● ஐ. குமாரசாமி, வீரப்பன்சத்திரம்.

"பாலஜோதிடம்' வார இதழை பத்தாண்டுகளாகப் படிக்கிறேன். அந்தந்த வாரம் "பாலஜோதிடம்' இதழில் என் மனக்குறை போக்குமளவு ராசிபலனில் விளக்கம் கிடைத்து விடுகிறது. நான் தந்தையுடன் சொந்தத் தொழில்செய்கிறேன். எனக்கு சம்பளம் தருகிறார். கடந்த ஆறு மாதங்களாக சம்பளம் தரவில்லை. தனியாகத் தொழில் செய்யலாமா?

Advertisment

அப்பா- மகன் பாசமிருந்தாலும் வீட்டில் சுதந்திரமில்லை. இந்நிலை எப்பொழுது மாறும்? ரிஷப லக்னம், கன்னி ராசி. லக்னத்துக்கு 7-ல் சனி, 12-ல் ராகு, 6-ல் கேது. 2006 முதல் ராகு தசை- 18 வருடம்- 2024 வரை. இதில் புதன் புக்தி. உங்களைத் தனியாக வெளியில் அனுப்ப தகப்பனார் விரும்பமாட்டார். உங்களை சம்பள மில்லாத வேலைக்காரனாக நடத்தி, உங்களுக்கு அனுபவம் வரவேண்டு மென சமாதானப்படுத்துவார். தொழில், குடியிருப்பு இரண்டிலும் வெளியேறிவிடுங்கள். தொழில், இடம் வாங்குவது போன்றவற்றை மனைவிபேரில் செய்யலாம். ராகு பிற்பகுதி (ஒன்பது வருடம்) 2024-க்குள் வளர்ச்சியும் முன்னேற்றமும் உண்டாகும்.

kk

● லிங்க செல்வன், மம்சாபுரம்.

நான் அரசுப் பணியிலிருந்து ஓய்வுபெற்றுவிட்டேன்.பத்து வருடங் களாக நீரிழிவு நோய். கடந்த ஆறு மாதமாக முதுகு, பிடரி வலி அதிகம். எப்பொழுது குணமாகும்?

ராஜபாளையத்திலேயே அரவிந்த் இயற்கை வைத்தியசாலை உள்ளது. அங்கு தங்கி சிகிச்சை பெற்று அதையே கடைப்பிடிக்கவும். ஸ்ரீவில்லிபுத்தூர் அருகில் மடவார்விளாகம் உள்ளது. அங்கு வாரம் ஒரு சனிக்கிழமை சென்று சுவாமி, அம்பாளுக்கு நெய்விளக்கு ஏற்றி வழிபடவும். சனீஸ்வரருக்கு மட்டும் நல்லெண்ணெய் விளக்கு, எள்தீபம் ஏற்ற வேண்டாம்.

● திருமதி சசிகலா, வெள்ளக்கோவில்.

என் மகள் ராதாவுக்குப் பொருத்தம் பார்த்துத்தான் திருமணம் செய்தோம். திருமணத்துக்கு முதல் நாளே அவர் களுடைய நடவடிக்கை சந்தேகத்துக்கு இடமாக இருந்தது. நாங்கள் கேட்டதற்கு, அதற்கான சமாதானம் சொல்லியதால் திருமணம் நடந்துவிட்டது. அதன்பிறகுதான் அவர்கள் ஏமாற்றியது தெரிய வந்தது.மாப்பிள்ளைவெளிநாட்டில் வேலைசெய்வதாகவும், மனைவியை அழைத்துச்செல்வார் என்றும் கூறினார்கள். ஆனால், அவருக்கு வேலை எதுவுமில்லை எனவும், சுயமாக எதுவும் செய்ய இயலாதவர் எனவும் தெரியவந்தது. பெற்றோர் என்ன சொல்கிறார்களோ அதை மட்டும்தான் பேசினார். இதைப்பற்றி பேசுவதற்கு பெற்றோரை அழைத்தோம். அவர்கள் வரவில்லை. அத்துடன் தங்கள் பையனை யும் உடனே வந்துவிடுமாறு சொல்ல, அவரும் ஊருக்குப் புறப்பட்டுப் போய்விட்டார். இதெல்லாம் திருமணம் நடந்த ஒரே வாரத்தில் முடிந்தது. அவர்களுக்குள் எந்த திருமண பந்தமும் நடக்கவில்லை. பையன் வீட்டில் எந்த பேச்சுவார்த்தைக்கும் வராததால்,நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து விவாக ரத்து வாங்கிவிட் டோம். மகளுக்கு மறுமணம் எப்போது நடக்கும்? எங்கள் குடும்பத்தில் என் கணவரின் தாத்தா, அப்பா, கணவருக்கும் இரண்டு தாரம்தான். என் கணவருக்குத் திருமணமான ஆறு மாதத்தில், மாமியாரிடம் கோபம்கொண்டு முதல் மனைவி தற்கொலை செய்துகொண்டாள். ஏனிப்படி நடக்கிறது? என் மகளுக்கும் இப்படி ஏன் நடந்தது? திரும ணத் தேதி 13-3-2013. விவாக ரத்து கிடைத் தது 11-8-2014. மகளுக்குப் பெயர் மாற்றம் தேவையா?

ராதிகா மேஷ ராசி, பரணி நட்சத்திரம், தனுசு லக்னம். 25-3-1985-ல் பிறந்தவர். ஜென்ம ராசியில் ராகு, செவ்வாய், சுக்கிரன். அதற்கு 7-ல் சனி, கேது. செவ்வாய்- சனி பார்வை- நாகதோஷம். அவருக்கு 30 வயது முடிந்து 31 அல்லது அதற்குமேல் தான் திருமணம் செய்திருக்கவேண்டும். முன்னதாக நடந்தது சரியில்லாமல் போய்விட்டது. 9-க்குரிய சூரியன் ராசியில் நீச புதனோடு சம்பந்தம். நவாம் சத்தில் உத்திரட்டாதி 3-ல் துலாத்தில் நீசம். குரு 2-ல் நீசம். எனவே, முன்னோர் வகையில் ஸ்த்ரீ சாப தோஷம், குலதெய்வக் குற்றம், சர்ப்பத் தைக் கொன்ற தோஷம் எல்லாம் பரம்பரை யாக உள்ளது. பெயர் மாற்றம் தேவையில்லை. ஆனால் மறுமணத்துக்கு பார்வதி சுயம்வர கலா ஹோமம், புனர் விவாக மந்திர ஜபம் செய்து ராதிகாவுக்கு கலச அபிஷேகம் செய்யவேண்டும்.

● வேலாயுதம், ஆலங்குளம்.

சூரிய- சந்திர கிரகணத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஏற்படும் எவ்விதத் தோஷம் ஏற்படும்? இது வாழ்நாள் முழுவதும் நீடிக்குமா? இது விலகப் பரிகாரம் உண்டா?

பெரும்பாலும் கர்ப்பிணிப் பெண்கள் கிரகண காலத்தில் வெளியில் வந்து கிரகணத்தைப் பார்த்தாலே பிறக்கப்போகும் குழந்தைக்கு ஏதாவது ஊனம் அல்லது குறை ஏற்படும் என சொல்வார்கள். அதுபோல, கிரகணத் தில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஏதாவது குறை ஏற்படும் அல்லது வாழ்நாள் முழுவதும் ஏதாவது பிரச்சினைகளை சந்திக்கும்படி அமையும். இதற்கு முறையான பரிகாரம்- முழுமையான பரிகாரம் என்பதில்லை.

● இனியவன், கோட்டாறு.

எனது நண்பர் ராஜசேகர் மகள் செல்வி சுபாஷினி ஜாதகம் திருக்கணிதப்படி கணிக்கப் பட்டது என்றும், வாக்கியப்படி மாற்றி எழுதும்படியும் கூறினீர்கள். அதன்படி கே.எம். சுந்தரம் வசம் வாக் கியப்படி திருத்தி எழுதப்பட்டு அனுப் பியுள்ளேன். சனி பகவான் 4-ல் நின்று 6-ஆமிடத்தைப் பார்க்கிறார். 7-ஆமிடத் தைப் பார்க்கவில்லை. தோஷம் மாறுமா? மாறுமெனில் திருமணம் எப்போது நடக்கும்?

சுபாஷினிக்கு அஸ்வினி நட்சத்திரம், மேஷ ராசி, சிம்ம லக்னம். சனி 7-ஆம் இடத்தைப் பார்க்காவிட்டாலும், 7-ல் ராகு நிற்பதும் ஜென்ம லக்னத்தில் கேது நிற்பதும் நாகதோஷம்தான். ராசிக்கு 8-ல் சனி நிற்பதும், அது செவ்வாய் வீடு என்பதும் தோஷம்தான். அதனால் திருமணம் தாமதம் ஆகும். இதன்படி 29 வயது முடிந்து 30 நடப்பில்தான் திருமண யோகம். 7-க்குரிய சனியை குரு பார்ப்பதால் காதல் அல்லது கலப்புத் திருமணம் வராது. பள்ளத்தூரில் காமோகர்ஷண ஹோமமும், பார்வதி சுயம்வரகலா ஹோமமும், நாகதோஷ நிவர்த்திக்கு சூலினி துர்க்கா ஹோமமும் செய்வது அவசியம். சிவன் சந்நிதியில் ருத்ர ஹோமம் வளர்த்து சுவாமி, அம்பாளுக்கு ருத்ராபிஷேக பூஜை செய்யவேண்டும்.