Advertisment

ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்!

/idhalgal/balajothidam/jothidam-answers-90

ஆர்.பிருந்தா, நீடாமங்கலம்.

2010 முதல் "பாலஜோதிடம்' வாங்கி, தங்கள் கேள்வி- பதில், ராசிபலன் பகுதிகளைப் பார்த்து ஜோதிடம் கற்றுவருகிறேன். "பாலஜோதிட'’த்தின் மகுடமாகத் திகழ்கிறீர்கள். எனக்குப் பாதகாதிபதி தசை நடக்கிறது. பாத காதிபதி சுயசாரம் பெற்று 8-ல் இருந்த தசை நடத்து கிறது. 7-க்கும் 10-க்கும் அதிபதி புதன் சுயசாரம் (ஆயில்யம்) பெற்று 8-ல் இருந்து தசை நடத்து வதால், புதன் தசை முழுவதும் பாதகம் செய்யுமா? அப்படிச் செய்தால் எந்தவகையில் பாதகம் செய்யும்? அடுத்து, கேது தசையும், அதனுடன் சேர்ந்த நீசம்பெற்ற சுக்கிர தசையும் வருவதால் ஜோதிடத்தை முழுமையாக நம்பித் தொழில் செய்ய முடியுமா?

Advertisment

தனுசு லக்னம். 2-ஆமிடம் வாக்கு ஸ்தானம். அதை புதன், சனி இருவரும் பார்க் கிறார்கள். அடுத்து, கும்ப ராசிக்கு 2-ல் ராகு, கேது, சுக்கிரன் பார்வை. புதனும் ராகு- கேதுவும் ஜோதிட அறிவையும் ஞானத்தை யும் தருகிறவர்கள். மேலும், வாக்கு ஸ்தானாதிபதி சனி வாக்கு ஸ்தானத்தைப் (2-ஆமிடத்தை) பார்ப்பதும் சிறப்பு. எனவே, ஜோதிடத்தைத் தொழிலாக ஏற்று செயல்படுத்தலாம். முன்னதாக, யாரையாவது குருவாக ஏற்றுக்கொள்வது முக்கியம்! புதன் தசை, கேது புக்தியில் (18-11-2020 முதல்) ஜோதிட ஞானமும் வாக்கு சித்தியும் அடையலாம். ஹயக்ரீவர் உபாசனை செய்யவும். (சரசுவதியின் குருநாதர் ஹயக்ரீவர்). கடலூர் (பண்ருட்டி) அருகில் திருவந்திபுரம் என்கிற திருவஹிந்திபுரம் சென்று ஹயக்ரீவரை வழிபட்டுவரவும். பிரபலமான ஜோதிடராகப் புகழ் பெறலாம்.

Advertisment

ja

ஆர். லதா

ஆர். லதா எம்.ஏ., பொன்னமராவதி.

தங்களின் கைவண்ணத்தில் வெளிவரும் "பாலஜோதிடம்'’, ‘"ஓம் சரவணபவ'’ மற்றும் பல பத்திரிகைகளுக்கு முகவராக (50 வருடங்களுக்குமேல்) செயல்படுகிறேன். "பாலஜோதிட'’த்தில் தங்களின் கேள்வி- பதில் பகுதியை நான்கு ஐந்துமுறை திரும்பத் திரும்பப் படிப்பேன். ஏனென் றால், வாசகர்களின் கேள்விகளுக்குத் தாங்கள் தரும் பதில் அறிவுப்பூர்வமாகவும், சில நேரங்களில் நெற்றியடியாகவும் இருப்பது அருமையிலும் அருமை. தவறுகளை வாசகர்கள் சுட்டிக்காட்டும் பொழுது அவற்றை மனதார ஒப்புக் கொள்ளும் பெருந்தன்மையும்- அதேசமயம், குதர்க்கமாகவும் வில்லங்கமாகவும் எழுதும் வாசகர்களுக்கு சூடுபோடுவதில் தங்களுக்கு நிகர் தாங்களே! என்றும் உங்கள் தெய்வீகப் பணி தொடர்வதற்கு எல்லாம்வல்ல இறைவனை மனமாறப் பிரார்த்தனை செய்கிறேன். எங்களுக்கு ஒரு ஆண், பெண் பிள்ளைகள் இருக்கிறார்கள். பெண்ணுக்குத் திருமணமாகிவிட்டது. எங்களுக்கு நிறைய கடன்கள் உள்ளன. அதனை எப்படி அடைப்பதென தினமும் கவலை வாட்டிவதைக்கிறது. திருச்சேறை சென்று வழிபட்டு வந்து விட்டோம். கடன் எப்போது நிவர்த்தியாகும்?

உங்களின் பாராட்டுகளுக்கு நன்றி! உங்களைப்போன்ற பட்டதாரி வாசகர்களும், சாதாரண வாசகர்களும் கொடுக்கும் ஆதரவே என் எழுத்துக்குப் பலம் தருகிறது; உயிரூட்டுகிறது. உங்கள் கணவர் ராஜா, மிதுன லக்னம், சிம்ம ராசி, மக நட்சத்திரம். லதாவுக்கு விருச்சிக லக்னம், பூராட நட்சத்திரம், தனுசு ராசி. 2020 டிசம்பர்வரை ஏழரைச்சனியில் ஜென்மச்சனி. அத்துடன் ராகு தசை நடப்பு. அதனால், வரவுக்குமீறிய செலவுகள் ஏற்படுகின்றன. தனவணிகம் புரியும் நகரத்தார் இனத்தில் பிறந்தும் வட்டிக்குக் கொடுப்பதை விட்டுவிட்டு, வட்டிக்கு வாங்கிப் பழக்கப்பட்டுவிட்டதால், கடன்சுமை தலைச்சுமையாகவும் மனச் சுமையாகவும் உருவெடுத்துவிட்டது. உங்கள் இருவரின் ஜாதக அமைப்பும் (ராஜா- லதா) அடிப்படையில் நன்றாக இருப்பதால் haவாக்கு நாணயம் காப்பாற்றப்படும். கடன்களும் அடைபட்டுவிடும். ‘"காதல்கோட்டை'’ திரைப் படத்தில் தலைவாசல் விஜய் பாடியமாதிரி, ""கவலைப்பட வேண்டாம் சகோதரி!'' அன்னை கொன்னையூர் மாரியம்மன் காத்து ரட்சிப்பாள்.’’ லதாவுக்கு 2030 அக்டோபர் வரை (2012 முதல்) ராகு தசை நடக்கிறது. இதுவே கடன் சுமைக்குக் காரணம். கொன்னையூர் அருகில் மூலங்குடி எனும் ஊரில் (அக்ரஹாரத்தில்) சிவன் கோவிலில் துர்க்கை சந்நிதி தனியாக உள்ளது. 18 வாரம் வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் ராகு காலத்தில் அதற்கு அபிஷேகப் பூஜைசெய்து பிரார்த் தனை செய்யவும். அத்துடன், செவலூர் பூமிநாத சுவாமிக் கோவிலில் ரிணவிமோசன ஹோமம் செய்து குடும்பத்தார் அனைவரும் கலச அபிஷேகம் செய்துகொள்ளவும். (தொடர்புக்கு: ராஜப்பா குருக்கள், செல்- 98426 75863). சுமார் 19 வகையான ஹோமங்கள் செய்வார்கள். என்னென்ன ஹோமங்கள் என்பதைக் குருக்களிடம் தொடர்புகொள்ளச் சொல்லவும். தொலைபேசியில் விவரம் சொல்வேன்.

ஸ்ரீஜா மோகனன், கோவை.

மகன் பி.ஈ., மெக்கானிக்கல் முடித்து பெங்களுரூவில் ஒரு ஜெர்மன் நிறுவனத்தில் வேலை பார்க்கிறான். அவனுக்கு வெளிநாடு செல்லும் யோகம் உண்டா? எப்போது வெளிநாடு செல்வான்? மகள், பிடிஎஸ் மூன்றாமாண்டு பயில்கிறாள். மேற்படிப்படை வெளிநாட்டில் பயில விரும்புகிறாள். அதற்கு யோகமுள்ளதா? இருவருள் யாருக்காவது அரசாங்க வேலை அமையுமா? பிள்ளைகளின் திருமண வயது என்ன? மாமியாருக்கு 95 வயது. அவருடைய ஆயுள் காலம் எவ்வளவு?

மகனுக்கு (மோனிஷ்) வெளிநாட்டு வேலைக்கு வாய்ப்பு வரும். புதன் தசையில் சந்திர புக்தியில் எதிர்பார்க்கலாம். மகளுக்கும் வெளிநாட்டிற்குச் சென்று பயிலும் வாய்ப்பு வரும். பெரும்பாலும் ரஷ்யாவுக்குப் போகலாம். இருவர் ஜாதகத்திலும் மகளுக்கு மட்டும் அரசு வேலைக்கு யோகம் உண்டு; அரசு வேலை எதிர்பார்க்கலாம். மகள் மானிஷாவுக்கு காதல் திருமணம் நடக்கும் என்பது தெரிகிறது. ஏற்றுக்கொள்வது பெற்றோரின் கடமை. அந்தசமயம், மகளின் தேர்வு நல்லதாக அமைய ஹோமம் செய்து, கலச அபிஷேகம் செய்யவேண்டும். காமோஹர்ஷண ஹோமம், பார்வதி சுயம்வரகலா ஹோமம் உள்பட 16-க்கும் மேற்பட்ட ஹோமங்கள் செய்யவேண்டும். அந்தசமயம், எங்கு, எப்படி என்ற விவரங்களைத் தெரிந்து கொள்ளவும்.

ஏ. கலையரசன், வண்டிப்பாளையம்.

5-3-1967-ல் பிறந்தேன். திருமணமாகி இரண்டு பிள்ளைகள் இருக்கின்றனர். மகள் சாலினி 12-11-1997-லும், மகன் கோகுல்நாத் 20-7-2000-லும் பிறந்தனர். என்னுடைய மனைவி சரசு பிறந்த தேதி 17-1-1975. என்னுடைய ராசி மிதுனம். எங்கள் எதிர்காலம் பற்றி விளக்கவும். அதற்கான காணிக்கையை தங்கள் வங்கிக்கணக்கு தெரிவித்தால் செலுத்திவிடுகிறேன்.

முதலில் உங்கள் குடும்பத்தினரின் ஜாதகங்களை எல்லாம் மதுரையில் கே.எம்.சுந்தரம் வசம் (அப்பாஸ் காம்ப்ளக்ஸ், அண்ணாநகர் மெயின்ரோடு, செல்: 92453 28178) வாக்கியப் பஞ்சாங்கப்படி எழுதி நகல் எடுத்து அனுப்பிவைக்கவும். கேள்விகளையும் அனுப்பவும். ஜாதக நகல் கிடைத்தபிறகு எனது காணிக்கையையும் வங்கிக் கணக்கு விவரத்தையும் தெரிவிக் கிறேன்.

நரசிங்கம், மதுரை.

விஞ்ஞானம், கம்ப்யூட்டர் போன்ற சாதனங்கள் வளர்ந்த நிலையில், இன்னும் ஜோதிடத்தை நம்பி காலத்தை வீணடிக்க வேண்டுமா?

கம்ப்யூட்டர்- விஞ்ஞானம் என்றால், ஜோதிடம் மெய்ஞானம். இராமாயணத்தைவிட மகாபாரத இதிகாசத்தில் ஜோதிடத்தின் முக்கியத்துவத்தையும் நம்பிக்கையையும் தெளிவாக வலியுறுத்தியுள்ளனர். ஜோதிடம் என்பது காலத்தின் கணிதம்- காலக் கண்ணாடி! திருக்குறளில் ‘எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு’ என்று ஒரு குறள் உண்டு. அதில் எண் என்பது நியூமராலஜி. எழுத்து என்பது அஸ்ட்ராலஜி. வேதத்தின் அங்கங்கள் ஆறு. அதில் கண் போன்றது ஜோதிட சாஸ்திரம். ‘நாள் செய்வதை நல்லார் செய்யார்’ என்பார்கள். ‘அவரவர் வினைவழி அவரவர் வந்தனர். அவரவர் வினைவழி அவரவர் அனுபவம்’ என்பது சொக்கநாத வெண்பா. அந்த வினையின் தன்மையை அறிந்து செயல்படச் செய்வது ஜோதிடம். ‘ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று சூழினுந் தான்முந் துறும்’ என்பதும் குறள்தான். (தமிழ்மறை-குறள்). ‘ஊழ்வினை வந்து உறுத்தூட்டும்’ என்பது சிலப்பதிகாரம். அந்த ஊழ் என்பதே ஜோதிடம். நாம் அனுபவிக்கும் எல்லா நிகழ்வுகளும் ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்டவைதான். அதை உணர்ந்து நீரோடும்வழியே பயணித்தால் எல்லாம் இனிதாகும். எதிர்நீச்சல் சிரமம் இருக்காது.

bala170720
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe