● கே. பிரகாஷ், தஞ்சாவூர்.

நான் கடந்த மூன்றாண்டு காலமாக "பாலஜோதிடம்' படித்து வருகிறேன். தாங்கள் வாசகர்களுக்குக் கொடுக்கும் பதில்கள் தன் மிக நேர்த்தியாகவும் பயன் தரக்கூடியதாகவும் இருக்கின்றன. பாராட்டுக்கள். என் ஒரே மகன் 10-ஆம் வகுப்பு படிக்கிறான். 11-ஆம் வகுப்பில் அக்கவுன்டன்ஸி- ஆடிட்டிங் குரூப் எடுக்கலாம் என நினைக்கிறான். ஜாதகப்படி அது சரியா?

Advertisment

மகன் பிரவீன் (எ) சாய்சக்தி சரண் சித்திரை நட்சத்திரம், கன்னி ராசி, மிதுன லக்னம். 4-ல் சந்திரன். 4-க்குடைய புதன் 2-ல் பரிவர்த்தனை. அவன் விருப்பப்படியே கணிதம், ஆடிட்டிங் சம்பந்தப்பட்ட படிப்பு படிக்கலாம். பட்டம் வாங்கலாம். எதிர்காலத்தில் அரசு சம்பந்தமான வேலையும் பார்க்கலாம். 25 வயதுவரை ராகு தசை. இப்போது 14 வயது நடக்கிறது. படிப்பில் சிலநேரம் ஆர்வமும் சிலநேரம் பிடிப்பற்ற நிலையும் காணப்படலாம். ஞாயிறுதோறும் ராகு காலத்தில் புன்னைநல்லூர் மாரியம்மன் சந்நிதியில் நெய் விளக்கேற்றி வழிபட்டு வந்தால் படிப்பில் தடை வராது.

● வி. அண்ணாதுரை, வேளச்சேரி.

முதுமை வந்தால்தானே ஓய்வு பெறலாம் என்ற நினைப்பு எழும்? தங்களுக்கு முதுமையே இல்லை. எழுத்தாளனுக்கும் தெய்வீகப்பணியில் உள்ளவர்களுக்கும் ஜோதிடப்பணியில் உள்ளவர்களுக்கும் மருத்துவத்துறையில் உள்ளவர்களுக்கும் ஓய்வு (ரிட்டயர்மென்டு) என்பதில்லை. எத்தனையோ ஜோதிடப் பத்திரிகைகள் வந்த வேகத்தில் காணாமல் போய்விட்டன. ஆனால் தங்களின் "பாலஜோதிடம்' தஞ்சைப் பெரியகோவிலைப்போல நிமிர்ந்து நிற்கக் காரணம் தங்கள் எழுத்தும் பதிலும்தான். தங்கள் ஆலோசனைப்படி பள்ளத்தூரில் 18 வகையான ஹோமம் செய்த வகையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. கே.எம். சுந்தரம் வசம் மகளுக்கு ஜாதகம் கணித்து அனுப்பியுள்ளேன். லக்னாதிபதி சனி 12-ல் மறைவு, அஸ்தமனம். சனி குடும்பாதிபதியாகி 12-ல் மறைவு. லக்னத்தில் ராகு, ஏழில் கேது. தனுசு சனியை ரிஷபச்செவ்வாய் பார்க்கிறார். இவை என் மகளுக்கு பாதகப்பலனா? அவளுக்கு நல்ல வாழ்க்கை அமையுமா? இவையெல்லாம் எனது சந்தேகங்கள். அட்டமச்சனி வரும் காலம் சந்திர தசை சந்திப்பு பாதகம் ஏற்படுத்துமா?

ருத்ரஹோமம் செவலூரில்தான் செய்யவேண்டுமா? வேறு இடத்திலும் செய்யலாமா?மகர லக்னம், சிம்ம ராசி, மக நட்சத்திரம். 2018 ஜனவரியில் 27 வயது முடிந்து 28 ஆரம்பம். நாக தோஷம், சனி தோஷம், மாங்கல்ய தோஷம் இருந்தாலும், ஹோமம் செய்த பலனாக எல்லா தோஷமும் விலகிவிட்டது. 28 வயது முடிந்து 29 ஆரம்பத்தில் திருமண யோகம் கூடிவரும். நல்ல மாப்பிள்ளையும் நல்ல மணவாழ்க்கையும் அமையும். அக்காலம் பொருத்தம் பார்க்க நேரில் வரலாம். கிரகங்கள் மறைவுக்குப் பரிகார ஹோமம் செய்தாகிவிட்டது. அதைப் பற்றி பயப்பட வேண்டாம். ஹோமம் தடுப்பூசி போட்டுக் கொண்டதற்குச் சமம். வேறு எந்த சந்தேகமும் தேவையில்லை. தேவையில்லாமல் மனதைக் குழப்பிக்கொள்ள வேண்டாம். உங்கள் ஜாதகப்படி ராகு தசை நடக்கிறது. பாவாத்தாளுக்கு கும்ப ராசி, தனுசு லக்னம். புதன் தசை. ஆயுள் தீர்க்கம். மாங்கல்யம் தீர்க்கம். பிள்ளைகளுக்கும் ஆயுள், ஆரோக்கியம் திருப்தியாக உள்ளது. பிள்ளைகள் திருமணம், படிப்பு, வேலை, வருமானம் எல்லாவற்றுக்கும் சேர்த்து 18 வகையான ஹோமம் செய்தாகிவிட்டது. எல்லாம் நல்லபடி நடக்கும்.

Advertisment

sivan-parvathi

● ஏ.எஸ். சந்திரசேகர், வேளச்சேரி.

எங்களுக்கு இதுவரை குழந்தை பாக்கியம் இல்லை. செயற்கை முறை கருத்தரிப்பு மூலம் (டெஸ்ட் டியூப்) குழந்தை பெற்றுக்கொள்ள ஆசைப்படுகிறோம். அது நிறைவேறுமா?

உங்கள் ஜாதகமும் மனைவி நிரஞ்சனி ஜாதகமும் திருக்கணித முறைப்படி கணித்தது. முதலில் உங்கள் இருவரின் ஜாதகங்களையும் மதுரை கே.எம். சுந்தரம் வசம் (செல்: 92453 28178) வாக்கியப் பஞ்சாங்கப்படி கணித்து என்னை நேரில் மதுரையில் வந்து சந்திக்கவும். அத்துடன் உங்கள் திருமணத் தேதி (ஆங்கிலத்தேதி) தெரியவேண்டும். 4, 5, 7, 8-ல் திருமணம் நடந்திருந்தாலும் வாரிசு தோஷம் இருக்கும். இதன்பிறகு பரிகாரம் சொல்லலாம்.

● எம்.எஸ்., டி. புத்தூர்.

Advertisment

இந்த ஜாதகர் மணிகண்டனின் தாயார் உயிருடன் இல்லை. அப்பா இருந்தும் இல்லாததற்குச் சமம். அம்மாச்சி வீட்டில் வளர்ந்து வந்தான். சென்னையில் வேலை பார்த்தான். கடந்த ஒன்றரை வருட காலமாக காணாமல் போய்விட்டான். உயிருடன் இருக்கிறானா இல்லையா- எங்கு போனான் என்பதே தெரியவில்லை. இந்த ஜாதகரின் நிலை பற்றிக் கூறவும்.

கன்னியா லக்னத்துக்கு 9-க்குடைய சுக்கிரன் 10-ல் இருக்க, ராசிக்கு 9-ல் குரு ஆட்சி பெற்று சுக்கிரனைப் பார்க்க, அட்டம ஸ்தானத்தையும் அட்டமாதிபதி செவ்வாயையும் குரு பார்ப்பதால் ஆயுள் குற்றமில்லை. அட்டமச்சனி நடந்த காலம் ஊரைவிட்டு ஊர் போகும் நிலை. அக்காலம் சந்திர தசையும் நடந்தது. (16 வயது முதல்). சந்திர தசை 26 வயதுவரை நடக்கும். தலைமறைவு என்றுதான் கூறலாம். கும்பகோணம்- குடவாசல் அருகில் சேங்காலிபுரம் சென்று தத்தாத்ரேயருக்கும், கார்த்தவீர்யார்ஜுன யந்திரத்துக்கும் அவன்பேரில் ஒரு அபிஷேக பூஜை செய்தால் அவன் இருக்குமிடம் தெரியும். ஆள் திரும்பவும் வரலாம். டிரஸ்டி நாகசுப்பிரமணியன், செல்: 94872 92481-ல் தொடர்புகொண்டு பேசலாம்.

● ப. ராஜகணபதி, திருவல்லிக்கேணி.

என் எதிர்காலம் எப்படி இருக்கும்?

நித்திய கண்டம்- பூரண ஆயுசாக இருக்கும். சாண் ஏற முழம் வழுக்கும்.

● ம. அருணகிரி, திருச்சி.

கடன்காரனாக அவதிப்படுகிறேன். இரண்டரை ஆண்டு காலமாக தொழில் முடக்கம். கடன் தீரவும், தொழில் முன்னேறவும், பூர்வீகச் சொத்து திரும்பக் கிடைக்கவும், பெற்ற பிள்ளைகளால் நிம்மதி கிடைக்கவும் என்ன வழி?

மகர லக்னம், தனுசு ராசி, பூராட நட்சத்திரம். 57 வயது ஆரம்பம். குரு தசை சனி புக்தி நடப்பு. 6-ஆவது தசை குரு தசை விரயாதிபதி தசை. அத்துடன் ஏழரைச்சனியில் ஜென்மச்சனி. காரைக்குடி அருகில் வேலங்குடி சென்று வயல்நாச்சியம்மன் கோவிலில் 18 விதமான ஹோமம் செய்து குடும்பத்தாருடன் கலச அபிஷேகம் செய்ய வேண்டும். கடனோடு கடன் வாங்கி இதைச் செய்துமுடித்தால் விமோசனம் பிறக்கும்.