● நந்து பவானி, சென்னை.
நான் சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் முதுகலைப் பட்டம் படிக்கி றேன். என் பெற்றோர் துபாயில் இருக் கிறார்கள். எனக்கு திருமண ஏற்பாடு நடக் கிறது. அத்தையின் உறவு மாப்பிள்ளை பார்க்கிறார்கள். எங்கள் ஜாதகங்களை அனுப்பியுள்ளேன். பொருத்தம் பார்த்துக் கூறவும்.
நந்து பவானி அனுஷ நட்சத்திரம், விருச்சிக ராசி, கன்னியா லக்னம். கேது தசை நடப்பு. ராஜேஷ் அஸ்த நட்சத்திரம், கன்னி ராசி, மிதுன லக்னம். குரு தசை நடப்பு. பெண்ணின் லக்னம் கன்னி- இதுவே ஆணின் ராசியாக அமைவது விசேஷப் பொருத்தம். பத்துப் பொருத்தத்தில் ஒன்பது பொருத்தம் உண்டு. திருமணம் செய்ய உத்தமம். ராசியும் லக்னமும் (கன்னி) ஒன்றாக இருப்பதால், ஒருவரையொருவர் புரிந்துகொண்டு இல்லறத்தை நல்லறமாக நடத்தலாம். நந்து பவானிக்கு செப்டம்பரில் 24 வயது முடியும். லக்னத்துக்கு 2-ல் செவ்வாயும் ராகுவும் இருப்பதால், 25 வயது முடிந்து 26 அல்லது 27-ல் திருமணம் செய்யவேண்டும். முன்ன தாகத் திருமணம் செய்ய நினைத்தால், காரைக்குடியில் காமோகர்ஷண ஹோம மும், பார்வதி சுயம்வரகலா ஹோமமும் செய்து, நந்து பவானிக்கு கலச அபிஷேகம் செய்துவிட்டுத் திருமணம் செய்தால் வாழ்க்கை ஆனந்தமாக அமையும். (தொடர் புக்கு: சுந்தரம் குருக்கள், செல்: 99942 74067). அந்த ஹோமத்தில் மாப்பிள்ளை ராஜேஷ் பேர், நட்சத்திரம், ராசியைச் சொல்லிக் கொள்ளலாம். வாரிசு யோகத்துக்கும் தத்தாத்ரேயர் ஹோமம், சந்தான கணபதி ஹோமம், சந்தான கோபால ஹோமம், சந்தான பரமேஸ்வர ஹோமமும் இணைத் துச் செய்யலாம்.
● ஜி. ஜானகிராமன், தூத்துக்குடி.
எனது பேத்தி முத்துலட்சுமிக்கு (1-4-2019-ல் ஜனனம்) இதயத்தில் ஜூன் மாதம் ஆபரேஷன் நடந்தது. ஆயுள்பலம் எப்படி இருக்கிறது?
கடக லக்னம். 8-ல் சந்திரன் (லக்னா திபதி), சுக்கிரன், புதன் மறைவு. 6-ல் குரு, சனி, கேது மறைவு. 12-ல் ராகு மறைவு. லக்னத்துக்கும் லக்னாதிப திக்கும் குரு பார்வைஇல்லை. பிறக்கும்போது அவிட்ட நட்சத் திரம், கும்ப ராசி. 2020 மார்ச்சில் சனிப்பெயர்ச்சி. ஏழரைச் சனி ஆரம்பம். செவ்வாய் தசை. செவ்வாய் 11-ல் சரத்துக்கு 11- பாதக ஸ்தானத்தில் இருந்து தசை நடத்துகிறார். பாலாரிஷ்டம் உண்டு. 1-4-2020-ல் பங்குனி மாதம், அவிட்ட நட்சத்திரம் வரும் நாளில் ஆயுஷ் ஹோமம், தன்வந்திரி ஹோமம், நவகிரக ஹோமம் செய்து, குழந்தைக்கு கலச அபிஷேகம் செய்யவேண்டும். அதுவரை (இன்னும் ஆறு மாதம் இருப்பதால்) ஒருமுறை சென்னை அருகில் திருநின்றவூர் சென்று இருதயாலீஸ் வரரை வழிபடவும். அடுத்து திருவாரூர் மாவட்டம், நன்னிலம் என்ற ஊரிலிருந்து ஆறு கிலோமீட்டர் தூரம் ஸ்ரீவாஞ்சியம் சென்று வாஞ்சிநாதரையும் மங்களாம்பிகையும் வழிபடவேண்டும். கைலாச குருக்கள், செல்: 94420 37827, ராஜராஜ குருக்கள், செல்: 94424 03926-ல் தொடர்புகொண்டு விசாரித்தால் வழிபாட்டு முறைகளைச் சொல்வார்கள். ஸ்ரீவாஞ்சியத்தில் எமதர்மராஜனுக்கு தனிச் சந்நிதி உண்டு. ஆயுள் தீர்க்கம் உண்டாகும்.
● எஸ். ரம்யா, திருவாரூர்.
எனக்கு மீனா, ரீனா என்று இரண்டு பெண் குழந்தைகள். இதில் மீனாவுக்கு ராகு தசை, ஏழரைச்சனி. ரீனாவுக்கு சுக்கிர தசை நீசம், பாதகாதிபதி சாரம். குழந்தை களுக்கு பாலாரிஷ்டம்- உயிருக்கு ஆபத்து என்று உள்ளூர் ஜோதிடர்கள் சொல்கிறார்கள். அது உண்மை யா? கடவுள் அருளால் உங்க ளைப் பற்றிக் கேள்விப்பட்டேன். அதற்குப் பரிகாரம் உண்டா?
மீனாவுக்கு அவிட்ட நட்சத் திரம், மகர ராசி. ஏழரைச்சனி 2020 வரை நடக்கும். இத்துடன் நான்கு வயதுமுதல் ராகு தசை- 22 வயதுவரை. இது பாலாரிஷ்டமான காலம்தான். தற்போது பத்து வயது. ரீனாவுக்கு மேஷ ராசி, அஸ்வினி நட்சத்திரம். நான்கு வயது நடப்பு. கேது தசை ஆறு மாதம் முடிந்து சுக்கிர தசை நீசம். ரீனாவுக்கு விருச்சிக லக்னத்தை மீன குரு ஆட்சிபெற்றுப் பார்க்கிறார். ரீனாவுக்கு மேஷ ராசியை சிம்ம குருவும், கன்னிச் செவ்வாயும் (லக்னாதிபதியும் ராசியாதி பதியும்) பார்க்கிறார்கள். எனவே ஆயுள் பயமில்லை. இருந்தாலும் இருவருக்கும் காரைக்குடியில் சுந்தரம் குருக்களைத் தொடர்புகொண்டு ஆயுஷ் ஹோமம், தன்வந்திரி ஹோமம் உள்பட 19 அல்லது 21 வகையான ஹோமம் செய்து, (பெற்றோர்- குழந்தைகள் ஆக நால்வரும்) கலச அபிஷேகம் செய்துகொண்டால், எந்தவித மான கண்டமும் தோஷமும் பாதிக்காது. நீண்ட ஆயுள், ஆரோக்கியம், கல்வி மேன்மை, உயர்கல்வி யோகம், வேலைவாய்ப்பு, நல்ல சம்பாத்தியம் போன்ற எல்லா அமைப்புகளும் உண்டாகும். திருமணக்காலத்தில் 23 வயது முதல் 25 வயதுக்குள் காமோகர்ஷண ஹோமமும், பார்வதி சுயம்வரகலா ஹோமமும் செய்யலாம். (தொடர்புக்கு: சுந்தரம் குருக்கள், செல்: 99942 74067).
● கே. சிவகாமி, சேலம்.
எனக்கு வயது 76. உடன்பிறப்புகள் இருந்தும், நான் ஒரு அநாதைக் கிழவி. திருமணம் செய்யவில்லை. கோவை தனியார் ஆஸ்பிட்டலில் சிகிச்சை பெற் றேன். மூச்சுத்திணறல், வீசிங் வருகிறது. நடக்கும்போதும் தொந்தரவு. எப்போது குணமாகும்? என் தாய் மட்டும் என்னுடன் இருக்கிறார். சகோதரன், சகோதரி இருந் தும் பயனில்லை. எனக்கு நோய் குணமா குமா? தாயாரின் காலம் எவ்வளவு?
கும்ப லக்னம், மீன ராசி, ரேவதி நட்சத் திரம். 83 வயதுவரை ராகு தசை. தம்பி சம்பத் குமார் சிம்ம ராசி. 13-4-2019 முதல் சனி தசை, சந்திர புக்தி- 2020, நவம்பர் 13 வரை. இதில் தாயாருக்கு மாரகம் வரும். அதன்பிறகு நீங்கள் எங்கேயாவது ஒரு முதியோர் இல்லத்தில் (ஹாஸ்டலில்) எஞ்சிய காலத் தைக் கழிக்கலாம்.