஸ் என்னவாகும்?
மதுரைக்கு நேரில் வரவும். ஜாதகப் பலனை நேரில் தெளிவு செய்து பரிகாரம் கூறலாம்.
● சி. செல்வகுமார், திருமங்கலம்.
கடந்த 1-2-2012 முதல் எனது தந்தையின் தொழிலை செய்து வருகிறேன். தற்போது கடன் சுமையால் சொல்லமுடியாத மனத்துன்பம்! கடன் எப்போது அடையும்? தந்தையின் தொழிலையே தொடர்ந்து நடத்தலாமா? பூர்வீகச் சொத்துப் பிரச்சினையால் எனது உடன்பிறந்த சகோதரனால் ஏமாற்றப்பட்டுள்ளேன். தீர்வு கிடைக்குமா?
செல்வகுமார் உத்திரட்டாதி நட்சத்திரம், மீன ராசி, விருச்சிக லக்னம். 26-11-2013 முதல் கேது தசை ஏழு வருடம்- 2020 நவம்பர் வரை. இது பாதிப்பான காலம்தான். கடன் உடன் வாங்கியாவது வாஞ்சாகல்ப கணபதி ஹோமமும், கடன் நிவர்த்தி ஹோமமும், சொர்ணாகர்ஷண பைரவ ஹோமமும் செய்து குடும்பத்தாருடன் கலச அபிஷேகம் செய்துகொள்ள வேண்டும். சுந்தரம் குருக்களை, மொபைல் எண்: 99942 74067-ல் தொடர்புகொண்டு விசாரிக்கவும். அத்துடன் மேலும் பல ஹோமங்கள் செய்யப்படும். இதற்கு ஆயிரக்கணக்கில் செலவாகும். மேலும் உங்கள் ஜென்ம நட்சத்திரம் உத்திரட்டாதி வரும் நாளில் திருப்புனல்வாசல் அருகில் (தேவகோட்டை வழி) தீயத்தூர் சென்று லட்சுமீகர ஈஸ்வரர் கோவிலில் காலையில் நடக்கும் ஹோம பூஜையில் கலந்துகொள்ளலாம். கடன் நிவர்த்திக்கு கும்பகோணம் வழியில் திருச்சேறை சென்று 11 திங்கட்கிழமை தொடர் அர்ச்சனைக்கு பணம் கட்டி வரவும். முதல் திங்கட்கிழமை நேரிலும், பிறகு பத்துத் திங்கள் தபாலிலும் பிரசாதம் வரும். தொடர்புக்கு: சுந்தரமூர்த்தி குருக்கள், செல்: 94437 37759. அப்படியே திருச்சேறையிலிருந்து (15 கிலோமீட்டர்) சேங்காலிபுரம் சென்று தத்தாத்ரேயர், கார்த்தவீர்யார்ஜுன யந்திரத்துக்கு அபிஷேக பூஜை செய்யவும். சொத்துப் பிரச்சினை தீரும். வரவேண்டிய பணம் வந்துசேரும். தொடர்புக்கு: நாகசுப்ரமணியம், செல்: 94872 92481.
● சி.ஆர். ஈஸ்வரன், திருப்பூர்.
எனது மருமகன் வடிவேல் கடந்த இருபது வருடமாக பனியன் கம்பெனி வைத்து தொழில் செய்கிறார். சாண் ஏறினால் முழம் இறங்குகிறது. நானும் என்னால் முடிந்த உதவிகள் செய்தும் முன்னேற்றமில்லை. எத்தனையோ பேருக்கு வழிகாட்டும் தாங்கள் இவருக்கும் ஒரு வழிகாட்டவும்.
வடிவேல் ரோகிணி நட்சத்திரம், ரிஷப ராசி, விருச்சிக லக்னம். 2008 முதல் குரு தசை 16 வருடம்- 2024 வரை- 2020 வரை அட்டமச்சனி நடக்கிறது. ஏற்றத்தாழ்வு இருக்கும். பனியன் கம்பெனி சுமாராகத்தான் இருக்கும். சுக்கிரன் நீசம். 10-ல் சூரியன், புதன் இருப்பதால், அக்னி சம்பந்தமான டீக்கடை- டிபன் சென்டர் போன்ற மாற்றுத்தொழில் செய்யலாம். முன்னதாக தேவூர் சென்று தேவகுருநாத சுவாமி ஆலயத்தில் அபிஷேக பூஜை செய்துவிட்டு வரவேண்டும். நாகப்பட்டினம்- திருத்துறைப்பூண்டி சாலையில் தேவூர் உள்ளது. அத்துடன் காங்கேயத்திலிருந்து கொடுமுடி பாதையில் (ஏழு கிலோமீட்டர்) மடவிளாகம் உள்ளது. நாகபுரிசுனை தீர்த்தம் உள்ளது. பிரஹன் நாயகி சமேத ஆருத்ர கபாலீஸ்வரர் (சுயம்பு) அருள்பாலிக்கிறார். அங்குசென்று பிரார்த்தனை செய்யவும். தொடர்புக்கு: சந்தானம் குருக்கள் (சுப்புலட்சுமி), செல்: 89731 21263.
● கே. ராஜு, தாதகாபட்டி.
என் பேரன் மணிகண்டனுக்கு 29-8-2014-ல் திருமணமாகி, 9-1-2018-ல் விவாகரத்தாகிவிட்டது. மறுமணத்துக்குப் பெண் பார்க்கிறோம்; அமையவில்லை. அவர் பி.ஈ., எம்.பி.ஏ., முடித்து சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். அரசு வேலை கிடைக்குமா? இளைய பேரன் முரளிதரன் பி.டெக், (ஐ.டி.) முதல் வகுப்பில் 2013-ல் தேர்ச்சி பெற்றான். காவல்துறையில் பணிபுரிய விரும்புகிறான். கிடைக்குமா?
மணிகண்டனுக்கு நடந்த திருமணம் கூட்டு எண் 8 என்பதால் விவாகரத்தாகிவிட்டது. அவர் ஜாதகப்படி உத்திரட்டாதி நட்சத்திரம், மீன ராசி, கன்னியா லக்னம். 7-ல் சுக்கிரன், சந்திரன் சேர்க்கை. 7-க்குடைய குரு 5-ல் நீசம். அதனால் மறுமணத்துக்கு புனர்விவாக கந்தர்வராஜ ஹோமம் செய்யவேண்டும். முதல் தாரம் அமையாது. இரண்டாவது திருமணமாகத்தான் (அந்தப் பெண்ணுக்கு) அமையும். நாக தோஷம், களஸ்திர தோஷம், புத்திர தோஷம் மூன்றும் உள்ளன. மேற்படி ஹோமம் காரைக்குடி அருகில் செய்யலாம். சுந்தரம் குருக்களை, செல்: 99942 74067-ல் தொடர்புகொள்ளவும். இளைய பேரன் முரளிதரன் மக நட்சத்திரம், சிம்ம ராசி, மேஷ லக்னம். 10-ல் ராகு; சூரியன் 8-ல் மறைவு. அரசு வேலையோ- போலீஸ் வேலையோ அமையாது. தனியார் நிறுவனத்தில் பணிபுரியலாம். மணிகண்டனுக்கு ஹோமம் செய்யும்போது முரளிக்கும் நல்ல வேலை கிட்டவும், நல்ல இடத்தில் திருமணமாகவும் ஹோமம் செய்து, இருவருக்கும் கலச அபிஷேகம் செய்யலாம். ஒரே செலவில் முடியும்.
● ஆர். பாபு, ஆரணி.
கடன் தொல்லை அதிகம். என் வயது 62. வயதிற்கேற்ற தொழில் அல்லது வேலை செய்யலாம் என்று நினைக்கிறேன். விசாக நட்சத்திரம், துலா ராசி, கடக லக்னம். ஏழரைச்சனி முடிந்தும் விமோசனம் பிறக்கவில்லை. என் மகனுக்கு பெயர் ராசிப்பொருத்தம் பார்த்துதான் திருமணம் செய்தோம். திருமணமானதில் இருந்தே சிரமம்தான். மருமகள் வந்த நேரம் சரியில்லையோ?
மகன் திருமணத்துக்கும் மருமகள் வந்த நேரத்துக்கும் எந்தக் குறையும் இல்லை. சம்பந்தமும் இல்லை. அவர்கள்மீது பழிபோட வேண்டாம். உங்கள் நேரம்தான் சரியில்லை. ஏழரைச்சனி ஒரு காரணம். கடக லக்னத்துக்கு சுக்கிர தசை பாதகாதிபதி தசை. வயதிற்கேற்ற வேலை என்றால் "செக்யூரிட்டியாக' போகலாம். சொந்தத் தொழில் என்றால் டீக்கடை, மிக்சர் கடை (உணவு சம்பந்தம்) பெட்டிக்கடை வைக்கலாம்.
● எம். முருகையன், அன்னதானப்பட்டி.
என் வயதுள்ள நண்பர்கள் திருமணமாகி குழந்தைகளுடன் சந்தோஷமாக வாழ்கிறார்கள். நான் மட்டும் வறுமையில் கடனாளியாக அவதிப்படுகிறேன். வீடு கட்ட வங்கிக்கடன் வாங்கி கட்ட முடியவில்லை. எனக்குத் திருமணம் நடக்குமா? வீட்டுக்கடனை அடைக்க முடியுமா?
மூல நட்சத்திரம், தனுசு ராசி, கும்ப லக்னம். லக்னத்தில் சனி. ராசியில் கேது- அதற்கு ஏழில் சுக்கிரன், ராகு. களஸ்திர தோஷமும் நாக தோஷமும் உள்ளது. நடப்பு 54 வயது. ராகு தசை புதன் புக்தி. காரைக்குடி அருகில் வேலங்குடி வயல் நாச்சியம்மன் கோவில் சென்று திருமணத்தடை விலகவும், கடன் நிவர்த்தி ஏற்படவும், தொழில் மேன்மையடையவும், மகிழ்ச்சியான மணவாழ்க்கை அமையவும், கட்டிய வீட்டைக் காப்பாற்றவும் 18 விதமான ஹோமம் செய்ய வேண்டும். புதுவேஷ்டி, துண்டு அணிந்து கலச அபிஷேகம் செய்துகொள்ளவேண்டும். சுந்தரம் குருக்கள், செல்: 99942 74067-ல் தொடர்புகொள்ளவும். பெற்றோர் இல்லாத உங்களுக்கு சொந்த வீடுதான் ஆதாரம். அது இருந்தால்தான் பெண் கொடுக்க முன்வருவார்கள். முதல் தாரமானாலும் சரி; இரண்டாம் தாரமானாலும் சரி- யோசிக்க வேண்டாம்.
● டி. சந்திரசேகரன், சென்னை-61.
கடந்த 25 வருடகாலமாக "சாதக அலங்காரம்'. ஜோதிட நூலை வாசித்து வருகிறேன். தற்சமயம் 2020 வரை சுக்கிர தசை; அதன்பிறகு சூரிய தசை. இது உடல்நிலையை மோசமாக்குமா? அதற்கடுத்து சந்திர தசை- ஏழாவது தசை மாரகம் செய்யுமா? அந்திமக்காலத்தில் சிவ- விஷ்ணு சஹஸ்ர நாமாக்கள் பாடினால் அடியேன் கவலையற்று காலம்தள்ள முடியுமா?
அந்திமக்காலம் என்றில்லை. எப்போதுமே எல்லாக் காலத்திலும் இறைவன் நாமாக்களை சிந்திப்பதும் ஜெபம் செய்வதும் மனஅமைதியையும் ஆரோக்கியத்தையும் ஆனந்தத்தையும் தருவது உறுதி! துலா லக்னம், துலா ராசி. ஏழரைச்சனி முடிந்துவிட்டது. அதனால் சந்திர தசையைப் பற்றிய பயம் வேண்டாம்; கவலை வேண்டாம். நடப்பு வயது 66. இன்னும் இரண்டு வருடம் கழித்து சூரிய தசை வரும். 74 வயதுக்குமேல்தான் சந்திர தசை 10 வருடம்- 84 வயது வரை. அக்காலம் அட்டமச்சனி சந்திப்பே அந்திமக்காலமாகும். சந்திர தசை வந்தவுடன் தவறாமல் திங்கட்கிழமைதோறும் சிவலிங்கத்துக்கு காலையில் அபிஷேகத்துக்குப் பால் வாங்கித் தரலாம். அத்துடன் ஒரு திங்கட்கிழமை ருத்ரஹோமம் செய்து சிவலிங்கத்துக்கும் அம்மனுக்கும் ருத்ராபிஷேக பூஜை செய்தால் அந்திமக்காலம் நோய் நொடி இல்லாமல் அமைதியான பொழுதாக கழியும்.
● திருமாலவன், சிவகாசி.
திருமணப்பொருத்தம் பார்க்கும்போது பத்துப் பொருத்தங்களில் எது மிகமிக முக்கியமானது?
தினம், ராசி, யோனி, ரஜ்ஜு, வேதை ஆகிய ஐந்தும் மிக முக்கியம். மற்றவை இருந்தாலும் இல்லாவிட்டாலும் கவலையில்லை. அதேசமயம் ஆணுக்கும் பெண்ணுக்கும் சமராகு தசையோ கேது தசையோ நடந்தால் பத்துப் பொருத்தம் இருந்தாலும் சேர்க்கக்கூடாது. சமதசை சனி தசையும் அல்லது ஏழரைச்சனியும் அட்டமச்சனியும் நடந்தால் பரிகாரம் செய்துவிட்டுத் திருமணம் செய்யலாம்.
● கருப்பையா, மீனாட்சிபுரம்.
வீட்டில் வௌவால் வந்து அடைகிறது. குற்றமா?
குற்றம்தான். வீட்டில் உள்ளவர்களுக்கு நோய், ஆபரேஷன் போன்ற பிரச்சினைகள் உண்டாகும். இதற்குப் பரிகாரம் வீட்டில் கணபதி ஹோமம், சுதர்சன ஹோமம், நவகிரக ஹோமம், தன்வந்திரி ஹோமம், மிருத்யுஞ்ஜய ஆயுஷ் ஹோமம் செய்யவேண்டும். வெள்ளியில் வௌவால் உருவம் வாங்கி சிவன் கோவில் உண்டியலில் செலுத்தலாம்.