● சந்திரன், கோவில்பட்டி.

நாங்கள் சொந்தமாக பள்ளிக்கூடம் துவங்க விரும்புகிறோம். தாங்கள்தான் வழிகாட்டவேண்டும்.

கன்னியா லக்னம், அவிட்ட நட்சத்திரம், மகர ராசி. சனி தசை 4-ஆவது தசையாக வரும். சனியும் புதனும் பரிவர்த்தனை யோகம் என்பதால், சனி தசை சுயபுக்தி முடிந்து புதன் புக்தியில் சொந்தமாக பள்ளி ஆரம்பிக்கலாம். 2021- ஏப்ரலுக்கு மேல்தான் ஆரம்பிக்கவேண்டும்.

● வள்ளியம்மாள், உடன்குடி.

Advertisment

என் மகனின் முதல் மனைவி திருமண மானதும் வேறு ஒருவருடன் ஓடிவிட் டாள். இரண்டு வருடம் கழித்து வேறொரு பெண்ணைத் திருமணம் செய்துவைத்தோம். அவள் அடிக்கடி மனநிலை சரியில்லாதவள்போல இருக்கிறாள். டாக்டரிடம் காட்டினோம். மருமகளுக்கு கருமுட்டை உருவாகவில்லை என்கிறார்கள். என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?

நேரில் அப்பாயின்ட் வாங்கிவிட்டு, தங்கள் குடும்ப ஜாதகங்களுடன் வாருங்கள். பரிகாரம் சொல்லலாம்.

j

Advertisment

● அ. செந்தில், விழுப்புரம்.

எனக்கு அடிக்கடி மனக் குழப்பமும் நிம்மதிக்குறைவும் ஏற்படுகிறது. இந்தக் குறை எப்பொழுது தீரும்?

உங்களுக்கு கன்னி லக்னம், கடக ராசி, பூச நட்சத்திரம். மகனுக்கு கடக ராசி, புனர்பூச நட்சத்திரம், தனுசு லக்னம். 21 வயதுவரை சனி தசை. (2020 வரை). சனி மேஷ ராசியில் நீசம். எனவே, 2020 வரை எல்லாவகையிலும் சங்கடம், சஞ்சலம், கடன் பிரச்சினை, பொருளாதாரப் பாதிப்பு இருக்கும். ஆரோக்கியமும் பாதிக்கும். சிங்கம்புணரி பஸ் ஸ்டாண்டு அருகில் வாத்தியார்கோவில் முத்துவடுகச் சித்தரை 18 வாரம் (உங்களுக்கு வசதியான நாளில்) வழிபட்டு வரவும். பிரச்சினைகளுக்குத் தீர்வு ஏற்படும்.

● கணேசபாண்டியன், உள்ளகரம்.

என் அண்ணன் மகளுக்குக் கடந்த வருடம் திருமணம் நடந்தது. கைக்குழந்தையும் இருக்கிறது. பிரம்மை பிடித் தவள்போல் (ஹிஸ்டீரியா பேஷன்ட் போல) நடந்துகொள்கிறாள். எப்பொழுது அவள் இயல்பு நிலைக்கு வருவாள்?

துலா லக்னம். கணவர் வீட்டில் அனுசரணை இருக்காது. திருத்தணிக்கு முன்னால் நாபளூர் சென்று வடுகநாத பைரவருக்கு சிறப்புப் பூஜை செய்யவேண்டும். ஞாயிற்றுக்கிழமைதோறும் அகஸ்தீஸ்வரர் கோவிலில் சுவாமிநாத குருக்கள் அருள்வாக்கு கூறுவார். அவர் சொல்லும் பரிகாரம் செய்யவும்.

● சி. துர்க்கா, ஆற்காடு.

என் மகளுக்கு எப்பொழுது திருமணம் நடக்கும்?

சுவாதி நட்சத்திரம், துலா ராசி, ரிஷப லக்னம். 7-ல் சனி. 30 வயது முடிந்தபிறகு திருமணம் நடைபெறும். அந்நிய சம்பந்தம். டாக்டர் மாப்பிள்ளை அமைவார். திருவக்கரை சென்று வக்ரகாளியம்மனுக்கு ஒருமுறை அபிஷேகம், பூஜை செய்யவும்.

● பாலாஜி, சேலம்.

நான்கு வருடங்களுக்குமுன், ஒரே மகனை பி.ஈ., படிக்கவைக்கலாமா என்று கேட்டேன். படிக்கவைக்கலாம் என்றும், பட்டம் வாங்குவான் என்றும் கூறினீர்கள். அதன்படி கடன் வாங்கிப் படிக்க வைத்தேன். படித்து பி.ஈ., (ஈ.ஸிஈ.) பட்டம் வாங்கிவிட்டான். நன்றி! அடுத்து அவனுக்கு எப்போது நல்ல வேலை அமையும்? நல்ல மணவாழ்க்கை அமையுமா?

மகனுக்கு விருச்சிக ராசி, அனுஷ நட்சத்திரம். முடிந்தால் மகனை வெளிநாட்டு வேலைக்கு அனுப்பிவிடுங்கள். 2021-ல் ஏழரைச்சனி முடிந்தபிறகு திருமணம் கூடிவரும். அதற்குள் நல்ல சம்பாத்தியம், கடன் நிவர்த்தி, சேமிப்பு வந்துவிடும். உங்களுக்கும் விருச்சிக ராசி- ஜென்மச்சனி. சந்திர தசை நடப்பு. மகன் உங்களோடு இருந்தால் உங்களுக்கு ஏதேனும் உடல்ரீதியான பிரச்சினை நேரலாம். பொன்னமராவதி அருகில் செவலூர் சென்று பூமிநாத சுவாமிக்கு ருத்ர ஹோமம் வளர்த்து, 108 சங்காபிஷேக பூஜை செய்யவும். குடும்ப ஷேமம், பையனுக்கு வெளிநாட்டு வேலை, சம்பாத்தியம், உங்களுக்கு ஆயுள் தீர்க்கம், ஆரோக்கியம் எல்லாம் உண்டாகும்.

● குமரேசன், கோவை.

எல்.ஐ.சி.யில் வேலைசெய்து வெளியேற்றப்பட்ட எங்கள் யூனியன், கடந்த 23 ஆண்டுகளாக வழக்கு நடத்தி, டெல்லி உச்சநீதிமன்றம் எங்கள் பக்கம் சாதகமாக வேலை வழங்கவேண்டுமென நல்ல தீர்ப்பு வழங்கியும் இன்னும் பணி வழங்கவில்லை. மீண்டும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடக்கிறது. எப்போது வேலை கிடைக்கும்?

சிம்ம லக்னம், கும்ப ராசி, சதய நட்சத்திரம். புதன் தசை, சுக்கிர புக்தி நடக்கிறது. பொதுவாக 10-ல் ராகு- கேது சம்பந்தம் இருந்தாலே தொழில், வாழ்க்கை பிரச்சினையாக இருக்கும். ராகு- கேது பெயர்ச்சி உங்களுக்கு நல்ல திருப்பத்தையும் முன்னேற்றத்தையும் ஏற்படுத்தும். நாமக்கல் அருகில் சேந்தமங்கலம் சென்று குரு தத்தாத்ரேயருக்கும் குருநாதர் ஜீவசமாதிக்கும் ஒருமுறை அபிஷேகம் செய்யவும். அத்துடன் கடலூர்- காட்டு மன்னார் கோவில் வழி எய்யலூர் சென்று, சொர்ணபுரீஸ்வரரை ஒருமுறை பிரார்த்தனை செய்யுங்கள். விரைவில் விமோசனம் உண்டாகும்.

● ராஜசேகர், மணப்பாறை.

எனக்கு 32 வயதாகிறது. திருமணம் தடைப்படுகிறது. எப்போது திருமணம் நடக்கும்?

மீன லக்னம். 8-ல் சனி, சூரியன், புதன். 33 வயதுவரை ராகு தசை. இதன்பிறகுதான் திருமண யோகம் வருகிறது. தேவிபட்டினம் சென்று மொட்டையர் மகன் சக்தி சீனிவாச சாஸ்தியிடம் பரிகாரம் செய்யவேண்டும். நேரில் வந்து என்னென்ன பரிகாரம் என்பதைத் தெரிந்து கொள்ளவும்.