● வி. ராஜேந்திரன், தெய்வச்செயல்புரம்.

எனது மகள் செல்விக்கும் மருமகன் குமாருக்கும் 4-3-2015-ல் திருமணம் நடந்தது. இதுவரை குழந்தை இல்லை. எப்போது பிறக்கும்? அடுத்து என் மகன் செந்திலுக்கு எப்போது திருமணம் நடக்கும்?

செல்வி பூராட நட்சத்திரம், தனுசு ராசி, மீன லக்னம். ராகு தசை. குமார் புனர்பூச நட்சத்திரம், மிதுன ராசி, மிதுன லக்னம். புதன் தசை. விஜயகுமார் ஜாதகத்தில் மிதுன லக்னத்துக்கு 5-ஆமிடத்தை செவ்வாயும் சனியும் சூரியனும் பார்ப்பதோடு குருவும் பார்க்கிறார். எனவே, தாமதமாக வாரிசு கிடைக்கும். திருமணத்தேதி எண் 4, கூட்டு எண் 6. தோஷமில்லை. அடுத்து உங்கள் மகன் செந்திலுக்கு 34 வயது. சதய நட்சத்திரம், கும்ப ராசி, கடக லக்னம். 7-ல் சுக்கிரன் இருப்பது தோஷம். கன்னியில் சனி, செவ்வாய் சேர்க்கை- களஸ்திர தோஷம். எனவே அவருக்கு கந்தர்வராஜ ஹோமம், காமோகர்ஷண ஹோமம் செய்து கலச அபிஷேகம் செய்யவேண்டும். பள்ளத்தூர் அருள்நந்தி ஆசிரமத்தில் எல்லா ஹோமங்களையும் ஒரே நேரத்தில் ஒரே செலவில் செய்துவிட்டால் உடனடியாக எல்லாருக்கும் பலன் உண்டாகும்.

hh

Advertisment

● எஸ். கார்த்திக், சென்னை-60.

எனது மகன் அஸ்வினுக்கு 16 வயதில் உபநயனம் செய்து வைத்தோம். அதற்கு முன்புவரை பள்ளிக்குச் செல்லும்முன் பத்து நிமிடம் எல்லா சுலோகங்களும் சொல்லும் வழக்கம் இருந்தது. தற்போது சுமார் ஆறு மாதகாலமாக பூஜை புனஸ்காரம் எதிலும் ஈடுபாடில்லை. சாஸ்திர சம்பிரதாயங்களில் நம்பிக்கையில்லாமல் இருக்கிறான். ஒரே வாரிசு என்பதாலும், எங்கள் தலைமுறையில் இதற்குமுன்பு யாரும் இப்படி இருந்ததில்லை என்பதாலும் எங்களுக்கு கவலையாக இருக் கிறது. இதற்கு என்ன நிவர்த்தி?

அஸ்வின் அவிட்ட நட்சத்திரம், கும்ப ராசி, துலா லக்னம். 20 வயதுவரை ராகு தசை. நடப்பு 17 வயதுதான். ஞாயிறு மாலை ராகு காலத்தில் தொடர்ந்து நெய்விளக்கேற்றி வழிபடவும். அத்துடன் ஞாயிறு காலை 6.00 மணி முதல் 7.00 மணிக்குள் சூரிய ஓரையில் சிவன் சந்நிதியில் சிவனுக்கு எதிரிலுள்ள நந்தி காலடியில் நெய்விளக்கேற்றி வழிபடவும். நாளடைவில் பக்தி சிந்தனையும் ஒழுக்கமும் வரும்.

Advertisment

● எஸ்.ஆர். வாசு. உதகை.

நான் மெக்கானிக் டிப்ளமோ படித்துள்ளேன். அரியர்ஸ் இருக்கிறது. அதை முடிக்க முடியுமா? எனக்கு எப்போது வேலை கிடைக்கும்? அடுத்து வரும் சனி தசை எப்படியிருக்கும்?

மகர லக்னம். லக்னத்தில் சனி ஆட்சி. 2-க்குரிய சனி 2-ஆமிடத்துக்கு 12-ல் மறைவு. 2-ல் சந்திரன். 4-க்குரிய செவ்வாய் லக்னத்துக்கு 8-ல் மறைவு. லக்னத்தில் சனி இருந்தால் எதிலும் அலட்சிய மும் சோம்பேறித்தனமும் இருக்கும். அதை மாற்றிக்கொள்வது அவசியம். வாழ்க்கையில் முன்னேற வேண்டுமானால் அதிகாலை பிரம்ம முகூர்த்த வேளையில்- 4.30 மணிக்கு மேல் 6.00 மணிக்குள் எழுந்திருக்கப் பழகவேண்டும். ஹயக்ரீவர் மந்திரத்தை ஜெபம் செய்யவேண்டும். கடலூர் அருகிலுள்ள திருவஹிந்திரபுரம் (திருவந்திபுரம்) சென்று ஹயக்ரீவரை வழிபடவேண்டும். அத்துடன் காட்டுமன்னார்கோவில் சென்று, அங்கிருந்து எய்யலூர் சென்று (டவுன் பஸ் உண்டு) ஸ்வர்ண புரீஸ்வரை வழிபடவும். டிப்ளமோவை முடித்துவிட்டு வெளிநாடு போகலாம்.

● எ. முருகேசன், நெல்லை.

எங்களுக்கு நீங்கள் வழிகாட்டியாக அமைந்ததற்கு கடவுளுக்கும் தங்களுக்கும் நன்றி! எனக்கு 53 வயது நடக்கிறது. ஆயில்ய நட்சத்திரம். இதுவரை நிலையான தொழில் அமையவில்லை. சுமார் நான்கு வருடமாக சிறிய பெட்டிக் கடை வைத்துள்ளேன். அதையும் நிம்ம தியாக நடத்த முடியவில்லை. கடன் தொல்லை- என் பெயரில் (அப்பா வழி சொத்து) ஒரு வீடு உள்ளது. கடந்த 16 வருடமாக அதை விற்க முயற்சிக்கி றேன்; முடியவில்லை. வீடு விற்கவும் கடன் அடைபடவும் வேறு வீடு அமையவும் வழிகாட்டவும்.

விருச்சிக லக்னம், கடக ராசி, ஆயில்ய நட்சத்திரம். 51 வயதுமுதல் ராகு தசை ஆரம்பம். இதில் தனது புக்தி 53 வயது 9 மாதம் நடக்கும். இதன்பிறகு பூர்வீக வீட்டை விற்று, கடனை அடைக்கலாம். தொழிலை விருத்தி செய்யலாம். மிஞ்சிய தொகையை வைத்து மனை வாங்கலாம். தற்போது வீடு வாங்கமுடியாது. வேறு வீடு கட்டமுடியாது. விருத்தாசலத்திலிருந்து ஸ்ரீமுஷ்ணம் சென்று பூவராக சுவாமிக்கு ஒரு அபிஷேகம், அர்ச்சனை செய்து வீடுவிற்க வேண்டிக்கொள்ளவும்.

● வி.எஸ். சுப்பையா, திருச்சி.

எனது பிள்ளைகள் எனது சொற்படி நடப்பதில்லை. குடும்பச் சொத்தை பாகம் பிரித்துக் கொடுக்க கடந்த எட்டு ஆண்டாக முயற்சிக்கிறேன். நடக்க வில்லை. எப்பொழுது என் கடமையை செய்துமுடிப்பேன்? மனைவி கடந்த 2008-ஆம் ஆண்டு காலமாகிவிட்டார். மூத்த மகனின் மனைவி சொத்து கொடுக்கவில்லையென்று சாப்பாடு போடுவதில்லை. கடைசி மகன் வி.ஆர்.வி. ராமனுக்கு திருமணமானால் என் சாப்பாட்டு பிரச்சினை தீரும். இல்லை யெனில் கண்ட இடங்களில் சாப்பிட வேண்டும். ராமன் திருமணமும் தள்ளிக் கொண்டே போகிறது. எதிர்காலத்தில் அவன் மனைவியும் சாப்பாடு போடமாட்டேன் என்றால் என் கதி என்ன? ராமனுக்கு எப்போது திருமணமாகும்?

உங்களுக்கு மீன ராசி, ரேவதி நட்சத்திரம், துலா லக்னம். 7-ல் குரு, சனி சேர்க்கை. அதனால் களஸ்திர தோஷம். ராகு தசையில் மனைவி முந்திவிட்டார். 5-க்குரிய சனி நீசம். 5-ல் சூரியன், சுக்கிரன். அதனால் பிள்ளைகள் அனுசரணையில்லை. ராமனுக்கு திருமண மானாலும் அவருக்கு வரும் மனைவி நல்லவராக வாய்த்தால் பிரச்சினை யில்லை. அவரும் மூத்த மருமகள்போல அமைந்துவிட்டால் என்ன செய்வீர்கள்? சொத்துப் பிரச்சினை தீரவும், பங்கு பாகம் பிரித்துக்கொடுக்கவும், ராமன் திருமணம் நிறைவேறவும் திருச்சியில் இருந்து பொன்னமராவதி பாதையில் (புதுக்கோட்டை வழி) செவலூர் சென்று பூமிநாதசுவாமி கோவிலில் ஹோமம் செய்யவேண்டும். நீங்களும் ராமனும் போகவேண்டும். ராமன் ஜாதகத்தில் ரிஷப லக்னத்தில் 7-க்குரிய செவ்வாய் நீசமடைவதும், மேஷ ராசிக்கு அட்டமச்சனி நடப்பதும் களஸ்திர தோஷம். திருமணத்தடை. அவருக்கு கந்தர்வ ராஜ ஹோமம் செய்து கலச அபிஷேம் செய்ய வேண்டும்

● செந்தில்நாதன், பாபநாசம்.

7-9-2013 "பாலஜோதிட'த்தில் கூறியபடி, சுக்கிர தசை, சந்திர புக்தியில் எனக்கு டிரைவர் வேலையும், நல்ல இடத்தில் திருமணமும் நடந்தது. நன்றி! அடுத்து வாரிசு எப்போது கிட்டும்?

மீன லக்னம், கடக ராசி, பூச நட்சத்திரம். சுக்கிர தசை செவ்வாய் புக்தியில் வாரிசு உருவாகும். தம்பதிகளாக கும்பகோணம் அருகில் குடவாசல் வழி சேங்காலிபுரம் சென்று தத்தாத்ரேயருக்கு ஒருமுறை அபிஷேகம் செய்து வேண்டிக்கொள்ளவும். டிரஸ்டி நாகசுப்ரமணியம், செல்: 94872 92481-ல் தொடர்புகொண்டு போகவும். உங்களுக்கு சுக்கிர தசை ராகு புக்தி ஆரம்பம். மூன்று வருடம். அக்காலம் மனைவி சரண்யாவுக்கு ராகு தசை 2020 டிசம்பர்வரை நடக்கும். இருவருக்கும் சம ராகு நடப்பது ஆகாது. அதனால் அக்காலம் என்னைத் தொடர்புகொண்டு, சூலினி துர்க்கா ஹோமம் முதலிய 15 ஹோமம் செய்து நீங்கள் இருவரும் கலச அபிஷேகம் செய்துகொள்ளவேண்டும். அது மிகப்பெரிய பாதுகாப்பு!