● எஸ். கண்ணன், விருதுநகர்.

30 ஆண்டுகளுக்குமேல் வாழ்ந்தவரும் இல்லை; தாழ்ந்தவரும் இல்லையென்று தங்களின் கட்டுரைமூலம் அறிந்திருக் கிறேன். என்றாலும் 1986 ஏப்ரலில் இருந்து இன்றுவரை எனது வாழ்வில் தொடர் போராட்டமாகவே இருக்கிறது. கடனாளி யாகவே இருப்பது ஏன்? மகள் செல்வியின் கல்வி, எதிர்கால வாழ்வு எப்படி அமையும்?

நடைமுறை சட்டதிட்டம் ஒரு பக்கம் இருந்தாலும், எமர்ஜென்ஸி காலத்தில் மிசா சட்டம் பாயும்போது மற்ற சட்டதிட்டம் செயலிழப்பதுபோல, சிலரின் வாழ்க்கையில் 30 ஆண்டு என்ன- பிறந்தநாள்முதல் இறுதிவரை போராட்டம், கஷ்டம் இருக்கும். அது அவரவர் ஊழ்வினை, மனம், எண்ணம், செயல்களைப் பொருத்த விஷயம். அப்படிப்பட்ட சாபக்கேடான ஜாதகர் களுக்கு விடிவும் விமோசனமும் பிறப்பது கஷ்டம். நித்திய குடிகாரன் ஆயிரம் சத்தியம் செய்து "நாளைமுதல் குடிக்க மாட்டேன் தங்கம்' என்றாலும், அவன் திருந்தமாட்டான். ஏதாவதொரு பேரிழப்புக்குப் பிறகுதான் திருந்துவான். உதாரணமாக, ஒரு ஜாதகத் தில் மூன்று கிரகங்களுக்குமேல் நீசமா னாலும், பலமிழந்து கெட்டுப்போயிருந் தாலும் அந்த ஜாதகர் சாபவிமோசனம் பெறாத ஜாதகர் என அர்த்தம். உங்கள் மகள் ஜாதகத் தில் கடக லக்னத்துக்கு 9-க்குரிய குரு 12-ல் மறைவதால், பூர்வபுண்ணிய வலுவில்லாத ஜாதகமாகிவிட்டது. அத்துடன் லக்னாதிபதி சந்திரனும் 8-ல் மறைவு. என்றாலும் அவரை குரு பார்ப்பதால் வாழ்க்கையில் பஞ்சம் இருந்தாலும் பட்டினி இல்லாமல் வாழ்நாள் ஓடும். 6-க்குரிய குரு 6-ஆமிடத்தைப் பார்ப்பதால் தகப்பனார் வாழ்நாள் முழுவதும் கடனாளியாகவே கஷ்டப்பட வேண்டும். கடனோ- உடனோ தேவைகள் நிறைவேறும். அது மாறவேண்டுமென்றால் ஏதாவது நல்லது செய்து புண்ணியத்தைத் தேடவேண்டும். சித்தர்களின் ஜீவசமாதியே கதியென்று கிடக்கவேண்டும். மகள் ஜாதகப் படி 17 வயதுவரை ராகு தசை. அதன்பிறகு சிறப் பாக இருக்கும்.

janswer

Advertisment

● பி. அனிதா, நெல்லை.

என் அண்ணன் சின்னச்சாமிக்கும், எனக்கும் திருமணம் தள்ளிப்போகிறது. எப்போது நடக்கும்?

அண்ணன் சின்னச்சாமி 38 வயது. களஸ்திர தோஷம் இருப்பதால் 40 வயதில் திருமணம் நடக்கும். அனிதாவுக்கு 36 வயது. மாங்கல்ய தோஷம் இருக்கிறது. இருவர் ஜாதகத்திலும் பூர்வபுண்ணிய தோஷம் இருப்பதால் படிப்பு, பட்டம், வசதி எல்லாம் இருந்தும் காலாகாலத்தில் திருமணம்- வாரிசு போன்ற யோகங்களை அனுபவிக்க முடியவில்லை.

Advertisment

● ஆர். குமரேசன், மன்னார்குடி.

என் மகன் செந்தில்- விஜயலட்சுமி திருமணப் பொருத்தம் எப்படி இருக்கிறது?

அவனுக்கு இது இரண்டாவது திருமணம். செந்தில் உத்திர நட்சத்திரம், சிம்ம ராசி. 2021 வரை ராகு தசை. முதலில் அவருக்கு சூலினிதுர்க்கா ஹோமமும், கந்தர்வராஜ மறுவிவாக ஹோமமும் செய்தபிறகுதான் திருமணம் செய்யவேண்டும். விஜயலட்சுமி ஜாதகத்தை அதுவரை தக்கவைக்கவும்.

● எல். ஈஸ்வரி. செங்கல்பட்டு.

என் கணவர் எப்போதும் சிடுசிடு வென்று இருக்கிறார். அவர் குணம் மாறுமா? அவரின் உடல் ஆரோக்கியம் எப்படி இருக்கும்? என் மகள் காவ்யா 9-ஆம் வகுப்பு படிக்கிறாள். மகன் பாலன் 6-ஆம் வகுப்பு படிக்கிறான். அவர்களின் படிப்பு, எதிர்காலம் பற்றிக் கூறவும்.

கணவர் மீன லக்னம். 9-ல் குரு நின்று லக்னம், ரிஷப ராசியைப் பார்க்கிறார். பொதுவாக நல்லவர். 2-ல் சனி நீசம் என்பதால் பேச்சில் கடுமையும் கோபமும் காணப்படும். கோபம் இருக்குமிடத்தில் குணமும் இருக்கும். நடப்பு சனி தசை வேறு- போகப்போக சரியாகிவிடும். பதில் பேசாமல்- நல்ல கருத்தாக இருந்தாலும் எதுவும் சொல்லாமல் அமைதியாகப் போங்கள். உங்களுக்கு அட்டமச்சனி. 45 மிளகை ஒரு சிவப்புத் துணியில் பொட்டலம் கட்டி, மண் விளக்கில் நெய் நிரப்பி மிளகுப் பொட்டலத்தை நனைத்து காலபைரவர் சந்நிதியில் 45 சனிக் கிழமை தீபமேற்றி வழிபடவும். குடும்பத்தில் அமைதி நிலவும். மகள் சிம்ம ராசி; பாலன் மகர ராசி. இருவருக்கும் எதிர்காலத்தில் படிப்பு தெளிவாக வரும். இருவருக்கும் சஷ்டாஷ்டக ராசி என்பதால் ஒற்றுமைக் குறைவு- உள்நாட்டுக் கலகம் அடிக்கடி வந்து விலகும்

● யாமினி. கள்ளக்குறிச்சி.

என் கணவர் ஆறு மாதங்களாக லண்டனில் வேலை பார்க்கிறார். நானும் அங்கு போகமுடியுமா?

கணவர் துலா ராசி, சுவாதி நட்சத்திரம். சனி தசை நடக்கிறது. மனைவி யாமினிக்கு தனுசு ராசி, தனுசு லக்னம், பூராட நட்சத்திரம். துலா ராசிக்கும் தனுசு ராசிக்கும் ஏழரைச் சனி நடப்பதால் இருவரும் விலகி இருப்பதே நல்லது. ஏழரைச்சனி முடிந்ததும் இருவரும் ஒரே இடத்தில் வேலை செய்யலாம். சேர்ந்துவாழலாம்.

● நடராஜன், போருர்.

என் பூர்வீக நிலத்தை ஒரு வருடத்துக்கு முன்பு விற்று விட்டேன். இப்போது வேறு நிலம் வாங்க முயற்சிக்கிறேன். எப்போது வாங்கலாம்?

பூர்வீக பழைய வீட்டில் வசிக்கிறேன். அதை இடித்து புதுவீடு கட்டமுடியுமா? எப்போது கட்டலாம்? தொழில் சரியில்லை. உடல் நிலையும் சரியில்லை. கடக லக்னம், மூல நட்சத்திரம், தனுசு ராசி. ஏழரைச்சனி. அத்துடன் ராகு தசை வேறு. அதனால் உங்கள் திட்டங்கள் நல்லதாக இருந்தாலும் நடப்பில் எல்லாம் கிடப்பில் போட்டமாதிரி இருக்கும். நாமக்கல் அருகில் சேந்தமங்கலம் சென்று (சாமியார் கரடு ஸ்டாப்) தத்தகிரி முருகன் மலைக்கோவிலில் தத்தாத்ரேயருக்கும் குருநாதர் ஜீவசமாதிக்கும் ஒருமுறை அபிஷேகம், பூஜை செய்யவும். எல்லா தடைகளும் விலகும்.

● ஆறுமுகம், கருங்கல்பாளையம்.

நான் பி.ஈ., மெக்கானிக் முடித்து மலேசியாவில் இரண்டு வருடம் வேலை பார்த்தேன். கோர்ஸ் படிப்பதற்காக நாமக்கல் வந்து எழுதி பாஸ் செய்தேன். இப்பொழுது குவைத் நாட்டுக்கு அழைக் கிறார்கள். வேலைக்குப் போகலாமா?

நேரம் காலம் எல்லாம் பார்த்து நாளைத் தள்ளிப்போடாமல் உடனே குவைத்துக்குப் போய்விடுங்கள்.

● அன்பரசி, மணப்பாடு.

என் தாய்- தந்தையைமீறி நான் கலப்புத் திருமணம் செய்து கொண்டேன். இனிமேல் என் வாழ்க்கையில் எந்தப் பிரச்சினைகளும் இல்லாமல் இருக்குமா?

அது நீங்கள் தேர்ந்தெடுத்த கணவரின் மனோநிலையைப் பொருத்தது.